லெகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெகோ சின்னம்
Lego Duplo
2x4 லெகோ குற்றி

லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது.

"லெகோ" எதிர் "லெகோஸ்"[தொகு]

லெகொ நிறுவனத்தின் பிரபல விளையாட்டுப்பொருளான பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளைக் குறிப்பதற்கும் பலர் "லெகோ" அல்லது "லெகோக்கள்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி, வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இது போன்ற குற்றிகளையும் இச் சொற்களாலேயே குறித்து வருகிறார்கள். ஆனால் லெகோ நிறுவனம், தங்களுடைய வணிகப் பெயர் பொதுப்பெயாராகி வருவதை விரும்பவில்லை.

1970 மற்றும் 1980 களில், இந்நிறுவனத்தின் உற்பத்திப் பட்டியல்களில், தங்கள் உற்பத்தியை "லெகோ குற்றிகள்" அல்லது "லெகொ விளையாட்டுப் பொருட்கள்" என அழைக்கும்படியும், "லெகோக்கள்" என அழைக்கவேண்டாமெனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

லெகோவின் வரலாறு[தொகு]

"லெகோ" இன்றிருப்பதைப்போல், எக்காலத்திலும் உயர்தரமான பொருத்தும் குற்றிகளாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. டென்மார்க்கிலுள்ள, பில்லண்ட் என்னுமிடத்தில், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் என்னும் ஏழைத் தச்சன் ஒருவரின் பட்டடையில் மிக எளிமையாக இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புதுமையான குடும்பத் தொழில் இன்று வளர்ந்து, உலகின் மிகவும் மதிக்கப்படுகின்ற விளையாட்டுப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர் 1934ல் கிறிஸ்டியன்சென்னால் உருவாக்கப்பட்டது. "நன்றாக விளையாடு" என்னும் பொருளையுடைய, டேனிஷ் மொழித் தொடரான leg godt என்பதிலிருந்து பெறப்பட்டதே "LEGO" என்னும் வணிகப் பெயர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெகோ&oldid=3533171" இலிருந்து மீள்விக்கப்பட்டது