கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3
இயக்கம்ஜேம்ஸ் கன்
தயாரிப்புகேவின் பிகே[1]
கதைஜேம்ஸ் கன்
மூலக்கதை
கார்டியன்சு ஒப் த கலக்சி
படைத்தவர்

 • டான் அப்நெட்
 • ஆண்டி லான்னிங்
இசைஜான் மர்பி
நடிப்பு
ஒளிப்பதிவுஹென்றி பிரஹாம்
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் இசுடுடியோசு
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 22, 2023 (2023-04-22)(டிஸ்னிலேண்ட் பாரிஸ்)
மே 5, 2023 (அமெரிக்கா)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
மொத்த வருவாய்$845.6 மில்லியன்

கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 (ஆங்கில மொழி: Guardians of the Galaxy 3) என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது கார்டியன்சு ஒப் த கலக்சி என்ற மார்வெல் வரைகதை குழுவை மையமாக வைத்து மார்வெல் இசுடுடியோசு என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்திரண்டாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கன்[2][3] என்பவர் இயக்க, கிறிஸ் பிராட்,[4][5] ஜோ சல்டனா, டேவ் பாடிஸ்டா,[6][7] வின் டீசல், பிராட்லி கூப்பர், கரேன் கில்லன், போம் கிளெமென்டிப், சீன் கன், சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் வில் போல்டர் ஆகியோர் நடித்துள்ளனர்.[8]

ஜேம்ஸ் கன்[9] நவம்பர் 2014 இல் இந்தத் திரைப்படத் தொடரின் மூன்றாவது படத்திற்கான ஆரம்ப யோசனைகள் இருப்பதாகக் கூறினார், மேலும் ஏப்ரல் 2017 இல் இந்த படத்தில் எழுத்தாளராகவும் மற்றும் இயக்குனராகவும் பணியாற்ற உள்ளதாக டுவிட்டரில் பதிவு செய்தார்.[10] இவரின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுகளை தொடர்ந்து ஜூலை 2018 இல் டிஸ்னி இவரை இந்த திரைப்படத்திலிருந்து நீக்கியது.[11][12] ஆனால் மார்வெல் இசுடுடியோசு அக்டோபரில் டிஸ்னி போக்கை மாற்றி ஜேம்ஸ் கன் என்பவரை மீண்டும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கன் தனது திரைப்படமான தி சூசைட் ஸ்க்வாட் (2021) மற்றும் பீஸ்மேக்கர் (2022) ஆகியவற்றின் பணிகளை முடித்த பிறகு, நவம்பர் 2021 இல் ஜார்ஜியாவின் அட்லான்டாவில் படப்பிடிப்பு தொடங்கியது, மேலும் ஏப்ரல் 2022 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இங்கிலாந்தில் உள்ள லண்டனிலும் நடைபெற்றது.

கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 என்ற படம் 3 ஏப்ரல் 22, 2023 அன்று டிஸ்னிலேண்ட் பாரிஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மே 5 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அதன் முன்னோடிகளைப் போலவே, இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. கன்னின் இயக்கம் மற்றும் திரைக்கதை, அதன் காட்சிகள், ஒலிப்பதிவு, நிகழ்ச்சிகள், அதிரடி காட்சிகள், உணர்ச்சிகரமான எடை மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்காக விமர்சகர்கள் படத்தைப் பாராட்டினர்; பலர் திரைப்படத்தை முத்தொகுப்புக்கு திருப்திகரமான முடிவாகக் கருதினர். இது உலகளவில் $845 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்து, 2023ல் நான்காவது அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Chitwood, Adam (June 25, 2018). "Kevin Feige Gives 'Guardians of the Galaxy Vol. 3' Update". Collider. Archived from the original on June 26, 2018. பார்க்கப்பட்ட நாள் June 26, 2018.
 2. Tharpe, Frazier (March 15, 2017). "'Guardians of the Galaxy' Director James Gunn Teases The Guardians' "Integral Part" In 'Infinity War'". Complex. Archived from the original on March 15, 2017. பார்க்கப்பட்ட நாள் March 15, 2017.
 3. Polowy, Kevin (March 16, 2017). "James Gunn Explains What He Really Meant About 'Guardians of the Galaxy: Vol. 3'". Yahoo!. Archived from the original on March 20, 2017. பார்க்கப்பட்ட நாள் March 20, 2017.
 4. Kitchener, Shaun (April 27, 2018). "Guardians of the Galaxy 3: Chris Pratt teases 'freaking amazing' trilogy finale". Sunday Express. Archived from the original on May 16, 2017. பார்க்கப்பட்ட நாள் April 29, 2018.
 5. Staley, Brandon (June 1, 2018). "Chris Pratt Confirms Guardians of the Galaxy Vol. 3 Will Film in January". Comic Book Resources. Archived from the original on June 2, 2018. பார்க்கப்பட்ட நாள் June 1, 2018.
 6. "Exclusive: Dave Bautista tells ShortList he'll quit 'Guardians of the Galaxy' if James Gunn's script isn't used". ShortList. August 6, 2018. Archived from the original on August 6, 2018. பார்க்கப்பட்ட நாள் August 6, 2018.
 7. Ramos, Dino-Ray (September 2, 2018). "Dave Bautista May Not Return For 'Guardians of the Galaxy Vol. 3': "I Don't Know If I Want To Work For Disney"". Deadline Hollywood. Archived from the original on September 3, 2018. பார்க்கப்பட்ட நாள் September 3, 2018.
 8. Petski, Denise (July 23, 2018). "Chris Pratt, Zoe Saldana, Karen Gillan Speak Out Amid James Gunn Fallout; Petition To Rehire 'Guardians' Director Gains Steam". Deadline Hollywood. Archived from the original on July 31, 2018. பார்க்கப்பட்ட நாள் July 31, 2018.
 9. Kiang, Jessica (November 6, 2014). "Interview: James Gunn Talks 'Guardians 2,' Small Vs Big Budgets And Being "Betrayed" By 'Lost'". IndieWire. Archived from the original on April 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2016.
 10. Hibberd, James (July 23, 2018). "Guardians of the Galaxy star quits Twitter after James Gunn firing". Entertainment Weekly. Archived from the original on July 31, 2018. பார்க்கப்பட்ட நாள் July 31, 2018.
 11. Kit, Borys; Couch, Aaron (July 20, 2018). "James Gunn Fired as Director of 'Guardians of the Galaxy Vol. 3'". The Hollywood Reporter. Archived from the original on July 20, 2018. பார்க்கப்பட்ட நாள் July 20, 2018.
 12. Fleming, Mike Jr. (July 20, 2018). "James Gunn Fired From 'Guardians of the Galaxy' Franchise Over Offensive Tweets". Deadline Hollywood. Archived from the original on July 20, 2018. பார்க்கப்பட்ட நாள் July 20, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]