தாய்வழிப் பெயர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

தாய்வழிப் பெயர் (matronymic) என்பது, தாய், பாட்டி, அல்லது பெண் மூதாதையர் ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயரைக் குறிக்கும். இது தந்தைவழிப் பெயருக்கு நிகரான பெண்பாற் பெயர் முறை. ஆண்வழிச் சமுதாய முறையையே பெரும்பாலாகக் கொண்ட தற்காலத்தில் தாய்வழிப் பெயர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முன்னர் திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்வழி இறுதிப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. ஒரு குடும்பத்தில் ஆண்களைவிடப் பெண்கள் புகழ் பெற்றவர்களாகவும், ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கும் போதும் அவர்களது வழியினர் குறித்த பெண்களின் பெயரைத் தழுவிய தாய்வழிப் பெயரைக் கொள்வதும் உண்டு.

தாய்வழிப் பெயர் முறைகள்[edit]

தென்னிந்தியாவிலும், நேபாளத்திலும் வாழும் சில தாய்வழிச் சமூகங்களில் தாய்வழிப் பெயர்களைக் கொள்ளும் முறை உள்ளது. கேரளாவிலும் இம்முறை இருப்பதாகத் தெரிகிறது.[1]

குறிப்புக்கள்[edit]

இவற்றையும் பார்க்கவும்[edit]