கிளாடெட் கோல்பெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளாடெட் கோல்பெர்
Claudette Colbert
Claudette Colbert in The Misleading Lady.jpg
1932 இல் கிளாடெட் கோல்பெர்
பிறப்புஎமிலி கிளாடெட் சோசான்
செப்டம்பர் 13, 1903(1903-09-13)
செயிண்ட்-மண்டே, பிரான்சு
இறப்புசூலை 30, 1996(1996-07-30) (அகவை 92)
சிபீக்சுடவுன், பார்படோசு
கல்லறைகோடிங்சு பே சர்ச் சிமெட்டரி,சிபீக்சுடவுன், செயிண்ட் பீட்டர்,பார்படோசு
13°14′28″N 59°38′32″W / 13.241235°N 59.642320°W / 13.241235; -59.642320
தேசியம்அமெரிக்கர்!--See WP:MOSBIO-->
மற்ற பெயர்கள்லில்லி கிளாடெட் சாச்சோயின்
கல்விநியூயார்க்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1925–1987
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
வாழ்க்கைத்
துணை
நார்மன் பாசுட்டர், யோயல் பிரசுமான்

கிளாடெட் கோல்பெர் (Claudette Colbert (/klˈbɛər/ kohl-BAIR;[1] இயற்பெயர் :எமிலி கிளாடெட் சோசான் (Émilie Claudette Chauchoin; செப்டம்பர் 13, 1903 – நவம்பர் 30, 1996) ஒரு அமெரிக்க நாடக மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.

கோல்பெர் பிராடுவே அரங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.1920 ஆம் ஆண்டுகளில் பேசும்படங்களில் இவர் தோன்றினார்.பாரமவுண்ட் பிக்சர்சில் துவக்கத்தில் பணிபுரிந்த இவர் பின்னர் சார்பிலா நடிகையானார். 1934 ஆம் ஆண்டில் வெளியான இட் ஹாப்பன்டு ஒன் நைட் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான அகாதமி விருது வென்றார். மேலும் இரு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் அதே ஆண்டில் வெளியான கிளியோபட்ரா மற்றும் 1942 ஆம் ஆண்டில் வெளியான தெ பால்ம் பீச் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

அவரது வட்ட முகம், பெரிய கண்கள், அழகான, பிரபுத்துவ முறையில் நடப்பது, மற்றும் இயல்புத் திறன் [2] போன்றவற்றின் மூலம் 1930 முதல் 1940 ஆண்டுகள் வரை அதிக ஊதியம் பெறும் நட்சத்திரமாக அறியப்பட்டார்.[3] மற்றும், 1938 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் பெற்ற நட்சத்திரமாக அறியப்பட்டார்.தனது தொழில் வாழ்க்கையில் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1935 முதல் 1949 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் இவர் ஃபிரட் மக்முரேவுடன் இணைந்து ஏழு திரைப்படங்களிலும் 1930 முதல் 1933 ஆம் ஆண்டுகள் வரை ஃபெடரிக் மார் உடன் இணைந்து மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

எமிலி கிளாடெட்டே சோசான் 1903 ஆம் ஆண்டில் செயின்ட் மண்டேட், பிரான்சில் பிறந்தார்.[4] இவரின் பெற்றோர் ஜீன் மேரி (1877-1970) - ஜார்ஜெஸ் கிளாட் சோசான் (1867–1925).[5][6] இவர் எமிலி லில்லி என அழைக்கப்பட்டார். ஏனெனில் இவரது அத்தையின் பெயரும் எமிலி என இருந்ததால் இவர் அவ்வாறு அழைக்கப்பட்டார். ஆனால் அந்த அத்தை இவரின் இரத்த உறவு இல்லை. சோசானின் பாட்டி அவரைத் தத்து எடுத்து வளர்த்து வந்தார். அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரின் லில்லி எனும் புனைப் பெயரானது லில்லி லங்ட்ரி எனும் நடிகையின்பால் கவரப்பட்டு வந்தது.[7] ஜீன், எமிலி லியோ மற்றும் கால்பெரின் பாட்டி மேரி அகஸ்டின் லியோ ஆகியோர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திற்கு இடைப்பட்ட பகுதியான சேனல் தீவில் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் அமெரிக்காவிற்கு வரும் முன்பே சரளமாக ஆங்கிலத்தில் பேசும் புலமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்களது குடும்பத்தில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு போன்ற மொழிகளில் பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.

கோல்பெரின் சகோதரர் சார்லஸ் அகஸ்தே சோசான் 1898 ஆம் ஆண்டில் ஜெர்சியில் உள்ள பைலிவிக்கில் பிறந்தார். இவரது வலது கண்ணில் பார்வை இழந்தார். அதனால் இவரால் தொழிலில் நிலையாகப் பணிபுரிய இயலவில்லை. முதலீட்டாளராக பணிபுரிந்தார். ஆனால் அதில் இழப்பு ஏற்பட்டது. மேரி லியோ மற்றும் ஜார்ஜின் மைத்துனனும் அமெரிக்காவில் வசித்துவந்தனர். மேரி இவருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்ய ஆரவ்மாக இருந்தார்.இருந்தபோதிலும் தொழிலில் வெற்றி பெற ஊக்கமளித்தார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1928 ஆம் ஆண்டில் கோல்பெர் நடிகர் மற்றும் இயக்குனர் மற்றும் சக நடிகரான நார்மன் போஸ்டரைத் திருமணம் செய்தார். பிராட்வே ஷோ தி பார்க்கர், மற்றும் படத்தில் எங் மேன் ஆஃப் மன்ஹாட்டன் (1930) ஆகிய திரைப்படங்களில் அவருடன் இனைந்து நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.[9] இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலமாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடெட்_கோல்பெர்&oldid=3240267" இருந்து மீள்விக்கப்பட்டது