ஜுராசிக் வேர்ல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுராசிக் வேர்ல்ட்
திரைப்பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்கோலின் திரெவாரோ
தயாரிப்பு
 • பிராங்கு மார்சல்
 • பேட்ரிக் குரோவ்லி
கதை
மூலக்கதைCharacters created
படைத்தவர் மைக்கேல் கிரைட்டன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் சுவார்ட்ஸசுமேன்
படத்தொகுப்புகெவின் சிடிட்டு
கலையகம்லேகேண்டரி பிக்சர்ஸ்
ஆம்ப்லின் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 29, 2015 (லெ கிராண்ட் ரெக்ஸ்)
ஜூன் 12, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு
 • $15 கோடி (மொத்தம் ) (gross)[1]
 • $12.93 கோடி (நிகரம்) (net)[1]
மொத்த வருவாய்$167.2 கோடி [2]

ஜுராசிக் வேர்ல்ட் (ஆங்கில மொழி: Jurassic World) என்பது 2015ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் இரண்டாம் முத்தொகுதியின் முதல் படமும், ஒட்டுமொத்த தொடரின் நான்காம் படமும் ஆகும்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநராகவும் இணை எழுத்தாளராகவும் கோலின் திரெவாரோ செயல்பட்டுள்ளார். பிராங் மார்சல் மற்றும் பேட்ரிக்கு குரோவ்லி ஆகியோர் தயாரித்துள்ளனர். கிறிசு பிராடு, பிரைசு தல்லசு ஹோவார்டு முதலானோர் நடித்துள்ளனர். இத்தொடரின் ஏனைய படங்களுக்குப் பொறுப்பேற்ற ஆம்ப்லின் என்டேர்டைன்மென்ட்-ட்டும் (ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் நிறுவனம்) தாமஸ் டல்- இன் லெஜண்டரி பிக்சர்ஸும் இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றன.

ஜுராசிக் பார்க் சம்பவம் நிகழ்ந்து 22 ஆண்டுகளுக்குப் பின் அதே ஈஸ்லா நுப்லார் தீவில் இப் படத்தின் கதை நடைபெறுகிறது. படியெடுப்பு முறையில் மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களை அங்கு பத்தாண்டுகளாக காட்சிப்படுத்தி வந்த கருத்தியல் பூங்கா, மரபணு மாற்றப்பட்ட ஒரு தொன்மாவால் அழிவைச் சந்திக்கிறது.

யுனிவெர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், 2005 கோடையில் வெளியிடும் நோக்குடன் 2004-இல் நான்காம் ஜுராசிக் பார்க் படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது. எனினும் திரைக்கதை தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட நிலையில் இப் படம் ஒரு தசாப்தம் முடக்கத்தில் இருந்தது. ஸ்பில்பேர்க்கின் ஆலோசனையைத் தொடர்ந்து, திரை எழுத்தாளர்கள் ரிக் ஜாஃபாவும் அமண்டா சில்வரும் செயல்பாடுடைய ஒரு தொன்மாப் பூங்கா பற்றிய சாத்தியத்தை ஆராய்ந்தனர். 2013-இல் ட்ரெவாரோ இயக்குநராக நியமிக்கப்பட்டவுடன் டெரெக் கொன்னோலியுடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை வரைகையில் அதே கருத்தைப் பின்பற்றினார். முதன்மை புகைப்படப் பணி (Principal photography) 2014 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பெரும்பாலும் லூசியானா விலும் ஹவாயில் முந்தைய படங்களின் படப்பிடிப்புக் களங்களிலும் நடைபெற்றது. இம்முறையும் தொன்மாக்கள், இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைக் கொண்டும் லெகசி எபக்ட்ஸ் Legacy Effects - ஸ்டான் விங்ஸ்டனின் முன்னாள் மாணவர்கள் தோற்றுவித்த நிறுவனம் வடிவமைத்த அசைவூட்ட மாதிரிகளாகவும் உருவாக்கப்பட்டன.

ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மே 10, 2015 அன்று முடிக்கப்பெற்று[3] ஜூன் 10 தொடங்கி 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. உலகளவில் $ 50 கோடி க்கும் மேலாக வசூலித்த முதல் திரைப்படமாக இது சாதனை படைத்த வார இறுதிக்குப்பின்[4] பாக்ஸ் ஆபிஸில் $ 160 கோடி வருவாய் ஈட்டியது. இப்படம், பணவீக்க மாற்றங்களின்றி அனைத்து காலங்களிலும் அதிக வசூல் செய்த ஐந்தாம் படமாகவும் 2015-இன் அதிக வசூல் செய்த இரண்டாம் படமாகவும் இத் திரைப்படத் தொடரில் அதிக வசூல் செய்த படமாகவும் விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்’ என்ற படம் ஜூன் 2018 இல் வெளியாகவுள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

முதன்முதலில் ஜுராசிக் பார்க் இயங்கிவந்த ஈஸ்லா நுப்லார் தீவில் பல ஆண்டுகளாக ஜுராசிக் வேர்ல்ட் என்றொரு புதிய கருப்பொருள் பூங்கா இயங்கிவருகிறது. அப் பூங்காவின் உரிமையாளரான சைமன் மஸ்ரானி, பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு கலப்பினத் தொன்மாவை உருவாக்கும்படி மரபணு வல்லுனரான டாக்டர் ஹென்றி வூ-வை ஊக்குவிக்கிறார். அச்சமயத்தில் அங்கு சுற்றுலா வரும் ஸேக், கிரே என்ற இரு சகோதரர்கள், பூங்காவின் செயல்பாட்டு மேலாளரான தங்கள் சிற்றன்னை க்ளேர் டியரிங்கைச் சந்திக்கின்றனர். க்ளேர், தனது உதவியாளர் ஸாராவை அவர்களின் வழிகாட்டியாக நியமிக்கிறார். ஆனால் அவர்களிருவரும் ஸாராவை விட்டு விலகி தாங்களாகவே பூங்காவை சுற்றிப்பார்க்கின்றனர்.

முன்னாள் கடற்படை வீரரான ஓவன் கிராடி, பூங்காவின் நான்கு வெலாசிராப்டர்களின் அறிவுக்கூர்மையைக் குறித்து ஆய்வுசெய்துவருகிறார். இன்ஜென் பாதுகாப்புத் தலைவர் விக் ஹோஸ்கின்ஸ், இராணுவ பயன்பாட்டிற்காக வெலாசிராப்டர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என விழைகிறார். இதற்கு ஓவனும் அவரது உதவியாளர் பேரியும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பூங்காவின் புதிய கலப்பினத் தொன்மாவான இன்டாமினஸ் ரெக்ஸ், பொதுமக்கள் காட்சிக்கு விடப்படும் முன் அதன் பாதுகாப்பு வேலியை மதிப்பிடும் பணியை ஓவனிடம் மஸ்ரானி ஒப்படைக்கிறார்.

இன்டாமினஸை இணையின்றி தனிமையில் வைத்திருப்பது ஆபத்தானது என ஓவன், க்ளேரை எச்சரிக்கிறார். விரைவில், அவ்விலங்கு தப்பிவிட்டதாக எண்ணி ஓவனும் இன்னும் இருவரும் அதன் இருப்பிடத்துக்குள் நுழைகின்றனர். தன்னையும் தன் வெப்ப அலைமாலையையும் உருமறைத்துக் கொள்ளும் அவ்விலங்கு திடீரென வெளிவந்து ஓவனோடு இருப்போரைக் கொன்று உண்டு பின்பு அத்தீவின் உட்பகுதிக்குத் தப்பிச்சென்றுவிடுகிறது. இன்டாமினஸ் கொல்லப்பட வேண்டும் என ஓவன் அறிவுறுத்துகிறார். ஆனால் மஸ்ரானியோ அதை பிடிப்பதற்காக உயிர்க்கொல்லியல்லாத ஆயுதமேந்திய சிறப்புப் படையை அனுப்புகிறார். அப் படையைச் சேர்ந்த பெரும்பாலானோர் இப் பணியில் கொல்லப்பட்ட நிலையில், அத் தீவின் வடபகுதியிலிருந்து மக்கள் வெளியேறும்படி க்ளேர் உத்தரவிடுகிறார்.

