ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்
200px
அதிகாரப்பூர்வ இலச்சினை
இயக்கம்கோலின் திரெவாரோ
திரைக்கதை
இசைமைக்கேல் ஜியாச்சினோ[1]
நடிப்பு
  • கிறிஸ் பிராட்
  • பிரைஸ் டல்லஸ் ஹோவர்ட்
  • சாம் நெய்ல்
  • லாரா டென்
  • ஜெஃப் கோல்ட்ப்ளும்
  • ஜேக் ஜான்சன்
  • ஓமர் சை
  • டானியெல்லா பினெடா
  • ஜஸ்டிஸ் ஸ்மித்
  • டீச்சன் லேக்மன்
  • ஸ்காட் ஹேஸ்
ஒளிப்பதிவுஜான் ஸ்வார்ட்ஸ்மன்
படத்தொகுப்புமார்க் சாங்கர்[2]
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்[3]
வெளியீடுசூன் 11, 2021 (2021-06-11)
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என்பது 2021-இல் கோலின் திரெவாரோ இயக்கத்தில் வரவுள்ள அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இறுதிப் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாம் படமும் ஆகும். திரெவாரோவும் முதல் இரண்டு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

முந்தைய படங்களில் தோன்றிய நடிகர்களுள் 11 பேர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்றுள்ளனர். இவர்களோடு புதுமுகங்களும் இணைகின்றனர்.

இப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24, 2020 அன்று கனடாவில் துவங்கியது. பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 13, 2020 அன்று நிறுத்திவைக்கப்பட்டது. ஜூலை 6 அன்று மீண்டும் துவங்கியது. இப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், ஜூன் 11 2021 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடித்தவர்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ''ஜுராசிக் பார்க் தொடரில்'' தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்

எண் கதைமாந்தர் நடித்தவர் குறிப்பு
1 ஓவன் கிரேடி (Owen Grady) கிறிஸ் பிராட் (Chris Pratt)[4]
2 கிளேர் டியரிங் (Claire Dearing) பிரைஸ் டல்லஸ் ஹோவார்டு (Bryce Dallas Howard)[4]
3 ஆலன் கிரான்ட்(Dr.Alan Grant) சாம் நெய்ல் (Sam Neill)[5]
4 எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) லாரா டென் (Laura Dern)[5]
5 இயான் மால்கம் (Dr.Ian Malcolm) ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum)[5]
6 லவ்ரீ க்ருதர்ஸ் (Lowery Cruthers) ஜேக் ஜான்சன் (Jake Johnson)[6]
7 பேரி சம்பென் (Barry Sembène) ஓமர் சை (Omar Sy)[6][7]
8 ஸியா ரோட்ரிக்ஸ் (Zia Rodriguez) டானியெல்லா பினெடா (Daniella Pineda)[8]
9 பிராங்க்ளின் வெப் (Franklin Webb) ஜஸ்டிஸ் ஸ்மித் (Justice Smith)[8]
10 டீச்சன் லேக்மன் (Dichen Lachman)[9]
11 ஸ்காட் ஹேஸ் (Scott Haze)[10]
12 மெய்ஸி லாக்வுட் (Maisie Lockwood) இசபெல்லா செர்மன் (Isabella Sermon)[11]
13 ஹென்றி வூ (Dr. Henry Wu) பி. டி. வோங் (B. D. Wong)[11]
14 மாமெடூ ஆச்சே (Mamoudou Athie)[12]
15 டிவாண்டா வைஸ் (DeWanda Wise)[13]
16 லூயி டாட்ஜ்சன்

(Dr. Lewis Dodgson)

காம்ப்பெல் ஸ்காட் (Campbell Scott ) ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் இப் பாத்திரத்தை கேமரூன் தோர் (Cameron Thor) ஏற்றிருந்தார்


தயாரிப்பு[தொகு]

முன்னேற்றம்[தொகு]

ஜுராசிக் வேர்ல்ட் (2015) திரைப்படம் குறித்த துவக்க உரையாடல்களின்போது, ​​அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், மேலும் பல படங்களைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் கோலின் திரெவாரோவிடம் கூறினார்.[14] ஏப்ரல் 2014 இல், திரெவாரோ, ஜுராசிக் வேர்ல்ட்டின் தொடர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் "மனப்போக்கும் அத்தியாயத்தன்மையும் சற்றுக் குறைவாக இருக்கக்கூடிய ஒன்றை, முழுமையான கதையாக உணரக்கூடிய ஒரு தொடருக்குள் வளைந்து பொருந்தக்கூடிய ஒன்றை நாங்கள் உருவாக்க விரும்பினோம்." என்றார்.[15]

ஜுராசிக் வேர்ல்ட்-டில் ஓவனாக நடித்த கிறிஸ் பிராட், இத் தொடரின் மேலதிக படங்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[16] ஜுராசிக் வேர்ல்ட்-டில் ஓவனுக்கும் பேரிக்கும் (ஓமர் சை) இடையே காட்டப்பெற்ற நட்பு, அதன் தொடர்ச்சிகளிலும் தொடரக்கூடும் என திரெவாரோ கூறினார்.[15]

