மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாம் கட்டம்
தயாரிப்பு
மூலக்கதைமார்வெல் வரைகதை
கலையகம்
விநியோகம்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும். இந்த ஐந்தாம் கட்டதின் தயாரிப்புகள் அனைத்தும் 2022 முதல் 2024 வரை வெளியிடப்படுகிறது. இந்த ஐந்தாம் கட்டத்தின் திரைப்படங்கள் அனைத்தும் மார்வெல் இசுடியோசு தயாரிப்பு நிறுவனத்தால் 2023 இல் வெளியிடப்பட உள்ளன, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் முக்கியமான படங்களை விநியோகம் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் டிஸ்னி+ இல் தொடர்கள் வெளியிடப்படுகிறது.

இந்த கட்டத்தில் முதல் படம் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா ஆகும், இந்த படம் பிப்ரவரி 17, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கட்டத்தில் முதல் தொடர் வாட் இப்...? 2 ஆகும், இது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு திரைப்படம் மற்றும் தொடர்களும் கேவின் பிகே என்பவர் தயாரிக்கிறார், மேலும் இந்த கட்டத்தில் பிளேடிற்கான படத்தில் தயாரிப்பாளர் எரிக் கேரோல் என்பவர் இணைந்து தயாரிக்கிறார்.

இந்த கட்டத்தின் படங்களில் பால் ருத் மற்றும் இவாஞ்சலீன் லில்லி நடித்த ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா,[1] கிறிஸ் பிராட் மற்றும் பலர் நடிப்பில் கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3, பிரி லார்சன், இமான் வேலனி மற்றும் தியோனா பாரிசு நடிப்பில் தி மார்வெல்ஸ்,[2] மஹெர்ஷாலா அலி நடிப்பில் பிளேடு, அந்தோணி மேக்கி நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: நியூ வேர்ல்ட் ஆர்டர் மற்றும் தண்டர்போல்ட்சு போன்ற திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கட்டத்தின் டிஸ்னி+ தொலைக்காட்சித் தொடரில் வாட் இப்...? 2, சாமுவேல் எல். ஜாக்சன் நடித்த சீக்ரெட் இன்வேசன்,[3] அலக்வா காக்ஸ் நடித்த எக்கோ,[4] டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோகியின் இரண்டாவது பருவம்,[5] கேத்ரின் ஹான் நடித்த அகதா: கோவன் ஆஃப் கேயாஸ் மற்றும் சார்லி சாக்ஸ் நடித்த டேர்டெவில் ஆகியவை அடங்கும்.[6]

வளர்ச்சி[தொகு]

ஏப்ரல் 2014 வாக்கில் மார்வெல் இசுடியோசு தலைவர் கேவின் பிகே என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் கூடுதல் கதைக்களங்கள் 2028 வரை திட்டமிடப்பட்டதாகக் கூறினார், இதன் விளைவாக பல படங்கள் "முன்பு வந்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை-வேண்டுமென்றே" கூறினார். ஜூலை 2019 சான் டியேகோ காமிக்கானில் மார்வெல் இசுடியோவின் குழுவின் போது, மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்திற்கான வளர்ச்சியில் பல படங்கள் மற்றும் டிஸ்னி+ தொலைக்காட்சித் தொடர்களை கேவின் பிகே அறிவித்தார், அத்துடன் பிளேடு[7] திரைப்படம் மற்றும் மரபுபிறழ்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகியவையும் உருவாக்கத்தில் இருந்தன. பின்னர், பிளேடுக்கு முன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அந்த நேரத்தில் முழு நான்காவது கட்டமாக இருந்தன என்பதை கேவின் பிகே உறுதிப்படுத்தினார்.

நவம்பர் 2020 வாக்கில், லோகி என்ற தொலைக்காட்சித் தொடரின் இரண்டாவது பருவ உருவாக்கம் தொடங்கியது, இது ஜூலை 2021 இல் முறையாக உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் எக்கோவை மையமாகக் கொண்ட தொடரின் உருவாக்கம் மார்ச் 2021 இல் ஹாக்கி தொடரின் வழித்தொடர் ஆனது. அடுத்த மாத இறுதியில், பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) என்ற தொடரின் தொடர்ச்சியாக நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படம் உருவாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. ஜூன் மாதத்திற்குள், மார்வெல் இசுடியோசு குறைந்தது மூன்று இயங்குபட தொடர்களை உருவாக்க முடிவு செய்தது.

அக்டோபர் 2021 இல் வாண்டாவிஷன் தொடரில் இருந்து அகதா ஹார்க்னஸை[8] மையமாகக் கொண்ட வழித்தொடர் ஒன்றின் உருவாக்கம் தொடங்கியது. அடுத்த மாதம் டிஸ்னி+ டே நிகழ்வின் போது, மார்வெல் இசுடியோசு எக்கோ மற்றும் அகதா: ஹவுஸ் ஆஃப் ஹார்க்னஸ் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அத்துடன் இசுபைடர் மேன் இயங்குபட தொடர் மற்றும் தி வாட் இஃப்...? தொடர்புடைய மார்வெல் ஜாம்பிஸ் என்ற இயங்குபட தொடரையும் அறிவித்தது. நவம்பர் 2021 நடுப்பகுதியில் மார்வெல் இசுடியோசு நிறுவனம் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவருடன் ஒரு அறியப்படாத திட்டத்தில் பணிபுரிந்தார், மேலும் மாத இறுதியில், மார்வெல் இசுடியோசு நிறுவனம் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து டாம் ஹாலண்ட் நடிக்க குறைந்தது மூன்று இசுபைடர் மேன் திரைப்படங்களை திட்டமிட்டது. அதை தொடர்ந்து அடுத்த மாதம், சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021) என்ற படத்தின் தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது. டேர்டெவில் தொடர் மே மாதம் டிஸ்னி+க்காக உருவாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.[9][10] ஜூன் 2022 வாக்கில், மார்வெல் இசுடியோசு தண்டர்போல்ட்சு திரைப்படத்தை திட்டமிட்டது.

திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர் குறிப்புகள்
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா பெப்ரவரி 17, 2023 (2023-02-17)[11] பெய்டன் ரீட்[12] ஜெஃப் லவ்னஸ் கேவின் பிகே படப்பிடிப்பில்
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 மே 5, 2023 (2023-05-05)[13] ஜேம்ஸ் கன்[14]
தி மார்வெல்ஸ் சூலை 28, 2023 (2023-07-28)[15] நியா டகோஸ்டா[16] மேகன் மெக்டோனல்[17]

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

நான்காம் கட்டத்தில் உள்ள அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு திரைக்கதை இயக்குனர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாட் இப்...? 2 2 9 2023 (2023) ஏ.சி. பிராட்லி பிரையன் ஆண்ட்ரூஸ்
சீக்ரெட் இன்வேசன் 1 6 2023 (2023) கயில் பிராட்ஸ்ட்ரீட்டு அலி செலிம் & தாமஸ் பெசுச்சா
எக்கோ 1 6 2023 (2023) மரியன் டேயர் சிட்னி பிரீலாண்ட் & கத்ரியோனா மெக்கென்சி
லோகி 2 2 6 2023 (2023) எரிக் மார்டின் ஜஸ்டின் பென்சன் & ஆரோன் மூர்ஹெட்
அயன்ஹார்டு 1 6 2023 (2023) சினக்க கோட்ஜ் சாம் பெய்லி & ஏஞ்சலா பார்ன்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. Couch, Aaron (July 2, 2018). "'Ant-Man and the Wasp' Director on Wooing Michelle Pfeiffer and His Marvel Future". The Hollywood Reporter. July 4, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 6, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Hood, Cooper (July 20, 2019). "Captain Marvel 2 Confirmed By Marvel Studios At SDCC 2019". Screen Rant. July 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "September 2021: London On Screen and Filming". Film London. September 1, 2021. September 6, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 6, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Moreau, Jordan (March 22, 2021). "'Hawkeye' Spinoff Series About Echo in Early Development for Disney Plus (Exclusive)". Variety. March 22, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 22, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. Ramos, Dino-Ray (May 5, 2021). "'Loki' Premiere Date Moved Up By Two Days On Disney+". Deadline Hollywood. May 5, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 5, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. Andreeva, Nellie (February 11, 2022). "Disney Preps Plans For Netflix's 'Daredevil', 'Jessica Jones', 'Luke Cage' & Co. As It Is Set To Regain Control Of Marvel Series". Deadline Hollywood. February 11, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 11, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  7. D'Allesandro, Anthony; Ramos, Dino-Ray (July 20, 2019). "Marvel Shows Off 2020 & 2021 Slate With 'Black Widow', 'Eternals', 'Shang-Chi' & More: Exhibition Can Rest Easy – Comic-Con". Deadline Hollywood. October 8, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 22, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. Otterson, Joe (October 7, 2021). "'WandaVision' Spinoff Starring Kathryn Hahn in the Works at Disney Plus (Exclusive)". Variety. October 7, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 7, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  9. Sharf, Zack (March 1, 2022). "'Daredevil' and Other Marvel Shows to Stream on Disney Plus in March After Netflix Exit". Variety. March 1, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 1, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Production Weekly – Issue 1290 – Thursday, March 17, 2022 / 199 Listings – 45 Pages". Production Weekly. March 16, 2022. March 17, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 17, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  11. Rubin, Rebecca (October 18, 2021). "Disney Delays 'Doctor Strange 2,' 'Thor 4,' 'Black Panther' Sequel and 'Indiana Jones 5'". Variety. October 18, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 18, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  12. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". The Hollywood Reporter. November 1, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  13. Couch, Aaron (May 3, 2021). "Marvel Unveils 'Black Panther II' Title, First 'Eternals' Footage and More". The Hollywood Reporter. May 3, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 3, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  14. Fleming, Mike Jr. (March 15, 2019). "Disney Reinstates Director James Gunn For 'Guardians Of The Galaxy 3'". Deadline Hollywood. March 15, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  15. D'Alessandro, Anthony (April 29, 2022). "'Ant-Man and the Wasp: Quantumania' & 'The Marvels' Swap Release Dates". Deadline Hollywood. April 29, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 29, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  16. Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". Deadline Hollywood. August 6, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 5, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  17. Kit, Borys (January 22, 2020). "'Captain Marvel 2' in the Works With 'WandaVision' Writer". The Hollywood Reporter. January 23, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 22, 2020 அன்று பார்க்கப்பட்டது.