ஸேக்-கும் கிரே-யும் சுழல்கோள ஊர்தியொன்றில் (gyrosphere) ஏறி பூங்காவைச் சுற்றி வருகையில் ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அங்கு வரும் இன்டாமினஸ் அவ்வூர்தியைக் கடுமையாகச் சேதப்படுத்துகிறது. அதனிடமிருந்து தப்பிச்செல்லும் அவர்கள், முதலாம் ஜுராசிக் பார்க்கின் பார்வையாளர் மைய இடிபாடுகளைக் கண்டடைகின்றனர். அங்கிருக்கும் 1992-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பழைய ஜீப் வ்ரேங்க்ளர் சஹாராவை அவர்கள் பழுதுபார்த்து அதைக்கொண்டு புதிய பூங்காவின் ஓய்வகத்துக்குத் திரும்புகின்றனர். அதேவேளையில் அச்சிறுவர்களைத் தேடும் க்ளேரும் ஓவனும் இன்டாமினஸைக் கண்டு மயிரிழையில் தப்புகின்றனர். மஸ்ரானியும் இரு போர்வீரர்களும் உலங்கு வானூர்தியிலிருந்து இன்டாமினஸை வேட்டையாட முற்படுகின்றனர். ஆனால் அவ்விலங்கு அவர்களின் துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பிச்செல்கையில் பூங்காவின் ராட்சதப் பறவைக்கூண்டில் மோதி டெரெசார் வகையைச் சேர்ந்த டெரெனெடான், டை மார்ஃபோடான் ஆகிய பழங்காலப் பறவைக் கூட்டத்தை விடுவித்துவிடுகிறது. இவை மோதுவதால் அவ் வானூர்தி கீழே விழுந்து நொறுங்குகிறது. இவ்விபத்தில் மஸ்ரானியும் இரு வீரர்களும் உயிரிழக்கின்றனர். பின்பு அப் பறவைகள் மொத்த ஓய்வகப் பகுதியையும் தாக்கிப் பேரழிவை விளைவிக்கின்றன. இக்குழப்பத்தில் அப்பறவைகளால் தூக்கிச் செல்லப்படும் ஸாரா, பூங்காவின் கடற்காயலில் விழுந்து ஒரு மோஸசாரசால் விழுங்கப்படுகிறார். கிரே-யும் ஸேக்-கும் ஒருவழியாக ஓவனையும் க்ளேரையும் ஓய்வகத்தில் கண்டுபிடிக்கின்றனர். அதேவேளையில் ராணுவ வீரர்கள் தப்பியோடிய பறவைகளை மயக்க ஊசிமூலம் கட்டுப்படுத்துகின்றனர்.