மே 2015 -இல், திரெவாரோ, பிற இயக்குநர்கள் இத் தொடரின் மேலதிகப் படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறினார், வெவ்வேறு இயக்குநர்கள், மேலதிகப் படங்களுக்கு வெவ்வேறு பண்புகளைக் கொண்டுவரமுடியும் என்று அவர் நம்பினார்.[17] மறுமாதம் மேலும் கூறுகையில்: " மிஷன்: இம்பாசிபிள், ஸ்டார் வார்ஸ் முதலான உரிமைக்குழுமங்கள் போல புதிய குரல்கள் மற்றும் புதிய பார்வைகளால் உண்மையாகவே இது பயனடையப்போகிறது.... இதை நாம் புதிதாகவும் மாறக்கூடியதாகவும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைவதாகவும் வைத்திருக்க வேண்டும் " என்றார். [18] மேலும் இத் தொடர், தொடர்ந்து ஒரு தொன்மாப் பூங்கா பற்றியதாக இல்லாமல் மனிதர்-தொன்மா இணைவாழ்வு குறித்து ஆராயக்கூடும் என்றும் கூறினார்.[14]

செப்டம்பர் 2015-இல், திரெவாரோ, ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் போது பிரைஸ் டல்லஸ் ஹோவர்டின் பாத்திரமான கிளேர் ஆகப்பெரிய வளர்ச்சியடையும் என்றார்.[19] மறுமாதம், ஜுராசிக் வேர்ல்ட் தயாரிப்பாளர் பிராங்கு மார்சல், மூன்றாம் ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்தினார்.[20] திரெவாரோ, ஸ்பில்பேர்க் ஆகியோருக்கு படத்திற்கான கதை யோசனை இருப்பதாக யுனிவர்சல் பிக்சர்ஸ் தலைவர் டோனா லாங்லி நவம்பர் 2015 இல் கூறினார்.[21]

செப்டம்பர் 2016- இல், ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதிக்கான திட்டங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.[22] மேலும், (2014-இல் ஜுராசிக் வேர்ல்ட் படப்பிடிப்பின்போது) அவர் ஒரு முத்தொகுதிக்காக எவ்வளவு திட்டமிட்டிருந்தார் என்று திரெவாரோவிடம் கேட்கப்பட்டபோது: "எனக்கு முடிவு தெரியும். அதை எங்கு செல்ல வேண்டுமென விரும்பினேன் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. " என்றார்.[23] பின்பு கூறுகையில் " [தொடர்புடைய] மக்களை நீங்கள் உண்மையாகவே இணைத்துச்செல்லவும் அவர்களின் ஆவலைத் தக்கவைக்கவும் விரும்பினால், முத்தொகுதியின் துவக்கம், இடைப்பகுதி மற்றும் முடிவை முன்பே திட்டமிடுவது இதுபோன்ற ஒரு உரிமைக்குழுமத்துக்கு இன்றியமையாதது. அதை அந்த அளவில் சிந்திக்க வேண்டும். இது தன்னிச்சையாக இருக்க முடியாது [...] முந்தைய ஜுராசிக் பார்க் திரைப்படங்கள் மிகவும் தெளிவான உறுதியான முடிவுகளைக் கொண்டிருந்தன. இதைவிட அவை மிகுந்த அத்தியாயத்தன்மை கொண்டிருந்தன. " என்றார்[24].

முன் தயாரிப்பு[தொகு]

பிப்ரவரி 2018-இல் (ஜுராசிக் வேர்ல்ட் 3 என அப்போது அறியப்பட்ட) ஒரு பெயரற்ற படம், ஜூன் 11, 2021 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.[25][26] மேலும் அதற்கான திரைக்கதையை எமிலி கார்மைக்கேலுடன் இணைந்து திரெவாரோ இயற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தைத் தயாரித்த மார்சலும் குரோவ்லியும் மீண்டும் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றவிருந்தனர். திரெவாரோவும் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாயினர்.[27][28][25] மார்ச் 30, 2018 அன்று ஸ்பில்பேர்க் கேட்டுக்கொண்டதன் பேரில் திரெவாரோ பட இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.[29][4]

எழுத்தாக்கம்[தொகு]

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் பட முன்னேற்றத்தின்போது ​​திரெவாரோ, அப் படத்தின் தொன்மாக்கள் திறந்த மூலமாக மாறக்கூடும் எனவும் அதனால் (கதையில்) உலகெங்குமுள்ள பல நிறுவனங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்காக தங்கள் சொந்த தொன்மாக்களை உருவாக்கும் நிலை ஏற்படுமெனவும் கூறினார். [30][31] தொன்மாக்களை உலகில் இணைத்துக்கொள்வது தொடர்பான சில காட்சிகளும் கருத்துக்களும் (மூன்றாம் படத்தில் பின்பு பயன்படுத்தும் நோக்குடன் ) ஃபாலன் கிங்டம் திரைக்கதையிலிருந்து நீக்கப்பட்டன.[32][33]

கார்மைக்கேலின் குறும்படம் ஒன்றைப் பார்த்தபின் திரெவாரோ அவரைச் சந்தித்தார். முன்பு பசிபிக் ரிம்: அப்ரைசிங் படத்துக்கும் த பிளாக் ஹோல் பட மறு ஆக்கத்துக்கும் கார்மைக்கேல் ஆற்றிய எழுத்துப்பணியால் வியந்த திரெவாரோ, அவரையே ஜுராசிக் வேர்ல்ட் 3 படத்துக்கும் இணை எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்தார். [34][35]

திரெவாரோவும் கார்மைக்கேலும் நிலவரப்படி திரைக்கதையை எழுதிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் ஜுராசிக் வேர்ல்ட் 3 ஒரு "அறிவியல் பரபரப்புப் புனைவு" எனவும் இக் குழுமத்தின் முதல் படமான ஜுராசிக் பார்க்-கின் இன் தொனியுடன் மிக நெருக்கமாக பொருந்துவதாகவும் திரெவாரோ கூறினார்.[4] பின்னர் இதை "இப்போது வரை இவ் வுரிமைக்குழுமத்தில் உள்ள அனைத்தையும் கொண்டாடும் செயல் " என்றும் வருணித்தார்.[36] மே 2018 இல் அவர், முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களில் குறிப்பிடத்தகு பாத்திரங்களில் தோன்றிய கலப்பினத் தொன்மாக்கள் எதையும் இப் படம் காண்பிக்காது என்று அறிவித்தார்.[37]

