போம் கிளெமென்டிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போம் கிளெமென்டிப்
Stuttgart -Comic Con Germany 2019- 7d by-RaBoe 037 (cropped).jpg
பிறப்புபோம் அலெக்ஸாண்ட்ரா கிளெமென்டிப்
3 மே 1986 (1986-05-03) (அகவை 35)
கியூபெக் நகரம், கியூபெக், கனடா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
கையொப்பம்

போம் கிளெமென்டிப் (Pom Klementieff, பிறப்பு: 3 மே 1986)[1] என்பவர் பிரான்சு நாட்டு நடிகை ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் மன்டிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 3 மே 1986 ஆம் ஆண்டில் கனடாவில் கியூபெக்கில் உள்ள கியூபெக் நகரில் ஒரு கொரிய தாய் மற்றும் பிரெஞ்சு-ரஷ்ய தந்தைக்கு மகளாக பிறந்தார். அங்கு இவர் பிரான்ஸ் அரசாங்கத்துடன் தூதராக பணிபுரிந்தார். இவர் ஒரு பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]

திரைப்படத்துறை[தொகு]

இவர் 2007 ஆம் ஆண்டு பிரான்சு மொழி சுயாதீனத் திரைப்படமான 'அப்தேர் கிம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.[4] அதை தொடர்ந்து லூப் (2009) போன்ற சில பிரான்சு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு 'ஓல்டுபோய்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரைபபடத்துறையில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போம்_கிளெமென்டிப்&oldid=3223135" இருந்து மீள்விக்கப்பட்டது