இதன்பின்பு கட்டுப்பாட்டைத் தன் கையிலெடுக்கும் ஹோஸ்கின்ஸ், இன்டாமினஸைப் பின்தொடர ராப்டர்களைப் பயன்படுத்தும்படி உத்தரவிடுகிறார். வேறுவழியின்றி இதை ஏற்கும் ஓவன், ராப்டர்களை விடுவிக்கிறார். இன்டாமினஸைக் கண்டறியும் அத் தொன்மாக்கள், அதனுடன் சமிக்ஞைகளின்மூலம் தொடர்புகொள்கின்றன. இன்டாமினஸின் மரபணுவில் ராப்டர் மரபணுவின் கூறுகளும் உள்ளதால், ராப்டர் குழுவின் தலைமைப் பொறுப்பு (ஆல்ஃபா) தன்னிடமிருந்து இன்டாமினஸுக்குக் கைமாறிவிட்டதை ஓவன் உணர்கிறார். தன்னை நோக்கிச் சுடும் துருப்புகளிடமிருந்து இன்டாமினஸ் தப்பிச்செல்கிறது. அப் படையில் பெரும்பாலானோரை ராப்டர்கள் வேட்டையாடிக் கொல்கின்றன. டாக்டர் ஹென்றி வு தனது ஆராய்ச்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தொன்மாக்களின் முளையங்களுடன் தீவை விட்டு உலங்கு வானூர்தியில் வெளியேற ஹோஸ்கின்ஸ் ஏற்பாடு செய்கிறார். ஆய்வகத்தில் மீதமுள்ள முளையங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பூங்கா ஊழியர்களைக் கண்காணிக்கும் ஹோஸ்கின்ஸை ஓவன், க்ளேர், ஸேக், கிரே ஆகியோர் சந்திக்கின்றனர். இன்டாமினஸைப் போலவே பிற கலப்பினத் தொன்மாக்களை உருவாக்கி அவற்றை ச் சக்திவாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தன் நோக்கத்தை ஹோஸ்கின்ஸ் வெளிப்படுத்துகிறார். திடீரென அங்கு வரும் ஒரு ராப்டர் அவரைக் கொன்றுவிடுகிறது.

ராப்டர்களுடனான தன் தொடர்பை ஓவன் மீண்டும் நிறுவுகிறார். அதன்பின் அவை நான்கும் அங்கு வரும் இன்டாமினஸைத் தாக்குகின்றன. இதில் மூன்று ராப்டர்களை இன்டாமினஸ் கொல்கிறது. பூங்காவிலுள்ள டி-ரெக்ஸை க்ளேர் கவர்ந்திழுத்து இன்டாமினஸுடன் மோதச்செய்கிறார். இன்டாமினஸின் கை ஓங்கிய நிலையில் இரு தொன்மாக்களும் சண்டையிடுகின்றன. இதற்குமுன் உயிர்தப்பிய ஒரே ராப்டரான 'ப்ளூ'வும் இச் சண்டையில் இணைகிறது. இறுதியாக ஒடுக்கப்பட்ட நிலையில் கடற்காயலுக்கு அருகே செல்லும் இன்டாமினஸை மோஸசாரஸ் நீருக்கடியில் இழுத்துச்செல்கிறது. சண்டை முடிவுற்ற நிலையில் டி- ரெக்ஸ் பின்வாங்கி விலகுகிறது. அதைத் தொடரும் ப்ளூ, ஓவனை அங்கீகரித்துவிட்டுச் செல்கிறது.

ஈஸ்லா நுப்லார் தீவு மீண்டும் கைவிடப்படுகிறது. இந்நிகழ்வுகளில் உயிர்தப்பியவர்கள் வெற்றிகரமாகத் தலைநிலத்துக்கு அனுப்பப்படுகின்றனர். ஸேக்-கும் கிரே-யும் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைகின்றனர். டி-ரெக்ஸும் அத்தீவில் சுதந்திரமாக உலவுகிறது.

நடித்தவர்கள்[தொகு]

கிறிசு பிராடும் பிரைசு தல்லசு ஹோவார்டும் (இடது மற்றும் நடுவில் இருப்பவர்கள் ) இப் படத்தின் இரு முன்னணிப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். முதல் படத்தில் டாக்டர் ஹென்றி வூ-வாக நடித்த பி. டி. வோங் (வலது) மீண்டும் அதே பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

முதன்மைக் கட்டுரை: ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்

எண் கதாபாத்திரம் நடித்தவர் குறிப்பு
1 ஓவன் கிராடி (Owen Grady) கிறிசு பிராடு[5] (Chris Pratt) முன்னாள் கடற்படை வீரர்; ஜுராசிக் வேர்ல்ட் பூங்காவின் ராப்டர் நிபுணர் மற்றும் பயிற்சியாளர்
2 க்ளேர் டியரிங் (Claire Dearing) பிரைசு தல்லசு ஹோவார்டு[6]