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் வெளியானபின், அதன் தொடர்ச்சியானது, உலகெங்கும் பரவிவிட்ட தொன்மாக்களைக் குறித்ததாக இருக்குமென்றும் , இதனால் ஹென்றி வூ அல்லாத பிற பாத்திரங்கள் தங்கள் சொந்த தொன்மாக்களை உருவாக்குவரென்றும் திரெவாரோ கூறினார்..[38][32][33] எனினும் நகரங்களை அச்சுறுத்துபவையாக இல்லாமல், மக்கள் சந்திக்கநேரும் காட்டுவிலங்குகள் போன்றவையாக தொன்மாக்கள் இருக்கும் என்பதாக அவர் கூறினார்.[39] தான் முன்பிருந்தே பார்க்கவிரும்பிய படம் இது என்பதாகக் கூறியவர்,[33] கதைப்போக்கை நடைமுறையிலுள்ள மனிதர்-காட்டுயிர் உறவோடு இணைத்தும் பேசினார்.[40]மேலும் இப்படம், ஓவன் மற்றும் கிளேரின் மீட்சியையும் மெய்ஸியைப் பார்த்துக்கொள்ளும் அவர்களின் பொறுப்பையும் பேசும் என்றார்.[38]

ஹோவர்ட் பேசுகையில் தவறான கைகளுக்குத் தொழில்நுட்பம் சென்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை இப் படம் சுட்டுவதாகத் தெரிவித்தார்.[41] "இப்போதெல்லாம் யாரும் தொன்மாக்களைப்பற்றி ஆர்வம் காட்டுவதில்லை" என  நான்காம் படத்தில் ஹோவர்ட் கூறுவதை இறுதிப்படத்தின் வழியே தவறென்று நிறுவுவதே தன திட்டம் என்றார் திரெவாரோ.[42]

நடிகர் தேர்வு[தொகு]

முந்தைய ஜுராசிக் பார்க் முத்தொகுதியில் எல்லி சாட்லராக நடித்த லாரா டென் மார்ச் 2017-இல், மீண்டும் தன் பாத்திரத்தை ஏற்க ஆர்வம் காட்டினார்.[43][44] ஏப்ரல் 2018-இல் திரெவாரோ பேசுகையில், பிராட்டும் ஹோவர்ட்டும் தங்கள் பாத்திரங்களில் மீண்டும் நடிப்பார்கள் என்றார். 2018 பிற்பகுதியில், ஹோவர்ட் பேசுகையில் , ஜுராசிக் பார்க் முத்தொகுதியிலிருந்து அதிக கதாபாத்திரங்களை (எல்லி சாட்லர் மற்றும் இயான் மால்கம் உட்பட) மூன்றாம் படத்தில் சேர்க்க வேண்டுமென்பதே தன் உயர் விருப்பம் என்றார்.[45][46][47] சாம் நெய்ல், லாரா டென் ஆகியோரின் மறுதோற்றத்தை திரெவாரோ உறுதிசெய்தார்.[38] மேலும், முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களில் இடம்பெற்ற ஹென்றி வூ , படத்தின் கதையில் ஒரு முக்கியப் பாத்திரம் என்றும் கூறினார்.[38]

செப்டம்பர் 2019-இல் நெய்ல், டென், கோல்ட்ப்ளும் ஆகியோர் மீண்டும் நடிப்பது உறுதியானது.[48][49][5] தன் பாத்திரத்துக்காக உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக நெய்ல் கூறினார்.[50][51] ஜுராசிக் பார்க் III (2001) க்குப் பின் திரைப்படத் தொடரில் நெய்ல் மற்றும் டென்னின் முதல் தோற்றமாக ஜுராசிக் வேர்ல்ட் 3 இருக்கும். மேலும் முதல் ஜுராசிக் பார்க் படத்துக்குப் பின் மூவரும் ஒருசேரத் தோன்றும் படமாக இருக்கும்.[52][53] "இப்போது இவர்கள் யார்? அவர்கள் வாழும் புதிய உலகத்தைவைத்து என்ன செய்கிறார்கள்? அதன் வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள்?" போன்ற கேள்விகளுக்கு இப் படம் விடையளிக்கும் என்றார் திரெவாரோ.[53]

2019 பிற்பகுதியில் , மாமெடூ ஆச்சே, டிவாண்டா வைஸ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நியமிக்கப்பட்டனர்.[12][54] பின்னர் ஜேக் ஜான்சன், ஓமர் சை, ஜஸ்டிஸ் ஸ்மித், டானியெல்லா பினெடா, இசபெல்லா செர்மன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.[6][8][55] டீச்சன் லேக்மன், ஸ்காட் ஹேஸ் ஆகிய புதுமுகங்களின் பங்களிப்பும் உறுதியானது.[9][10] ஹென்றி வூ பாத்திரத்தில் நடிக்க பி.டி. வோங் உறுதியானார்.[56]

முதல் படத்தில் லூயிஸ் டாட்ஜ்சனாக நடித்த கேமரூன் தோர், பாலியல் வழக்கில் தண்டனை பெற்றமையால் அவர் இடத்தில் காம்ப்பெல் ஸ்காட் நடிப்பார் என ஜூன் 2020 இல் அறிவிக்கப்பட்டது. [57]

