நிக்கோலஸ் கேஜ்
நிக்கோலஸ் கேஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | நிகோலஸ் கிம் கொப்போலா சனவரி 7, 1964 லாங் பீச் (கலிபோர்னியா), ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | பற்றிசியா ஆர்குவேட் (1995–2001) லிசா மேரி பிரஸ்லி (2002–2004) ஆலிஸ் கிம் (2004–2016) எரிகா கோய்கே (2019) ரிகோ ஷிபாடா (2021-இன்று வரை) |
நிகோலஸ் கிம் கொப்போலா (ஆங்கில மொழி: Nicolas Kim Coppola) (பிறப்பு: சனவரி 7, 1964)[1] என்பவர் அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
இவர் 1980 ஆம் ஆண்டு முதல் ரைசிங் அரிசோனா (1987), தி ராக் (1996), ஃபேஸ் ஆப் (1997), கான் இன் 60 செகன்ட்ஸ் (2000), நேஷனல் டிரஷர் (2004), கோஸ்டு இரைடர் (2007), ரைவ் அங்ரி (2011), கோஸ்டு இரைடர் 2 (2012) என 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 32 வது வயதில் லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
கேஜ் சனவரி 7, 1964 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் இலக்கியப் பேராசிரியரான ஆகஸ்ட் கொப்போலா மற்றும் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஜாய் வோகெல்சாங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தார்.[2] இவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இவரது தாயார் செருமனி மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "UPI Almanac for Monday, Jan, 7, 2019". United Press International. January 7, 2019. https://www.upi.com/Top_News/2019/01/07/UPI-Almanac-for-Monday-Jan-7-2019/6991546835238/?ur3=1. "actor Nicolas Cage in 1964 (age 55)"
- ↑ "Nicolas Cage talks "Knowing", religion". EveryJoe.com. March 29, 2009. March 3, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 14, 2014 அன்று பார்க்கப்பட்டது.