மாந்தர் படியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளையும் உபயோகித்து இன்னுமொரு உயிரினம் உருவாக்கப்படலே படியெடுப்பு( குளோனிங் ). உருவாக்கப்பட்ட உயிரினம் தோற்றத்திலும், மரபணு அடிப்படையிலும் மரபணுவை வழங்கிய உயிரினத்தை ஒத்து இருக்கும்.

இயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் கருமுட்டையும் கலப்பின் மூலம் சேர்து, கருவுற்றபின் சைகோட் என்று அழைக்கப்படும் ஒரு திசுள் உருவாகும். இயற்கையாக இத் திசுளின் மரபணு ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் பெறப்பட்ட மரபணுக்களின் கலப்பாக இருக்கும். இந்த சைகோட் என்ற திசுள்தான் பின்னர் குழந்தையாக வளர்ச்சியடைகின்றது.

ஒரு பெண்ணின் முட்டையின் திசுள் கருவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு உடல்திசுளின் மரபணுவை இட்டுவதன் மூலம் மரபணு வழங்கிய உயிரினம் படியெடுக்கப்படுகின்றது. அதாவது சில நுட்பங்கள் மூலம் உடல் திசுள் மரபணு உள்ள முட்டையை சைகோட் ஆக உருவாக்கி, குழந்தையாக உருவாக்கலாம். இங்கு ஆணின் பங்கு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக சர்ச்சைகள்

படியெடு உயிரித் தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது.

இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்?

ஒரு பெண் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்லாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன?

ஒரு ஆணின் உடல் திசுள் மரபணுவை, ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்? குழந்தை யாருக்கு சொந்தம்?

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தர்_படியாக்கம்&oldid=3739263" இலிருந்து மீள்விக்கப்பட்டது