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்துடன் கிறிஸ் பிராட் ஒப்பிட்டார். இவ்விரண்டும் தமக்கு முந்தைய படங்களிலிருந்து பல கதைமாந்தர்களைக் காண்பிப்பமை  குறிப்பிடத்தக்கது. [58]

படப்பிடிப்பு[தொகு]

பிப்ரவரி 19, 2020 அன்று, கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள கதீட்ரல் குரோவில் வான்வழிக் காட்சிகளைப் படமாக்க ஒரு தயாரிப்புப் பிரிவு ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தியது.[59][60] பிப்ரவரி 24 அன்று முதன்மைப் படப்பிடிப்பு தொடங்கியது. மறுநாள் படத்தின் தலைப்பு ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என அறிவிக்கப்பட்டது.[61][62] பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் மெர்ரிட் நகரில் பிப்ரவரி 25 அன்று படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டு மார்ச் துவக்கத்தில் நிறைவுற்றது. [63][64][65][66][67][68] மார்ச் பிற்பகுதியில், தயாரிப்பு இங்கிலாந்தின் ஹாவ்லி சிற்றூருக்கு மாற்றப்பட்டது. அங்கும் மின்லி சிற்றூரிலும் நடைபெற்ற படப்பிடிப்பு மூன்று இரவுகள் நீண்டது. இறுதி இரவில் உலங்கு வானூர்தி கொண்டு படம்பிடிக்கப்பட்டது.[69][70]

முந்தைய படத்தைப்போலவே ஹவாயிலும் இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டுடியோசிலும் படப்பிடிப்பு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. [71][72][73] பைன்வுட் ஸ்டுடியோஸில் படமெடுக்கையில் பெரிய திரையமைவுகளை ஒன்றிணைக்கும் 007 ஒலிப்பதிவுக்களமும் பயன்படுத்தப்படும்.[74] இங்கு ஒரு வெளிப்புறத் திரையமைவு, பனிப்பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு வானூர்தியைக் காட்சிப்படுத்தியது.[75]

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 13, 2020 அன்று படத்தயாரிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் தொடருவது குறித்த முடிவெடுக்கப் பல வாரங்களாகுமென எதிர்பார்க்கப்பட்டது.[76] இதற்குமுன்னாக ஏப்ரல்-மே 2020 தொடங்கி பைன்வுட் ஸ்டுடியோஸ்[50] [77] , மால்ட்டா தலைநகர் வல்லெட்டா [78] ஹவாய்[71][79] உட்பட பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 100 நாள்களுக்கு படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.[58] தாமதத்தைத் தொடர்ந்து, முன்பே படமாக்கப்பட்ட காட்சிகளின் பின்-தயாரிப்புப் பணிகளைப் படக்குழுவினர் மேற்கொள்ளத் துவங்கினர்[80][81]. இக்காட்சிகளுள் பெரும்பாலானவை தொன்மாக்கள் தொடர்பாக இருந்ததால் காட்சி விளைவுகள் குழுவினருக்கும் செயலாற்ற வாய்ப்பு கிட்டியது.[81]

கொரோனாவைரஸ் தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசு வழங்கியவுடன் படப்பிடிப்பு தொடரும் என்று மார்ஷல் கூறினார்.[82] ஜூலை 2020 இல் படத்தின் சில பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக நெய்ல் கூறினார்.[83]

"ஜூலை 2020 தொடக்கத்தில் பைன்வுட் ஸ்டுடியோசில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்" என்று யுனிவர்சல் உறுதிப்படுத்தியது. அவ்வாறே ஜூலை 6 அன்று படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[84] ஒவ்வொரு நடிகருக்கும் படக்குழு உறுப்பினருக்கும் ஆயிரக்கணக்கான கோவிட்-19 பரிசோதனைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுக்காக ஏறத்தாழ $ 50 இலட்சம் செலவிட யுனிவர்சல் திட்டமிட்டது. தயாரிப்பு தொடருமுன்னும் படப்பிடிப்பின்போது பலமுறையும் குழுவினர் சோதிக்கப்படுவர். உடல்வெப்ப சோதனை நிலையங்கள் அமைக்கப்படும். பரிசோதிக்கப்படாத குழுவினர், படப்பிடிப்புக் களத்துக்குள் நுழையாவண்ணம் காவலர்களால் தடுக்கப்படுவர். படப்பிடிப்பின்போது மருத்துவர்களும் செவிலியர்களும் உடனிருப்பர். குழுவினர் அனைவருக்கும் கோவிட்-19 பயிற்சி அளிக்கப்படும். பைன்வுட் களத்தில் 150 சானிடைசர் நிலையங்கள் அமைக்கப்படும். சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை நினைவூட்ட 1,800 பாதுகாப்பு அறிவிப்புகள் வைக்கப்படும். படப்பிடிப்பின்போது நடிகர்களைத் தவிர, படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முகமூடிகளை அணியும்படி அறிவுறுத்தப்படுவர்.[85] படப்பிடிப்பு துவங்குமுன் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் அடங்கிய 109 பக்க ஆவணத்தை நடிகர்கள் பெற்றனர்.[86] ஜூலையில் பைன்வுட் ஸ்டுடியோசுக்கு அருகிலுள்ள பிளாக் பார்க் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.[87] ஆகஸ்டில் நெய்ல் , டென் இருவரும் நடிக்கத் துவங்கினர் .[88][89]

நான்காம் படத்தில் பணியாற்றிய ஜான் சுவார்ட்ஸ்மன் மீண்டும் ஒளிப்பதிவாளராகத் திரும்பியுள்ளார்.[90]