(Bryce Dallas Howard)

பூங்காவின் செயல்பாட்டு மேலாளர்; ஸேக் மற்றும் கிரே-யின் சிற்றன்னை
3 விக் ஹோஸ்கின்ஸ் (Vic Hoskins) வின்சென்ட் டி'ஒனோஃப்ரியோ[7] (Vincent D'Onofrio) இன்-ஜென் நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைத் தலைவர்
4 கிரே மிட்செல் (Gray Mitchell) டை சிம்ப்கின்சு(Ty Simpkins) க்ளேரின் மருமகன்; ஸேக்-கின் தம்பி
5 ஸேக் மிட்செல் (Zach Mitchell) நிக் ரொபின்சன்[8] () க்ளேரின் மருமகன்; கிரே-யின் அண்ணன்
6 பேரி (Barry) ஒமர் சை [9] (Omar Sy) ராப்டர்களைக் கவனித்துக்கொள்ள ஓவனுக்கு உதவுபவர்
7 டாக்டர் ஹென்றி வூ (Dr. Henry Wu) பி. டி. வோங் (B. D. Wong) ஜுராசிக் வேர்ல்டுக்காகத் தொன்மாக்களை உருவாக்கிய குழுவின் தலைவர்; இவருக்கும் ஹோஸ்கின்ஸுக்கும் தொடர்புள்ளதாகக்

காட்டப்படுகிறது. இப்பட நடிகர்களில் வோங் மட்டுமே முந்தைய திரைப்படங்களிலும் நடித்தவராவார்.

8 சைமன் மஸ்ரானி (Simon Masrani) இர்ஃபான் கான் (Irrfan Khan) மஸ்ரானி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்; ஜுராசிக் வேர்ல்டின் உரிமையாளர்
9 லவ்ரீ க்ருதர்ஸ் (Lowery Cruthers) ஜேக் ஜோன்சன் (Jake Johnson ) பூங்காவின் கட்டுப்பாட்டு அறை ஊழியர்
10 விவியன் (Vivian) லாரன் லாப்கஸ் (Lauren Lapkus) பூங்காவின் கட்டுப்பாட்டு அறை ஊழியர்
11 ஹமடா (Hamada) பிரையன் டீ[10][11][12][13] (Brian Tee) ஈஸ்லா நுப்லாரில் நிறுவப்பட்ட ACU (Asset Containment Unit) என்ற பாதுகாவலர் குழுவின் தலைவர்
12 ஸாரா (Zara) கேட்டி மெக்ராத் (Katie McGrath) க்ளேரின் தனி உதவியாளர்
13 கேரென் மிட்செல் (Karen Mitchell) ஜூடி கிரீர் (Judy Greer) க்ளேரின் தமக்கை; ஸேக் மற்றும் கிரே-யின் தாய்
14 ஸ்காட் மிட்செல் (Scott Mitchell) ஆன்டி பக்லி (Andy Buckley) கேரெனின் கணவர்; ஸேக் மற்றும் கிரே-யின் தந்தை
15 சிறப்புத் தோற்றம் ஜிம்மி ஃபாலோன் (Jimmy Fallon)
16 சிறப்புத் தோற்றம் ஜிம்மி பஃபெட்(Jimmy Buffett)
17 சிறப்புத் தோற்றம் பேட்ரிக் குரோவ்லி (Patrick Crowley) மஸ்ரானியின் விமானப் பயிற்றுவிப்பாளர்
18 மிஸ்டர் டி .என். ஏ -வின் (‌‌Mr. DNA) குரல் கோலின் திரெவாரோ ( Colin Trevorrow) படியெடுத்தல் முறையினை விளக்கும் அனிமேஷன் டி. என் .ஏ (முதல் திரைப்படத்தில் இப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் கிரெக் பர்சன் ஆவார்)
19 பூங்காவின் தொடர்வண்டி அறிவிப்பாளரின் குரல் (Brad Bird)
20 சிறப்புத் தோற்றம் ஜாக் ஹார்னர் (Jack Horner) திரைப்படத்தின் தொழில்நுட்ப ஆலோசகர்

