சட்விக் போஸ்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சட்விக் போஸ்மேன்
Chadwick Boseman by Gage Skidmore July 2017 (cropped).jpg
பிறப்புசட்விக் ஆரோன் போஸ்மேன்
நவம்பர் 29, 1976/1977 (age 42–43)[1][2]
ஆண்டர்சன், தென் கரோலினா
அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹோவர்ட் பல்கலைக்கழகம்
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–இன்றுவரை

சட்விக் போஸ்மேன் (Chadwick Boseman, பிறப்பு: நவம்பர் 29) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்ககளில் நடித்து இருந்தாலும், 2013ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் ஜாக்கி ராபின்சனின் வாழ்கை வரலாற்று திரைப்படமான 42 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஜேம்ஸ் ப்ரௌன் என்ற பாடகரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான Get on Up (எழுந்திரு) என்ற திரைப்படத்திலும், 2017ஆம் ஆண்டு தர்குட் மார்ஷல் என்ற ஒரு அமெரிக்க நாட்டு நீதிபதியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மார்ஷல் போன்ற வரலாற்று திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் தனது திறமையை உலகிற்கு வெளிக்காட்டினார்.

இவர் 2016ஆம் ஆண்டு முதல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ப்ளாக் பேந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ப்ளாக் பேந்தர் (கறுப்பு சிறுத்தை) என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "5 Things to Know About Chadwick Boseman". ABC News (October 29, 2014). பார்த்த நாள் January 11, 2018.
  2. Sources differ: Those giving 1976, include Biography.com "Chadwick Boseman Biography: Screenwriter, Actor, Director (1977–)". A&E Networks. மூல முகவரியிலிருந்து April 2, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 9, 2016. and those giving 1977, include ABC News and The Hollywood Reporter"Ocsar Contender and New Marvel Superhero Chadwick Boseman on his Journey to Stardom". The Hollywood Reporter (October 29, 2014). பார்த்த நாள் January 12, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்விக்_போஸ்மேன்&oldid=2905459" இருந்து மீள்விக்கப்பட்டது