மைக்கேல் ஜெய்சினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் ஜெய்சினோ
Michael Giacchino Sep 2017.jpg
Giacchino in September 2017
பின்னணித் தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 10, 1967 (1967-10-10) (அகவை 55)
ரிவெர்சைட் நகரியம், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்திரைப்பட மதிப்பெண், ஒலிச்சுவடு, ஜாஸ்
தொழில்(கள்)திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டம் இசையமைப்பாளர்
இசைத்துறையில்1994-இன்று வரை

மைக்கேல் ஜெய்சினோ (ஆங்கில மொழி: Michael Giacchino) (பிறப்பு:அக்டோபர் 10, 1967) என்பவர் அமெரிக்க நாட்டு இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற துறைகளில் இசை அமைத்து வருகிறார். இவர் தனது இசையப்பயணத்தில் அகாதமி விருது, பிரைம் டைம் எம்மி விருது மற்றும் மூன்று கிராமி விருதுகளைப்[1] பெற்றுள்ளார்.

இவர் ஜே. ஜே. ஏபிரகாம்சு, மாட் ரீவ்ஸ், பீட் டாக்டர், கொலின் டெரெவர்ரோ, ஜோன் வாட்ஸ், துரூ கோடார்ட், தி வச்சோவ்ஸ்கி போன்ற பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். மற்றும் ஜுராசிக் பார்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்,[2] இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்,[3] சூப்பர் 8, டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ், இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் கால் ஆஃப் டியூட்டி மற்றும் மெடல் ஆப் கோனார் போன்ற நிகழ்ப்பட ஆட்டங்களுக்கும், அலைஸ்,[4] லாஸ்ட்,[5] பிரிஞ்சு போன்ற தொலைக்காட்சியை தொடர்களுக்கு இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grammy Nominations 2005 – PDF பரணிடப்பட்டது செப்டம்பர் 29, 2007 at the வந்தவழி இயந்திரம்
  2. Goldberg, Matt (July 24, 2016). "Watch: Marvel Studios Debuts New Logo with Fanfare by Michael Giacchino". Collider. July 25, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 30, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Michael Giacchino to Return for 'Spider-Man: Far From Home'". Film Music Reporter. October 10, 2018. October 10, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Maintenance". Cinemusic.
  5. Lost Soundtrack. Amazon. Retrieved on August 21, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஜெய்சினோ&oldid=3412316" இருந்து மீள்விக்கப்பட்டது