ஜுராசிக் பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுராசிக் பார்க்
உருவாக்குனர்மைக்கேல் கிரைட்டன்
அசல் வேலைப்பாடுகள்ஜுராசிக் பார்க் (1990)
Print publications
நாவல்கள்
சிறுகதைகள்
 • ஜுராசிக் பார்க் அட்வென்ச்சர்ஸ்: சர்வைவர் (2001)
 • ஜுராசிக் பார்க் அட்வென்ச்சர்ஸ்: பிரே (2001)
 • ஜுராசிக் பார்க் அட்வென்ச்சர்ஸ்: ஃப்ளையர்ஸ் (2002)
வரைகதைகள்List of comic books
Films and television
திரைப்படங்கள்
குறும்படங்கள்
 • பேட்டில் அட் பிக் ராக் (2019)

ஜுராசிக் பார்க் (பின்னர் ஜுராசிக் வேர்ல்ட் எனவும் குறிப்பிடப்பட்டது)[1][2][3] என்பது ஒரு அமெரிக்க நாட்டு அறிபுனை ஊடக உரிமைக்குழுமமாகும். இது படியெடுக்கப்பட்ட தொன்மாக்கள் வாழும் கருப்பொருள் பூங்கா ஒன்றின் பேரழிவை மையமாகக் கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய ஒரு புதினம் வெளியாகும் முன்பே அதன் உரிமைகளை யுனிவர்சல் ஸ்டுடியோஸும் அம்ப்ளின் என்டர்டெயின்மென்டும் வாங்கியபோது இக்குழுமம் தொடங்கியது. இப்புதினமும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் திரைப்படத் தழுவலும் வெற்றிகரமாக அமைந்தன. இத் திரைப்படம் 2013-இல் முப்பரிமாண வடிவிலும் வெளியானது.[4] 2018 -இல், அமெரிக்கக் காங்கிரசு நூலகம் , இப் படத்தை "கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ அழகியல் ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[5]

இவற்றின் தொடர்ச்சிகளாக 1995-இல் ஒரு புதினமும் 1997-இல் ஒரு திரைப்படமும் வெளியாயின. இதன்பின் வந்த ஜுராசிக் பார்க் III முதலான படங்கள், கிரைட்டன் புதினங்களின் நேரடித் தழுவல்கள் அல்ல. இதன்பின் எண்ணற்ற நிகழ்பட ஆட்டங்களும் வரைகதைகளும் (comics) வந்துள்ளன. உலகெங்கும் உள்ள யுனிவர்சல் கருப்பொருள் பூங்காக்களில் இவற்றின் அடிப்படையிலான நீர் சவாரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 2000-ஆம் ஆண்டு நிலவரப்படி இக்குழுமம் $ 500 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.[6]

நான்காவதாக ஜுராசிக் வேர்ல்ட் என்ற படம் 2005-இல் வெளியாகவிருந்தது. எனினும் பலமுறை தடைபட்டபின் 2015 ஜூனில் வெளியானது. இது, தன் துவக்க வார இறுதியில் உலகளவில் $ 50 கோடி ஈட்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.[7] மேலும் திரையரங்குகளில் மொத்தமாக $ 160 கோடி ஈட்டி அச்சமயத்தில் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும் 2015-இல் அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாகவும் ஆனது. பணவீக்க சரிசெய்தல் படி பார்த்தால் இப் படம் ஜுராசிக் பார்க்-குக்கு அடுத்து இக் குழுமத்திலேயே அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாக உள்ளது. இதன்பின் இக்குழுமம் ஜுராசிக் வேர்ல்ட் என்றே அழைக்கப்படுகிறது.

ஐந்தாவதாக ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் என்ற படம் 2018-இல் வெளியானது. இது உலகளவில் $130 கோடிக்குமேல் ஈட்டி $100 கோடியைக் கடந்த மூன்றாவது ஜுராசிக் திரைப்படமாகவும், 2018-இல் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும், தற்போதுவரை அதிக வருவாய் ஈட்டிய 13-ஆம் படமாகவும் உள்ளது. ஆறாவதாக ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன் என்ற படம் ஜூன் 10, 2022 அன்று வெளியாகவுள்ளது.

இக் குழுமத்திலுள்ள திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பல அசைவூட்டப் படங்களை லெகோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன்ஆகியன 'ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரடெஷியஸ்' என்ற அசைவூட்டக் குறும்படத் தொடரை செப்டம்பர் 18, 2020 அன்று வெளியிட்டன.

