சிறப்புப்பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப்பெயர் (சில நேரங்களில் செல்லப் பெயர்) என்பது ஓர் இடத்தின்,நபரின் அல்லது பொருளின் அலுவல்முறை பெயருக்கு மாற்றாகவோ அல்லது ஒட்டாகவோ கொடுக்கப்படும் விவரிப்புப் பெயர். அது விளிக்க வசதியாக பெயரின் பழக்கமான அல்லது குறுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். (காட்டாக, இராபர்ட் என்ற ஆங்கிலப்பெயர் பாப்,பாபி,ராப்,ராபி அல்லது பெர்ட் என விளிக்கபடுதல்).

சில நேரங்களில் அன்பின் காரணமாக அணுக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக கண்ணே, கரும்பே (சில நேரங்களில் நாயே,கழுதை என்பதும் உண்டு) என விளித்தல் செல்லப் பெயர் எனப்படும். சிறுவர்களைக் குறிக்க பெயருடன் குட்டி, பொண்ணு,பையன் முதலிய ஒட்டுக்களும் சேர்ப்பதுண்டு.

இது புனைபெயர் மற்றும் மேடைப்பெயர் இவற்றிலிருந்து பொதுவாக வேறுபட்டது. சிறப்புப் பெயர்களை புனைப்பெயராகக் கொள்வதும் உண்டு.

பலநேரங்களில் சிறப்புப்பெயர்கள் விரும்பப்பட்டாலும்,சில நேரங்களில் அவை கேலி செய்வதாகவும் அமைந்து விடும்.

புவியிடங்களுக்கான சிறப்புப்பெயர்கள்[தொகு]

பல புவியிடங்களுக்கு ஏனையவர் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்புப்பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இவை அங்குள்ளவர்களின் குடிப்பெருமையை வளர்க்கவும் ஒன்றிணைக்கவும் பயன்படுகின்றன. இவை பொருளியல் ஆதாயத்தையும் கொண்டு வருகின்றன.

இடங்களுக்கு கொடுக்கப்படும் சிறப்புப்பட்டங்களுடன் சிறப்புப்பெயர்களை குழப்பிக்கொள்ளக்கூடும். காட்டாக ஊட்டி மலைவாழ் இடங்களின் ராணி என்பது அந்நகருக்குக் கொடுக்கப் பட்டுள்ள பட்டப்பெயராகும். கோவையை பருத்திநகரம் என்பது அந்நகரின் சிறப்பினைக் கூறும் சிறப்புப்பெயராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்புப்பெயர்&oldid=3448382" இலிருந்து மீள்விக்கப்பட்டது