உள்ளடக்கத்துக்குச் செல்

ஆட்ரி ஹெப்பர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்ரி ஹெப்பர்ன்

ரோமன் ஹாலிடே என்ற படத்திலிருந்து (1953)
இயற் பெயர் ஆட்ரி காத்லீன் ரஸ்டன்
பிறப்பு (1929-05-04)4 மே 1929
இக்ஸெல்லஸ், பெல்ஜியம்
இறப்பு 20 சனவரி 1993(1993-01-20) (அகவை 63)
டொலோசெனாஸ், சுவிட்சர்லாந்து
வேறு பெயர் எடா வான் ஹீஸ்ட்ரா, ஆட்ரி காத்லீன் ஹெப்பர்ன்-ரஸ்டன்
தொழில் நடிகை, மனித நேயப் பணியாளர்
நடிப்புக் காலம் 1948–1989
துணைவர் மெல் ஃபெர்ரர் (1954–1968)
ஆன்ட்ரியா டொட்டி (1969–1982)
வீட்டுத் துணைவர்(கள்) ராபர்ட் ஓல்டர்ஸ் (1980–1993)
இணையத்தளம் http://www.audreyhepburn.com/

ஆட்ரி ஹெப்பர்ன் (மே 04,1929ஜனவரி 20,1993) ஒரு ஆங்கிலேய நடிகையும் மனித நேயப் பணியாளராகவும் இருந்தார். இக்ஸெல்ஸில் ஆட்ரி காத்லீன் ரஸ்டனாக பிறந்த ஹெப்பர்ன் தன்னுடைய குழந்தைப் பருவத்தை பெரும்பாலும் நெதர்லாந்தில் கழித்தார். இரண்டாவது உலகப்போரின் (1939-1945) போது ஹெப்பர்ன் வாழ்ந்த, ஜெர்மனி-கைப்பற்றியிருந்த ஆர்ன்ஹெம், நெதர்லாந்தில் உள்ளடங்கியிருந்தது. அவர் ஆர்ன்ஹெம்மில் பாலே கற்று, 1948ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்து தொடர்ந்து பாலேவில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவர் ஒரு புகைப்படக் கலைஞருக்கு மாடலாகவும் பணிபுரிந்தார். அவர் ஒரு கணிசமான அளவு ஐரோப்பிய படங்களில் தோன்றிய பின்பு 1951 பிராட்வே நாடகம் ஜிஜியில் முன்னணி நடிகையாக தோன்றினார். ஹெப்பர்ன் ரோமன் ஹாலிடே (1953) என்ற படத்தில் முன்னணி நடிகையாக இருந்து அவருடைய நடிப்பிற்காக ஒரு அகாதமி விருது, ஒரு கோல்டன் குளோப் மற்றும் ஒரு பாஃப்டா (BAFTA) விருதைப் பெற்றார். ஆண்டீனில் (1954) அவருடைய நடிப்பிற்காக அவர் ஒரு டோனி விருதையும் பெற்றார்.

ஹெப்பர்ன் உலகின் மிக வெற்றியடைந்த நடிகைகளுள் ஒருவராகி பல முன்னணி நடிகர்களான கிரகரி பெக், ரெக்ஸ் ஹாரிசன், ஹம்ப்ரி போகர்ட், கேரி கூப்பர், கேரி கிராண்ட், ஹென்ரி ஃபோண்டா, வில்லியம் ஹோல்டன், ஃப்ரட் ஆஸ்டெர், பீட்டர் ஒ’டூல் மற்றும் ஆல்பர்ட் ஃபின்னி போன்றவர்களோடு நடித்தார். த நன்ஸ் ஸ்டோரி (1959) மற்றும் ஷேரேட் (1963) ஆகிய படங்களில் அவருடைய நடிப்பிற்காக BAFTA விருதுகளும், சாப்ரினா (1954), தி நன்ஸ் ஸ்டோரி (1959), பிரேக்ஃபஸ்ட் அட் டிஃப்ஃபனிஸ் (1961) மற்றும் வெய்ட் அண்ட்டில் டார்க் (1967) ஆகிய படங்களுக்காக அகாடெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கவும் பெற்றார்.

மை ஃபேர் லேடியின் (1964) சினிமா வடிவத்தில் எலீசா டூலிட்டிலாக நடித்து, ஒரு படத்தில் நடிப்பதற்காக $1,000,000 (ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்) பெற்ற மூன்றாவது பெண்மணி ஆவார். 1968லிருந்து 1975 வரை படமெடுப்பதிலிருப்பது அவர் ஓய்வெடுத்து, பெரும்பாலும் தன்னுடைய இரண்டு மகன்களுடன் அதிக நேரம் செலவழித்தார். 1976ஆம் ஆண்டில் அவர் சான் கானரியுடன் ராபின் அண்ட் மரியன் என்ற படத்தில் முன்னணி நடிகையாகத் தோன்றினார். 1989ஆம் ஆண்டில் ஸ்டீவன் ஸ்பீல்பர்குடைய ஆல்வேஸ் என்ற படத்தில் கடைசியாக சினிமாவில் தோன்றினார்.

