உள்ளடக்கத்துக்குச் செல்

பிளேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேடு
இயக்கம்இசுடீபன் நோரிங்டன்
தயாரிப்பு
கதைடேவிட் எஸ். கோயர்
மூலக்கதை
பிளேடு
படைத்தவர்
 • மார்வ் வோல்ஃப்மேன்
 • ஜீன் கோலன்
இசைமார்க் இஷாம்
நடிப்பு
 • வெச்லி சினைப்சு
 • இசுடீபன் டோர்ஃப்
 • கிறிசு கிறிஸ்டோபர்சன்
 • என் பூசே ரைட்
 • டோனல் லொக்
ஒளிப்பதிவுதியோ வான் டி சாண்டே
படத்தொகுப்புபால் ரூபெல்
கலையகம்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுஆகத்து 21, 1998 (1998-08-21)
ஓட்டம்120 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45 மில்லியன்
மொத்த வருவாய்$131.2 மில்லியன்

பிளேடு அல்லது பிளேட் (ஆங்கில மொழி: Blade) என்பது 1998 ஆம் ஆண்டு இயக்குனர் இசுடீபன் நோரிங்டன் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திகில் திரைப்படம் ஆகும். இது பிளேடு[3] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் என்டர்பிரைசசு, ஆமென் ரா பிலிம்ஸ் மற்றும் இமேஜினரி போர்சஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க, நியூ லைன் சினிமா என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இப் படத்தில் பிளேடு என்ற கதாபாத்திரத்திற்கு நடிகர் வெச்லி சினைப்சு என்பவர் நடிக்க, இவருடன் இசுடீபன் டோர்ஃப், கிறிசு கிறிஸ்டோபர்சன், என் பூசே ரைட், டோனல் லொக் போன்ற பலர் நடித்துள்ளார்கள். பிளேடு ஒரு காட்டேரி பலம் கொண்ட ஒரு மனிதர் ஆனால் அது அவரின் பலவீனம் அல்ல, இவர் தனது வழிகாட்டியான ஆபிரகாம் விஸ்லர் மற்றும் ஹெமாட்டாலஜிஸ்ட் கரேன் ஜென்சன் ஆகியோருடன் சேர்ந்து காட்டேரிகளுக்கு எதிராக போராடுகிறார்.

பிளேடு படம் 21 ஆகஸ்ட் 1998 அன்று வெளியாகி வணிகரீதியாக வெற்றி பெற்று அமெரிக்காவில் வசூல் ரீதியாக $70 மில்லியன் மற்றும் உலகளவில் $ 131.2 மில்லியன் வசூலித்தது. இந்த திரைப்பட விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிளேடு 2 மற்றும் பிளேடு 3 போன்ற திரைப்படங்கள் வெளியானது.

பிளேடு ஒரு இருண்ட மீநாயகன் படமாகும்[4] மற்றும் பிளேட்டின் வெற்றி மார்வெலின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் வரைகதை புத்தகத் திரைப்படத் தழுவல்களுக்கான களமாக இந்த படம் அமைத்தது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Harp, Justin (21 July 2019). "Marvel is rebooting Blade without Wesley Snipes". Digital Spy. Archived from the original on October 1, 2020. பார்க்கப்பட்ட நாள் August 8, 2020. Instead of Snipes reprising his iconic role...
 2. "BLADE (18)". British Board of Film Classification. September 18, 1998. Archived from the original on March 6, 2016. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
 3. Turan, Kenneth (6 November 1992). "Blade to Snipes' Heat". The Los Angeles Times இம் மூலத்தில் இருந்து March 6, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306115703/http://articles.latimes.com/1992-11-06/entertainment/ca-1124_1_wesley-snipes. 
 4. Lichtenfeld, Eric (2007). Action Speaks Louder: Violence, Spectacle, and the American Action. Wesleyan University Press. p. 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8195-6801-4.
 5. "An unsung hero: How Blade helped save the comic-book movie". Blastr.com. March 12, 2014. Archived from the original on June 13, 2017. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
 6. "5 Lessons Blade Taught Studios About Superhero Movies (They Have Clearly Forgotten)". Whatculture.com. January 14, 2014. Archived from the original on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேடு&oldid=3301372" இலிருந்து மீள்விக்கப்பட்டது