ஐந்தாம் படத்தில் தொன்மாக்களை அமெரிக்கத் தலைநிலத்துக்குக் கொண்டுசென்ற கப்பலின் பெயரான ஆர்கேடியா என்பதே இப் படத்தின் செயல் தலைப்பாகும்.[63][69] அசைவூட்டத் தொன்மாக்களை ஜான் நோலன் உருவாக்குகிறார்.[91][92] படத்தின் அறிவியல் ஆலோசகராக தொல்லுயிர் ஆய்வாளர் ஸ்டீபன் புருசாட் உள்ளார்.[93][94]

வெளியீடு[தொகு]

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், ஜூன் 11, 2021 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.[95]

குறிப்புகள்[தொகு]

  1. "Michael Giacchino to Return for ‘Jurassic World: Dominion’ | Film Music Reporter" (March 11, 2020). பார்த்த நாள் March 12, 2020.
  2. "Mark Sanger Twitter profile". பார்த்த நாள் August 5, 2020.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Companies என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 4.2 4.3 Stack, Tim (April 18, 2018). "Jurassic World 3 will be a 'science thriller,' says Colin Trevorrow". Entertainment Weekly. http://ew.com/movies/2018/04/18/jurassic-world-3-colin-trevorrow/. பார்த்த நாள்: April 18, 2018. 
  5. 5.0 5.1 5.2 5.3 "'Jurassic Park' Trio Laura Dern, Sam Neill & Jeff Goldblum Returning For 'Jurassic World 3'". மூல முகவரியிலிருந்து December 17, 2019 அன்று பரணிடப்பட்டது.
  6. 6.0 6.1 6.2 "'Jurassic World 3' Bringing Back Jake Johnson and Omar Sy". Collider. மூல முகவரியிலிருந்து February 14, 2020 அன்று பரணிடப்பட்டது.
  7. "Jake Johnson, Omar Sy to Return for New 'Jurassic World' Movie". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து February 14, 2020 அன்று பரணிடப்பட்டது.
  8. 8.0 8.1 8.2 "Exclusive: 'Jurassic World 3' Bringing Back Justice Smith, Daniella Pineda". மூல முகவரியிலிருந்து January 9, 2020 அன்று பரணிடப்பட்டது.
  9. 9.0 9.1 "'Jurassic World 3': 'Altered Carbon' & 'Animal Kingdom' Actress Dichen Lachman Joins Cast". Deadline. மூல முகவரியிலிருந்து February 18, 2020 அன்று பரணிடப்பட்டது.
  10. 10.0 10.1 D'Alessandro, Anthony (February 19, 2020). "'Jurassic World 3': 'Venom' & 'Antlers' Actor Scott Haze Joins Colin Trevorrow Pic". மூல முகவரியிலிருந்து February 20, 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 19, 2020.
  11. 11.0 11.1 Jurassic World 3: An Updated Cast List
  12. 12.0 12.1 N'Duka, Amanda (October 17, 2019). "'Jurassic World 3' Adds 'Sorry for Your Loss' Actor Mamoudou Athie". மூல முகவரியிலிருந்து October 17, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 17, 2019.
  13. "'Jurassic World 3' Lands DeWanda Wise". Deadline. மூல முகவரியிலிருந்து December 28, 2019 அன்று பரணிடப்பட்டது.
  14. 14.0 14.1 Weintraub, Steve (June 13, 2015). "Jurassic World: Colin Trevorrow Talks Building a Foundation for Future Installments". Collider.com. மூல முகவரியிலிருந்து June 15, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 13, 2015.
  15. 15.0 15.1 Phil de Semlyen (April 23, 2014). "Exclusive: Jurassic World Sequels Planned". Empire. Archived from the original on June 17, 2015. https://web.archive.org/web/20150617084911/http://www.empireonline.com/news/story.asp?NID=40832. பார்த்த நாள்: May 31, 2015. 
  16. Stack, Tim (June 13, 2015). "Chris Pratt is signed on for more Jurassic World movies". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து June 15, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 13, 2015.
  17. "Colin Trevorrow Not Directing the Next Jurassic Park Film". ComingSoon.net (May 31, 2015). மூல முகவரியிலிருந்து June 2, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 31, 2015.
  18. Ryan, Mike (June 8, 2015). "'Jurassic World' Director Colin Trevorrow Explains Why He Won't Be Making Another 'Jurassic World'". Uproxx. http://uproxx.com/movies/jurassic-world-colin-trevorrow/. பார்த்த நாள்: February 22, 2018. 
  19. Han, Angie (September 21, 2015). "Which 'Jurassic Park' Quote Inspired 'Jurassic World'? Which One Will Inspire 'Jurassic World 2'?". மூல முகவரியிலிருந்து June 9, 2017 அன்று பரணிடப்பட்டது.
  20. "Frank Marshall Interview - Jurassic World (Jurassic Cast ep 22)". Jurassic Cast Podcast (October 19, 2015). மூல முகவரியிலிருந்து March 11, 2016 அன்று பரணிடப்பட்டது.
  21. "Studio Chiefs Unleashed: 6 Top Execs Spar Over Gender Pay, Sony Hack and 'Star Wars' Box Office". The Hollywood Reporter (November 4, 2015). மூல முகவரியிலிருந்து November 6, 2015 அன்று பரணிடப்பட்டது. "Langley: Colin Trevorrow is busy working on an outline. He's been working with Steven [Spielberg]. And they have an idea for the next two movies actually. It was designed as a trilogy, unbeknown to us. It's a happy surprise."
  22. Douglas, Edward (September 10, 2016). "Exclusive: Jurassic World Confirmed as a Trilogy". LRM Online. மூல முகவரியிலிருந்து September 14, 2016 அன்று பரணிடப்பட்டது.
  23. "Colin Trevorrow Talks Jurassic World 2 and More! (Surprise Guest: J.A. Bayona!)" (September 30, 2016). மூல முகவரியிலிருந்து October 1, 2016 அன்று பரணிடப்பட்டது.
  24. Anderton, Ethan (December 27, 2017). "'Jurassic World: Fallen Kingdom' Isn't a Retread of 'The Lost World', Will Set Up 'Jurassic World 3'". /Film. http://www.slashfilm.com/jurassic-world-3/. பார்த்த நாள்: February 22, 2018. 
