இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜோன் வாட்ஸ்[1] |
தயாரிப்பு | |
கதை | |
மூலக்கதை | |
இசை | மைக்கேல் ஜெய்சினோ |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மத்தேயு ஜே. லாய்ட் |
கலையகம் |
|
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 2, 2019(அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 129 நிமிடங்கள் [4] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $160 மில்லியன்[5] |
மொத்த வருவாய் | $1.132 பில்லியன் |
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (ஆங்கில மொழி: Spider-Man: Far From Home) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.[6] இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் [7] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
இது 2017 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி மூன்றாவது திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படத்திற்கு கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் என்பவர்கள் கதை எழுத, ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.[8] டாம் ஹாலண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், ஜெண்டயா, கோபி ஸ்மல்டேர்ஸ், ஜான் பெவ்ரோ, ஜே. பி. சுமூவ், ஜேக்கப் படலோன், மார்டின் இஸ்டார், மரிசா டோமீய், ஜேக் கிலென்ஹால் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் ஜூன் 26, 2019 அன்று கிராமனின் சீன திரையரங்கில் திரையிடப்பட்டது, இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் மூன்றாம் கட்டத்தின் கடைசி படமாக ஜூலை 2 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியானது. இந்த திரைப்படம் நகைச்சுவை மற்றும் திரை வண்ணத்திற்கான பாராட்டுக்களைப் பெற்றது. இது உலகளவில் $1.1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது, இது பில்லியன் டாலர் மதிப்பைக் கடந்த முதல் ஸ்பைடர் மேன் படமும் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தில் இதுவரை அதிக வசூல் செய்த முதல் படமும் இதுவே. 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த நான்காவது படமாகவும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 24 வது படமும் ஆகும். இதன் மூன்றாவது படம் 2021 டிசம்பர் 17 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கதை சுருக்கம்[தொகு]
இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படங்களில் நடந்த சம்பவங்களை கடந்து பீட்டர் பார்க்கெர் அவருடைய பள்ளியில் இருந்து ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணமாக சக மாணவர்களுடன் அழைத்து செல்லப்படுகிறார். அங்கே மாய சக்திகளை உடைய கதாநாயகரான மெஸ்டிரியோ (ஜேக் கிலென்ஹால்) வேற்று கிரக அரக்கர்களுடன் போராடுவதை பார்க்கிறார். பாதுகாப்பு அமைப்பின் தலைவரான நிக் ப்யூரியின் உதவியுடன் மெஸ்டிரியோவுக்கு அரக்கர்களை எதிர்த்து போராட உதவியும் செய்கிறார். ஆனால் மெஸ்டிரியோவிடம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்து அயன் மேனான டோனி ஸ்டார்க்கின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் பாதுகாப்பு சாதனங்களையும் கட்டுப்படுத்தும் இடித் என்ற சிறப்பு கண்ணாடியை மெஸ்டிரியோவுக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த அரக்கர்கள் எல்லாமே மெஸ்டிரியோவின் மாயை என்று அறியும்போது மெஸ்டிரியோவால் விபத்துக்குள்ளாகி நெதர்லாந்தில் மாட்டிக்கொள்கிறார்.
டோனி ஸ்டார்க்கின் நண்பரான ஹாப்பி ஹோகனினின் (ஜான் பெவ்ரோ) உதவியுடன் புதிய ஸ்பைடர்மேன் கவசத்தை உருவாக்கி தனியொரு மனிதனாக போராடி மெஸ்டிரியோவை தோற்கடிக்கிறார் இடித் கண்ணாடியை மீட்டமைக்கிறார். மெஸ்டீரியோ அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு ஆயுதங்களால் தாக்கப்பட்டு வாழ்க்கையின் முடிவை அடைகிறார். பார்க்கர்/ஸ்பைடர் மேன் அவருடைய தோழியான எம்.ஜே. மிக்கல்லாவிடம் நேசிப்பதை சொல்கிறார். ஆனால் மெஸ்டிரியோவின் குழுவினர் டெய்லி பியூகல் என்ற மிகப்பெரிய தொலைக்காட்சியில் உலக செய்தி ஒளிபரப்பில் ஸ்பைடர்மேனை வில்லனாக மாற்றி அனைத்து சேதங்களுக்கும் ஸ்பைடர்மேன்தான் காரணம் என்று குற்றம் சாட்டி ஸ்பைடர்மேனின் உண்மையான அடையாளம் பீட்டர் பார்க்கெர் என்று உலகசெய்திகளில் வெளிப்படுத்துகின்றனர்.
நடிகர்கள்[தொகு]
- டாம் ஹாலண்ட்[9][10] - பீட்டர் பார்கர் & ஸ்பைடர் மேன்
- அவெஞ்சர்ஸ் குழுவின் இளம் சூப்பர் ஹீரோ. இவருக்கு சிலந்தி மூலம் சக்தி கிடைத்தது.
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
- ஷீல்ட் குழுவின் முன்னாள் தலைவர். இவர் பார்கருக்கு ஒரு வளர்ப்பு தந்தை மாதிரி.
- ஜெண்டயா[11] - மிக்கெல்லா
- பார்கருடன் ஒன்றாக படிப்பவர் மற்றும் அவரின் தோழி. இவரின் கதாபாத்திரம் பார்கருடன் காதல் ஏட்படுவது போன்று அமைந்துள்ளது.
