ஒற்றை உவரேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒற்றை உவரேரி
ஒற்றை உவரேரி - Landsat image of Mono Lake
Landsat image of Mono Lake
அமைவிடம் மோனோ வட்டம், கலிபோர்னியா
புவியமைவுக் கூறுகள் 38°00′59″N 119°00′33″W / 38.0165°N 119.0093°W / 38.0165; -119.0093ஆள்கூறுகள்: 38°00′59″N 119°00′33″W / 38.0165°N 119.0093°W / 38.0165; -119.0093
வகை Endorheic, Monomictic
உள்வடிகால் இரழ்சு ஓடை (கலிபோர்னியா)
Rush Creek (California)
வெளிப்போக்கு ஆவியாதல்
வடிநிலம் 2,030 km2 (780 sq mi)
வடிநில நாடுகள் ஐக்கிய அமெரிக்கா
அதிக அளவு நீளம் 7.5 km (4.7 mi)
அதிக அளவு அகலம் 7.5 km (4.7 mi)
மேற்பரப்பளவு 180 km2 (69 sq mi)
சராசரி ஆழம் 17 m (56 ft)
அதிக அளவு ஆழம் 48 m (157 ft)
நீர் கனவளவு 2,970,000 acre·ft (3.66 km3)
கரை நீளம்1 25 km (16 mi)
மேற்பரப்பின் உயரம் 1,944 m (6,378 ft) above sea level
தீவுகள் இரண்டு பெரியவைr: நெகிட் தீவு (Negit Island), பவோஃகாத் தீவு (Paoha Island); பல சிறிய துருத்திக்கொண்டிருக்கும் உவர்மண் புற்றுகள், பாறைப்பாங்கான பகுதிகள்; ஏரியின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது.
மேற்கோள்கள் U.S. Geological Survey Geographic Names Information System: ஒற்றை உவரேரி
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

ஒற்றை உவரேரி அல்லது ஒற்றை உப்பேரி (மோனோ லேக், Mono Lake) என்னும் உப்புநீர் ஏரி, ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் மோனோ வட்டம் (மோனோ கவுண்ட்டி, Mono County) என்னும் பகுதியில் அமைந்து உள்ளது. இது குறைந்தது 760,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் கழிமுகம் கொள்ளாத ஓர் ஏரியாக தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. இதில் உள்ள நீர் ஆவியாதல் தவிர வேறு வழிகளில் வெளியேற முடியாததாகையால், நீரில் கரைந்திருக்கும் உப்பு நாளுக்கு நாள் கூடி மிகுந்த உவர்மை (உப்பு உடைமை, வேதிக்காரத்தன்மை, ஆல்க்கலைன் தன்மை) உடைய ஏரியாக உள்ளது.

ஒற்றை உவரேரி பாலை நில ஏரி ஆயினும் பல வகையான பறவைகளும், பூச்சிகளும், உப்பு இறால்களும் மற்ற உயிரிங்களும் செடிகொடிகளும் இச்சூழலில் இணக்கமுடன் உயிர் வாழ்கின்றன. வலசை செல்லும் (புலம்பெயரும்) பறவைகள் ஏறத்தாழ இரண்டு மில்லியன் இங்கு வந்து உப்பு இறாலை உண்கின்றன.. [1][2]. குறிப்பிடத்தக்க வகையில் மிக அண்மையில் (திசம்பர் 2010 இல்) GFAJ-1 என்னும் கோலுயிரி (கோல் வடிவ நுண்ணுயிரி) இங்கு வாழ்வதாகவும், இது பொதுவாக நச்சுத்தன்மை கொண்ட ஆர்செனிக்கு என்னும் தனிமத்தைப் பாசுபரசுக்கு மாற்றீடாக ஏற்கவல்லது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். GFAJ-1 என்பது மீசூழலுயிரி அல்லது எல்லைக்கோட்டுச்சூழலுயிரி (extremophile) வகையான ஓரு பாக்டீரியா (நுண்ணுயிரி)[3].

