ரொபேர்ட் டி நீரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரொபேர்ட் டி நீரோ
Robert De Niro Cannes 2016.jpg
ரொபேர்ட் டி நீரோ 2016 கேன்னஸ் திரைப்படத் திருவிழாவில்]]
பிறப்புரொபேர்ட் அந்தோனி டி நீரோ
ஆகத்து 17, 1943 (1943-08-17) (அகவை 78)
மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்காடினர், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1963–தற்போது
பெற்றோர்ரொபேர்ட் டி நீரோ சீனியர்
வர்ஜீனியா அட்மைரல்]]
வாழ்க்கைத்
துணை
டையான் அப்பட்
(தி. 1976; ம.மு. 1988)

கிரேஸ் ஹைடவர்]] (தி. 1997)
பிள்ளைகள்6

ரொபேர்ட் அந்தோனி டி நீரோ (Robert Anthony De Niro Jr) (/dəˈnɪr/; பிறப்பு: ஆகத்து 17, 1943) ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[1][2][3]

டி நீரோ 1974 ஆம் ஆண்டில் தி காட்பாதர் பாகம் II திரைப்படத்தில் விதோ கோர்லியோன் எனும் கதாப்பத்திரத்தில் (சிறு வயது கதாப்பத்திரம்) நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றார். இவர் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கத்தில் 1980 இல் நடித்த ஜேக் லமோத்தா கதாப்பாத்திரத்தில் ரேகிங் புல் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றார். டி நீரோவுக்கு 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. கோல்டன் குளோப் செசில் பி. தெ மில்லே விருது 2010 இல் வழங்கப்பட்டது. 2016 இல் அன்றைய ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை டி நீரோவுக்கு வழங்கினார்.

டி நீரோஸ் பேங் தெ டிரம் ஸ்லோவ்லி எனும் நாடகத் திரைப்படத்தில் முதன் முறையாக முக்கியக் கதாப்பத்திரத்தில் 1973 இல் நடித்தார். பின் மார்ட்டின் ஸ்கோர்செசி 1973 இல் இயக்கிய மீன் ஸ்ட்ரீட்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார்.1976 இல் உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான தேக்சி டிரைவர் மற்றும் கேப் ஃபியர் எனும் திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் மார்ட்டின் ஸ்கோர்செசியால் இயக்கப்பட்டது. இந்தத் திரைப்படங்கள் அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 1978 இல் மைக்கேல் சிமினோ, வியட்நாம் போரினை அடிப்படையாக வைத்து இயக்கிய தெ டீர் ஹன்டர் எனும் திரைப்படத்திற்காக கூடுதல் அகாதமி விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டார். ஸ்கோர் செசி இயக்கிய குட்பெலாஸ் திரைப்படத்தில் ஜிம்மி கான்வே எனும் தொகுதி வேலையாட்கள் கதாப்பத்திரத்தில் நடித்தார். 1983 இல் தெ கிங் ஆஃப் காமெடி எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளைப் பெற்றார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரொபேர்ட் அந்தோனி டி நீரோ [5] ஆகத்து 17, 1943 இல் மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை ராபர்ட் டி நிரோ , அமெரிக்க நடிகர் , தாய் விர்ஜீனியா அட்மைரல்.[6] இவரின் தந்தை அயர்லாந்து மற்றும் இத்தாலி வம்சாவளியைச் சர்ந்தவர்.[7] இவரின் தாய் டச்சு, இலண்டன், பிரெஞ்சு, ஜெர்மன் மரபினைச் சார்ந்தவர்.[8]

தொழில் வாழ்க்கை[தொகு]

டி நீரோ தனது இருபதாம் வயதில் முதல் திரைப்படத்தில் நடித்தார். பிரையன் டி பல்மா 1963 இல் இயக்கிய தெ வெட்டிங் பார்ட்டி எனும் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்தத் திரைப்படம் 1969 வரை வெளியாகவில்லை. பின்பு ரீஜர் கார்மெனின் பிளெடி மம்மா எனும் திரைப்படத்தில் 1970 இல் நடித்தார். 1973 இல் பேங் தெ ட்ரம் ஸ்லோவ்லி திரைப்படத்தில் பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்ட வீரராக நடித்ததில் இருந்து பரவலாக அறியப்படுகிறார். பின் மார்ட்டின் ஸ்கோர்செசியுடன் இணைந்து மீன் ஸ்ட்ரீட்ஸ் எனும் திரைப்படத்தில் 1973 இல் நடித்தார்.[9]

திரைப்படங்கள்[தொகு]

ரொபேர்ட் டி நீரோ நடித்த திரைப்படங்களில் சில:

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரொபேர்ட் டி நீரோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபேர்ட்_டி_நீரோ&oldid=2916041" இருந்து மீள்விக்கப்பட்டது