- கோபி ஸ்மல்டேர்ஸ் - மரியா ஹில்
- ஷீல்ட் குழுவின் சிறப்பு பயிற்சி பெற்ற முன்னாள் உறுப்பினர். நிக் ப்யூரியுடன் ஒன்றாக வேலை செய்பவர்.
- ஜான் பெவ்ரோ - ஹரோல்ட் "ஹேப்பி" ஹோகன்
- ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் மெய்க்காப்பாள ர் மற்றும் முன்னாள் கார் ஓட்டுநர், டோனி ஸ்டார்க்குக்கு பிறகு பார்கரின் காவலர். டோனியின் நம்பிக்கைக்குரிய நண்பன்.
- ஜே. பி. சுமூவ் - மிஸ்டர் டெல்
- பார்கரின் ஆசிரியரும் மற்றும் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்கான ஒழுங்கலர்.
- ஜேக்கப் படலோன்[12] - நெட்
- பார்கரின் முதல் நண்பன்.
- மார்டின் இஸ்டார் - ஹாரிங்டன்
- மரிசா டோமீய்[13] - மே பார்கர் (பார்கரின் அத்தை)
- ஜேக் கிலென்ஹால்[14][15] - கவென்டின் பெக் / மிஸ்டீரியோ
இசை[தொகு]
இந்த திரைபபடத்திற்கான இசையமைப்பாளராக மைக்கேல் ஜெய்சினோ என்பவர் அக்டோபர் 2018 இல் உறுதி செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இப்படத்திற்கான ஒலித்தட்டுக்கள் 28 ஜூன் 2019 ஆம் ஆண்டு வெளியானது.
வெளியீடு[தொகு]
இந்த படம் கிராமனின் சீன திரையரங்கு ஹாலிவுட்ட்டில் ஜூன் 26 ஆம் தேதி திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் 28 அன்று சீனா மற்றும் ஜப்பானில் மற்றும் அமெரிக்காவில் ஜூலை 2 அன்று 3டி மற்றும் ஐமாக்ஸில் வெளியிடப்பட்டது. இப் படம் முதலில் ஜூலை 5 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படம் தொழிலாளர் தின வார இறுதியில் ஆகஸ்ட் 29 தொடங்கி நான்கு நிமிட கூடுதல் காட்சிகளுடன் மீண்டும் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chitwood, Adam (June 26, 2017). "'Spider-Man: Homecoming 2': Director Jon Watts Likely to Return". Collider. June 26, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 26, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chitwood, Adam (July 27, 2016). "Kevin Feige Says 'Spider-Man' Sequels Could Follow the 'Harry Potter' Format". Collider. July 28, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 27, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rooney, Matt (June 24, 2017). "Exclusive: Kevin Feige Talks Spidey's Future & Studio Collaborations". JoBlo.com. June 26, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 25, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Spider-Man: Far From Home". British Board of Film Classification. June 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Rubin, Rebecca (June 13, 2019). "Box Office: 'Spider-Man: Far From Home' Eyes $150 Million-Plus Holiday Weekend Debut". Variety. June 13, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 13, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chitwood, Adam (June 26, 2017). "'Spider-Man: Homecoming 2' Filming Dates, Title Details Revealed". Collider. June 26, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 26, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Siegel, Tatiana; Kit, Borys (June 21, 2017). "How Sony Learned to Cede Control to Marvel on 'Spider-Man: Homecoming'". The Hollywood Reporter. June 21, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 21, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Hood, Cooper (December 9, 2017). "Kevin Feige Confirms Jon Watts Will Direct Spider-Man: Homecoming 2". Screen Rant. December 9, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Siegel, Tatiana (November 9, 2016). "Tom Holland Learned He Got His 'Spider-Man: Homecoming' Role From a Marvel Instagram Post". The Hollywood Reporter. November 9, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Patches, Matt (June 23, 2018). "Tom Holland just revealed the full title of Spider-man 2". Polygon. June 24, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kit, Borys; Galuppo, Mia (February 9, 2018). "Jake Gyllenhaal, Ansel Elgort, Zendaya to Star in Crime Drama 'Finest Kind'". The Hollywood Reporter. February 10, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 10, 2018 அன்று பார்க்கப்பட்டது.
Zendaya is currently in theaters with the awards contender and sleeper hit 'The Greatest Showman,' and is set for the sequel to 'Spider-Man: Homecoming.'
- ↑ Alexander, Julia (October 5, 2017). "Peter Parker's best friend, Ned, may show up in an Avengers movie". Polygon. October 5, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Setoodeh, Ramin (July 21, 2017). "Marisa Tomei on Playing Aunt May in 'Spider-Man: Homecoming,' Sequels and Hollywood Sexism". Variety. July 22, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 22, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kroll, Justin (May 21, 2018). "Jake Gyllenhaal Eyed for Villain Role in 'Spider-Man: Homecoming' Sequel". Variety. May 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 21, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vlessing, Etan; Kit, Borys (May 21, 2018). "Jake Gyllenhaal in Talks to Star in 'Spider-Man: Homecoming' Sequel". The Hollywood Reporter. May 22, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 21, 2018 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- 2019 ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம்
- தொடர் திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்
- ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்
- கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்கள்