தி சூசைட் ஸ்க்வாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி சூசைட்டு இசுக்வாட்டு
இயக்கம்ஜேம்ஸ் கன்
தயாரிப்பு
கதைஜேம்ஸ் கன்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும்
கதாபாத்திரங்கள்
இசைஜான் மர்பி
நடிப்பு
ஒளிப்பதிவுஹென்றி பிரஹாம்
படத்தொகுப்பு
  • பிரெட் ரஸ்கின்
  • கிறிஸ்டியன் வாக்னர்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 30, 2021 (2021-07-30)(ஐக்கிய இராச்சியம்)
ஆகத்து 5, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$185 மில்லியன்
மொத்த வருவாய்$167.4 மில்லியன்

தி சூசைட்டு இசுக்வாட்டு[1] (ஆங்கில மொழி: The Suicide Squad) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன்-சூப்பர்வில்லன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி சப்ரான் கம்பெனி ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான சூசைட்டு இசுக்வாட்டு படத்தின் தொடர்ச்சியாகவும்,[2] டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பத்தாவது திரைப்படமும் ஆகும். ஜேம்ஸ் கன்[3][4] என்பவரால் எழுதி இயக்கிய இந்த படத்தில் மார்கோட் ரொப்பி, இட்ரிசு எல்பா, ஜான் சீனா, ஜோயல் கின்னமன், சில்வெஸ்டர் ஸ்டாலோன், வியோல டேவிஸ், ஜெய் கோர்ட்னி மற்றும் பீட்டர் கபால்டி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் ஒரு நாஜி கால ஆய்வகத்தை அழிக்கவும், மாபெரும் வேற்று கிரகவாசியான ஸ்டாரோவை எதிர்கொள்ளவும் சூசைட் ஸ்க்வாட் என்ற தற்கொலை குழுவை அனுப்பப்படுகிறது, அவர்கள் எப்படி எதிரிகளை வென்றார்கள் என்பதுதான் கதை.[5]

இயக்குனர் டேவிட் ஆயர்[6] மார்ச் 2016 க்குள் சூசைட் ஸ்க்வாட் என்ற படத்தின் தொடர்ச்சியை இயக்குவார் என கருதப்பட்டது,[7] ஆனால் டிசம்பரில் அவர் அதற்கு பதிலாக 'கோதம் சிட்டி சைரன்ஸ்' என்ற திரைப்படத்தை உருவாக்கத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் இப்படத்தை இவரால் இயக்க முடியவில்லை. செப்டம்பர் 2017 இல் கவின் ஓ'கானரை[8] பணியமர்த்துவதற்கு முன்பு பல மாற்று இயக்குநர்களை வார்னர் புரோஸ். நிறுவனம் பரிசீலனை செய்தது, ஆனால் அக்டோபர் 2018 க்குள் அவரும் வெளியேறினார். டிஸ்னி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருந்த 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 3' என்ற திரைப்பட இயக்குனரான ஜேம்ஸ் கன் என்பவர் தற்காலிகமாக இந்த தயாரிப்பு நிருவனத்திடமிருந்து நீக்கப்பட்ட பின்னர் இப்படத்தை எழுதவும் இயக்கவும் பணியமர்த்தப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019 செப்டம்பரில் ஜார்ஜியாவின் அட்லான்டாவில் தொடங்கி 2020 பிப்ரவரியில் பனாமாவில் நிறைவடைந்தது.

தி சூசைட்டு இசுக்வாட்டு படம் 2021 ஜூலை 30 ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவிலும், மறுநாள் 'ஹபிஓ மாஸ்' என்ற ஓடிடி தளத்திலும் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gemmill, Allie (February 3, 2021). "'The Suicide Squad' Official Synopsis Teases a New Crew & Another Bonkers Mission". Collider. Archived from the original on February 3, 2021. பார்க்கப்பட்ட நாள் February 7, 2021.
  2. Clarke, Cass (January 25, 2021). "The Suicide Squad Isn't a Sequel - But It's Not Quite a Reboot". Comic Book Resources. Archived from the original on January 26, 2021. பார்க்கப்பட்ட நாள் February 7, 2021.
  3. Vary, Adam B. (August 22, 2020). "'The Suicide Squad' First Look, Full Cast Revealed by Director James Gunn at DC FanDome". Variety. Archived from the original on August 22, 2020. பார்க்கப்பட்ட நாள் August 22, 2020.
  4. Beasley, Tom (August 22, 2020). "James Gunn unveils 'The Suicide Squad' character list". Yahoo! Movies UK. Archived from the original on August 22, 2020. பார்க்கப்பட்ட நாள் August 24, 2020.
  5. Hickson, Colin (October 29, 2020). "James Gunn's The Suicide Squad Involves Nazi Prisons and Experiments". Comic Book Resources. Archived from the original on November 1, 2020. பார்க்கப்பட்ட நாள் December 4, 2020.
  6. Bell, Crystal (April 14, 2016). "Suicide Squad Director David Ayer Wants to Make an R-Rated Sequel Happen". MTV. Archived from the original on July 23, 2016. பார்க்கப்பட்ட நாள் July 12, 2017.
  7. Kroll, Justin (March 2, 2016). "Will Smith, David Ayer Reteaming on Max Landis Spec 'Bright'". Variety. Archived from the original on September 29, 2016. பார்க்கப்பட்ட நாள் March 5, 2016.
  8. Fleming, Mike Jr. (September 6, 2017). "Gavin O'Connor To Direct 'Suicide Squad 2'". Deadline Hollywood. Archived from the original on September 10, 2017. பார்க்கப்பட்ட நாள் September 7, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_சூசைட்_ஸ்க்வாட்&oldid=3606300" இலிருந்து மீள்விக்கப்பட்டது