ஜெசிகா ஜோன்சு (தொலைக்காட்சித் தொடர்)
ஜெசிகா ஜோன்சு | |
---|---|
வகை |
|
உருவாக்கம் | மெலிசா ரோசன்பெர்க் |
நடிப்பு |
|
பின்னணி இசை | சீன் காலரி |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 39 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | டிம் ஐகோபனோ |
படப்பிடிப்பு தளங்கள் | நியூயார்க் நகரம் |
ஓட்டம் | 44–56 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பான காலம் | நவம்பர் 20, 2015 சூன் 14, 2019 | –
Chronology | |
முன்னர் | டேர்டெவில் |
பின்னர் | லூக் கேஜ் |
தொடர்புடைய தொடர்கள் | மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள் |
ஜெசிகா ஜோன்சு (ஆங்கில மொழி: Jessica Jones) என்பது நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக 'மெலிசா ரோசன்பெர்க்'[1] என்பவர் உருவாக்கிய, அமெரிக்க நாட்டு துப்பறிவு குற்றப்புனைவு உளவியல் திரில்லர் கதைக்கள பின்னணியை கொண்ட மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2] இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏபிசி ஸ்டுடியோஸ், டால் கேர்ள்சு புரொடக்சன்சு மற்றும் மார்வெல் தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.[3]
இந்த தொடரில் நடிகை கிறிஸ்டன் ரிட்டர்[4][5] என்பவர் துப்பறிவு நிபுனராகவும், முன்னாள் மீநாயகனாகவும் ஜெசிகா ஜோன்சு என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மைக் கோல்டர், ரேச்சல் டெய்லர், வில் டிராவல், எரின் மோரியார்டி, ஏகா டார்வில்லே, கேரி-ஆன் மோஸ், டேவிட் டென்னன்ட், ஜே. ஆர். ரமிரெஸ், டெர்ரி சென், லியா கிப்சன், ஜேனட் மெக்டீர், பெஞ்சமின் வாக்கர், சரிதா சௌத்ரி, ஜெர்மி பாப் மற்றும் டிஃப்பனி மேக் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இந்தத் தொடரின் ஒரு பதிப்பு முதலில் 2010 இல் ஏபிசி என்ற தொலைக்காட்சிக்காக ரோசன்பெர்க்கால் என்பவரால் உருவாக்கப்பட்டது,[6][7] ஆனால் அதன் ஒளிபரப்பு இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, 2013 இன் பிற்பகுதியில் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்க்காக சில பல மறு பதிப்புகள் செய்து ரோசன்பெர்க் என்பவரால் மீண்டும் தொடர் உருவாக்கப்பட்டது. பின்னர் ஜெசிகா ஜோன்சு என்ற கதாபாத்திரத்திற்க்காக நடிகை கிறிஸ்டன் ரிட்டர் என்பவர் டிசம்பர் 2014 இல் நடித்தார். இந்த தொடர் நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்டது.[8]
இந்த தொடரின் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் நவம்பர் 20, 2015 அன்று வெளியாகி, விமர்சகர்கள் இடையே ரிட்டர் மற்றும் டெனன்ட்டின் நடிப்பு மற்றும் தொடரின் நாய்ர் டோன், பாலுறவுக்கான அணுகுமுறை மற்றும் கற்பழிப்பு, தாக்குதல் போன்ற சித்தரிப்புகள் போன்றவற்றிக்கு பாராட்டைப் பெற்றனர். சனவரி 2016 இல் நெற்ஃபிளிக்சு இந்த தொடரின் இரண்டாவது சீபருவத்திற்காக ஜெசிகா ஜோன்சுவின் கதாபாத்திரத்தை மேலும் புதுப்பித்தது, படப்பிடிப்பு ஏப்ரல் 2017 இல் தொடங்கி செப்டம்பர் 2017 இல் முடிவடைந்தது. இரண்டாவது வருவம் மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது, மேலும் மூன்றாவது பருவம் ஏப்ரல் 12, 2018 அன்று தயாரிக்கப்பட்டு, ஜூன் 14, 2019 அன்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி 18, 2019 அன்று நெற்ஃபிளிக்சு தொடரை ரத்து செய்து, மூன்றாவது பருவம் கடைசி பருவமானது.
