அதிவேக வளையப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அதிவேக வளைய உள் செயல்பாட்டிற்கான மாதிரி வடிவம்

அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) என்பது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில் கிட்டத்தட்ட வெற்றிடமாக்கப்பட்ட வளையத்தினுள் செல்லக் கூடிய வாகன முன்மொழிவு அமைப்பு ஆகும்.

எசுபேசுஎக்சு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் திட்டத்திற்கான தொடக்கப் பதிப்பானது இதன் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரிக்கிறது. ஊர்தியானது காற்றுத்தாங்கு உருளைகள் அல்லது காந்த இலகுமத்தைப் பயன்படுத்தி தன் பாதையில் சறுக்கிச் செல்லும் மற்றும் நேரியல் மின்சார மோட்டாரைப் பயன்படுத்தி அதன் உச்ச கட்ட வேகத்திற்கு முடுக்கமடையும். மேலும் இதனை தரைமட்ட அளவிலும் தரைக்குக் கீழேயும் தரைக்கு மேலேயும் குறுக்கீடுகளைத் தவிர்த்து குழாய்களை அமைத்து பயன்படுத்த முடியும். இந்த அமைப்பானது அதிக ஆற்றல் படைத்ததாகவும் சத்தமில்லாமல் அமைதியாக செல்லக் கூடியதாகவும் தன்னியக்கத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.

குழாய்களைப் பயன்படுத்தி அதி வேகத்தில் செல்லும் கருத்தாக்கமானது பல தசாப்தங்களாகவே இருந்து வருகிறது. இந்தக் கருத்தானது எலான் மசுக் என்பவரால் 2012 இல் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாயுக்குழாய் போக்குவரத்திற்கான ஆர்வம் எழுச்சி பெற ஆரம்பித்தது.[1]

எலொன் மசுக்கின் மேம்படுத்தப்பட்ட அமைப்பானது குறைந்த காற்றழுத்தக் குழாய்களின் உள்ளே நேரியல் தூண்டல் மோட்டார்கள் மற்றும் காற்று அமுக்கிகளைப் பயன்படுத்தி உந்தப்படும் உள் அழுத்தம் கொண்ட கலன் போன்ற அமைப்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]