வில் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Will Smith
வில் ஸ்மித்
Will Smith 2011, 2.jpg
2011 இல் வில் ஸ்மித்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர்
பிற பெயர்கள் ஃப்ரெஷ் பிரின்ஸ்
பிறப்பிடம் மேற்கு ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள் கிழக்கு கடற்கரை ராப் இசை, பாப் ராப்
தொழில்(கள்) நடிகர், ராப்பர், திரைப்பட தயாரிப்பாளர், இசை தயாரிப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர்
இசைத்துறையில் 1986–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள் ஜைவ் ரெக்கர்ட்ஸ், கொலம்பியா ரெக்கர்ட்ஸ், இண்டர்ஸ்கோப் ரெக்கர்ட்ஸ்
இணைந்த செயற்பாடுகள் டிஜே ஜாசி ஜெஃப்
இணையத்தளம் www.willsmith.com

வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் -- Willard Christopher Smith Jr., செப்டம்பர் 25, 1968) புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார்.

1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப்புகளை படைக்கத் தொடங்கினார். திரைப்படங்களிலும் 1995 முதல் நடிக்க தொடங்கினார். 1995ல் வெளிவந்த பாட் பாய்ஸ், 1996ல் வெளிவந்த இன்டிபென்டென்ஸ் டே ஆகிய திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் உலகில் புகழுக்கு வந்தார்.

இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், மற்றும் ஹான்காக் ஆகும்.

ஆல்பம்கள்[தொகு]

டிஜே ஜாசி ஜெஃப் உடன்[தொகு]

தனியாக[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்_சிமித்&oldid=1563393" இருந்து மீள்விக்கப்பட்டது