அவருடைய போர்க்கால அனுபவங்கள் மனித நேய பணியில் அவருடைய உத்வேகத்தை ஊக்குவித்தன. 1950களில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்க்காக பணியாற்றியிருந்தாலும், அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், அவருடைய வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்தார். 1988 முதல் 1992 வரை, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் மிகவும் பின்தங்கிய சமுதாயங்களில் அவர் பணியாற்றினார். 1992ஆம் ஆண்டில் ஒரு UNICEF நல்லிணக்க தூதுவராக அவர் ஆற்றிய பணியை கௌரவிக்கும் வகையில் அவருக்கு ஜனாதிபதியின் மெடல் ஆஃப் ஃப்ரீடம் வழங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டில், அமெரிக்க ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டால் வரலாற்றிலேயே மூன்றாவது மிகச் சிறந்த பெண் நட்சத்திரமாக வரிசைப்படுத்தப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ஆட்ரி காத்லீன் ரஸ்டனாக [1] பிரஸல்ஸ், பெல்ஜியத்தின் ஒரு சிறிய நகராட்சியான இக்ஸெல்ஸ்/எல்சீனின் ரூ கேயன்வெல்ட் (ஃபிரன்ச்)/கெய்ன்வெல்ட்ஸ்டிராட்டில் (டச்சு) பிறந்த இவர், ஜோசஃப் விக்டர் ஆந்தனி ரஸ்டனுக்கும் அவருடைய இரண்டாவது மனைவியாகிய முன்னாள் பேரொனஸ் எல்லா வேன் ஹீம்ஸ்டிராவுக்கும் ஒரே பிள்ளையாக இருந்தார். இவருடைய தந்தை ஆந்தனி ரஸ்டன் ஒரு ஆங்கிலேய வங்கி மேலாளராக இருந்தார்.[2] இவரது தாயாரான முன்னால் பேரொனஸ் எல்லா வேன் ஹீம்ஸ்டிரா, டச்சு கையானாவின் முன்னாள் ஆளுநரின் மகளாய் டச்சு உயர்க்குடியில் பிறந்தவராயிருந்தார்.[2] இவர் தன்னுடைய குழந்தைப்பருவத்தை டூர்னுக்கு வெளியில் உள்ள ஹூய்ஸ் டூர்ன் மாளிகையில் கழித்தார். இது பிற்பாடு வில்ஹெம் II, என்ற ஜெர்மானிய அரசர் நாடு கடத்தப்பட்டபோது அவருடைய இருப்பிடமாக விளங்கியது.

அவருடைய தந்தையார் பிற்பாடு அவருடைய தாய்வழி பாட்டியாகிய, காத்லீன் பெஹ்பர்னின் குடும்பப் பெயரை தன்னுடைய குடும்பப்பெயருக்கு முன்னால் இட்டதால் அவருடைய குடும்பப்பெயர் ஹெப்பர்ன் - ரஸ்டன் ஆனது.[2] அவருடைய தாய், யான்கீர் ஹெண்டிரிக் குஸ்டாஃப் அடால்ஃப் குவார்லஸ் வேன் உஃப்ஃபர்ட் என்ற ஒரு டச்சு பிரபுவுடனான அவருடைய முதலாவது திருமணத்தினால் இரண்டு மகன்களைப் பெற்றார். யான்கீர் ஆர்னௌட் ராபர்ட் அலெக்ஸாந்தர் “அலெக்ஸ்” குவார்லஸ் வேன் உஃப்ஃபர்ட் மற்றும் யான்கீர் இயன் எட்கர் ப்ரூஸ் குவார்லஸ் வேன் உஃப்ஃபர்ட் ஆகிய இருவரும் இவருக்கு ஒன்றுவிட்ட-சகோதரர்களானார்கள்.[2]

பெல்ஜியத்தில் பிறந்திருந்தாலும், ஹெப்பர்னுக்கு ஆங்கிலேய குடியுரிமை இருந்தது. அவர்கள் குழந்தைப் பருவத்தில் இங்கிலாந்தில் பள்ளிக்குச் சென்றார்.[3] ஹெப்பர்னுடைய தந்தையின் பணி ஒரு ஆங்கிலேய காப்பீட்டு நிறுவனத்துடன் இருந்ததால் அவர் அடிக்கடி பிரஸ்ஸல்ஸ், இங்கிலாந்து மற்றும் தி நெதர்லாண்ட்ஸ் இடையே பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது. 1935 முதல் 1938 வரை ஹெப்பர்ன் ஒரு தனியார் பெண்கள் பள்ளியான மிஸ் ரிட்ஜன்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். இது தென்கிழக்கு இங்கிலாந்தில் கெண்ட் என்ற ஊரில் எல்ஹம் என்ற கிராமத்திலிருந்தது.[4][5]

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

1935ஆம் ஆண்டில் ஹெப்பர்னின் பெற்றோர்கள் விவாகரத்து செய்தனர். நாஸி இயக்கத்திற்கு ஆதரவாளராயிருந்த[6] அவருடைய தந்தை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.[7] யூனிட்டி மிட்ஃபோர்டின் கூற்றுபடி 1930களின் மத்தியில் பெற்றோர் இருவரும் பிரித்தானிய யூனியன் ஆஃப் ஃபாஸிஸ்ட்ஸில் அங்கத்தினர்களாயிருந்தார்கள். யூனிட்டி மிட்ஃபோர்டு, எல்லா வேன் ஹீம்ஸ்டிராவின் தோழியாயிருந்து அடால்ஃப் ஹிட்லரை பின்பற்றுகிறவராயிருந்தார்.[8]

