ஜேம்ஸ் ப்ரௌன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் ப்ரௌன்
James Brown 2001.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜேம்ஸ் ஜோசஃப் ப்ரௌன் ஜூனியர்[1]
பிறப்புமே 3, 1933(1933-05-03)
பார்ன்வெல், தென் கரொலைனா,  ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்அகஸ்தா, ஜோர்ஜியா
இறப்புதிசம்பர் 25, 2006(2006-12-25) (அகவை 73)
அட்லான்டா, ஜோர்ஜியா[2][3]
இசை வடிவங்கள்ஆர்&பி, சோல், ஃபங்க், ராக்
தொழில்(கள்)பாடகர், பாடல் எழுத்தாளர், bandleader, இசை தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)பாடல், கிட்டார், harmonica, bass, keyboards, drums, percussion instruments
இசைத்துறையில்1956 – 2006
வெளியீட்டு நிறுவனங்கள்ஃபெடெரல், கிங், ட்ரை மி, ஸ்மாஷ், பீப்பிள், பாலிடோர், ஸ்காட்டி ப்ரொஸ்.
இணைந்த செயற்பாடுகள்த ஃபேமஸ் ஃப்லேம்ஸ், த ஜே.பி.'ஸ், த சோல் ஜெனெரல்ஸ்

ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown, மே 3, 1933 - டிசம்பர் 25, 2006) பலராலும் சோல் இசையில் தந்தை (The Godfather of Soul) என்றழைக்கப்பட்டார். கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர்.

பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். Gospel இசையெனப்படும் தேவாலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாகவிருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இதுபோக, ராக் (rock), ஜாஸ் (Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), இலத்திரனிசை (electronic music), ரெகே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது சுவட்டைப் பார்க்கமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jbbirthname என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jbMemSvc2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. James Brown, the "Godfather of Soul," dies at 73. (2006, December 25). CNN Entertainment News. Retrieved January 5 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ப்ரௌன்&oldid=2233520" இருந்து மீள்விக்கப்பட்டது