பின்னணி[தொகு]

இன்-ஜென்[தொகு]

இன்-ஜென் (International Genetic Technologies, Inc.-InGen) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாலோ ஆல்ட்டோ நகரில் தலைமையிடத்தையும் ஐரோப்பாவில் ஒரு கிளையையும் கொண்டிருந்த (கற்பனை) நிறுவனமாகும்.[nb 1] எனினும், அதன் பெரும்பாலான ஆய்வுகள் கோஸ்ட்டா ரிக்கா நாட்டு (கற்பனை) தீவுகளான ஈஸ்லா நுப்லார், ஈஸ்லா சோர்னா ஆகிய இடங்களிலேயே நடைபெற்றன.[nb 1][nb 2] முதல் புதினத்தின் துவக்கத்தில் இன்-ஜென், 1980கள் காலகட்ட மரபியல் தொடக்கநிலை நிறுவனங்களுள் ஒன்றாகவே காட்டப்படுகிறது. எனினும் அப் புதினம் மற்றும் படத்தின் நிகழ்வுகள், மெசோசோயிக் ஊழியைச் சேர்ந்த தொன்மாக்கள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குவாகா வரையான பல்வகை உயிரினங்களை (அக்காலங்களில் அம்பர் பிசினில் மாட்டிய கொசுக்களின் உடலில் இருந்த அவற்றின் குருதியைக் கொண்டு) படியெடுக்கும் முறையை இன்-ஜென் கண்டறிந்ததாகக் கூறுகின்றன.[nb 1] Beacham's Encyclopedia of Popular Fiction என்ற நூல், இன்-ஜென்னைப் பிற தீய நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கதெனக் கூறுகிறது.[8] பிற தரவுகள், டி.ரெக்ஸ் குட்டியை இன்-ஜென் பெறும் நிகழ்வை கிங் காங் படத்தின் மறை குறிப்பாகக் கருதுகின்றனர்.[9] இன்-ஜென்னை த ஃபர்ம் புதினத்தில் வரும் நிறுவனத்தைப் போலவே தீர்மானமான ரகசியத்தன்மை வாய்ந்தது என்கிறார் கென் கெல்டர்.[10]

ஈஸ்லா நுப்லார்[தொகு]

இத் தீவு ஜுராசிக் பார்க் புதினம் மற்றும் முதலாம், நான்காம், ஐந்தாம் படங்களின் கதைக்களமாக உள்ளது. புதினத்தின்படி, இத் தீவின் பெயர், ஸ்பானிய மொழியில் ""முகில் சூழ்ந்த தீவு" எனப் பொருள்படும். இவ் வெப்பமண்டலத் தீவானது கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மேற்கே 120 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முதல் புதினம் மற்றும் படத்தின்படி, இங்கு அமையவிருந்த தொன்மா கருப்பொருள் பூங்கா, அதன் விலங்குகள் தப்பியமையால் கைவிடப்பட்டது. முதல் புதினத்தில், கோஸ்ட்டா ரிக்க அரசு இத் தீவைப் பாதுகாப்பற்றது என அறிவித்து அதை நாபாம் கொண்டு அழிக்கிறது. எனினும் திரைக்கதையின்படி இத் தீவு ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதி வரை காண்பிக்கப்படுகிறது.

ஜுராசிக் வேர்ல்ட் படத்தில், மஸ்ரானி குளோபல் கார்ப்பரேஷன் இங்கு ஒரு கருப்பொருள் பூங்காவைத் திறக்கிறது. எனினும் கதையின் இறுதியில் மீண்டும் தொன்மாக்கள் இத் தீவை மேற்கொள்கின்றன.ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தில், இத் தீவிலிருந்த ஒரு எரிமலை வெடித்து முழுத் தீவையும் அழிக்கிறது.[11]

ஈஸ்லா சோர்னா[தொகு]

Site B எனவும் அறியப்படும் இத் தீவு, த லொஸ்ட் வேர்ல்ட் புதினம் மற்றும் இரண்டாம் மூன்றாம் படங்களின் கதைக்களமாக உள்ளது. இங்குதான் தொன்மாக்கள் உருவாக்கப்பட்டுப் பின் ஈஸ்லா நுப்லாருக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

திரைப்படங்கள்[தொகு]

படம் வெளியீட்டு நாள்

(அமெரிக்கா)

இயக்கம் திரைக்கதை கதை தயாரிப்பு
ஜுராசிக் பார்க் சூன் 11, 1993 (1993-06-11) ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மைக்கேல் கிரைட்டன் ,டேவிட் கோப் ஜெரால்ட் ஆர். மோலன்,கேத்தலின் கென்னடி
த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் மே 23, 1997 (1997-05-23) டேவிட் கோப் ஜெரால்ட் ஆர். மோலன், கோலின் வில்சன்
ஜுராசிக் பார்க் III சூலை 18, 2001 (2001-07-18) ஜோ ஜான்ஸ்டன் பீட்டர் புக்மன், அலெக்சான்டர் பெய்ன்,ஜிம் டெய்லர் கேத்தலின் கென்னடி, லேரி ஜே. பிராங்கோ
ஜுராசிக் வேர்ல்ட் சூன் 12, 2015 (2015-06-12) கோலின் திரெவாரோ ரிக் ஜாஃபா-அமண்டா சில்வர், கோலின் திரெவாரோ,டெரெக் கான்னோல்லி ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் பிராங்க் மார்ஷல் மற்றும் பேட்ரிக் குரோவ்லி
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் சூன் 22, 2018 (2018-06-22) ஜே. ஏ. பயோனா டெரெக் கான்னோல்லி மற்றும் கோலின் திரெவாரோ பிராங்க் மார்ஷல், பேட்ரிக் குரோவ்லி, பெலென் அத்தியென்சா
ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன் சூன் 10, 2022 (2022-06-10) கோலின் திரெவாரோ கோலின் திரெவாரோ மற்றும் எமிலி கார்மைக்கேல் கோலின் திரெவாரோ மற்றும் டெரெக் கான்னோல்லி பிராங்க் மார்ஷல் மற்றும் பேட்ரிக் குரோவ்லி

