வில்லியம் கேர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் கேர்ட்
பிறப்புவில்லியம் மெக்கார்ட் கேர்ட்
மார்ச்சு 20, 1950 (1950-03-20) (அகவை 74)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1977–இன்று வரை
உயரம்1.88 m (6 அடி 2 அங்)[1]
துணைவர்சாண்ட்ரா ஜென்னிங்ஸ்
(1981–1984)
மார்லி மாட்லின்
(1985–1986)
சாண்ட்ரின் பொன்னயர்
(1992–1997)
வாழ்க்கைத்
துணை
மேரி பெத் கேர்ட்
(தி. 1971; ம.மு. 1982)

கேய்டி கேன்டர்சன்
(தி. 1989; ம.மு. 1992)
பிள்ளைகள்4

வில்லியம் மெக்கார்ட் கேர்ட்[2][3] (ஆங்கில மொழி: William McChord Hurt) (பிறப்பு: பிறப்பு: மார்ச்சு 20, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் திரைப்படத் துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு கென் ரஸ்ஸலல் இயக்கிய அறிவியல் புனைக்கதை அம்சமான 'ஆல்டர்டு இஸ்டேட்ஸ்' என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக 1980 ஆம் ஆண்டின் புதிய நட்சத்திரத்திற்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு 'பொடி கீட்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கோர்கி பார்க் (1983), கிஸ் ஆப் த இஸ்பைடர் வுமன் (1985), சில்றேன் ஆப் அ லெஸ்ஸர் கோட் (1986), புரொடகாஸ்ட் நியூஸ் (1987) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஹல்க் 2 (2008)[4] மற்றும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[5] போன்ற மீநாயகன் திரைபபடத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "William Hurt".
  2. Obituary பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம் "Survivors include two sons from his first marriage, the actor William McChord Hurt and James Harlan Hurt, both of New York; and five grandchildren"
  3. "FindACase™ - SANDRA JENNINGS v. WILLIAM MCCHORD HURT (02/14/91)". Archived from the original on 2018-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
  4. "William Hurt Joins Incredible Hulk Cast as General Thunderbolt Ross". Marvel.com. June 14, 2007. பார்க்கப்பட்ட நாள் May 7, 2015.
  5. "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. June 14, 2007. பார்க்கப்பட்ட நாள் May 7, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கேர்ட்&oldid=3604416" இலிருந்து மீள்விக்கப்பட்டது