தொல் தாவரவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பிற்கால பிளியோசீன் காலத்தைச் சேர்ந்த, பிரான்ஸில் இருந்த, ஒரு இலையின் தொல்படிமம்

தொல் தாவரவியல் என்பது தாவரவியலின் ஒரு பிரிவு. இது தாவரங்களின் வரலாறு, அவற்றின் தோற்றம், வளர்ச்சி அவற்றின் அழிவு போன்றவற்றை நிலவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் விளக்குகிறது.[1] தொல் தாவரவியலில் பாசிகள், பூஞ்சைகள், பெரணித் தாவரங்கள், விதைத் தாவரங்கள் பற்றி அதிகம் காணலாம். தாவரங்களின் இலைகள், தண்டுகள், பழங்கள் இவற்றின் ஏதாவது படிமங்களின் மூலம் அத்தாவர இனத்தைப் பற்றியும் அவற்றின் சூழலியல் வரலாற்றினையும் அறியலாம்.[2]

நோக்கம்[தொகு]

  • தொல் படிமத் தாவரங்கள் பற்றி மொத்தத் தொகுப்பை வரையறுக்க
  • அத்தாவரங்கள் எந்த வகைப்பாட்டினைச் சேர்ந்தவை என்பதை அறிய
  • அத்தாவரங்களின் பரிணாம வளர்ச்சியினை அறிய

சிறப்பு வகைத் தொல் படிமங்கள்[தொகு]

டையாடம்ஸ் எனும் இருகலப்பாசிகள் சிலிக்காவினால் ஆன செல்களால் ஆனவை. இவை ஒரு செல்லினால் ஆன பாசிகள். இவற்றின் செல்கள் அழி்ந்து அவை ஒன்றிணைந்து பாறை போன்ற அமைப்பாக மாறுகின்றன. அவை 'டையாடமைட் என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cleal, Christopher J.; Lazarus, Maureen; Townsend, Annette (2005). "Illustrations and illustrators during the 'Golden Age' of palaeobotany: 1800–1840". In Bowden, A. J.; Burek, C. V.; Wilding, R. (eds.). History of palaeobotany : selected essays. London: Geological Society of London. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781862391741.
  2. Paleobotany Blog
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்_தாவரவியல்&oldid=3918306" இலிருந்து மீள்விக்கப்பட்டது