இவ் ஏரியோடு தொடர்புடைய மாந்தர் வரலாறும் இங்குள்ள வளமான உயிரிணக்கச்சூழலின் அடிபப்டையில் அமைந்ததே. குட்ஃசடிக்கா (Kutzadika) என்னும் பழங்குடி மக்கள் இங்கு வாழும் உப்பு ஈக்களின் புழுக்களை உண்டு வந்தார்கள். இவ் ஏரிக்கு வரும் நீரை லாசு ஏஞ்சலிசு மாநகரம் வழிமாற்றியபோது, இங்கே நீரின் மட்டம் குறையத் தொடங்கியது, இதனால் வலசையாக வரும் பறவைகளின் வாழ்வுக்குக் கேடு நேர்ந்தது. இந்நிகழ்வை ஒட்டி சட்டப்படி எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்து (ஒற்றை உவரேரி குழுமம், Mono Lake Committee) லாசு ஏஞ்சலிசின் தடுதார்கள்.

புவியியல்[தொகு]

USGS ஒற்றை உவரேரிப் பகுதியின் தரைப்படம் (படத்தின் குறிப்புகள் தெளிவாகத் தெரிய தனி உலவித்திரையில் சொடுக்கித் திறந்து பார்க்கவும்)
ஒற்றை உவரேரியையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் காட்டும் புவியமைப்புப் புடைப்புப் படம். அருகே உள்ள டாஃகோ ஏரியும், யோசமிட்டி நாட்டக புரவுக்காடும், கலிபோரினியா-நெவாடா மாநில எல்லைகளும் காட்டப்பட்டுள்ளன.

ஒற்றை உவரேரி மோனோ பள்ளத்தில் (Mono Basin) உருவாகியுள்ளது. இங்கிருந்து கடலுடன் கலக்க வெளிப்போக்கு ஏதும் இல்லை. ஆகவே இவ் ஏரியில் கரைந்திருக்கும் உப்பு நாளுக்கு நாள் கூடுவதால் (நீர் ஆவியாவதால்), நீரின் காரதன்மை (pH, காரக்காடித்தன்மை)கூடுகின்றது.

இப்பள்ளப்பகுதி, கடந்த ஐந்து மில்லியன் ஆண்டுகளாக செயற்பட்ட புவியியல் விசைகளால் உருவாக்கப்பட்டது[4]. ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன், சியரா நெவாடா (Sierra Nevada) பகுதி அலையலையாக குன்றுகள் அமைந்த பகுதியாக இருந்தது. அப்பொழுது மோனோ பள்ளமும், அவன்சு பள்ளத்தாக்கும் (Owens Valley) உருவாகவில்லை.

ஏறத்தாழ 4.5 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பெரூம் அளவினதாக பசால்ட்டு வெளிப்பட்டு மோனோ பள்ளத்துக்கு கிழக்கேயும் தெற்கேயும் தற்பொழுது உள்ள கௌட்டிராக் மலை (Cowtrack Mountain)உருவானது; கடைசியாக 300 square mileகள் (780 km2) அளவு பரவி 600 அடிகள் (180 m) அளவு பருமன் அடைந்தது.[4] பின்னர் 3.8 மில்லியன் ஆண்டுகள் முதல் 250,000 ஆண்டுகள் வரைக்கும் முன்னர் எரிமலை நிகழ்வுகள் நடந்தன [5] இந்நிகழ்வுகள் மோனோ பள்ளத்துக்கு வடமேற்கே நடந்தன. இதன் பயனாய் அரோரா பெருங்குழியும், (Aurora Crater), அழகு முகடும் (பியூட்டி பீக்), சீடார் குன்றும், இக்ஃசு மலையும் (Hicks Mount), ஒற்றை உவரேரியின் உயர்திட்டாகிய தீவும் உருவாகின.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணையும் அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Birds of the Basin: the Migratory Millions of Mono". Mono Lake Committee. பார்த்த நாள் 2010-12-02.
  2. Carle, David (2004). Introduction to Water in California. Berkeley: University of California Press. ISBN 0520240863. 
  3. "Arsenic-loving bacteria may help in hunt for alien life". BBC News. December 2, 2010. http://www.bbc.co.uk/news/science-environment-11886943. பார்த்த நாள்: 2010-12-02. 
  4. 4.0 4.1 Tierney 2000, ப. 45
  5. Tierney 2000, ப. 46

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Lua error in package.lua at line 80: module 'Module:Portal/images/g' not found.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றை_உவரேரி&oldid=1828707" இருந்து மீள்விக்கப்பட்டது