  25. 25.0 25.1 Romano, Nick (February 21, 2018). "Jurassic World 3 rampaging toward 2021 release date". Entertainment Weekly. http://ew.com/movies/2018/02/21/jurassic-world-3-release-date/. பார்த்த நாள்: February 22, 2018. 
  26. Squires, John (February 21, 2018). "Life Continues to Find a Way as 'Jurassic World 3' is Already Dated for Release!". மூல முகவரியிலிருந்து February 24, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 22, 2018. "Variety is reporting that Jurassic World 3, which surely won't actually be the official title, will be hitting theaters on June 11, 2021, three years after Fallen Kingdom."
  27. "Universal launches plans for third 'Jurassic World' film". ABC. Associated Press. February 21, 2018. http://abcnews.go.com/Entertainment/wireStory/universal-launches-plans-jurassic-world-film-53252208. பார்த்த நாள்: February 22, 2018. 
  28. Kroll, Justin (February 21, 2018). "'Jurassic World 3' to Hit Theaters in June 2021". Variety. https://variety.com/2018/film/news/jurassic-world-3-release-date-2021-1202706557/. பார்த்த நாள்: February 22, 2018. 
  29. Stack, Tim (March 30, 2018). "Steven Spielberg confirms Colin Trevorrow will direct third Jurassic World". Entertainment Weekly. http://ew.com/movies/2018/03/30/colin-trevorrow-directing-third-jurassic-world/. பார்த்த நாள்: March 30, 2018. 
  30. Fullerton, Huw (June 3, 2015). "Jurassic World sequel could see Apple vs Microsoft-style dinosaur tech race". Radio Times. Archived from the original on June 14, 2015. https://web.archive.org/web/20150614185458/http://www.radiotimes.com/news/2015-06-03/jurassic-world-sequel-could-see-apple-vs-microsoft-style-dinosaur-tech-race. 
  31. Rundle, Michael (July 24, 2015). "Exclusive: Jurassic World 2 may be off-island, with open-source dinos". மூல முகவரியிலிருந்து July 27, 2015 அன்று பரணிடப்பட்டது.
  32. 32.0 32.1 Sciretta, Peter (June 26, 2018). "Exclusive: Colin Trevorrow Explains the 'Jurassic World: Fallen Kingdom' Ending, Teases Where 'Jurassic World 3' Will Go". /Film. http://www.slashfilm.com/colin-trevorrow-jurassic-world-fallen-kingdom-interview/2/. பார்த்த நாள்: December 4, 2018. 
  33. 33.0 33.1 33.2 "18 Jurassic World: Fallen Kingdom Secrets from JA Bayona and Colin Trevorrow". Empire (July 3, 2018). மூல முகவரியிலிருந்து November 22, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  34. "Exclusive: Colin Trevorrow Shares His Experiences with 'Fallen Kingdom' + Talks Hopes for 'Jurassic World 3'" (December 13, 2018). மூல முகவரியிலிருந்து December 19, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 18, 2018.
  35. Lussier, Germain (March 23, 2018). "Meet Emily Carmichael, the Next Big Name in Scifi and Fantasy Filmmaking". மூல முகவரியிலிருந்து December 19, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 18, 2018. "Next up was a gig writing a remake of The Black Hole for Disney. Trevorrow was so impressed with that, as well as with Carmichael's work on Pacific Rim Uprising, he brought her on to help him write Jurassic World 3."
  36. Carbone, Gina (July 27, 2019). "Jurassic World 3 Will Be 'A Celebration' Of The Entire Franchise, Colin Trevorrow Says". மூல முகவரியிலிருந்து September 1, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 23, 2020.
  37. Holmes, Adam (May 7, 2018). "Jurassic World 3 Won't Include Any Hybrid Dinosaurs". CinemaBlend. https://www.cinemablend.com/news/2416091/jurassic-world-3-wont-include-any-hybrid-dinosaurs. பார்த்த நாள்: May 8, 2018. 
  38. 38.0 38.1 38.2 38.3 Stack, Tim (June 22, 2018). "Jurassic World: Colin Trevorrow answers Fallen Kingdom burning questions". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து December 5, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  39. Anderton, Ethan (December 14, 2018). "Sorry, But 'Jurassic World 3' Won't Have Dinosaurs Attacking Cities". மூல முகவரியிலிருந்து December 19, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 18, 2018.
  40. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; io9-int என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  41. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Mahmoud3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  42. Lussier, Germain (June 25, 2018). "The Makers of Jurassic World: Fallen Kingdom Solve Some of the Film's Biggest Mysteries". io9. மூல முகவரியிலிருந்து December 5, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  43. Scott, Ryan (March 24, 2017). "Laura Dern Wants to Return in Final Jurassic World Sequel". மூல முகவரியிலிருந்து March 25, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 22, 2018.
  44. "Laura Dern: The Oscar-winning star talks armour, Vader and extreme Rebelling" (November 17, 2017). மூல முகவரியிலிருந்து February 22, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 22, 2018.