கதை
[தொகு]- பருவம் 1
- ஜெசிகா ஜோன்சு ஒரு மீநாயகன் பெண் ஆவார், வில்லன் கில்கிரேவ் ஒருவரைக் கொல்லும் வரை ஒரு சிறிய மீநாயகன் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஒரு தனியார் புலனாய்வாளராக மாறி, கொலையாளி கில்கிரேவை தடுத்து நிறுத்த போராடுகிறார்.
- பருவம் 2
- இரண்டாவது பருவத்தில், கார்ல் மாலஸ் செய்த சோதனைகள் காரணமாக, ஜெசிகா ஜோன்சு தனது தாயார் இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
- பருவம் 3
- மூன்றாவது பருவத்தில், ஜெசிகா ஜோன்சு என்பவர் கிரிகோரி சாலிங்கர் என்ற எதிரியை எதிர்கொள்கிறார், அவர் ஒரு மோசடியாளர் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறார்.
தொடரின் பருவங்கள்
[தொகு]பருவங்கள் | ஒளிபரப்பு | அத்தியாயங்கள் | |
---|---|---|---|
1 | 20 நவம்பர் 2015 | 13 | |
2 | 8 மார்ச் 2018 | 13 | |
3 | 14 ஜூன் 2019 | 13 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Philbrick, Jami (November 9, 2011). "Exclusive: Screenwriter Melissa Rosenberg Talks 'AKA Jessica Jones'". IAmRogue. Archived from the original on November 12, 2011. பார்க்கப்பட்ட நாள் December 5, 2014.
- ↑ Daniels, Hunter (July 23, 2011). "Comic-Con: Marvel TV Announces Development Slate; Includes Live-Action AKA JESSICA JONES (ALIAS), THE HULK, CLOAK AND DAGGER, MOCKINGBIRD, Animated HULK AND THE AGENTS OF S.M.A.S.H, More". Collider. Archived from the original on August 22, 2015. பார்க்கப்பட்ட நாள் August 22, 2015.
- ↑ Schneider, Micheak (December 17, 2010). "Screenwriter Sets Marvel Adaptation for TV". Variety. Archived from the original on February 6, 2014. பார்க்கப்பட்ட நாள் December 17, 2010.
- ↑ Andreeva, Nellie (December 4, 2014). "Krysten Ritter Nabs Lead In Marvel's 'Jessica Jones'". Deadline Hollywood. Archived from the original on December 7, 2014. பார்க்கப்பட்ட நாள் November 20, 2014.
- ↑ Andreeva, Nellie (November 19, 2014). "Marvel's 'Jessica Jones': Krysten Ritter, Alexandra Daddario, Teresa Palmer, Marin Ireland, Jessica De Gouw Testing For Lead". Deadline Hollywood. Archived from the original on November 20, 2014. பார்க்கப்பட்ட நாள் November 20, 2014.
- ↑ Ellwood, Gregory (November 16, 2011). "Melissa Rosenberg says 'Jessica Jones' series absolutely taking place in larger Marvel Universe". Hitfix. Archived from the original on February 6, 2014. பார்க்கப்பட்ட நாள் January 6, 2012.
- ↑ Radish, Christina (November 15, 2012). "Screenwriter Melissa Rosenberg Talks The Twilight Saga: Breaking Dawn – Part 2, ABC's Red Widow, the Status of AKA Jessica Jones, and More". Collider. Archived from the original on February 6, 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2014.
- ↑ "Marvel's Netflix Series to Film in New York City". Marvel Comics. February 26, 2014. Archived from the original on February 26, 2014. பார்க்கப்பட்ட நாள் February 26, 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- நெற்ஃபிளிக்சு அசல் நிகழ்ச்சிகள்
- அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்
- ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்
- 2015 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள்
- குற்ற தொலைக்காட்சித் தொடர்கள்
- பரபரப்பூட்டும் தொலைக்காட்சி தொடர்கள்
- நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- மார்வெல் வரைகதை அடிப்படையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- மீநாயகன் தொலைக்காட்சி தொடர்கள்