அவருடைய தந்தை விட்டு சென்றது தான் அவர் வாழ்க்கையின் மிகவும் கொடூரமான ஒரு நேரமாக இருந்ததென்று ஹெப்பர்ன் பிற்பாடு குறிப்பிட்டார். பல வருடங்களுக்குப் பின்பு செஞ்சிலுவை சங்கம் மூலமாக டப்ளினில் அவர் தன் தந்தையை கண்டுபிடித்தார். உணர்வுப்பூர்வமாக அவருடைய தந்தை பற்றற்றிருந்தாலும், ஹெப்பர்ன் அவரோடு தொடர்ந்து தொடர்பிலிருந்து, அவர் இறக்கும் வரை அவருக்கு பண உதவி அளித்து வந்தார்.[9]

1939ஆம் ஆண்டில், ஜெர்மானிய தாக்குதலிலிருந்து நெதர்லாண்ட்ஸ் ஒரு பாதுகாப்பான இடமாயிருக்குமென்று எண்ணி, அவருடைய தாயார் அவரையும் அவருடைய இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்களையும் நெதர்லாண்ட்ஸிலுள்ள ஆர்ன்ஹெமிலுள்ள அவர்களுடைய தாத்தாவின் வீட்டிற்கு கொண்டு சென்றார். 1939 முதல் 1945 வரை ஹெப்பர்ன் ஆர்ன்ஹெம் கன்சர்வேட்டரியில் வழக்கமான பள்ளி படிப்புடன் பாலேயும் பயின்றார். ஜெர்மானியர்கள் நெதர்லாண்ட்ஸின் மேல் படையெடுத்தார்கள். ஜெர்மானிய கைப்பற்றுதலின் போது, ஹெப்பர்ன் எட்டா வேன் ஹீம்ஸ்டிரா என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டார். “ஆட்ரி” என்ற ‘ஆங்கிலேயர்-போல் ஒலிக்கும்’ பெயர் அவருடைய ஆங்கிலேய பிறப்பிடங்களை மிகவும் வலுமையாக சுட்டிக்காட்டுவதால் அவருடைய தாயார் அதை மிகவும் ஆபத்தானது என்றெண்ணினார்கள். ஆகவே ஹெப்பர்ன் தன்னுடைய ஆவணங்களை இந்த புனைப்பெயருக்கு மாற்றினார். கைப்பற்றப்பட்ட ஹாலந்தில் ஆங்கிலேயராயிருப்பதில் எந்த பிரயோஜனமும் இருக்கவில்லை; அது ஆக்கிரமிக்கும் ஜெர்மானிய படைகளின் கவனத்தை ஈர்த்து சிறையடைப்பு, ஏன் நாடுகடத்தலுக்குக்கூட கொண்டு சென்றிருக்கலாம். எட்டா என்பது அவருடைய சட்டப்பூர்வமான பெயரே கிடையாது. மேலும் அது அவருடைய தாயின் பெயராகிய எல்லாவின் ஒரு வடிவமாக இருந்தது.[10]

1944ஆம் ஆண்டிற்குள் ஹெப்பர்ன் ஒரு திறமிக்க பாலே நாட்டியக்காரி ஆனார். டச்சு எதிர்ப்பிற்கு பணம் சேர்ப்பதற்காக அவர் இரகசியமாய் சிற்சில குழுக்களுக்கு நடனம் ஆடினார். “எனக்கிருந்த மிகச்சிறந்த பார்வையாளர்கள் என்னுடைய நடனத்திற்குப் பின் ஒரு துளி சப்தம் கூட எழுப்பியது கிடையாது” என்று அவர் பிற்பாடு கூறினார்.[11] ஆலைட் டி-டே அன்று தரையிறங்கிய பின்பு வாழ்க்கை நிலைமைகள் இன்னும் மோசமடைந்தன. இதைத் தொடர்ந்து ஆர்ன்ஹெம் ஆலைடின் பீரங்கித் தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டது. இது ஆபரேஷன் மார்க்கெட் கார்டனின் ஒரு பகுதியாக இருந்தது. இதைத் தொடர்ந்த டச்சு பஞ்சத்தில், 1944ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், ஜெர்மானியர்கள் ஏற்கனவே குன்றியிருந்த டச்சு மக்களின் உணவு மற்றும் எரிபொருள் வைப்புகளுக்கு மறுவழங்கல்கள் கிடைக்கும் பாதைகளை தடை செய்துவிட்டார்கள். ஜெர்மானிய கைப்பற்றுதலுக்கு டச்சு மக்கள் நடத்திய ரயில் வேலைநிறுத்தங்களுக்கு பதிலடியாக இது செய்யப்பட்டது. பலர் பசியால் வாடி தெருக்களில் குளிரினால் விறைத்து இறந்து போனார்கள். ஹெப்பர்னும் மற்ற பலரும் ட்யூலிப் பூக்களிலிருந்து மாவு உண்டாக்கி கேக்குகளும் பிஸ்கெட்டுகளும் செய்வதை கடைசி கட்ட முயற்சியாக மேற்கொண்டார்கள்.[6][12]

