சிட்னி புவத்தியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்னி புவத்தியே
Sidney Poitier 1968.jpg
1968-இல் புவத்தியே
பிறப்புபெப்ரவரி 20, 1927(1927-02-20)
மயாமி, புளோரிடா
இறப்புசனவரி 6, 2022(2022-01-06) (அகவை 94)
லாஸ் ஏஞ்சலஸ்
குடியுரிமை
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
  • தூதுவர்
செயற்பாட்டுக்
காலம்
1946–2009
துணைவர்தயாகன் கரோல் (1959–1968)
வாழ்க்கைத்
துணை
  • செனித்தா ஹார்டி (1950-1965, மணமுறிவு)
  • ஜோவான்னா சிம்கசு (1976)
பிள்ளைகள்6
விருதுகள்
சிட்னி புவத்தியே
சப்பானுக்கான பகாமாசுத் தூதர்
பதவியில்
1997–2007
யுனெசுக்கோவுக்கான பகாமாசுத் தூதர்
பதவியில்
2002–2007

சிட்னி எல். புவத்தியே (Sidney L. Poitier; பெப்ரவரி 20, 1927 – சனவரி 6, 2022)[1] பகாமிய-அமெரிக்க நடிகரும், திரைப்பட இயக்குநரும், செயற்பாட்டாளரும் ஆவார். சிறந்த நடிகருக்கான அகாதமி விருது (1964) பெற்ற முதலாவது கறுப்பினத்தவர் இவராவார்.[2] இவர் இரண்டு தடவைகள் அகாதமி விருதுக்காகவும், பத்துத் தடவைகள் கோல்டன் குளோப் விருதுக்காகவும், இரண்டு தடவைகள் பிரதானநேர எம்மி விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். 1997 முதல் 2007 வரை இவர் சப்பானுக்கான பகாமாசு துதூதுவராகவும் பணியாற்றினார்.[3]

புவத்தியேயின் முழுக் குடும்பமும் அன்று பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த பகாமாசில் வசித்து வந்தது. ஆனாலும், அவரது குடும்பம் மயாமிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு சிட்னி பிறந்தார். இதனால் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்தது. பகாமாசில் வசித்து வந்த சிட்னி தனது 15-வது அகவையில் மயாமிக்குக் குடிபெயர்ந்து, பின்னர் ஓராண்டில் நியூயார்க்கு நகரம் சென்றார். அங்கு அவர் அமெரிக்க நீக்ரோ அரங்கில் இணைந்து, 1955 இல் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படமான பிளாக்போர்டு ஜங்கிளில் உயர்-வகுப்பு மாணவனாக நடித்தார். 1958 ஆம் ஆண்டில், ஒன்பது அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்ற தி டிஃபையன்ட் ஒன்சு திரைப்படத்தில் டோனி கர்ட்டிசுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளாக புவத்தியே நடித்தார். இரு நடிகர்களும் சிறந்த நடிகருக்கான பரிந்துரையைப் பெற்றனர். ஒரு கறுப்பின நடிகருக்கான முதல் நபராக புவத்தியே பரிந்துரைக்கப்பட்டார். அதே போல் பாஃப்டா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விருதும் பெற்றார். 1964 ஆம் ஆண்டில், லில்லிஸ் ஆஃப் தி ஃபீல்டு படத்தி இடாய்ச்சு மொழி பேசும் கன்னித்துறவிகளின் குழுவிற்கு தேவாலயத்தைக் கட்ட உதவும் கைவினைஞராக நடித்தமைக்காக[4] (1963) சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை வென்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stolworthy, Jacob (January 7, 2022). "Legendary actor Sidney Poitier, first Black man to win Best Actor Oscar, dies aged 94". The Independent (ஆங்கிலம்). January 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sidney Poitier First Black Ever To Receive 'Best Actor' Oscar". Variety. April 14, 1964. February 20, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Legendary Actor Sidney Poitier Dead at 94". NBC. January 7, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  4. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Awards for சிட்னி புவத்தியே
  5. Bill Goodykoontz, Gannett Chief Film Critic (February 25, 2014). "Oscar win proved Sidney Poitier was second to none". Usatoday.com. August 10, 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_புவத்தியே&oldid=3604348" இருந்து மீள்விக்கப்பட்டது