ஜான் வெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் வெயின்
John Wayne in Wake of the Red Witch trailer.jpg
வேக் ஆஃப் த ரெட் விட்ச்படத்தில் வெயின் (1948)
இயற் பெயர் மாரியோன் ராபர்ட் மொரிசன்
பிறப்பு மே 26, 1907(1907-05-26)
அயோவா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
இறப்பு சூன் 11, 1979(1979-06-11) (அகவை 72)
லாஸ் ஏஞ்சல்ஸ்,கலிபோர்னியா, U.S.
வேறு பெயர் மாரியோன் மிட்செல் மொரிசன்; ட்யூக்; ட்யூக் மொரிசன்
தொழில் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1926–1976
துணைவர் ஜோசபின் அலிசியா சேன்ஸ்(1933–1945)
எஸ்பிரென்சா பௌர்(1946–1954)
பிலார் பாலட்(1954–1979)
இணையத்தளம் http://www.johnwayne.com

மாரியோன் மிட்செல் மொரிசன் (Marion Mitchell Morrison, மே 26, 1907 – சூன் 11, 1979), இயற்பெயர் மாரியோன் ராபர்ட் மொரிசன், பரவலாக தமது திரைப்படப் பெயர் ஜான் வெயின் (John Wayne) என அறியப்பட்ட இவர் ஓர் புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமது ஆண்மை வெளிப்பாட்டிற்காக பெயர்பெற்ற இவர் ஓர் அமெரிக்க சிறப்புக்கலைஞராக விளங்கினார். அவரது உயரம் மற்றும் குரலில் மயங்காதவர்கள் இல்லை.

அமெரிக்க திரைப்படக் கழகம் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 100 கலைஞர்களில் பதின்மூன்றாவதாக இவரைக் குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டின் ஹாரிஸ் வாக்கெடுப்பில் அமெரிக்காவின் மக்கள் விரும்பும் திரைக்கலைஞர்களில் மூன்றாவதாகவும் மறைந்த ஒரே கலைஞராகவும் உள்ளார்.[1]

அரசியலில் அமெரிக்க இருத்தலியத்தை ஆதரித்த ஜான் வெயின் 1950களில் பொதுவுடமைக்கு எதிரான கொள்கைகள் கொண்டிருந்தார். இவர் 1979 ஆம் ஆண்டில் வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

ஜான் வெயினின் திருப்புமுனைக் கதாபாத்திரம் இயக்குனர் ஜான் ஃபோர்டின் கிளாசிக்கான ஸ்டேஜ்கோச்சில் (1939) வந்தது. ஹாரிஸ் என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் மிக பிரபலமான நடிகர் யார் என்ற வாக்கு எடுப்பில் ஆண்டு தோறும் இடம் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை இவருக்கு உண்டு அது மட்டும் இன்றி இறப்புக்கு பின்னும் அந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகர் இவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது .வேயின் இந்த பட்டியலில் முதல் பத்து. இடத்தில் இவர் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் வந்தார் .இறப்புக்கு பிறகும் 15 வருடம் இந்த இடத்தை தக்க வைத்தவர் இவர் .1926 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை இவர் 170 படங்களில் மிக சிறப்பாக நடித்து அமெரிக்காவின் மிக பெரிய திரை நட்சத்திரமாக உருவெடுத்தார். 1939 ஆம் ஆண்டு இவர் நடித்த கோச் வண்டி (stagecoach) என்ற திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது .இந்த திரைபடத்தின் மூலம் தான் இவர் மிக பெரிய நடிகர் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டார். 1940ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் கடல்பயணத்தில் அமைவது போன்ற படங்களில் பெரிதும் நடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் படதயாரிப்பில் தீவரமாக இறங்கி இருந்தார் .படங்களை தயாரிப்பதிலும் இயக்குவதிலும் பெரும் ஆர்வம் கொண்டு செயல்பட துவங்கினார் .இவர் தயாரித்த பல படங்கள் இரண்டாம் உலகப் போரை பற்றியும் கவ்பாய் பாணியில் அமைந்த மேற்கத்திய படங்களாகவும் அவை அமைந்தன வேயின் 1926ஆம் ஆண்டு முதல் 1934ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகள் தந்து படங்களிலும் தான் நடித்த படங்களிலும் கால்பந்தாட்டம் பற்றி எதாவது ஒரு செய்தி, ஒரு கதாபத்திரம் அல்லது இவரே கால்பாந்தாட்டக்காரர் ஆக நடித்து இருப்பார்