ஹெப்பர்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன், இயன் வேன் உஃப்ஃபோர்டு, ஒரு ஜெர்மானிய லேபர் கேம்பில் காலம் செலவழித்தார். ஊட்டச்சத்துக் குறைவினால் அவதியுற்றார். ஹெப்பர்னுக்கு தீவிரமான இரத்த சோகை, மூச்சுப் பிரச்சனைகள் மற்றும் திரவக் கோர்வை ஆகிய நோய்களும் ஏற்பட்டன.[13] 1991 ஆம் ஆண்டு ஹெப்பர்ன் கூறியதாவது, “எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. பல நேரங்களில் நான் ஒரு ஸ்டேஷனில் உட்கார்ந்திருப்பேன். பல யூதர்கள் பல தொடர்வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய முகங்களை வண்டியின் மேலிருந்து என்னால் பார்க்க முடிந்தது. ஒருமுறை எனக்கு மிகவும் நன்றாக நினைவிருக்கிறது, ஒரு சிறுவன், தன்னுடைய பெற்றோருடன் நடைமேடையில் நின்று கொண்டிருந்தான். அவன் மிகவும் ஒல்லியாக, மிகவும் பொன்னிறமாக (பிளாண்ட்), அவனைவிட மிகவும் பெரிய ஒரு மேற்சட்டையை மாட்டிக் கொண்டு தொடர்வண்டியில் ஏறினான். ஒரு குழந்தையாக மற்றொரு குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தேன்”

ஓவியம் வரைதல், ஆட்ரி ஹெப்பர்ன் நேரத்தை செலவிட பயன்படுத்திய ஒரு வழியாகும். அவர் சிறுவயதில் தீட்டிய ஓவியங்களை இப்பொழுதும் காணமுடிகிறது.[14] நாடு சுதந்திரமடைந்தபோது, ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரண நிர்வாக டிரக்குகள் தொடர்ந்து வந்தன.[15] ஒடுக்கியபாலின் (கண்டென்ஸ்ட் மில்க்) ஒரு முழு கேனை அப்படியே சாப்பிட்டு, தங்களுடைய ஓட்ஸ்கஞ்சி உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்ததால் தங்களுக்குக் கிடைத்த முதல் நிவாரண உணவுகளினால் நோயுற்றதாக ஒரு பேட்டியில் ஹெப்பர்ன் கூறினார்.[16] ஹெப்பர்னின் போர்க்கால அனுபவங்கள் அவர் UNICEF உடன் ஈடுபடுவதற்கு காரணமாயிருந்தன.[6][12]

ஆரம்பப் பணிகள்

[தொகு]

1945ஆம் ஆண்டில் யுத்தத்திற்குப் பின்பு, ஹெப்பர்ன் ஆர்ன்ஹெம் கன்சர்வேட்டரியை விட்டு, ஆம்ஸ்டெர்டாமுக்கு சென்று சோனியா கேஸ்கெல்லுடன் பாலே பாடங்களைப் பெற்றார்கள்.[17] KLMக்கான ஒரு சிறிய சுற்றுலா படத்தில் ஹெப்பர்ன் ஒரு விமானப் பணிப்பெண்ணாக தோன்றினார்.[18] இதையடுத்து தாயுடன் லண்டன் சென்றார். கேஸ்கெல், மேரி ராம்பெர்ட்டுக்கு ஹெப்பர்னை பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்ததால் ஹெப்பர்ன் “பாலே ராம்பெர்ட்டில்” பயின்று, ஒரு பகுதி நேர மாடலாக பணிபுரிந்து அவருடைய வாழ்க்கையை நடத்தி வந்தார். இறுதியாக ராம்பெர்ட்டிடம் ஹெப்பர்ன் தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து வினவினார். அவர் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து ஒரு சிறந்த வாழ்க்கைப் பணியை அமைத்துக் கொள்ளலாமென்று ராம்பெர்ட் நம்பிக்கையூட்டினார். ஆனால் சற்று உயரமாக (1.7மீ/5.6 அடி) இருந்ததும், போர்க்காலத்தின் போது மோசமான ஊட்டச்சத்துக் கொண்டிருந்ததும் அவர் ஒரு முன்னணி பாலே நாட்டியக்காரி ஆக தடைக்கற்களாக நிற்கலாமென்று கூறினார். ஹெப்பர்ன் ராம்பெர்ட்டின் மதிப்பீட்டை நம்பி, நடிப்பில் நாட்டம் காண முடிவு செய்தார். இதில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பானது அவருக்கு இருந்தது.[19] ஹெப்பர்ன் ஒரு நட்சத்திரமானபிறகு ஒரு பேட்டியில் ராம்பெர்ட் “அவர் ஒரு அற்புதமான மாணவியாயிருந்தார். அவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்திருந்தால், ஒரு தலைசிறந்த பாலே நாட்டியக்காரியாகியிருக்கலாம்” என்று கூறினார்."[20]

