லாரன்ஸ் ஆலிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரன்ஸ் ஆலிவர்
Laurence Olivier - portrait.JPG
பிறப்பு22 மே 1907
Dorking
இறப்பு11 சூலை 1989 (அகவை 82)
Ashurst
படித்த இடங்கள்
  • Central School of Speech and Drama
பணிதிரைப்பட நடிகர், நாடக இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், குணச்சித்திர நடிகர், நடிகர், இயக்குனர், dramaturge
பாணிஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள்
வாழ்க்கைத்
துணை(கள்)
Jill Esmond, விவியன் லீ, Joan Plowright
குழந்தைகள்Tamsin Olivier, Simon Tarquin Olivier, Richard Olivier, Julie-Kate Olivier
விருதுகள்Academy Honorary Award, கோல்டன் குளோப் விருது, Feltrinelli Prize, Sonning Prize, மோசமான துணை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது, மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது, Knight Bachelor, Primetime Emmy Award for Outstanding Lead Actor in a Miniseries or a Movie, Primetime Emmy Award for Outstanding Lead Actor in a Miniseries or a Movie, Order of Merit, Officer of the Legion of Honour, அகாதமி விருது, British Academy of Film and Television Arts, Primetime Emmy Award for Outstanding Supporting Actor in a Miniseries or a Movie, star on Hollywood Walk of Fame
இணையத்தளம்http://www.laurenceolivier.com/
head and shoulder shot of man in late middle age, slightly balding, with pencil moustache
1972 இல் ஆலிவர்

லாரன்சு கெர் ஆலிவர், பரோன் ஆலிவர் (Laurence Kerr Olivier, Baron Olivier 22 மே 1907 - 11 ஜூலை 1989) [1]ஒர் ஆங்கில நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் பிரித்தானியா திரைப்பட உலகில் இருபதாம் நூற்றாண்டில்  ஆதிக்கம் செலுத்திய ரால்ப் ரிச்சர்ட்சன், பெக்கி ஆசுகிராஃப்ட் மற்றும் ஜான் கெயில்குட் ஆகியோருடன்  இணைந்து அறியப்படுகிறார். 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகிய இரண்டிலும் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

இவரது குடும்பத்திற்கும் ஊடகத்திற்கும் தொடர்பு இல்லாத போதிலும் தனது மகன் நடிகராக வேண்டும் என இவரது தந்தை விரும்பினார். இவரது தந்தை மதகுரு ஆவார். 1920 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள ஒரு நாடகப் பள்ளியில் பயின்றார். பின்னர் நடிப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபட்டார் .1930 ஆம் ஆண்டில் நோயல் கோவர்டின்  என்பவர் இயக்கிய பிரைவேட் லைவ்சு  எனும் திரைப்படத்தில் இவர் முதன் முதலாக அறிமுகமானார். 1935 ஆம் ஆண்டில் இவர் கில்கட் மற்றும் ஆசுகிராஃப்ட் ஆகியோருடன் இணைந்து ரோமியோ சூலியட்டில் நடித்தார்.1940 ஆம் ஆண்டுகளில், ரிச்சர்ட்சன் மற்றும் ஜான் பர்ரலுடன் சேர்ந்து, ஆலிவர் ஓல்ட் விக்கின் இணை இயக்குநராக இருந்தார். அதை மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனமாக உருவாக்கினார். ஷேக்ஸ்பியரின் ரிச்சர்ட் III மற்றும் சோஃபோக்லஸின் ஓடிபசு ஆகியவை இவரின் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரங்களில் அடங்கும். 1950 ஆம் ஆண்டுகளில் ஆலிவர் ஒரு சுயாதீனமான நடிகர்-மேலாளராக இருந்தார், ஆனால் 1957 ஆம் ஆண்டில் அவாண்ட் கார்ட் ஆங்கில ஸ்டேஜ் கம்பெனியில் சேர்ந்தார். தி என்டர்டெயினரில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடிக்கும் வரை அவரது நாடக வாழ்க்கை மந்தமான நிலையில் இருந்தது. பின்னர் அவர் திரைப்படத்தில் நடித்தார். 1963 முதல் 1973 வரை அவர் பிரிட்டனின் நேசனல் தியேட்டரின் நிறுவன இயக்குநராக இருந்தார். அவரது சொந்த தயாரிப்பில் ஓதெல்லோ (1965) மற்றும் தி மர்ச்சண்ட் ஆஃப் வெனிசு (1970) ஷைலாக்  போன்றவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

வுதெரிங் ஹைட்ஸ் (1939), ரெபெக்கா (1940),போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் மற்றும் இயக்குனராக ஷேக்ஸ்பியரின்ஹென்றி V ( (1944), ஹேம்லெட் (1948) மற்றும் ரிச்சர்ட் III (1955)  போன்ற நாடகங்களில் நடித்தார்.   பின்னர் வெளிவந்த தி ஷூஸ் ஆஃப் தி ஃபிஷர்மேன் (1968), ஸ்லூத் (1972), மராத்தான் மேன் (1976), மற்றும் தி பாய்ஸ் ஃப்ரம் பிரேசில் (1978)  ஆகியன இவரது முக்கியமான திரைப்படங்களில் அடங்கும்.  இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி தி மூன் அண்ட் சிக்ஸ்பென்ஸ் (1960), லாங் டேஸ் ஜர்னி இன் நைட் (1973), லவ் அமாங் தி ரூயின்ஸ் (1975), கேட் ஆன் எ ஹாட் டின் ரூஃப் (1976), பிரைட்ஸ்ஹெட் ரிவிசிட்டட் (1981) மற்றும் கிங் லியர் (1983)  ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தார்.

அவரது திரைப்படங்களுக்காக இவர் நான்கு அகாடமி விருதுகள், இரண்டு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள், ஐந்து எம்மி விருதுகள் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றார் . நேஷனல் தியேட்டரின் மிகப்பெரிய காட்சியரங்கத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. 1976 இல் ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ்சின் ஆல்பர்ட் விருது [2]{{efn|Olivier was also offered an honorary degree from Yale University, but was unable to receive it.

மேலும் லாரன்ஸ் ஆலிவர் விருதுகளில் அவர் நினைவுகூரப்படுகிறார், இது ஆண்டுதோறும் சொசைட்டி ஆஃப் லண்டன் தியேட்டரால் வழங்கப்படுகிறது . அவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார், நடிகைகள் ஜில் எஸ்மண்ட் 1930 முதல் 1940 வரை, விவியன் லே 1940 முதல் 1960 வரை, மற்றும் ஜோன் புளோரைட் 1961 முதல் அவர் இறக்கும் வரை.

சான்றுகள்[தொகு]

  1. Billington 2004.
  2. Coleman 2006, photo 39, facing p. 416.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்ஸ்_ஆலிவர்&oldid=2907363" இருந்து மீள்விக்கப்பட்டது