டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் | |
---|---|
![]() | |
இயக்கம் | இசுகாட் டெரிக்சன்[1][2] |
தயாரிப்பு | கேவின் பிகே[3] |
கதை | |
மூலக்கதை | |
இசை | மைக்கேல் ஜெய்சினோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பென் டேவிஸ் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ்[4] |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 13, 2016(ஆங்காங்) நவம்பர் 4, 2016 (அமெரிக்கா) |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $165 மில்லியன் |
மொத்த வருவாய் | $677.7மில்லியன் |
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (ஆங்கில மொழி: Doctor Strange) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரை கொண்ட மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் இசுகாட் டெரிக்சன் என்பவர் இயக்க, ஜான் இசுபைட்சு, இசுகாட் டெரிக்சன் மற்றும் சி. ரொபேர்ட் கார்கில் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதிநான்காவது திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் 'ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்' என்ற கதாபாத்திரத்தில் பிரபல ஆங்கிலத் திரைப்பட நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச் என்பவர் நடிக்க, இவருடன் சிவெட்டல் எஜியோஃபர், ரேச்சல் மெக்காடம்ஸ், பெனடிக்ட் வோங், மைக்கேல் ஸ்டுல்பர்க், பெஞ்சமின் பிராட், ஸ்காட் அட்கின்ஸ், மேட்ஸ் மிக்கெல்சன், டில்டா ஸ்விண்டன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் மூலம் அக்டோபர் 13, 2016 ஆம் ஆண்டு ஆங்காங் நாட்டிலும் நவம்பர் 4, 2016 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் முப்பரிமாணம் மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளுடன் வெளியாகி 677.7மில்லியன் அமெரிக்க டொலர் வசூல் செய்தது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் என்ற பெயரில் மார்ச்சு 25, 2022 ஆம் ஆண்டு வெளியாவுள்ளது.
கதைச் சுருக்கம்[தொகு]
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் அமெரிக்காவில் தலை சிறந்த அறுவை சிகிக்சை நிபுணர். இதனால் பணமும் புகழும் வர இவருக்கு திமிர் பிடித்தவனாக மாறுகிறான். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட. விதியின் சதியால் அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. இதனால் கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. இவனின் சொத்துக்கள் எல்லாம் மருத்துவ செலவுக்கு போக இவனை அரவணைத்து எல்லா உதவிகளையும் செய்யும் நண்பியாக . ஒரு நாள் இவனின் திமிரால் அவரும் விட்டுச்செல்ல இவன் தன்மைப்பட்டான்.
நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி நேபாளத்தில் உள்ள காட்மாண்டுக்குப் பயணிக்கிறார். அங்கு என்பவரை சந்திக்கிறான் முதலில் மந்திரங்களை நம்பாத அவன் கால போக்கில் அதை உணர்ந்தான். ஒரு கட்டத்தில் இவனின் விடா முயற்சியால் ஒரு மந்திரகளில் ஓரளவு தேர்ச்சி பெற்றான். அதே தருணம் காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். இவனும் மந்திரங்களை சரியான முறையில் பயிற்றவன். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சூப்பர் ஹீரோவாக உருமாறி எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
நடிகர்கள்[தொகு]
- பெனடிக்ட் கம்பர்பேட்ச்[5][6] - ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்
- ஒரு அமெரிக்க புகழ் பெற்ற வைத்தியர் மற்றும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி. விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட.
- சிவெட்டல் எஜியோஃபர் - கார்ல் மோர்டோ
- மந்திர சக்திகளை முறையாக கற்றவன். ஏன்ஷியன்ட் ஒன் என்பவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய நெருக்கமான நண்பன் மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.
- ரேச்சல் மெக்காடம்ஸ்[7] - கிறிஸ்டின் பால்மர்
- அவசர பிரிவில் அறுவை சிகிக்சையாளர். இவர் ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்சை காதலிக்கின்றார்.
- பெனடிக்ட் வோங்[8][9] - வோங்
- மந்திர புத்தகங்களுக்கு காவலாளியாக இருப்பவர் மற்றும் ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்சின் சிறந்த நண்பன்.
- மைக்கேல் ஸ்டுல்பர்க் - நிக்கோடெமஸ் வெஸ்ட்
- பெஞ்சமின் பிராட் - ஜொனாதன் பாங்போர்ன்
- ஸ்காட் அட்கின்ஸ் - லூசியன்
- மேட்ஸ் மிக்கெல்சன் - கேசிலிஸ்
- ஏன்ஷியன்ட் ஒன் என்பவரிடம் மந்திரங்களை கற்றுவிட்டு அவருக்கு எதிராகவே மந்திரங்களை கேட்ட எண்ணத்திற்கு பாவிப்பவன். இவனால் ஏன்ஷியன்ட் ஒன் என்பவர் கொல்லப்படுகிறார். இதன் காரணமாக ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்க்கு எதிரியாகின்றான்.
