பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர்
இயக்கம்ரையன் கூக்லர்[1]
தயாரிப்புகேவின் பிகே
கதை
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 8, 2022 (2022-07-08)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (ஆங்கில மொழி: Black Panther: Wakanda Forever) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது பிளாக் பான்தர் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பான்தர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பதாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர்[2] என்பவர் இயக்க, ரையன் கூக்லர் மற்றும் ஜோ ராபர்ட் கோல் ஆகியோர் கதை எழுதியுள்ளனர்.[3] கேவின் பிகே[4] தயாரிக்கும் இந்த படத்தில் லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா,[5] மார்டின் பிறீமன்,[6][7] லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட் மற்றும் டொமினிக் தோர்ன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பகுதி பிப்ரவரி 2018 இல் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் இயக்குனர் ரையன் கூக்லர்[8] என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 2019 இல் இப்படத்தின் ஆக்கப்பூர்வமான அறிவிப்புஅறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020 இல் பிளாக் பான்தர் வேடத்தில் நடித்த சட்விக் போஸ்மேன்[9] என்பவர் பெருங்குடல் புற்றுநோயால் மரணித்தார். அதனால் படத்தின் திட்டங்கள் மாறின, மார்வெல் தனது டி'சல்லா [10] பாத்திரத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை.[11][12] முதல் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் மீண்டும் இரண்டாம் படத்திலும் நடிப்பார்கள் என நவம்பர் அன்று உறுதி செயப்பட்டது. மேலும் இப்படத்தின் தலைப்பு மே 2021 இல் அறிவிக்கப்பட்டு, ஜூன் 2021 இன் பிற்பகுதியில் அட்லான்டா மற்றும் மாசச்சூசெட்ஸ் போன்ற நாடுகளை சுற்றி படப்பிடிப்பு தொடங்கபட்டது.[13]

பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 8 சூலை 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. VanHoose, Benjamin (March 3, 2021). "Lupita Nyong'o Says Black Panther 2 Director Ryan Coogler Has 'Really Exciting Ideas' for Sequel". People. March 3, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 3, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. Erao, Matthew (February 6, 2018). "Coogler Interested in Seeing What Kind of King Black Panther Becomes in Sequels". Screen Rant. February 9, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Setoodeh, Ramin (February 5, 2018). "Chadwick Boseman and Ryan Coogler on How 'Black Panther' Makes History". Variety. February 6, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 6, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Setoodeh, Ramin (February 14, 2018). "'Black Panther': Marvel Studios President Kevin Feige on Casting Chadwick Boseman and Sequel Talk". Variety. February 17, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. Bonomolo, Cameron (July 26, 2019). "Black Panther 2: Danai Gurira Confirms Return as Okoye". ComicBook.com. July 26, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. Sneider, Jeff (March 17, 2021). "'Black Panther 2': Martin Freeman on Making the Sequel Without Chadwick Boseman". Collider. March 17, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. Mancuso, Vinnie (August 16, 2019). "'Black Panther 2': Martin Freeman Confirms the Return of Everett Ross". Collider. August 16, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 16, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. Kit, Borys (October 11, 2018). "Ryan Coogler Signs on to Write and Direct 'Black Panther' Sequel (Exclusive)". The Hollywood Reporter. October 11, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 11, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. Perine, Aaron (March 10, 2021). "Black Panther 2: Ryan Coogler Talks Difficulty of Moving On Without Chadwick Boseman". ComicBook.com. March 11, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 17, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  10. Pearson, Ben (December 10, 2020). "'Black Panther II' Will Not Recast T'Challa in the Wake of Chadwick Boseman's Death". /Film. December 11, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 10, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  11. Rubin, Rebecca (August 30, 2020). "Ryan Coogler Pays Emotional Tribute to Chadwick Boseman: 'What an Incredible Mark He's Left for Us'". Variety. August 30, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  12. Siegel, Tatiana; Kit, Borys (September 2, 2020). "Disney Grapples With How to Proceed on 'Black Panther' Without Chadwick Boseman". The Hollywood Reporter. September 2, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 2, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  13. Kit, Borys; Couch, Aaron (November 20, 2020). "Marvel's 'Black Panther' Sequel Shoot to Begin in July (Exclusive)". The Hollywood Reporter. November 20, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 20, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  14. Nyren, Erin (August 24, 2019). "'Black Panther' Sequel Set for 2022 Release". Variety. August 24, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 24, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]