மார்வெலின் ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெலின் ஏபிசி
தொலைக்காட்சி தொடர்கள்
மூலம்மார்வெல் வரைகதை
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்10 (3 தொடர்களில்)
அத்தியாயங்கள்162
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
ஓட்டம்41–44 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைஏபிசி
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 24, 2013 (2013-09-24) –
ஆகத்து 12, 2020 (2020-08-12)

மார்வெலின் ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் (ஆங்கில மொழி: Marvel's ABC television series) என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு ஏபிசி என்ற தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமெரிக்க நாட்டு தொலைக்காட்சித் தொடர்களின் தொகுப்பாகும்.

இந்த தொடர்கள் ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது, அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டு, உரிமையாளரின் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியை அங்கீகரிக்கின்றன. இந்த மார்வெல் ஏபிசி தொடர்களின் குழுவை "மார்வெல் ஹீரோஸ்" என்று அழைக்கப்படுகின்றது.

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் முதல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[1] [2] ஆகும். இந்த தொடர் 2012 ஆம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ்[3] திரைப்படதின் எழுத்தாளர் மற்றும் இயக்குனரான ஜோஸ் வேடன் என்பவரால் மார்வெல் தொலைக்காட்சி மற்றும் ஏபிசிக்காக உருவாக்கப்பட்டது. இந்த தொடரில் நடிகர் கிளார்க் கிரெக் என்பவர் பில் கோல்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவரின் கதாபத்திரம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து தொடர்கிறது, இந்தத் தொடர் செப்டம்பர் 2013 இல் அறிமுகமாகி, ஆகஸ்ட் 2020 வரை ஏழு பருவங்களாக ஒளிபரப்பானது.[4] அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தில் தோன்றிய பெக்கி கார்ட்டர் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏஜென்ட் கார்ட்டர்[5] என்ற தொடர் உருவாக்கப்பட்டது. இந்த தொடர் இரண்டு பருவங்களாக சனவரி 2015 முதல் மார்ச்சு 2016 வரை ஒளிபரப்பானது. அத்துடன் ஏபிசியின் இறுதி தொடராக 2017 ஆம் ஆண்டில் இன்கியுமன்சு என்ற தொடர் ஒளிபரப்பானது.[6]

ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[7] என்ற தொடர் ஆரம்பத்தில் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல மதிப்பீட்டை பெற்று கொடுத்தது.[8] ஆனால் கடைசி மூன்று பருவங்களும் சுமாரான மதிப்பீடுகளை கொடுத்தது. அதை தொடர்ந்து இன்கியுமன்சு என்ற தொடரும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இதனால் டிசம்பர் 2019 இல் மார்வெல் நிறுவனம் ஏபிசி தொலைக்காட்சியுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டது.

தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு நிகழ்ச்சி நடத்துபவர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[9] 1 22 24 செப்டம்பர் 2013 13 மே 2014 ஜோஸ் வேடன், மொரிசா டான்சரோன், ஜெப்ரி பெல்
2 23 செப்டம்பர் 2014 14 மே 2015
3 29 செப்டம்பர் 2015 17 மே 2016
4 20 செப்டம்பர் 2016 16 மே 2017
5 1 டிசம்பர் 2017 18 மே 2018
6 13 10 மே 2019 2 ஆகஸ்ட் 2019
7 27 மே 2020 12 ஆகஸ்ட் 2020
ஏஜென்ட் கார்ட்டர்[10] 1 8 6 ஜனவரி 2015 24 பிப்ரவரி 2015 தாரா பட்டர்ஸ், மைக்கேல் ஃபஸேகாஸ், கிறிஸ் டிங்கஸ்
2 10 19 ஜனவரி 2016 1 மார்ச் 2016
இன்கியுமன்சு[11][12] 1 8 29 செப்டம்பர் 2017 10 நவம்பர் 2017 இசுகாட் பக்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Marvel's Agents of S.H.I.E.L.D." ABC Studios. April 6, 2013. Archived from the original on April 6, 2013. பார்க்கப்பட்ட நாள் April 6, 2013.
 2. Andreeva, Nellie (August 28, 2012). "ABC Greenlights 'S.H.I.E.L.D' Marvel Pilot, Joss Whedon To Co-Write & Possibly Direct". Deadline Hollywood. Archived from the original on August 29, 2012. பார்க்கப்பட்ட நாள் August 28, 2012.
 3. Andreeva, Nellie (July 27, 2012). "ABC And Marvel Eying 'Avengers'-Themed TV Series". Deadline Hollywood. Archived from the original on August 29, 2012. பார்க்கப்பட்ட நாள் July 29, 2012.
 4. Dove, Steve (July 16, 2013). "Marvel's Agents of S.H.I.E.L.D. Series Premiere Date Announced". ABC Studios. Archived from the original on September 25, 2013. பார்க்கப்பட்ட நாள் September 24, 2013.
 5. Strom, Marc (May 10, 2014). "First Details on Marvel's Agent Carter". Marvel.com. Archived from the original on May 10, 2014. பார்க்கப்பட்ட நாள் May 10, 2014.
 6. Goldberg, Lesley (November 21, 2016). "Why ABC's Deal to Bring Marvel's 'The Inhumans' to Imax Is a 'Quadruple Win'". The Hollywood Reporter. Archived from the original on November 21, 2016. பார்க்கப்பட்ட நாள் November 22, 2016.
 7. "NYCC 2012: Coulson Lives in Marvel's S.H.I.E.L.D." Marvel.com. October 13, 2012. Archived from the original on October 13, 2012. பார்க்கப்பட்ட நாள் October 13, 2012.
 8. Kondolojy, Amanda (September 25, 2013). "Tuesday Final Ratings: 'Marvel's Agents of S.H.I.E.L.D.', 'The Voice' & 'NCIS' Adjusted Up; 'The Goldbergs' & 'Chicago Fire' Adjusted Down". TV by the Numbers. Zap2it. Archived from the original on August 20, 2014. பார்க்கப்பட்ட நாள் September 26, 2013.
 9. Andreeva, Nellie (August 28, 2012). "ABC Greenlights 'S.H.I.E.L.D' Marvel Pilot, Joss Whedon To Co-Write & Possibly Direct". Deadline Hollywood. Archived from the original on August 29, 2012. பார்க்கப்பட்ட நாள் August 28, 2012.
 10. Goldberg, Lesley (January 17, 2014). "Marvel's 'Agent Carter': Hayley Atwell, Writers, Showrunners Confirmed for ABC Drama". The Hollywood Reporter. Archived from the original on May 10, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
 11. "'Marvel's The Inhumans' Coming To IMAX & ABC in 2017". Marvel.com. November 14, 2016. Archived from the original on November 15, 2016. பார்க்கப்பட்ட நாள் November 14, 2016.
 12. Goldberg, Lesley (November 14, 2016). "Marvel, ABC Set 'The Inhumans' TV Series". The Hollywood Reporter. Archived from the original on November 15, 2016. பார்க்கப்பட்ட நாள் November 14, 2016.