உள்ளடக்கத்துக்குச் செல்

லியோனார்டோ டிகாப்ரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோனார்டோ டிகாப்ரியோ

இயற் பெயர் லியோனார்டோ வில்லியம் டிகாப்ரியோ
பிறப்பு நவம்பர் 11, 1974 (1974-11-11) (அகவை 50)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
இணையத்தளம் www.leonardodicaprio.com

லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo Wilhelm DiCaprio, பிறப்பு: நவம்பர் 11, 1974) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.[1][2][3]

பிறப்பும் ,இளமை பருவமும்

[தொகு]

லியோனார்டோ வில்ஹெல்ம் டிகாப்ரியோ நவம்பர் 11, 1974 அன்று லாஸ் ஏஞ்சலீசு, கலிபோர்னியாவில் பிறந்தார், தாயார் இர்மெலின் டிகாப்ரியோ செருமானிய உருசியக் கலப்பில் பிறந்தவர் .தந்தை சித்திரக்கதைக் கலைஞரான ஜார்ஜ் டிகாப்ரியோ. இத்தாலிய-செருமானியக் கலப்பில் பிறந்தவர். இவர்களின் ஒரே குழந்தை லியோனார்தோ. இவருடைய பெயரின் நடுப்பகுதி வில்ஹெல்ம், தாய் வழியில் வந்த பாட்டனாரின் குடும்ப பெயர். டிகாப்ரியோ "லெனி வில்லியம்ஸ்" என்ற பெயரில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலும் தோன்றினார்.

டிகாப்ரியோ ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்தும், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களிலும் நடித்து வந்துள்ளார். ரோமியோ ஜூலியட் (1996) திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார். டைட்டானிக் (1997) மூலம் உலகப் புகழ் பெற்றார். அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்தை உறுதிப்படுத்தின.

சொந்த வாழ்கை

[தொகு]

டிகாப்ரியோவின் காதல் உறவுகள் பரவலாக ஊடகங்களில் பரவி வருகின்றன. 90 களின் பிற்பகுதியில் நடிகை பிஜோ ஃபிலிப்ஸ், மாடல் அழகி கிறிஸ்டன் சாங்க் மற்றும் பிரித்தானிய அழகி சமூக எம்ம மில்லர் மூவரையும் காதலித்தார். 2000 ஆம் ஆண்டில் அவர் பிரேசில் அழகி கீசெல் பஞ்சன் மீது தீராத காதல் கொண்டார். இந்த காதல் 2005 வரை சுவைத்தது. 2005 முதல் 2011 வரை இசுரேலிய அழகி பார் ரெஃப்பீலிடன் காதல் கொண்டிருந்தார், ரெஃப்தீலியின் சொந்த ஊரான ஹாட் ஹேர்ரோனுக்கு சென்றார்.

சொத்துகள்

[தொகு]

டிஸ்கபிரியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு இல்லத்தையும், நியூயார்க்கிலுள்ள பேட்டரி பார்க் சிட்டி யில் ஒரு வீட்டையும் வாங்கினார். 2009 ஆம் ஆண்டில், பெலீசில் இருந்து ஒரு தீவை வாங்கினார், அதில் அவர் ஒரு சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலா மையத்தை உருவாக்க திட்டமிட்டார். 2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியா, பாம் ஸ்பிரிங்ஸில் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞர் டோனால்ட் வேக்ஸ்லெரால் வடிவமைக்கப்பட்ட அசல் டினா ஷோ குடியிருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார்

எதிர்பாராத விபத்து

[தொகு]

2005 ஆம் ஆண்டில், காப்ரியோவின் முகம் கடுமையாக காயமுற்றது, ​​மாடல் ஆர்த்தா வில்சன் அவரை உடைந்த சீசாவினால் தாக்கினார். இதனால் காதுப்பகுதியில் பதினேழு தையல் போடப்பட்டது. மாடல் ஆர்த்தா வில்சன் 2010 ல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல்

[தொகு]

அரசியலில் 2004 அதிபர் தேர்தலில் ஜான் கேரிக்கு ஆதரவு அளித்தார், 2008 மற்றும் 2012 தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாய் பிரசாரம் மேற்கொண்டார்.