  45. Reyes, Mike (September 2018). "The Plan For Jurassic World 3, According To Bryce Dallas Howard". CinemaBlend. மூல முகவரியிலிருந்து December 26, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  46. Reyes, Mike (September 2018). "The Jurassic Park Actor Bryce Dallas Howard Wants For Jurassic World 3". CinemaBlend. மூல முகவரியிலிருந்து January 4, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  47. El-Mahmoud, Sarah (October 2018). "Bryce Dallas Howard Is All-In On Original Characters Returning In Jurassic World 3". CinemaBlend. மூல முகவரியிலிருந்து December 5, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 4, 2018.
  48. Yasharoff, Hannah (September 25, 2019). "Laura Dern, Jeff Goldblum and Sam Neill to return for 'major roles' in 'Jurassic World 3'". மூல முகவரியிலிருந்து November 9, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 5, 2019.
  49. "Neill, Dern AND Goldblum Return For "Jurassic World 3"". மூல முகவரியிலிருந்து December 7, 2019 அன்று பரணிடப்பட்டது.
  50. 50.0 50.1 "Sam Neill on Jurassic Park, James Bond why he hates golf" (December 4, 2019). பார்த்த நாள் May 18, 2020.
  51. "Sam Neill is nervous about Jurassic World 3". YouTube (December 4, 2019). பார்த்த நாள் May 18, 2020.
  52. Whalen, Andrew (December 10, 2019). "'Jurassic Park' Cast Reunite Before 'Jurassic World 3' in New 'Jurassic World Evolution' Expansion". Newsweek. https://www.newsweek.com/jurassic-world-evolution-dlc-3-cast-return-park-goldblum-jwe-1476508. பார்த்த நாள்: January 23, 2020. 
  53. 53.0 53.1 Travis, Ben (October 28, 2019). "Colin Trevorrow On Bringing Back Jurassic Park's Iconic Trio In Jurassic World 3". மூல முகவரியிலிருந்து February 15, 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 23, 2020.
  54. Kroll, Justin (October 18, 2019). "'Jurassic World 3' Casts DeWanda Wise in Leading Role (Exclusive)". மூல முகவரியிலிருந்து December 5, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 5, 2019.
  55. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Anderton என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  56. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Evans என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  57. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Scott என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  58. 58.0 58.1 Bui, Hoai-Tran (February 20, 2020). "'Jurassic World 3' Will Be Like 'Avengers: Endgame,' According to Chris Pratt". மூல முகவரியிலிருந்து February 20, 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 20, 2020.
  59. Trivedi, Sachin (February 20, 2020). "'Jurassic World 3' Begins Production With Exciting New Characters". International Business Times. https://www.ibtimes.com/jurassic-world-3-begins-production-exciting-new-characters-2925658. பார்த்த நாள்: February 25, 2020. 
  60. Youds, Mike (February 24, 2020). "Latest Jurassic World movie lands in Vancouver Island park for filming". Victoria News. https://www.vicnews.com/news/latest-jurassic-world-movie-lands-in-vancouver-island-park-for-filming/. பார்த்த நாள்: February 25, 2020. 
  61. Couch, Aaron (February 25, 2020). "Next 'Jurassic World' Movie Is Called 'Dominion'". பார்த்த நாள் February 25, 2020.
  62. Welk, Brian (February 25, 2020). "'Jurassic World 3' Title Revealed by Director Colin Trevorrow". பார்த்த நாள் February 25, 2020. "Production on the film began on Monday [...]"
  63. 63.0 63.1 Beasley, Tom. "'Jurassic World 3' filming under working title 'Arcadia', heading to Canada in 2020". பார்த்த நாள் December 5, 2019.
  64. Courtepatte, Jake (February 7, 2020). "Jurassic World 3 filming coming to Merritt". Merritt Herald. https://www.merrittherald.com/jurassic-world-3-filming-coming-to-merritt/. பார்த்த நாள்: February 12, 2020. 
  65. Davies, Colton (February 24, 2020). "Jurassic World 3 to begin filming in Merritt tomorrow". Radio NL. https://www.radionl.com/2020/02/24/52536/. பார்த்த நாள்: February 25, 2020. 
  66. "B.C. boy crashes Jurassic World wrap party in T-Rex costume". CBC.ca. March 7, 2020. https://www.cbc.ca/news/canada/british-columbia/merritt-bc-boy-crashes-jurassic-world-party-t-rex-costume-1.5487965. பார்த்த நாள்: March 10, 2020. 
  67. "Someone Just Crashed A "Jurassic World" Wrap Party In BC In A Full Body T-Rex Costume". Narcity. March 8, 2020. https://www.narcity.com/news/ca/bc/jurassic-world-dominion-party-crashed-by-super-fan-in-a-massive-t-rex-costume-in-bc. பார்த்த நாள்: March 10, 2020. 
  68. Leclair, Kim (February 26, 2020). "Midweek edition". Merritt Morning Market. https://merrittmorningmarket.com/2020/02/26/midweek-edition-96/. பார்த்த நாள்: February 27, 2020. 
  69. 69.0 69.1 Phillips, Jamie (March 9, 2020). "Filming for latest Jurassic World blockbuster Dominion taking place near Camberley and Fleet, fan site suggests". Surrey Live. https://www.getsurrey.co.uk/news/hampshire-news/filming-latest-jurassic-world-blockbuster-17893179. பார்த்த நாள்: March 10, 2020. 