ஹெப்பர்னுடைய தாயார் அவர் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ஏளனமாக எண்ணப்படும் வேலைகளையும் செய்தார். அதனால் ஹெப்பர்ன் ஒரு வேலையை தேடிபிடிப்பது அவசியமாயிற்று. வாழ்க்கை முழுவதும் ஒரு கலைஞராக பயிற்சிப் பெற்றதால், நடிப்பு ஒரு விவேகமான வாழ்க்கைப் பணியாக தோன்றியது. “எனக்கு பணம் அத்தியாவசமாகத் தேவைப்பட்டது. அதில் பாலே வேலைகளை விட ₤3 அதிகம் கிடைத்தது” என்று கூறினார்.[21] டச் இன் செவன் லெஸன்ஸ (1948) என்ற கல்விப் படத்தின் மூலம் அவருடைய நடிப்புப் பணி ஆரம்பித்தது. ஹை பட்டன் ஷூஸ் மற்றும் சாஸ் பிக்கண்ட் போன்ற தயாரிப்புகளில் இசை நாடகங்களில் நடித்தார். அவருடைய நாடகப் பணி அவருடைய குரல் வலிமையாக இல்லாமல் பயிற்சி தேவைப்படுவது வெளியானது. இந்த நேரத்தின் போது அவர் நடிகர் ஃபெலிக்ஸ் அய்ல்மெரிடம் பேச்சுத்திறன் பாடங்கள் கற்றார்.[22] பகுதி நேர மாடலிங்க் எப்போதும் கிடைக்காததால், ஹெப்பர்ன் பிரிட்டனின் பட ஸ்டூடியோக்களில் பதிவு செய்தால் ஒரு கூடுதல் நடிகராக (எக்ஸ்டிரா) வேலை கிடைக்குமென்று நம்பினார்.

ஒரு முழு நீளப்படத்தில் ஹெப்பர்னின் முதல் கதாப்பாத்திரம் ஒன் வைல்ட் ஓட் என்ற ஆங்கிலேயப் படத்தில் இருந்தது. இதில் அவர் ஒரு ஹோட்டல் வரவேற்பாளராக நடித்தார். யங்க் வைவ்ஸ் டேல் , லாஃப்டர் இன் பாரடைஸ் , த லாவெண்டர் ஹில் மாப் மற்றும் மாண்டெ கார்லோ பேபி ஆகிய படங்களில் அவர் பல சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

மாண்டெ கார்லோ பேபி என்ற படத்தின் படபிடிப்பின்போது ஹெப்பர்ன் பிராட்வே நாடகமாகிய ஜிஜியில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நவம்பர் 24 1951ல் ஃபுல்டன் தியேட்டரில் துவங்கி 219 காட்சிகளை வழங்கியது.[23] எழுத்தாளர் கொலெ, முதன் முதலில் ஹெப்பர்னை கண்டதும், “இதோ! நம்முடைய ஜிஜி” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.[24] அவருடைய நடிப்பிற்காக தியேட்டர் உலக விருதை பெற்றார்.[23] தோரால்ட் டிக்கின்சனின் சீக்ரெட் பீப்பில் (1952) என்ற படம் தான் ஹெப்பர்னுடைய முதல் குறிப்பிடத்தக்க படமாகும். இளமையிலேயே திறமைமிக்க பாலே நாட்டியக்காரியாக இந்த படத்தில் நடித்தார். ஹெப்பர்ன் தன்னுடைய அனைத்து நடன காட்சிகளையும் தாமே ஆடினார்.

படத்தின் விளம்பர முன்னோட்டத்திலும் பயன்படுத்தப்பட்ட ஹெப்பர்னுடைய ரோமன் ஹாலிடே தணிக்கை சோதனையிலிருந்து

அவர்களுடைய முதல் முன்னணி கதாபாத்திரம் இத்தாலியில் படமெடுக்கப்பட்ட ரோமன் ஹாலிடே (1952)யில் கிரெகரி பெக்குடன் இருந்தது. தயாரிப்பாளர்கள் முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு எலிசபெத் டெய்லர் வேண்டுமென்றிருந்தார்கள், ஆனால் இயக்குநர் வில்லியம் வைலர் ஹெப்பர்னுடைய திரை சோதனையில் (புகைப்படக்கருவி ஓடிக்கொண்டு படமெடுத்துக் கொண்டிருக்கிறதென்பதை அறியாமல் ஹெப்பர்ன் ஆயாசமாகக் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதை இயற்கையாக படமெடுத்த படபிடிப்புகள் அவருடைய திறமைகளை வெளியாக்கின) அவரை முன்னணியில் நிறுத்துமளவுக்கு மிகவும் கவரப்பட்டு விட்டார். “அவரிடம் நான் தேடிக்கொண்டிருந்த அனைத்துமே இருந்தது: வசீகரம், கபடற்றத்தன்மை மற்றும் திறமை. அவர் கேளிக்கையாகவும் இருந்தார். அவர் முற்றிலும் வசியப்படுத்தக்கூடியவராயிருந்தார், அப்பொழுது நாங்கள், “இவர் தான் அந்த பெண்!” என்று கூறிக்கொண்டோம்.[25][25]

படத்தில் படப்பெயருக்கு மேலே கிரெகரி பெக்குடைய பெயர் எழுத்துருவிலும் கீழே “அறிமுகம் ஆட்ரி ஹெப்பர்ன்” என்றும் இருக்கவிருந்தது. படப்பிடிப்பிற்குப் பின், பெக் தன்னுடைய முகவரை அழைத்து, ஹெப்பர்ன் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதை பெறுவாரென்று சரியாக ஊகித்து, தன்னுடைய பெயரைப் போலவே பெரிய எழுத்துகளில் ஹெப்பர்னுடைய பெயரும் வருமாறு படத்தின் பெயர் அட்டவணையைத் துவங்க செய்தார்.