மொத்த வருவாய்[தொகு]

படம் வட அமெரிக்கா
வெளியீட்டு தேதி
ஆக்கச்செலவு மொத்த வருவாய் குறிப்பு
வட அமெரிக்கா பிற பிரதேசங்கள் உலகளவில்
ஜுராசிக் பார்க் ஜூன் 11, 1993 $63 மில்லியன் $404,214,720 $629,713,583 $1,033,928,303 [12]
த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் மே 23, 1997 $73 மில்லியன் $229,086,679 $389,552,320 $618,638,999 [13]
ஜுராசிக் பார்க் III ஜூலை 18, 2001 $93 மில்லியன் $181,171,875 $187,608,934 $368,780,809 [14]
ஜுராசிக் வேர்ல்ட் ஜூன் 12, 2015 $150 மில்லியன் $652,385,625 $1,018,130,819 $1,670,516,444 [15]
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் ஜூன் 22, 2018 $170 மில்லியன் $417,719,760 $892,744,920 $1,310,464,680 [16]
மொத்தம் $549 மில்லியன் $1,88,45,78,659 $3,11,77,50,576 $5,00,23,29,235

Notes[தொகு]

 1. 1.0 1.1 1.2 புதினங்களின் படி.
 2. முதல் இரு திரைப்படங்களின்படி.

மேற்கோள்கள்[தொகு]

 1. "10 Best Screams in the Jurassic World Franchise" (October 18, 2018). மூல முகவரியிலிருந்து September 21, 2019 அன்று பரணிடப்பட்டது.
 2. "Why Frontier is returning to the iconic Jurassic Park" (December 13, 2019). "There are a lot of fans that just know it as Jurassic World. That's their entry to the franchise."
 3. McNary, Dave (September 24, 2019). "'Jurassic World 3' Bringing Back Laura Dern, Jeff Goldblum and Sam Neill". Variety. https://variety.com/2019/film/news/laura-dern-jeff-goldblum-sam-neill-jurassic-world-3-1203348571/. "The trio, who all appeared in the original "Jurassic Park" in 1993, will reprise their roles in the third chapter in Universal Pictures and Amblin Entertainment's "Jurassic World" franchise." 
 4. "Jurassic Park Re-release". The Hollywood Reporter. Universal. மூல முகவரியிலிருந்து May 1, 2012 அன்று பரணிடப்பட்டது.
 5. Barnes, Mike (December 12, 2018). "'Jurassic Park,' 'The Shining,' 'Brokeback Mountain' Enter National Film Registry". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/national-film-registry-jurassic-park-shining-brokeback-mountain-rebecca-hud-selected-by-library-cong-1168473. 
 6. Ginnekin, Van (August 29, 2007). Screening Difference: How Hollywood's Blockbuster Films Imagine Race. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461643296. https://books.google.com/books?id=MU97AAAAQBAJ&q=%245+billion+jurassic+park+franchise&pg=PA11. பார்த்த நாள்: January 24, 2017. 
 7. Acuna, Kirsten (June 14, 2015). "'Jurassic World' is the first movie ever to crack $500 million in its opening weekend". மூல முகவரியிலிருந்து February 2, 2018 அன்று பரணிடப்பட்டது.
 8. Kirk H. Beetz, Beacham's Encyclopedia of Popular Fiction: biography & resources (Beacham Pub., 1996), 2238 பரணிடப்பட்டது பெப்ரவரி 2, 2017 at the வந்தவழி இயந்திரம்.
 9. Nigel Morris, The Cinema of Steven Spielberg: Empire of Light (Wallflower Press, 2007), 249. பரணிடப்பட்டது பெப்ரவரி 2, 2017 at the வந்தவழி இயந்திரம்
 10. Ken Gelder, Popular Fiction: The Logics and Practices of a Literary Field (Routledge, 2004), 113 பரணிடப்பட்டது பெப்ரவரி 2, 2017 at the வந்தவழி இயந்திரம்.
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EmpireSecrets என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. "Jurassic Park (1993)". மூல முகவரியிலிருந்து January 1, 2013 அன்று பரணிடப்பட்டது.
 13. "The Lost World: Jurassic Park (1997)". மூல முகவரியிலிருந்து May 14, 2011 அன்று பரணிடப்பட்டது.
 14. "Jurassic Park III (2001)". மூல முகவரியிலிருந்து September 1, 2012 அன்று பரணிடப்பட்டது.
 15. "Jurassic World (2015)". மூல முகவரியிலிருந்து May 18, 2017 அன்று பரணிடப்பட்டது.
 16. "Jurassic World: Fallen Kingdom (2018)". மூல முகவரியிலிருந்து June 7, 2018 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுராசிக்_பார்க்&oldid=3160909" இருந்து மீள்விக்கப்பட்டது