விவியன் லீ
விவியன் லீ Vivien Leigh | |
---|---|
பிறப்பு | 5 நவம்பர் 1913 டார்ஜீலிங் |
இறப்பு | 8 சூலை 1967 (அகவை 53) Eaton Square |
படித்த இடங்கள் |
|
பணி | திரைப்பட நடிகர், நடிகர் |
வாழ்க்கைத் துணை/கள் | லாரன்ஸ் ஆலிவர், Herbert Leigh Holman |
குழந்தைகள் | Suzanne Farrington |
விருதுகள் | சிறந்த நடிகைக்கான அகாதமி விருது, சிறந்த நடிகைக்கான அகாதமி விருது, star on Hollywood Walk of Fame |
கையெழுத்து | |
விவியன் லீ (ஆங்கிலம்: Vivien Leigh) (நவம்பர் 5, 1913 - சூலை 8, 1967) நாடக மற்றும் திரைப்பட நடிகை ஆவார். விவியன் ஹார்ட்லீ என்பது இவரின் இயற்பெயர் மேலும் லேடி ஆலிவர் என அறியப்படுகிறார். இவர் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை இரு முறை பெற்றுள்ளார். 1939 ஆம் ஆண்டில் வெளியான கான் வித் தெ விண்ட் எனும் திரைப்படத்தில் ஸ்கார்லட் ஓ ஹரா கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு பரவலாகப் பாரட்டைப் பெற்றது. மேலும் இவர் டோனி விருதையும் பெற்றுள்ளார்.
நாடகப் பள்ளியில் பயின்றபிறகு 1935 ஆம் ஆண்டில் நான்கு திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தார். பின் 1937 ஆம் ஆண்டில் வெளியான ஃபயர் ஓவர் இங்கிலாந்து எனும் திரைப்படத்த்கில் நாயகியாக நடித்தார். இவரின் திரைவாழ்க்கையானது நாடகங்களில் நடிப்பதில் இருந்து துவங்கியது. சுமார் முப்பது ஆண்டுகளாக திரைவாழ்க்கையில் இருந்தார். அந்த சமயங்களில் நோயல் கவர்டு, ஜார்ஜ் பெர்னாட் ஷா போன்றவர்களின் படைப்புகளின் நாயகிகளாகவும் வில்லியம் சேக்சுபியர் நாயகிகளான ஒபீலியா, கிளியோபட்ரா, ஜூலியத், லேடி மக்பத்தாகவும் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். பின் இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்தார்.
அந்த சம்யத்தில் தான் லாரன்ஸ் ஆலிவர் என்பவருடன் 1940 முதல் 1960 வரை வாழ்ந்து வருவதாக சமுதாயத்திற்குத் தெரிவித்தார். லீயும் ஆலிவரும் இணைந்து பல மேடைகளில் நடித்துள்ளனர். ஆலிவர் மூன்று திரைப்படங்களை இயக்கினார். இவர் இருமுனையப் பிறழ்வு, காச நோயால் பாதிக்கப்பட்டார். [1]அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வெளியிட்ட சிறந்த பழமையான ஹாலிவுட் நடிகைகளில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]விவியன் லீ நவம்பர் 5, 1913 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் உள்ள புனித பால் உயர்நிலைப்பள்ளி டார்ஜீலிங்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் விவியன் மேரி ஹார்ட்லீ ஆகும்[2]. இவரின் தந்தை எர்னஸ்ட் ரிச்சர்டு ஹார்ட்லீ , இவர் தரகு வேலை பார்த்து வந்தார். லீயின் தாய் ஜெர்டுரூட் மேரி பிரான்சஸ் .[3] லீயின் தந்தை இசுக்கொட்லாந்தில் 1882 ஆம் ஆண்டில் பிறந்தார். லீயின் தாய் 1888 ஆம் ஆண்டில் டார்ஜிலிங்கில் பிறந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். இவர் அயர்லாந்து மரபைச் சார்ந்தவர். ஜெர்டுரூட்டின் தந்தை மைக்கேல் ஜான் யக்கீ (பிறப்பு 1840) தாய், மேரி தெரசா ராபின்சன் அயர்லாந்து மரபைச் சார்ந்தவர். இவர் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 சமயத்தின் போது யக்கீயைச் சந்தித்தார். 1872 ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[4] எர்னெச்டும் , ஜெர்ட்ரூட்டும் 1912 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள கென்சிங்டனில் திருமணம் செய்தனர்.[5]
விருதுகள்
[தொகு]1939 ஆம் ஆண்டில் கான் இத் தெ விண்ட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருது மற்றும் நியூயார்க் திரைப்பட விமர்சன குழுவின் விருதினையும் பெற்றார். [6][7] 1951 ஆம் ஆண்டில் எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசயர் எனும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருது, [6]பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்,[8] நியூயார்க் திரைப்பட விமர்சன குழு விருது [9],வெனிஸ் திரைப்பட விருது[10] ஆகிய விருதுகள் பெற்றார். மேலும் கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். [11]
சான்றுகள்
[தொகு]- ↑ Olivier 1982, p. 174.
- ↑ Briggs 1992, p. 338.
- ↑ Bean 2013, pp. 20–21.
- ↑ Vickers 1988, p. 6.
- ↑ General Register Office of England and Wales, Marriages, June quarter 1912, Kensington vol. 1a, p. 426.
- ↑ 6.0 6.1 "Awards won by Vivien Leigh." பரணிடப்பட்டது 15 திசம்பர் 2013 at Archive.today Academy Awards Database (Oscars.org). Retrieved 24 May 2008.
- ↑ "1939 Awards." nyfcc.com (New York Film Critics Circle). Retrieved 15 January 2015.
- ↑ "British Actress in 1953." British Academy of Film and Television Arts Awards. Retrieved: 1 February 2015.
- ↑ "1951 Awards." New York Film Critics Circle. Retrieved 24 May 2008.
- ↑ "Venice Film Festival 1951".
- ↑ "Winners & Nominees 1952". goldenglobes.com.