ஹெப்பர்னும் பெக்கும் படபிடிப்பின் போது மிகவும் நட்புடன் பழகினார்கள். அவர்கள் காதல் வயப்படுகிறார்களென்று வதந்திகள் எழுந்தன, ஆனால் இருவரும் அதை மறுத்தார்கள். எனினும், “உண்மையில், உங்களுடைய கதாநாயகனோடு நீங்கள் சற்று காதல்வயப்பட்டுத்தான் ஆக வேண்டும், அதே போல் அவரும் அப்படியே செய்ய வேண்டும். நீங்கள் காதலை சித்தரிக்கப்போவதானால், நீங்கள் அதை உணர வேண்டும். வேறு வழியில் அதை செய்யமுடியாது. ஆனால் பட சூழலுக்கு வெளியே அதைக் கொண்டு செல்வது கிடையாது என்று ஹெப்பர்ன் கூறினார்."[26] ரோமன் ஹாலிடே என்ற படத்திலிருந்து கிடைத்த உடனடி புகழ் அந்தஸ்தினால், ஹெப்பர்னுடைய சித்திரம் 7 செப்டம்பர் 1953ன் TIME இதழின் அட்டைப்படத்தில் வெளியிடப்பட்டது.[27]

ஹெப்பர்னுடைய நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பெருத்த பாராட்டைப் பெற்றது. நியூ யார்க் டைம்ஸில் எ.எச்.வீலர், “அவர் உண்மையில் படங்களுக்கு புதுமுகம் இல்லையென்றாலும், இளவரசி ஆன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆங்கிலேய நடிகையான ஆட்ரி ஹெப்பர்ன் ஒரு மெலிந்த, குறும்பு தேவதை, ஏக்கம் நிறைந்த அழகி. அவர் தன்னுடைய வாழ்க்கையில் காணக்கிடைக்காத எளிய இன்பங்களையும் காதலையும் ராஜரீகத்தன்மையோடும் குழந்தைத்தன்மையோடும் ஏற்றுக்கொண்டு களிக்கிறார். அந்த சகாப்தத்தின் முடிவை தைரியமாக ஒரு புன்முறுவலுடன் அவர் ஏற்றுக்கொண்டாலும், அவர் ஒரு நெருக்கடியான எதிர்காலத்தை எதிர்நோக்கும் சோகமான தனிமை நிறைந்த ஒரு உருவமாகவே காணப்படுகிறார்” என்று குறிப்பிட்டார்.[28] ரோமன் ஹாலிடே தன்னை ஒரு நட்சத்திரமாக்கியதால் அதை தனக்கு மிகவும் பிடித்த படமென்று பிற்பாடு ஹெப்பர்ன் நினைவுகூறினார்.

ரோமன் ஹாலிடேவிற்காக நான்கு மாதங்களுக்கு படப்பிடிப்பு முடிந்தபின், ஹெப்பர்ன் மறுபடியும் நியூயார்க்கிற்கு வந்து 8 மாதங்களுக்கு ஜிஜியில் நடித்தார். அதனுடைய கடைசி மாதத்தில் அந்த நாடகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் அரங்கேறியது.

பாராமௌண்டுடன் அவர் ஒரு எழு-பட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதில் அவர் நாடக வேலை செய்வதற்கு நேரம் கிடைக்கும் வண்ணம் ஒவ்வொரு படத்திற்குமிடையே பன்னிரண்டு மாதங்கள் இடைவெளி கிடைக்கப்பெற்றார்.[29]

ஹாலிவுட் நட்சத்திர அந்தஸ்து

[தொகு]
வார் அண்ட் பீஸில் ஹெப்பர்ன் (1956)

ரோமன் ஹாலிடேவுக்கு பிறகு, அவர் ஹம்பிரி பொகர்ட் மற்றும் வில்லியம் ஹோல்டனுடன் பில்லி வில்டருடைய ஸப்ரீனாவில் நடித்தார். ஹெப்பர்னுடைய உடையை வடிவமைக்க அவர் அப்பொழுது வளர்ந்து வந்துகொண்டிருந்த இளைய ஆடை வடிவமைப்பாளரான ஹ்யூபர்ட் டெ கிவன்சியிடம் அனுப்பப்பட்டார்.

“மிஸ் ஹெப்பர்ன்” அவரை சந்திக்க வருகிறாரென்று அவரிடம் சொல்லப்பட்டபோது கிவன்சி, காதரீனை எதிர்பார்த்திருந்தார். அவர் ஏமாற்றமடைந்து அவருக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லையென்று கூறினார். ஆனால் ஹெப்பர்ன் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு சப்ரீனாவுக்காக ஒரு சில ஆடைகளை எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் நடந்து கொஞ்சம் காலத்திற்குப் பின்பு, கிவன்சியும் ஹெப்பர்னும் ஒரு நீடித்த நட்பை துவங்கினர். அவருடைய பல ஆடை வடிவங்களுக்கு ஹெப்பர்ன் ஒரு உத்வேகமாக திகழ்ந்தார். அவர்கள் வாழ்நாள் முழுவதுக்குமான தோழமையையும் கூட்டுமுயற்சியையும் உருவாக்கினார்கள்.

