லெட்டிடியா ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெட்டிடியா ரைட்
Letitia Wright by Gage Skidmore.jpg
பிறப்புலெடிடியா மைக்கேல் ரைட்
31 அக்டோபர் 1993 (1993-10-31) (அகவை 27)
ஜோர்ஜ்டவுண், கயானா
தேசியம்
  • பிரித்தானியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

லெட்டிடியா ரைட் (Letitia Wright, பிறப்பு: 31 அக்டோபர் 1993) என்பவர் கயானா-பிரித்தானியா நாட்டு நடிகை ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் பிளாக் பான்தர் (2018),[1] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) போன்ற திரைப்படங்களிலும், டாப் பாய், கம்மிங் ஆப் போன்ற பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பான்தர் (2018),[2] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018),[3]அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் 'பிரித்தானிய ரைசிங் ஸ்டார்' என்ற விருதைப் பெற்றுள்ளார்.[4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

லெடிடியா மைக்கேல் ரைட் 31 அக்டோபர் 1993 அன்று கயானாவின் ஜார்ஜ்டவுனில் பிறந்தார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது, அவர் அங்கு பள்ளியில் படித்தார்.[5] டோட்டன்ஹாம் நகரில் வளர்ந்த இவர் நார்தம்பர்லேண்ட் பார்க் சமூகப் பள்ளியில் பயின்றார். அப்போது அவர் "நான் எப்போதும் வடக்கு லண்டன் பெண்ணாக இருப்பேன்" என்று கூறியுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெட்டிடியா_ரைட்&oldid=3200200" இருந்து மீள்விக்கப்பட்டது