பிற சிறப்புகள்

[தொகு]
  • people பத்திரிகை இவரை அழகிய ஐம்பது பேர் வரிசையில் இவரையும் சேர்த்துக்கொண்டது .
  • தவிர்க்க முடியாத சினிமா உலக பிரபலங்களில் நூறு பேரை தேர்வு செய்த எம்பயர் பத்திரிக்கை இவரை 75 வது நபராக்கியது
  • மார்ட்டின் ஸ்கோர்ஸிஸே இவருடைய அபிமான இயக்குனர்
  • டைட்டானிக்கில் உயிர் பிழைத்த, உயிரோடு இருந்த கடைசி நபர் மேல்வினா டீன் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாது அவதிப்பட்டார். அவருக்கு வின்ஸ்லெட்டும் , டி காப்ரியோவும் மருத்துவ செலவுக்கு உதவினர்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  • கிரின்டர்ஸ் 3 (1991)
  • பொய்ச்சொன் (1992)
  • திஸ் பாய்ஸ் லைப் (1993)
  • வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் க்ராப் (1993)
  • தி ஃஉஇக்க் அண்ட் தி தேஅது (1995)
  • தி பாஸ்கெட்பால் டைரிஸ் (1995)
  • டோடல் ஏசிலிப்ஸ் (1995)
  • ரோமியோ + ஜூலியட் (1996)
  • மார்வின்'ஸ் ரூம் (1996)
  • டைட்டானிக் (1997)
  • தி மாண் இன் தி ஐயன் மாஸ்க் (1998)
  • செலிபிரிட்டி (1998)
  • தி பீச் (2000)
  • டான்'ஸ் பிளம் (2001)
  • கேட்ச் மீ ஐபி யு கேன் (2002)
  • கங்ஸ் ஓபி நியூ யார்க் (2002)
  • த ஏவியேட்டர் (2004)
  • த டிபார்ட்டட் (2006)
  • பிளட் டைமோண்ட் (2006)
  • தி 11து ஹௌர் (2007)
  • போதிய ஒப்பி லைஸ் (2008)
  • ரெவொலுஷனரி ரோடு (2008)
  • ஷட்டர் ஐஸ்லாந்து (2010)
  • ஹப்ப்ளே (2010)
  • இன்செப்சன் (2010)
  • ஜே. எட்கர் (2011)
  • டஜங்கோ உஞ்சைனேட் (2012)
  • தி கிரேட் கேட்ஸ்பை (2013)
  • தி ஒளிப்பி ஓபி வோல் ஸ்ட்ரீட் (2013)
  • தி ஆடிஷன் (2015)
  • தி ரேவேனன்ட் (2015)
  • பெபிபூர் தி பில்கூட (2016)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Happy Birthday, Leonardo DiCaprio: Must-watch Movies of the Oscar-winning Actor". News18. November 11, 2021. Archived from the original on August 2, 2023. பார்க்கப்பட்ட நாள் August 2, 2023.
  2. Letran, Vivan (August 19, 2000). "DiCaprio Boosts Artist's Show". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து October 13, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151013173738/http://articles.latimes.com/2000/aug/19/entertainment/ca-6884. 
  3. Michalski, Jennifer (October 24, 2013). "14 Celebrities Who Speak Multiple Languages" இம் மூலத்தில் இருந்து January 10, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220110202647/https://www.businessinsider.com/celebrities-who-speak-more-than-one-language-2013-10#german-is-leonardo-dicaprios-second-language-8. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனார்டோ_டிகாப்ரியோ&oldid=4102700" இலிருந்து மீள்விக்கப்பட்டது