சப்ரீனாவின் படபிடிப்பின்போது ஹெப்பர்னும் ஏற்கனவே திருமணமான ஹோல்டனும் காதல்வயப்பட்டார்கள். ஹெப்பர்ன் அவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற எதிர்நோக்கினார். ஹோல்டன் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்டதாக வெளிப்படுத்தியபோது அவர் அந்த உறவை முறித்துக் கொண்டார்.[30][31]

1954ஆம் ஆண்டில் ஹெப்பர்ன் மறுபடியும் நாடகத்திற்கு திரும்பி ஆண்டீன் என்ற நாடகத்தில் மெல் ஃபெர்ரர்ருடன் ஒரு தண்ணீர் தேவதையாக நடித்தார். அவரை அந்த வருடத்தின் கடைப்பகுதியில் திருமணம் செய்துகொண்டார். நாடகம் ஓடிக் கொண்டிருந்தபோது, ஹெப்பர்ன் ரோமன் ஹாலிடேவிற்காக முழு நீளபடங்களில் சிறந்த நடிகை என்ற விருதை கோல்டன் குளோபிலும் அகாடெமி விருதிலும் பெற்றார். ஆஸ்கார் விருது பெற்று ஆறு வாரங்கள் கழித்து ஆண்டீனுக்காக சிறந்த நடிகைக்கான டோனி விருதைப் பெற்றார். ஒரே வருடத்தில் சிறந்த நடிகை ஆஸ்கார் மற்றும் சிறந்த நடிகை டோனி என்ற பட்டத்தை பெறுவதில் ஆட்ரி ஹெப்பர்ன் மூன்றாவது நபரே ஆவார் (ஷர்லி பூத் மற்றும் ஈலன் பர்ஸ்டைன் ஆகியோர் மற்ற இருவர் ஆவர்).[1]

1950களின் மத்தியில், ஹெப்பர்ன் ஹாலிவுட் முழு நீளப்படங்களின் மிகப்பெரிய நட்சத்திரமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய ஃபேஷன் உத்வேகமாகவும் இருந்தார். அவருடைய கவலையற்ற மற்றும் தேவதைப் போன்ற உருவம் மற்றும் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நளினம் பிரமிக்கப்பட்டும் பின்பற்றவும் பட்டது. 1955ஆம் ஆண்டில் அவர் வர்ல்ட் பிலிம் ஃபேவரட் என்ற பட்டத்திற்காக கோல்டன் குளோப் விருதளிக்கப்பட்டார்.[32]

ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான பாக்ஸ் ஆஃபிசின் வசூல் ராணியான போது, பின்வருபவர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார். சப்ரீனாவில் ஹம்ஃப்ரி போகார்ட், வார் அண்ட் பீஸில் ஹென்ரி ஃபோண்டா, ஃபன்னி ஃபேஸில் ஃப்ரெட் ஆஸ்டெய்ர், பேரிஸ் வென் இட் சிஸிஸில்ஸில் வில்லியம் ஹோல்டனுடன், லவ் இன் த ஆஃப்டர்னூனில் மௌரிஸ் ஷெவாலியர் மற்றும் கேரி கூப்பருடன், கிரீன் மேன்ஷன்ஸில் அந்தனி பெர்க்கின்ஸுடன், த அன்ஃப்ர்கிவனில் பர்ட் லாங்கேஸ்டர் மற்றும் லில்லியன் கிஷுடன், த சில்டிரன்ஸ் ஹவரில் ஷர்லி மெக்லேன் மற்றும் ஜேம்ஸ் கார்னருடன், பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸில் ஜார்ஜ் பெப்பார்டுடன், ஷேரேடில் கேரி கிராண்டுடன், மை ஃபேர் லேடியில் ரெக்ஸ் ஹாரிஸனுடன், ஹௌ டு ஸ்டீல் எ மில்லியலின் பீட்டர் ஒ’டூலுடன் மற்றும் ராபின் அண்ட் மேரியனில் சீன் கானரியுடன் நடித்தார்.

பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸிலிருந்து (1961)

ரெக்ஸ் ஹாரிஸன் ஆட்ரி ஹெப்பர்னை தன்னுடைய அபிமான கதாநாயகியென்று அழைத்தார். ஆனால் முதலில் அவர் ஹெப்பர்ன் மை ஃபேர் லேடியில் எலிசா டூலிட்டிலாக தவறாக போடப்பட்டதாக நினைத்திருந்தார் (பல செய்திகள் அவரும் ஆங்கிலேய நடிகையும் நாட்டியக்காரியுமான ஹாரிஸனின் மனைவி, கே கெண்டலும் சிறந்த தோழிகளாக இருந்ததாக கூறுகின்றன); "ஆட்ரி ஹெப்பர்னுடன் இன்னொரு படம் செய்வது மட்டுமே எனக்கு மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் வெகுமதியாக இருக்குமென்று” கேரி கிராண்ட் நகைச்சுவை உணர்வுடன் ஒரு முறை கூறியிருந்தார்.[33] கிரகெரி பெக் ஹெப்பர்னுடைய ஆயுட்கால தோழராக இருந்தார்.

