டேனியல் டே- லீவிசு
சர் டேனியல் டே- லீவிசு Daniel Day-Lewis | |
---|---|
2013 இல் டேனியல் டே- லீவிசு | |
பிறப்பு | டேனியல் மைக்கேல் பிளேக் டே- லீவிசு 29 ஏப்ரல் 1957 இலண்டன், இங்கிலாந்து |
இருப்பிடம் | ஆன்னாமோ, விக்கலோவ் கவுண்டி, ஐயர்லாந்து |
தேசியம் | இங்கிலாந்து[1] |
குடியுரிமை |
|
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970–2017 |
துணைவர் | இசபெல் அட்ஜான் (1989–1995) |
வாழ்க்கைத் துணை | ரெபெக்கா மில்லர் (தி. 1996) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | செசில் டே - லீவிசு (அப்பா) ஜில் பால்கன் (அம்மா) தமாசின் டே - லீவிசு (தங்கை) மைக்கேல் பால்கன் (தாதா) |
சர் டேனியல் மைக்கேல் பிளேக் டே லூயிஸ் (ஆங்கிலம்: Sir Daniel Michael Blake Day-Lewis, பிறப்பு: ஏப்ரல் 29, 1957) ஒரு ஓய்வு பெற்ற ஆங்கில [2] நடிகர் ஆவார். இவர் பிரித்தானிய மற்றும் அயர்லாந்து குடியுரிமையைப் பெற்றவர். அவர் தனது தலைமுறையின் மிகச் சிறந்த மற்றும் பரவலாக மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராகவும், அனைத்துக் காலத்திற்குமான மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பாராட்டப்பட்டார். [3] [4] [5] [6] அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறந்த நடிகருக்கான மூன்று அகாடமி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் , சிறந்த நடிகருக்கான பிரிவில் மூன்று வெற்றிகளைப் பெற்ற ஒரே ஆண் நடிகராகவும், மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற மூன்று ஆண் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். [7] சிறந்த நடிகருக்கான நான்கு பாஃப்டா விருதுகள், மூன்று திரை நடிகர்கள் கில்ட் விருதுகள் மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை வென்றார் .
இவர் லண்டனில் பிறந்டு வளர்ந்தார். பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளியில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பாக டே லூயிஸ் தேசிய இளைஞர் திரையரங்கில் நாடகங்களில் நடித்து வந்தார். தனது கதாப்பத்திரங்களின் தன்மையினை அறிந்துகொள்வதிலும் அதில் ஈடுபாடு கொண்டு நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். [8] [9] திரைப்படத் துறையில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகர்களில் ஒருவரான இவர் 1998 முதல் ஆறு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கு இடையில் ஐந்து ஆண்டுகள் வரை கால இடைவெளி எடுத்துள்ளார். [10] தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் வெளியுலகத்திற்குத் தெரியாதவண்ணம் பாதுகாக்கும் அவர், அரிதாகவே நேர்காணல்களைத் தருகிறார். மிகக் குறைவாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். [11]
1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் டே-லூயிஸ் நாடகம் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் நடித்தார்.பின்னர் இவர் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் சேர்ந்தார் . ரோமியோ மற்றும் ஜூலியட்டில் இவர் ரோமியோவாக நடித்தார். மேலும் இவர் எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீமில் நடித்ததன் மூலம்விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 1984 ஆம் ஆண்டு வெளியான தி பவுண்டியில் நடித்தார். பின்னர் அவர் தெ அன்பியரபிள் லைட்னஸ் ஆஃப் பீயிங் (1988) மற்றும் தி லாஸ்ட் ஆஃப் தி மொஹிகான்ஸ் (1992) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்களுள் ஒருவராக அறியப்பட்டார்
. மை லெஃப்ட் ஃபுட் (1989) இல் நடித்ததற்காக முதல் அகாதமி விருதையும் சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருதினையும் பெற்றார். தி பாக்ஸர் (1997) திரைப்படத்தில் அவரது நடிப்பைத் தொடர்ந்து, டே லூயிஸ் மூன்று ஆண்டுகளாக நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். இத்தாலியில் ஒரு காலணி தயாரிப்பாளராக பணியில் சேர்ந்தார்.
