டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்
இயக்கம்சாம் ரைமி[1]
தயாரிப்புகேவின் பிகே[2]
மூலக்கதை
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
படைத்தவர்
திரைக்கதை
 • ஜேட் பார்ட்லெட்
 • மைக்கேல் வால்ட்ரான்
இசைடேனி எல்ப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் மதிசன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 25, 2022 (2022-03-25)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (Doctor Strange in the Multiverse of Madness)[3] என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி எட்டாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை சாம் ரைமி[4] என்பவர் இயக்க, ஜேட் பார்ட்லெட் மற்றும் மைக்கேல் வால்ட்ரான் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பிகே[5] தயாரிக்கும் இந்த படத்தில் பெனடிக்ட் கம்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சென்,[6] பெனடிக்ட் வோங், ரேச்சல் மெக்காடம்ஸ்,[7] சிவெட்டல் எஜியோஃபர் மற்றும் ஸோகிட்ல் கோம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற படத்தின் இயக்குநரும் இணை எழுத்தாளருமான இசுகாட் டெரிக்சன்[8] அக்டோபர் 2016 க்குள் இந்த திரைப்படத்தின் அடுத்த தொடர்ச்சியை இயக்க திட்டம் கொண்டிருந்தார்.[9] 2018 ஆம் ஆண்டு இவர் இப்படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்திட்டார்.[10][11] இப்படத்தின் தலைப்பு ஜூலை 2019 இல் அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் இப்படத்தில் நடிகை எலிசபெத் ஓல்சென்[12] என்பவர் நடிப்பார் என்றும் மற்றும் அக்டோபர் மாதம் படத்தை எழுத ஜேட் பார்ட்லெட் பணியமர்த்தப்பட்டார். பல வேறுபாடுகள் காரணமாக இசுகாட் டெரிக்சன் 2020 ஜனவரியில் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்.[13] அடுத்த மாதம், மைக்கேல் வால்ட்ரான் இந்தத் திட்டத்தில் சேர்ந்தார், சாம் ரைமி [14][15] ஏப்ரல் 2020 க்குள் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.[16] 2020 நவம்பரில் இலண்டனில் படப்பிடிப்பு தொடங்கியது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் 2021 ஜனவரியில் நிறுத்தப்பட்டது. மார்ச் 2021 க்குள் உற்பத்தி மீண்டும் தொடங்கி ஏப்ரல் நடுப்பகுதியில் சோமர்செட்டில் முடிந்தது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 25, 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Davis, Brandon (June 25, 2020). "Doctor Strange 2: Chiwetel Ejiofor Excited For Sam Raimi With Multiverse Of Madness". மூல முகவரியிலிருந்து June 25, 2020 அன்று பரணிடப்பட்டது.
 2. Foutch, Haleigh (December 30, 2019). "Kevin Feige Says 'Doctor Strange 2' Isn't Quite a Horror Movie; Teases Surprising New Characters". மூல முகவரியிலிருந்து December 31, 2019 அன்று பரணிடப்பட்டது.
 3. "Doctor Strange In The Multiverse Of Madness (Feature Film)" (October 10, 2020). மூல முகவரியிலிருந்து January 20, 2021 அன்று பரணிடப்பட்டது.
 4. "Sam Raimi in Talks to Direct 'Doctor Strange 2' (Exclusive)" (February 5, 2020). மூல முகவரியிலிருந்து February 6, 2020 அன்று பரணிடப்பட்டது.
 5. Chichizola, Corey (February 24, 2021). "Kevin Feige On If Watching WandaVision Is Mandatory For Doctor Strange And Captain Marvel's Sequels". மூல முகவரியிலிருந்து February 24, 2021 அன்று பரணிடப்பட்டது.
 6. Vary, Adam B. (March 10, 2021). "'WandaVision': Elizabeth Olsen and Jac Schaeffer on Wanda's Kids, Fan Theories and the Future of the Show". மூல முகவரியிலிருந்து March 12, 2021 அன்று பரணிடப்பட்டது.
 7. Kroll, Justin (December 10, 2020). "Rachel McAdams Returning For 'Doctor Strange In The Multiverse Of Madness'". மூல முகவரியிலிருந்து December 10, 2020 அன்று பரணிடப்பட்டது.
 8. Deckelmeier, Joe (November 4, 2016). "Scott Derrickson Discusses 'Doctor Strange's Comic Book Influences". மூல முகவரியிலிருந்து November 4, 2016 அன்று பரணிடப்பட்டது.
 9. Krupa, Daniel (October 28, 2016). "'Doctor Strange' Director's Idea For a Sequel". மூல முகவரியிலிருந்து October 29, 2016 அன்று பரணிடப்பட்டது.
 10. Romano, Nick (December 10, 2020). "Doctor Strange sequel confirms cast, will tie into Spider-Man 3". மூல முகவரியிலிருந்து December 11, 2020 அன்று பரணிடப்பட்டது.
 11. Kit, Borys (December 11, 2018). "Scott Derrickson Returning to Direct 'Doctor Strange' Sequel (Exclusive)". மூல முகவரியிலிருந்து டிசம்பர் 11, 2018 அன்று பரணிடப்பட்டது.
 12. Truitt, Brian (January 22, 2021). "'Avengers' star Elizabeth Olsen talks getting witchy again for Marvel's 'WandaVision,' 'Doctor Strange 2'". மூல முகவரியிலிருந்து January 23, 2021 அன்று பரணிடப்பட்டது.
 13. "'Doctor Strange 2' Director Scott Derrickson Drops Out (Exclusive)" (January 9, 2020). மூல முகவரியிலிருந்து January 10, 2020 அன்று பரணிடப்பட்டது.
 14. Evangelista, Chris (April 15, 2020). "Sam Raimi Confirms He's Directing 'Doctor Strange in the Multiverse of Madness'". மூல முகவரியிலிருந்து April 15, 2020 அன்று பரணிடப்பட்டது.
 15. Dinh, Christine (December 10, 2020). "'Doctor Strange In The Multiverse of Madness': Sequel Introduces America Chavez, Sam Raimi Directing". மூல முகவரியிலிருந்து December 11, 2020 அன்று பரணிடப்பட்டது.
 16. Hunt, James (October 24, 2016). "'Doctor Strange 2': Director Confirms Early Plans". மூல முகவரியிலிருந்து October 25, 2016 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]