- டில்டா ஸ்விண்டன் - ஏன்ஷியன்ட் ஒன்
- மந்திர பள்ளிக்கூடத்தின் தலைவி. மிகவும் தைரியமானவர் மற்றும் மந்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். ஸ்டீபன் ஸ்ட்ரேஞ்ச்க்கு மந்திரங்களை முறையாக கற்றுக்கொடுப்பவர்.
நடிகர்களின் தேர்வு[தொகு]
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச் என்பவர் இவர் ஒரு ஆங்கில மேடை நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைபபட நடிகர் ஆவார். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு சிறந்த சூப்பர் ஹீரோ ஆனார். ஏன்ஷியன்ட் ஒன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை டில்டா ஸ்விண்டன் என்பவர் இவர் 1986ஆம் ஆண்டு முதல் பல திரைபபடங்கள் தொலைக்கடைகளின் நடித்துவருகிறார். இந்த திரைபபடத்தின் இவரின் கதாபாத்திரம் இவருக்கு பொருந்தியுள்ளது.
படத்தின் சிறப்பம்சம்[தொகு]
- இந்த திரைபபடத்தின் விஷுவல் காட்சிகள் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- ஏன்ஷியன்ட் ஒன் அவரின் சண்டை காட்ச்சிகள் மற்றும் சாலைகள் மற்றும் கட்டிடங்களை சகட்டுமேனிக்குச் சதுரமாகத் திருப்பும் காட்ச்சிகள் பிரமிக்கவைக்கின்றது.
- இந்த திரைப்படத்தில் செய்யப்படும் அறுவை சிகிசைகளின் காட்சிகள் நாவினத்துவத்தை காட்டுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Couto, Anthony (March 12, 2014). "Update on the Shortlist for the Doctor Strange Film's Director". IGN இம் மூலத்தில் இருந்து March 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6O1UqfGv3?url=http://www.ign.com/articles/2014/03/12/update-on-the-shortlist-for-the-doctor-strange-films-director.
- ↑ Siegel, Tatiana; Kit, Borys (June 3, 2014). "Scott Derrickson to Direct Marvel's 'Doctor Strange'" இம் மூலத்தில் இருந்து June 3, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Q47TnPvy?url=http://www.hollywoodreporter.com/heat-vision/scott-derrickson-direct-marvels-doctor-709117.
- ↑ Faraci, Devin (March 13, 2014). "Kevin Feige Explains How Magic Will Work in Doctor Strange". Badass Digest இம் மூலத்தில் இருந்து March 13, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6O35Qxrnk?url=http://badassdigest.com/2014/03/13/kevin-feige-explains-how-magic-will-work-in-doctor-strange/.
- ↑ Vejvoda, Jim (February 25, 2014). "Marvel Studios President Kevin Feige Talks Doctor Strange, Netflix Series and Guardians of the Galaxy Trailer Reaction". IGN இம் மூலத்தில் இருந்து February 25, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Nf17OepK?url=http://www.ign.com/articles/2014/02/25/marvel-studios-president-kevin-feige-talks-doctor-strange-netflix-series-and-guardians-of-the-galaxy-trailer-reaction.
- ↑ "Benedict Cumberbatch in Nepal". The Himalayan Times. 5 November 2015 இம் மூலத்தில் இருந்து 5 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6colZNP1t?url=http://thehimalayantimes.com/entertainment/benedict-cumberbatch-in-nepal/. பார்த்த நாள்: 5 November 2015.
- ↑ "Benedict Cumberbatch's Secret Second Doctor Strange Role - Spoilers". Newsrama. 25 October 2016. http://www.newsarama.com/31725-benedict-cumberbatch-s-secret-second-doctor-strange-role.html. பார்த்த நாள்: 12 November 2016.
- ↑ Collis, Clark (December 28, 2015). "Find out who Rachel McAdams plays in Doctor Strange" இம் மூலத்தில் இருந்து December 28, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6e7WMHytv?url=http://www.ew.com/article/2015/12/28/doctor-strange-rachel-mcadams-benedict-cumberbatch.
- ↑ Kit, Borys (21 January 2016). "'The Martian' Actor Nabs Key 'Doctor Strange' Role". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/martian-actor-nabs-key-doctor-858155. பார்த்த நாள்: 10 August 2016.
- ↑ "Benedict Wong Confirmed For Avengers Infinity War". http://comicbook.com/marvel/2016/10/21/benedict-wong-confirmed-for-avengers-infinity-war/.
வெளி இணைப்புகள்[தொகு]
- 2016 ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: மூன்றாம் கட்டம்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்
- அமெரிக்க சாகச திரைப்படங்கள்
- அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்