ரையன் கூக்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரையன் கூக்லர்
Ryan Coogler by Gage Skidmore.jpg
பிறப்புரையன் கயில் கூக்லர்
மே 23, 1986 (1986-05-23) (அகவை 35)
ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜின்ஸி எவன்ஸ் (தி. 2016)

ரையன் கயில் கூக்லர் (ஆங்கில மொழி: Ryan Kyle Coogler) (பிறப்பு: மே 23, 1986)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது முதல் திரைப்படமான 'புரூட்வேல் ஸ்டேஷன்' (2013) என்ற படம் 2013 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் யு.எஸ். நாடக போட்டியில் சிறந்த பார்வையாளர்களையும் சிறந்த ஜூரி விருதையும் வென்றது.[2] அதை தொடர்ந்து கிரீட் (2015), மற்றும் மார்வெல் திரைப்படமான பிளாக் பான்தர் (2018) ஆகியவற்றுடன் இணைந்து எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.[3] இவர் இயக்க திரைப்படங்கள் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

கூக்லரின் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க விமர்சன பாராட்டுகளையும் வணிகரீதியான வெற்றிகளையும் பெற்றுள்ளன.[4] 2013 ஆம் ஆண்டு டைம் என்ற இதழ் வெளியிட்ட பட்டியலில் உலகத்தை மாற்றியமைக்கும் 30 வயதிற்குட்பட்ட 30 நபர்கள் என்ற பட்டியலில் இவரும் சேர்க்கப்பட்டார்.[5] இவர் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கவனிக்கப்படாத கலாச்சாரங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டே திரைப்படங்கள் தயாரிக்கிறார். இதனால் விமர்சகர்களால் இவரது படைப்புகள் பாராட்டப்படுகின்றது.[6][7]

கூக்லர் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நபரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மேலும் அவர் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் டைம் 100 பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரையன்_கூக்லர்&oldid=3121837" இருந்து மீள்விக்கப்பட்டது