மார்வெல் திரைப் பிரபஞ்சம்: இரண்டாம் கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் கட்டம்
தயாரிப்புகேவின் பிகே
நடிப்புகீழே பார்
கலையகம்மார்வெல் இசுடியோசு
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு2013–2015
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (6 படங்கள்):
$1.179 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (6 படங்கள்):
$5.269 பில்லியன்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: இரண்டாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும்.

இந்த கட்டம் 2013 இல் அயன் மேன் 3[1] வெளியீட்டில் தொடங்கி 2015 இல் ஆன்ட்-மேன் வெளியீட்டில் முடிந்தது. இது 2015 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்ற குறுக்குவழி திரைப்படத்தையும் உள்ளடக்கியது. கேவின் பிகே என்பவர் ஒவ்வொரு படத்தையும் தயாரித்துள்ளார். இந்த இரண்டாம் கட்டத்தில் ஆறு படங்கள் வெளியாகி, பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளாவில் $5.2 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த கட்டத்தில் நடிகர் கிறிஸ் எவன்ஸ் என்பவர் மிக அதிகமாக தோன்றினார், இந்த இரண்டாம் கட்டத்தில் ஆறு படங்களில் நான்கு படங்களில் நடித்தார் அல்லது கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். மார்வெல் இசுடியோசு அவர்களின் மார்வெல் 'ஒன்-சாட்சு' திட்டத்திற்காக மார்வெல் திரைப் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துவதற்காக மேலும் இரண்டு குறும்படங்களை உருவாக்கியது, அதே நேரத்தில் ஒவ்வொரு திரைப்படமும் டை-இன் வரைகதை புத்தகங்களைப் பெற்றன. அத்துடன் அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வேர்ல்டு மற்றும் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஆகியவை நிகழ்பட ஆட்டங்களை பெற்றன, அதே நேரத்தில் 'லோகோ மார்வெல்ஸ் அவெஞ்சர்ஸ்' படமும் பல படங்களின் கதைக்களத்தைத் தழுவி வெளியிடப்பட்டது. இந்த மார்வெல் திரைப் பிரபஞ்சம்: இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் மற்றும் முதலாம் கட்டம் ஆகியவை தி இன்பினிட்டி சாகாவாக உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி[தொகு]

அயன் மேன் 2 (2010) வெளியானதைத் தொடர்ந்து, முதல் இரண்டு அயன் மேன் படங்கள் உட்பட முந்தைய மார்வெல் இசுடியோசு படங்களின் விநியோகஸ்தரான பாரமவுண்ட் பிக்சர்ஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மூன்றாவது அயர்ன் மேன் படத்தின் நேரம் மற்றும் விநியோக ஏற்பாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதே தருணம் வால்ட் டிஸ்னி நிறுவனம், மார்வெல் என்டர்டெயின்மென்ட்டின் அப்போதைய புதிய தாய் நிறுவனமானது.

அக்டோபர் 18, 2010 அன்று, அயர்ன் மேன் 3 (2013) க்கான உலகளாவிய விநியோக உரிமைக்காக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் குறைந்தபட்சம் $115 மில்லியனை பாரமவுண்ட் நிறுவனத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டு சமரசம் ஆனது.

இந்த இரண்டாம் கட்டத்தில் அயன் மேன் 3 (2013), தோர்: த டார்க் வேர்ல்டு (2013),[2] கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[3] கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)[4] மற்றும் ஆன்ட்-மேன் (2015)[5] போன்ற படங்கள் வெளியானது. ஆன்ட்-மேன் (2015) மூன்றாம் கட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என்று ஃபைஜ் கூறினார், ஆனால் இது மாறிவிட்டது என்றும் ஆன்ட்-மேன் உண்மையில் இரண்டாம் கட்டத்தின் இறுதிப் படமாக மாறியது.

திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர்
அயன் மேன் 3 3 மே 2013 ஷேன் பிளாக் [6] துரூ பியர்சு, ஷேன் பிளாக் கேவின் பிகே
தோர்: த டார்க் வேர்ல்டு 8 நவம்பர் 2013 ஆலன் டெய்லர்[7] கிறிஸ்டோபர் யோஸ்டு, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 4 ஏப்ரல் 2014 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ [8] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 1 ஆகஸ்ட் 2014 ஜேம்ஸ் கன்[9] ஜேம்ஸ் கன், நிக்கோல் பெர்ல்மன்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 1 மே 2015 ஜோஸ் வேடன் [10] ஜோஸ் வேடன்
ஆன்ட்-மேன் 17 ஜூலை 2015 பெய்டன் ரீட்[11] எட்கர் ரைட், ஜோ கார்னிசு, ஆடம் மெக்கே, பால் ருத்

நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்[தொகு]