1926ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு படத்தில் கால்பந்தாட்ட வீரர் ஆக நடித்து இருப்பார். 1929 ஆம் அண்டி வெளிவந்த ஒரு கருப்பு கைகடிகாரம் எனும் திரைப்படத்தில் முதலாம் உலக போரின் போது இந்தியாவில் இருக்கும் ஒரு பிரித்தானிய ராணுவம் பற்றிய ஒரு சிறந்த படமாகும் . 1930ஆம் ஆண்டு வெளிவந்த பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ற படம் இவர் நடித்த முதல் நிர்மூழ்கி கப்பல் பற்றிய கதை கொண்ட படம் 1931ஆம் ஆண்டு இவர் நடித்த ஆண்களை உருவாக்குபவர் என்ற படத்தில் இவர் கால்பந்து விளையாட்டு பற்றி நடித்த படங்களில் இதுவும் ஒன்று . 1937ஆம் ஆண்டு இவர் நடித்த படமான கலிபோர்னியா பயணம் என்ற படத்தில் ஒரு பள்ளியின் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து பின்பு மிக பெரிய சரகுவண்டியின் தலைவர் ஆக ஆகி விடுவார். இவர் நடித்த படங்களில் சில ஒரு ரீல் மற்றும் இரண்டு ரீல் கொண்டதாக இருந்தது இவர் தயாரிப்பாளராக மாறியபின் 1947ஆம் ஆண்டு தனது முதல் படத்தை தயார் செய்தார். இவர் ஒரு சில ஆவணப்படங்களையும் எடுத்தார். 1973ஆம் ஆண்டு இவர் நடித்த தொடர்வண்டி கொள்ளையர்கள் என்ற திரைப்படம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது 1976ஆம் ஆண்டு இவர் நடித்த வெளிவந்த தி ஷூடிஸ்ட் இவர் நடித்த கடைசி திரைப்படமாகும் இந்த படத்தை இயக்கியவர் டான் சிகள். வியட்நாம் போரை ஆதரித்து இவர் நடித்த தி கிரீன் பெரேத்ஸ் என்ற படத்தை இயக்கியவர்களில் இவருமொருவர் ஆவர். இந்த படம் ராபின் மூரே என்பவரின் புதினத்தை தழுவி எடுக்க பட்டது ஆகும்.

பெற்ற விருதுகள்[தொகு]

அகாடமி விருது[தொகு]

வெயின் மூன்று முறை அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யபட்டார் .இரண்டு முறை சிறந்த கதாநாயகனுக்காக பரிந்து உரைக்கப்பட்டார். ஒரு முறை சிறந்த தயாரிப்பாளர்காக பரிந்து உரைக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் நடித்த true grit என்ற படத்திற்காக இவருக்கு இது அளிக்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருது[தொகு]

1970 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டன் குளோப் விருது இவர் நடித்த true grit என்ற படத்திற்காக இவருக்கு இது அளிக்க பட்டது.

வெண்கல பந்து விருது[தொகு]

1973ஆம் ஆண்டு இவருக்கு வெண்கல பந்து விருது வழங்க பட்டது

அரசியல் வாழ்வு[தொகு]

தன் வாழ்க்கை முழுவதும் அவர் ஒரு பழமைவாத குடியரசு கட்சியின் ஆதரவாளராக இருந்து வந்தார் 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆதரவாக வாக்கு அளித்தார் .1960ஆம் ஆண்டு நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் ரிச்சர்ட் நிக்சனுக்கு ஆதரவு அளித்தார் ஆனால் அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற ஜான் எப் கென்னெடி பற்றி ஒரு தன் கருத்தை இவ்வாறு வெளி இட்டார் "நான் கென்னெடிக்கு வாக்கு அளிக்கவில்லை ஆனால் அவர் எனது ஜனாதிபதி. அவர் நற்செயல்கள் பல செய்வர் என்று நான் எதிர்பார்க்கிறேன்". அவர் படங்களின் மூலம் குடியரசு கட்சிக்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்தார் .வியட்நாம் போரின் போது அப்போரை ஆதரிக்கும் வகையில் இவர் தன்னுடைய படமான தி கிரீன் பெரேத்ஸ் 1968ஆம் ஆண்டு வெளி இடப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. The Harris Poll: Denzel Washington: America’s Favorite Movie Star – Harris Interactive.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வெயின்&oldid=2455611" இருந்து மீள்விக்கப்பட்டது