கருப்பொருள்கள் மற்றும் ஆய்வு[தொகு]

தயாரிப்பு[தொகு]

முன்னேற்றம்[தொகு]

முன் தயாரிப்பு[தொகு]

எழுத்தாக்கம்[தொகு]

நடிகர்கள் தேர்வு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

நீக்கப்பட்ட காட்சிகள்[தொகு]

திரையில் தோன்றிய உயிரினங்கள்[தொகு]

இசை[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் வேர்ல்ட்: ஒரிஜினல் மோஷன் பிக்சர் சவுண்ட்டிராக் இந்த திரைப்படத்திற்கு மைக்கேல் கியாச்சினோ மற்றும் ஜோன் வில்லியம்ஸ் இசை அமைத்துள்ளார்கள்.[14][15]

சந்தைப்படுத்தலும் விற்பனையும்[தொகு]

வெளியீடு[தொகு]

உள்நாட்டு ஊடகங்கள்[தொகு]

இறுவட்டு விற்பனை[தொகு]

வரவேற்பு[தொகு]

பாக்ஸ் ஆபிஸ்[தொகு]

வட அமெரிக்கா[தொகு]

====வட அமெரிக்காவுக்கு வெளியில் புண்டை

விமர்சனங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

சர்ச்சைகள்[தொகு]

அறிவியல் துல்லியம்[தொகு]

எழுத்தாக்க ஒப்புகை சர்ச்சை[தொகு]

தொடர்ச்சி[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "2015 Film Study" (May 2016). பார்த்த நாள் January 2, 2017.
 2. "Jurassic World (2015)". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து May 18, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 4, 2017.
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SC-2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. Acuna, Kirsten (June 14, 2015). "'Jurassic World' is the first movie ever to crack $500 million in its opening weekend". பார்த்த நாள் January 31, 2018.
 5. "Keep your eyes open" (February 9, 2015). பார்த்த நாள் 2015-02-09.
 6. Stack, Tim (December 18, 2014). "'Jurassic World': See Chris Pratt ride with some raptors – exclusive". Entertainment Weekly. பார்த்த நாள் December 18, 2014.
 7. "Masrani Global Update: Vic Hoskins (Vincent D'Onofrio) – Head of Security Operations for InGen" (January 9, 2015). பார்த்த நாள் 2015-01-18.
 8. Purser, Louise (June 12, 2014). "Check Out Brand New Images from Jurassic World Ahead of Next Year's Release". EntertainmentWise.com. மூல முகவரியிலிருந்து August 8, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 27, 2014.
 9. Obenson, Tambay A. (March 6, 2015). "Director of 'Jurassic World' Reveals Omar Sy's Role in the Film + Whether His Character Dies". Indie Wire. பார்த்த நாள் March 7, 2015.
 10. Han, Brian (January 15, 2015). "‘Jurassic World’ actor Brian Tee feels ‘career starting to hit stride’". The Korea Times. பார்த்த நாள் 2015-01-18.
 11. "InGen Security profile". பார்த்த நாள் February 10, 2015.
 12. "Brian Tee Talks Jurassic World's Hamada" (June 28, 2014). பார்த்த நாள் November 28, 2014.
 13. De Semlyen, Nick (November 27, 2014). "Empire's Jurassic World Trailer Tour (p.15)". பார்த்த நாள் November 28, 2014.
 14. Yamato, Jen (May 12, 2014). "Michael Giacchino To Score Jurassic World". Deadline.com. பார்த்த நாள் May 12, 2014.
 15. "Jurassic World – Official Trailer". Youtube.com (25 November 2014). பார்த்த நாள் 26 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுராசிக்_வேர்ல்ட்&oldid=2730042" இருந்து மீள்விக்கப்பட்டது