சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியேரா நிவாடா
Sierra Nevada aerial.jpg
சியேராவின் மில்சு சிறுகுடா பனிபறி பள்ளம் (மையத்திலுள்ளது) சியேரா முகட்டுக்கு மேற்குப் பகுதியில், ஒற்றை உவரேரிக்கு (மேலே, நீலத்தில்) தெற்கில்.
உயர்ந்த இடம்
Peakவிட்னி மலை
உயரம்14,505 ft (4,421 m) [1]
ஆள்கூறு36°34′43″N 118°17′31″W / 36.578580925°N 118.29199495°W / 36.578580925; -118.29199495
Dimensions
நீளம்400 mi (640 km) வடக்கு-தெற்கு (பிரெடோன்யெர் கணவாயிலிருந்து டெகசாப்பி கணவாய் வரை) [2]
அகலம்65 mi (105 km) [3]
பரப்பளவு24,370 sq mi (63,100 km2) [4]
Naming
சொற்பிறப்பு1777: எசுப்பானிய மொழியில் "பனிபடர்ந்த (நிவாடா) மலைத்தொடர் (சியேரா)"
சிறப்புப்பெயர்சியேரா, உயர் சியேரா, ஒளியின் வீச்சு (1894, ஜான் இம்யூர்)[5]
புவியியல்
Sierra Nevada map.png
கலிபோர்னியாவில் சியேரா நிவாடாவின் அமைவிடம்
Countryஐக்கிய அமெரிக்கா
Statesகலிபோர்னியா and நிவாடா
Range coordinates37°43′51″N 119°34′22″W / 37.73083°N 119.57278°W / 37.73083; -119.57278ஆள்கூறுகள்: 37°43′51″N 119°34′22″W / 37.73083°N 119.57278°W / 37.73083; -119.57278
நிலவியல்
பாறையின் வயதுமெசோசோயிக்கு
பாறை வகைஆழ் தீப்பாறைத் திரள் and எரிமலைசார்

சியேரா நிவாடா (Sierra Nevada, /siˌɛrə nɪˈvædə, -ˈvɑːdə/, எசுப்பானியம்: [ˈsjera neˈβaða], பனிபடர்ந்த அரத் தொடர்[6]) மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிற்கும் மீபெரு வடிநிலத்திற்கும் இடையேயுள்ள மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி கலிபோர்னியா மாநிலத்திலும், கார்சன் மலைத்தொடரின் கிளை உள்ள பகுதி நெவாடாவிலும் உள்ளது. சியேரா நிவாடா வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா and அந்தாட்டிக்காவின் மேற்கு முதுகெலும்பாக அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத் தொடர்கோவையின் அங்கமாகும்.

சியேரா வடக்கு தெற்காக 400 மைல்களுக்கு (640 கிமீ) நீளமுள்ளதாகவும் கிழக்கு மேற்காக 70 மைல்களுக்கு (110 கிமீ) அகலமாகவும் அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய டகோ ஏரி; மிக உயர்ந்த சிகரமான 14,505 அடி (4,421 மீ) உயரமுள்ள விட்னி மலை[1]; 100 மில்லியன் ஆண்டு பழமையான கருங்கல்லில் பனியாறுகள் செதுக்கியுள்ள யொசமிட்டெ பள்ளத்தாக்கு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க சியேரா கூறுகளாகக் குறிப்பிடலாம். சியேராவில் மூன்று தேசிய பூங்காக்கள், இருபது அடர்காட்டுப் பகுதிகள், இரண்டு தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன; இவற்றில் யொசமிட்டெ தேசியப் பூங்கா, செகுய்யா தேசியப் பூங்கா, கிங்சு கேன்யன் தேசியப் பூங்கா மற்றும் டெவில்சு போஸ்ட்பைல் தேசிய நினைவுச்சின்னம் போன்றவை அடங்கும்.

இம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலெழும்பத் தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம்.

சியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் கலிபோர்னியா தங்க வேட்டை நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.[7][8]:81

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mount Whitney". NGS data sheet. ஐக்கிய அமெரிக்கத் தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு.
  2. "Sierra Nevada". Ecological Subregions of California. United States Forest Service. 2010-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. "Sierra Nevada". SummitPost.org. 2010-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The Sierra Nevada Region". USCB Biogeography lab. 2011-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  5. John Muir (1894). "Chapter 1: The Sierra Nevada". The Mountains of California. Archived from the original on 2014-04-10. http://www.sierraclub.org/john_muir_exhibit/writings/the_mountains_of_california/chapter_1.html. பார்த்த நாள்: 2010-05-29. 
  6. Carlson, Helen S. (1976). Nevada Place Names: A Geographical Dictionary. University of Nevada Press. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87417-094-8. 
  7. Roper, Steve (1997). Sierra High Route: Traversing Timberline Country. The Mountaineers Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89886-506-9. 
  8. Moore, James G. (2000). Exploring the Highest Sierra. Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-3703-7. https://archive.org/details/exploringhighest0000moor. 

வெளி இணைப்புகள்[தொகு]