  70. Phillips, Jamie (March 11, 2020). "Trailers spotted at rumoured Jurassic World: Dominion filming locations near Camberley and Fleet". Surrey Live. https://www.getsurrey.co.uk/news/surrey-news/gallery/jurassic-world-fleet-camberley-filming-17903743. பார்த்த நாள்: March 14, 2020. 
  71. 71.0 71.1 Sansone, Kurt (January 22, 2020). "Jurassic World 3 to be filmed in Malta". Malta Today. https://www.maltatoday.com.mt/arts/entertainment/99904/jurassic_world_3_to_be_filmed_in_malta. பார்த்த நாள்: January 23, 2020. 
  72. Evans, Nick (September 17, 2019). "Looks Like Jurassic World 3 Is Beginning Filming Soon". பார்த்த நாள் September 18, 2019.
  73. Scott, Ryan (September 17, 2019). "'Jurassic World 3' Will Shoot at Pinewood Studios in England". மூல முகவரியிலிருந்து September 18, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 18, 2019.
  74. Arnold, Ben (May 18, 2020). "Sam Neill updates on coronavirus-postponed 'Jurassic World: Dominion'". பார்த்த நாள் May 18, 2020.
  75. Zinski, Dan (July 16, 2020). "Jurassic World 3 Set Photos Reveal Downed Plane In Arctic Landscape". பார்த்த நாள் July 24, 2020.
  76. Kroll, Justin (March 13, 2020). "Universal Halts Production on Live-Action Films Including 'Jurassic World: Dominion' Due to Coronavirus". Variety. பார்த்த நாள் March 13, 2020.
  77. Harp, Justin (May 1, 2020). "Jurassic World: Dominion star says he's working on his role "every day" during lockdown". பார்த்த நாள் May 18, 2020.
  78. Sansone, Kurt (January 22, 2020). "Jurassic World 3 to be filmed in Malta". Malta Today. https://www.maltatoday.com.mt/arts/entertainment/99904/jurassic_world_3_to_be_filmed_in_malta. பார்த்த நாள்: January 23, 2020. 
  79. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Movieweb என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  80. Fraser, Kevin (March 31, 2020). "Colin Trevorrow shares Jurassic World: Dominion peek as he works from home". பார்த்த நாள் July 7, 2020.
  81. 81.0 81.1 Travis, Ben (July 7, 2020). "Colin Trevorrow Talks Jurassic World: Dominion Shoot Resuming". பார்த்த நாள் July 7, 2020.
  82. Chitwood, Adam (May 22, 2020). "Exclusive: 'Jurassic World: Dominion' Will Be the "Start of a New Era" Says Producer Frank Marshall". பார்த்த நாள் May 26, 2020.
  83. Thorpe, Vanessa (May 23, 2020). "Sam Neill: ‘I should be at Pinewood. The Jurassic World III sets are there waiting’". The Observer. https://www.theguardian.com/film/2020/may/23/sam-neill-i-should-be-at-pinewood-the-jurassic-world-iii-sets-are-there-waiting. பார்த்த நாள்: May 26, 2020. 
  84. Grater, Tom (July 10, 2020). "'Jurassic World: Dominion' UK Shoot On Track in Week One; Universal Says No Disruption After Reports Of Positive COVID Tests". பார்த்த நாள் July 10, 2020.
  85. Wiseman, Andreas (June 15, 2020). "Universal's 'Jurassic World: Dominion' On Course To Be First Major Studio Movie Back Underway In UK, Detailed Safety Protocols Revealed". பார்த்த நாள் June 15, 2020.
  86. Seemayer, Zach (July 15, 2020). "Jeff Goldblum on '109-Page' List of Safety Protocols as 'Jurassic World 3' Starts Filming Again". பார்த்த நாள் July 24, 2020.
  87. "Closure notice". Black Park Country Park (July 12, 2020). பார்த்த நாள் July 24, 2020.
  88. White, James (August 4, 2020). "Sam Neill Celebrates Returning To Work For Jurassic World: Dominion". Empire. https://www.empireonline.com/movies/news/sam-neill-back-jurassic-world-dominion/. பார்த்த நாள்: August 5, 2020. 
  89. Reichert, Corinne (August 4, 2020). "Jurassic World 3 resumes filming after coronavirus shutdown". CNET. https://www.cnet.com/news/jurassic-world-3-resumes-filming-after-coronavirus-shutdown/. பார்த்த நாள்: August 5, 2020. 
  90. Singer, Matt (February 25, 2020). "Colin Trevorrow Reveals 'Jurassic World 3's Official Title as Shooting Begins". பார்த்த நாள் February 25, 2020.
  91. Anderson, Corey (September 17, 2019). ""Dark Crystal" Animatronic Creator John Nolan Heads to Jurassic World 3". மூல முகவரியிலிருந்து September 25, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 18, 2019.
  92. Hewitt, Chris (September 16, 2019). "Empire Podcast #381: Live From The London Podcast Festival Ft. Colin Trevorrow". மூல முகவரியிலிருந்து September 18, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 18, 2019.
  93. Brusatte, Steve (February 19, 2020). "Yes it's true: I'm delighted to be working with @colintrevorrow & his superstar team as science consultant for the next @JurassicWorld (2021)". மூல முகவரியிலிருந்து February 19, 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 19, 2020.
  94. Bui, Hoai-Tran (February 19, 2020). "'Jurassic World 3' Casts 'Altered Carbon' Star Dichen Lachman, Hires New Dinosaur Consulting Team". மூல முகவரியிலிருந்து February 19, 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 20, 2020.
  95. "Jurassic World 3 Release Date Announced by Universal". ComingSoon.net. February 21, 2018. http://www.comingsoon.net/movies/news/924859-jurassic-world-3-release-date-announced-by-universal. பார்த்த நாள்: February 22, 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]