உள்ளடக்கத்துக்குச் செல்

சில்வெஸ்டர் ஸ்டாலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்வெஸ்டர் ஸ்டாலோன்
Sylvester Stallone on 2012
பிறப்புMichael Sylvester Gardenzio Stallone[1]
சூலை 6, 1946 (1946-07-06) (அகவை 78)
New York City, U.S.
பணிActor, director, screenwriter
செயற்பாட்டுக்
காலம்
1970–present
பெற்றோர்Frank Stallone Sr.
Jackie Stallone
வாழ்க்கைத்
துணை
Sasha Czack
(தி. 1974; ம.மு. 1985)

Brigitte Nielsen
(தி. 1985; ம.மு. 1987)

Jennifer Flavin (தி. 1997)
பிள்ளைகள்Sage, Seargeoh, Sophia, Sistine, Scarlet
உறவினர்கள்Frank Stallone (brother)
வலைத்தளம்
http://www.sylvesterstallone.com

மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன்(உச்சரிப்பு /stəˈloʊn/; ஜூலை மாதம் 6 ஆம் தேதி 1946 ஆம் வருடம் பிறந்த இவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் என பொதுவாக அழைக்கப்படுகிறார் மற்றும் Sly Stallone என்று புனைப்பெயரிட்டும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு அமேரிக்க திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் அவ்வப்போது ஓவியமும் வரைவார். ஸ்டாலோன் ஹாலிவுட் திரைப்படங்களில் தனித்து அதிரடி ஆக்ஸன் கதாபதிரங்களினால் வெகுவாக அறியப்படுகிறார். இரண்டு குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களை இவர் செய்துள்ளார். அவை குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ ஆகியவை ஆகும். தி ராக்கி மற்றும் ராம்போ திரைபடங்களினுடன் மேலும் சில திரைப்படங்கள் அவரை ஒரு நடிகராக வலுவடைய செய்ததுடன் அவரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் வலுவடைந்தது.

ஸ்டாலோன் ராக்கி திரைப்படம் நேஷனல் பிலிம் ரிஜிஸ்டரியில் பதியவைக்க பட்டது. அத்துடன் இத்திரைப்பட முட்டுகள் சுமித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தின் முகப்பு நுழைவு வாயிலில் ஸ்டாலோன் இன் ராக்கி திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் ராக்கி ஸ்டெப்ஸ் என்று புனைபெயரிடபட்டது. பிலடெல்பியா அருங்காட்சியகம் ஆனது அவரின் ராக்கி கதாப்பாத்திரத்தின் சிலையானது நிரந்தரமாக அருங்காட்சியகத்தின் அருகில்,வலது பக்கத்தில் படிகளுக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ளது. இது 2010 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நியூயார்க் நகரத்தில் பிராங்க் ஸ்டேல்லன், Sr இற்கு மூத்த மகனாக பிறந்தார். நடிகர் மற்றும் இசையபைப்பாளர் பிராங்க் ஸ்டேல்லன் இவருக்கு இளைய சகோதரர் ஆவார். ஸ்டாலோனின் தந்தை இத்தாலியின்,அபுலியா,Gioia del Colle இல் பிறந்தார். அவரது குழந்தை பருவத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். ஸ்டாலோனின் தாயார் அரை ரஷியன் யூத மற்றும் அரை பிரஞ்சு வம்சாவளியை சேர்த்தவர் ஆவார். இவர் பிறக்கும் போதே அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவரது முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு இவரது முகத்தில் சில பாகங்களில் செயலற்று போனது. இதனால் இவரது முகத்தில் இடது அடி பாகமான உதடு, தொண்டை, முகவாய்கட்டை பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினால் இவரது பார்வை மற்றும் பேச்சும் பாதிக்கப்பட்டது. இவரது தந்தை ஒரு அழகுக்கலை நிபுணர் ஆவார். அவர் தன் குடும்பத்தை வாஷிங்டன் டி.சி க்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு அழகு கலை பள்ளியை தொடங்கினார். இவரது தாய் பெண்களுக்கு ஜிம்னாஸ்டிக் பள்ளியை 1954ல் தொடங்கினார். இவரது 9வது வயதில் இவரது தாய் தந்தையர் சட்டப்படி பிரிந்தனர். அதன் பின் இவர் தாயுடன் வாழ்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Halperin, Ian (2010). The Governator LP: From Muscle Beach to His Quest for the White House, the Improbable Rise of Arnold Schwarzenegger. HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-200223-6, 9780062002235. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வெஸ்டர்_ஸ்டாலோன்&oldid=4160822" இலிருந்து மீள்விக்கப்பட்டது