ஜாக்கி ராபின்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்கி ராபின்சன்
பிறப்பு31 சனவரி 1919
Cairo
இறப்பு24 அக்டோபர் 1972 (அகவை 53)
ஸ்டம்போர்ட
படித்த இடங்கள்
பணிBaseball player, அலுவலர்
வாழ்க்கைத்
துணை(கள்)
Rachel Robinson
குடும்பம்Mack Robinson
விருதுகள்Major League Baseball Most Valuable Player Award, Major League Baseball Rookie of the Year Award
இணையத்தளம்http://www.jackierobinson.com/

ஜாக் ரோஸ்வெல்ட் "ஜாக்கி" ராபின்சன் (ஆங்கிலம்: Jack Roosevelt "Jackie" Robinson, பிறப்பு ஜனவரி 31, 1919, கெய்ரோ, ஜோர்ஜியா; இறப்பு அக்டோபர் 24, 1972, ஸ்டாம்ஃபொர்ட், கனெடிகட்) முன்னாள் அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் ஆவார். 1947ல் அமெரிக்காவின் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுச் சங்கத்தை சேர்ந்து இச்சங்க வரலாற்றில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்க வீரர் ஆனார். இதுக்கு முன் மேஜர் லீக் பேஸ்பால் சங்கம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை விளையாடவிடவில்லை. அமெரிக்க சமூக உரிமை இயக்கத்தில் ஒரு முக்கிய நபர் ஆவார்.[1][2][3]

கெய்ரோ, ஜோர்ஜியாவில் பிறந்த ஜாக்கி ராபின்சன் குழந்தையாக இருக்கும்பொழுது ரிவர்சைட், கலிபோர்னியாவுக்கு போய் இங்கே வளந்தார். யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தை சேர்ந்து நாலு விளையாட்டுக்கள் -- பேஸ்பால், காற்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மற்றும் ஓட்டம்—விளையாடினார். 1947ல் லாஸ் ஏஞ்சலஸ் டாட்ஜர்ஸ் பேஸ்பால் அணியை சேர்ந்து மேஜர் லீக் பேஸ்பால் சங்கத்தின் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்க ஆட்டக்காரர் ஆனார். மேஜர் லீக் பேஸ்பாலில் 9 வருடங்கள் விளையாடினார். 1962ல் பேஸ்பால் புகழவை இவரை உருப்பினராக படைத்தது.

பேஸ்பாலுக்கு பிரகு இவர் 1967 வரை என்.ஏ.ஏ.சி.பி.யின் சபையில் இருந்தார். முதுமையில் நீரிழிவு நோய் வந்து 1972ல் இறந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jackie Robinson
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்கி_ராபின்சன்&oldid=3718609" இருந்து மீள்விக்கப்பட்டது