2000 ஆம் ஆண்டில் கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் (2002) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு வாழ்க்கைக்கு திரும்பினார். டே லூயிஸ் மீண்டும் தெர் வில் பி பிளட் (2007) மற்றும் லிங்கன் (2012) ஆகிய திரைபப்டங்களுக்காக ஆஸ்கார் மற்றும் பாஃப்டா விருதுகளைப் பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Appelo, Tim (8 November 2012). "Daniel Day-Lewis Spoofs Clint Eastwood's Obama Chair Routine at Britannia Awards (Video)". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து 1 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201190125/http://www.hollywoodreporter.com/race/daniel-day-lewis-spoofs-clint-387642. "I know as an Englishman it's absolutely none of my business."
- ↑ Appelo, Tim (8 November 2012). "Daniel Day-Lewis Spoofs Clint Eastwood's Obama Chair Routine at Britannia Awards (Video)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/race/daniel-day-lewis-spoofs-clint-387642. பார்த்த நாள்: 19 April 2013. "I know as an Englishman it's absolutely none of my business."
- ↑ Simkins, Michael (22 June 2017). "Actors usually envy each other. But Daniel Day-Lewis is a class apart". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2017/jun/22/actors-daniel-day-lewis-retiring. பார்த்த நாள்: 21 March 2019. "Most of us would start any list of those few truly exceptional actors – the shape-shifters as they are sometimes called, individuals who can inhabit another character in its entirety without ever lapsing into impersonation – with மார்லன் பிராண்டோ, then veer off into a truculent debate about whether லாரன்ஸ் ஆலிவர் was the greatest of them all or just an old ham with stale tricks. ரொபேர்ட் டி நீரோ would get a mention of course – மெரில் ஸ்ட்ரீப், no doubt. But almost everyone would finish with Day-Lewis."
- ↑ Winter, Jessica (5 November 2012). "The World's Greatest Actor". Time. http://content.time.com/time/covers/europe/0,16641,20121105,00.html. பார்த்த நாள்: 22 October 2015.
- ↑ Queenan, Joe (25 பிப்ரவரி 2013). "Oscars 2013: do his three Oscars make Daniel Day-Lewis the greatest?". The Guardian. https://www.theguardian.com/film/2013/feb/25/oscars-2013-daniel-day-lewis. பார்த்த நாள்: 27 அக்தோபர் 2017.
- ↑ Allen, Nick (25 February 2013). "Oscars 2013: Daniel Day-Lewis says it is 'daft' to call him best actor ever". The Telegraph. https://www.telegraph.co.uk/culture/film/oscars/9892520/Oscars-2013-Daniel-Day-Lewis-says-it-is-daft-to-call-him-best-actor-ever.html. பார்த்த நாள்: 27 October 2017.
- ↑ "Daniel Day-Lewis makes Oscar history with third award". BBC News. 25 பிப்ரவரி 2013. https://www.bbc.com/news/entertainment-arts-21570142. பார்த்த நாள்: 13 March 2013.
- ↑ Gritten, David (22 February 2013). "Daniel Day-Lewis: the greatest screen actor ever?". The Telegraph. https://www.telegraph.co.uk/culture/film/oscars/9886193/Daniel-Day-Lewis-the-greatest-screen-actor-ever.html. பார்த்த நாள்: 25 பிப்ரவரி 2013.
- ↑ Parker, Emily (23 January 2008). "Sojourner in Other Men's Souls". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB120105413744408621. பார்த்த நாள்: 28 January 2018.
- ↑ Hirschberg, Lynn (11 நவம்பர் 2007). "The New Frontier’s Man". The New York Times. https://www.nytimes.com/2007/11/11/magazine/11daylewis-t2.html. பார்த்த நாள்: 28 January 2018.
- ↑ Rainey, Sarah (1 March 2013). "My brother Daniel Day-Lewis won't talk to me any more". The Telegraph. https://www.telegraph.co.uk/culture/film/oscars/9902698/My-brother-Daniel-Day-Lewis-wont-talk-to-me-any-more.html. பார்த்த நாள்: 4 சூன் 2016.