குறுந்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுந்தொடர் (miniseries) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வகை ஆகும். இது ஒரு கதையை முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாயங்களை கொண்ட தொடர். "சீரியல்" என்ற சொல் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற நாடுகளின் பொதுநலவாயமாக பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் அதன் பொருள் அதன் பயன்பாட்டில் "குறுந்தொடர்களுக்கு" சமமாக இருக்காது. தென் கொரியா, ஐக்கிய இராச்சியம், வட அமெரிக்கா,[1] ஜப்பான்,[2] பிரேசில், தாய்லாந்து போன்ற பல நாடுகளில் குறுந்தொடர்கள் ஒளிபரப்பாகிறது.

தென் கொரியா[தொகு]

தென் கொரியாவில் 1960 களில் குறுந்தொடர் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பத் தொடங்கியது. அப்போதிருந்து நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமடைந்தன, தற்பொழுது பல மொழிகள் வசனவரிகளுடன் இணையங்களில் வழங்கி வருகின்றது.

கொரிய நாடகங்கள் வழக்கமாக ஒரு இயக்குனரின் தலைமையில் கீழ் ஒரு திரைக்கதை எழுத்தாளரால் எழுதப்படுகின்றன, இதனால் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களைப் போலல்லாமல் ஒரு தனித்துவமான இயக்க பாணியையும் மொழியையும் கொண்டிருக்கின்றனது. கொரியன் தொடர்களில் பெரும்பாலும் பல இயக்குநர்களும் எழுத்தாளர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.[3] தர்காலத்தில் அமைக்கப்பட்ட தொடர்கள் வழக்கமாக ஒரு பருவத்திற்கு இயங்கும், 12−24 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் 60 நிமிடங் களில் ஒளிபரப்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுந்தொடர்&oldid=3326467" இருந்து மீள்விக்கப்பட்டது