கதாபாத்திரம் அயன் மேன் 3
(2013)
தோர்: த டார்க் வேர்ல்டு
(2013)
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
(2014)
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி
(2014)
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
(2015)
ஆன்ட்-மேன்
(2015)
புரூஸ் பேனர்
ஹல்க்
மார்க் ருஃப்பால்லோ கௌரவத் தோற்றம் மார்க் ருஃப்பால்லோ
பக்கி பார்ன்ஸ்
விண்டேர் சோல்டயர்
செபாஸ்டியன் இஸ்டான் செபாஸ்டியன் இஸ்டான்கௌரவத் தோற்றம்
பெக்கி கார்ட்டர் ஹேலி அட்வெல் ஹேலி அட்வெல்
நிக் ப்யூரி சாமுவேல் எல். ஜாக்சன் சாமுவேல் எல். ஜாக்சன்
ஹெய்ம்டால் இட்ரிஸ் எல்பா இட்ரிஸ் எல்பா
மரியா ஹில் கோபி ஸ்மல்டேர்ஸ் கோபி ஸ்மல்டேர்ஸ்
பியட்ரோ மாக்சிமோஃப் ஆரோன் டெய்லர்-ஜான்சன்கௌரவத் தோற்றம் ஆரோன் டெய்லர்-ஜான்சன்
வாண்டா மாக்சிமோஃப் எலிசபெத் ஓல்சென்கௌரவத் தோற்றம் எலிசபெத் ஓல்சென்
ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ்
வார் மெஷின்/அயன் பேட்ரியாட்
டான் செடில் டான் செடில்
இசுடீவ் ரோஜர்சு
கேப்டன் அமெரிக்கா
கிறிஸ் எவன்ஸ்கௌரவத் தோற்றம் கிறிஸ் எவன்ஸ் கிறிஸ் எவன்ஸ் கிறிஸ் எவன்ஸ்கௌரவத் தோற்றம்
நடாஷா ரோமானோஃப்
பிளாக் விடோவ்
ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஸ்கார்லெட் ஜோஹான்சன்
எரிக் செல்விக் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
டோனி இஸ்டார்க்
அயன் மேன்
ராபர்ட் டவுனி ஜூனியர் ராபர்ட் டவுனி ஜூனியர்
தோர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்
தனெலீர் திவான்
கலெக்டர்
பெனிசியோ டெல் டோரோகௌரவத் தோற்றம் பெனிசியோ டெல் டோரோ
விஷன்
ஜே.ஏ.ஆர்.வி.ஐ.எஸ்.
பவுல் பெட்டனிகுரல் பவுல் பெட்டனி
சாம் வில்சன்
பால்கன்
அந்தோணி மேக்கி அந்தோணி மேக்கி

படத்தின் வருவாய்[தொகு]

திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
அயன் மேன் 3 மே 3, 2013 $409,013,994 $805,797,258 $1,214,811,252 32 20 $178.4 மில்லியன்
தோர்: த டார்க் வேர்ல்டு நவம்பர் 8, 2013 $206,362,140 $438,209,262 $644,571,402 204 144 $152.7 மில்லியன்
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஏப்ரல் 4, 2014 $259,766,572 $454,497,695 $714,264,267 119 117 $177 மில்லியன்
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி ஆகஸ்ட் 1, 2014 $333,176,600 $440,152,029 $773,328,629 66 101 $195.9 மில்லியன்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் மே 1, 2015 $459,005,868 $946,397,826 $1,405,403,694 20 11 $365.5 மில்லியன்
ஆன்ட்-மேன் ஜூலை 17, 2015 $180,202,163 $339,109,802 $519,311,965 259 212 $109.3 மில்லியன்
மொத்தம் $1,848,069,337 $3,421,384,576 $5,269,483,875 $1.179 பில்லியன்

விமர்சனம் மற்றும் பொதுமக்களின் கருத்து[தொகு]

திரைப்படம் விமர்சனம் பொதுமக்கள்
அழுகிய தக்காளிகள் மெட்டாக்ரிடிக் சினிமாஸ்கோர்
அயன் மேன் 3 79% (329 மதிப்புரைகள்) 62 (44 மதிப்புரைகள்)
தோர்: த டார்க் வேர்ல்டு 66% (285 மதிப்புரைகள்) 54 (44 மதிப்புரைகள்) ஏ−
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 90% (306 மதிப்புரைகள்) 70 (48 மதிப்புரைகள்)
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 92% (334 மதிப்புரைகள்) 76 (53 மதிப்புரைகள்)
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 76% (375 மதிப்புரைகள்) 66 (49 மதிப்புரைகள்)
ஆன்ட்-மேன் 83% (336 மதிப்புரைகள்) 64 (44 மதிப்புரைகள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Frankel, Daniel (May 10, 2010). "Will There Be an 'Iron Man 3' — and Whose Will It Be?". TheWrap. August 8, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. O'Hara, Helen (February 1, 2013). "New Thor: The Dark World Set Photo". Empire. June 19, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 1, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Lussier, Germain (September 30, 2013). "'Captain America: The Winter Soldier' Takes Place Two Years After 'The Avengers'". /Film. October 1, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 30, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. Breznican, Anthony (July 16, 2014). "This week's cover: Meet the new boss in Marvel's 'Avengers: Age of Ultron'". Entertainment Weekly. July 16, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 16, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. Kroll, Justin (January 23, 2014). "Marvel's 'Ant-Man' Moves into Former Superman-Batman Release Date". Variety. February 26, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Shane Black talks direction of Iron Man 3 and whether or not to expect more Marvel cameos!". Ain't It Cool News. March 7, 2011. September 3, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 3, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. Fleming Jr., Mike (December 24, 2011). "'Thor 2′ Director Will Be 'Game of Thrones' Helmer Alan Taylor". March 27, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  8. Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". July 16, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 3, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". July 20, 2013. July 21, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 20, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  10. Graser, Marc (August 7, 2012). "Joss Whedon will return for 'The Avengers 2'". August 7, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 7, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Director Peyton Reed and Writer Adam McKay Join Marvel's Ant-Man". June 7, 2014. January 9, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 7, 2014 அன்று பார்க்கப்பட்டது.