அவருடைய இறப்புக்குப் பின், பெக் கேமராவுக்கு முன் அழுதுகொண்டே ஹெப்பர்னுடைய மனம் விரும்பிய “அன் என்டிங்க் லவ்” என்ற ரவிந்தரநாத் தாகூர் கவிதையை மொழிந்தார்.[34]

அந்தக் காலங்களில் போகார்ட்டும் ஹெப்பர்னும் ஒத்துப் போகவில்லையென்று பொதுவாக நம்பப்பட்டது. எனினும், “சில நேரங்களில் ‘முரட்டு மனிதர்கள்’ என்று பேசப்படுபவர்கள் தான் என்னோடு மிகவும் இளகிய மனதுடன் பழகினர். அதில் போகியும் ஒருவராயிருந்தார்” என்று ஹெப்பர்ன் கூறியதாக சொல்லப்பட்டது."[35]

ஃப்ரெட் ஆஸ்டெய்ருடன் நடனமாட வாய்ப்பு கிடைத்ததால், 1957ஆம் ஆண்டில் வெளியான ஃபன்னி பேஸ் அவருடைய அபிமான படங்களில் ஒன்றாக இருந்தது. இதன் பிறகு 1959களில் அவர்களுடைய மிகவும் தைரியமான கதாபாத்திரங்களில் ஒன்றான தி நன்ஸ் ஸ்டோரி வெளியானது. ஃபில்ம்ஸ் இன் ரிவ்யு கூறியதாவது: “அவரை ஒரு நடிகையாக இல்லாமல் ஒரு ஆடம்பரமான குழந்தை/பெண்ணாக மட்டும் பார்த்தவர்களுக்கு இந்த நடிப்பு ஒரு பெரிய பாடமாகும். ஸிஸ்டர் லூக் ஆக அவர் நடித்தது திரையிலேயே மிக பிரம்மாண்டமான நடிப்புகளில் ஒன்றாகும்".[36]

ஆட்டோ ஃபிராங்க், 1959 படமான தி டையரி ஆஃப் ஆன் பிராங்கில் தன்னுடைய மகளுடைய ஆன் கதாபாத்திரத்தை அவர் சித்தரிக்கவும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஹெப்பர்ன் ஆன் பிறந்த அதே ஆண்டு பிறந்து 30 வயதாகியிருந்ததால், ஒரு வளர் இளம் குழந்தையின் பாத்திரத்தை நடிக்க மிகவும் வயதானவராக எண்ணினார். அந்த கதாபாத்திரம் கடைசியில் மில்லி பெர்க்கின்ஸுக்கு வழங்கப்பட்டது.

1961ஆம் ஆண்டின் பிரெக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸில் ஹெப்பர்னுடைய ஹாலி கொலைட்லி அமெரிக்க சினிமாவில் வரலாற்றுப் புகழ் எட்டியது. அந்த பாத்திரம் தான் “என் வாழ்க்கையிலேயே மிகவும் பிரகாசமானது” என்று அழைத்தார்."[37] இந்தப் பாத்திரத்தை நடிப்பதில் எதிர் கொண்ட சவால்களைப் பற்றி வினவியபோது, “நான் மிகவும் உள்நோக்கியுள்ள ஒரு பெண். ஒரு வெளிநோக்குடைய பெண்ணாக நடிப்பது தான் என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான செயலாக இருந்தது.”[38] படத்தில் அவர் கிவென்சியுடன் சேர்ந்து வடிவமைத்த நவநாகரீக ஆடைகளணிந்து, தன்னுடைய பழுப்புநிற முடியில் பொன்னிற கோடுகளை இட்டுக் கொண்டார். இந்த பாணியை படப்பிடிப்பிற்கு வெளியேயும் வைத்திருந்தார்.

ஷேரேட் என்ற நகைச்சுவை திகில் படத்திலிருந்த ஒரு காட்சியில் ஹெப்பர்ன் (1963).

1963ஆம் ஆண்டில் அவர் ஷேரேட் என்ற படத்தில் முதல் முறையாகவும் ஒரே முறையாகவும் கேரி கிராண்டுடன் முன்னணியில் நடித்தார். இவர் ரோமன் ஹாலிடே மற்றும் சப்ரீனா போன்ற படங்களில் முன்னணி நடிகர் பாத்திரத்திலிருந்து பின்வாங்கியிருந்தார். அவர்களிருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு, ஹெப்பர்னுடைய கதாபாத்திரம் தன்னுடைய கதாபாத்திரத்தை காதல்வயத்தில் பின் தொடர்வது போன்று திரைக்கதையை மாற்றியமைக்குமாறு கிராண்ட் கேட்டுக்கொண்டார்.

ஷேரேடிற்கு பின்பு பேரிஸ் வென் இட் சிஸில்ஸ் வெளியானது. இந்த படத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு சப்ரீனாவில் முன்னணி நடிகராக நடித்த வில்லியம் ஹோல்டனுடன் இணைந்து நடித்தார். “மார்ஷ்மெல்லோ-வெய்ட் ஹொக்கம்”,[39] என்று அழைக்கப்பட்ட படம் “சீராக கிரமப்படுத்தப்பட்டது”;[40] திரைக்குப் பின்னே படப்பிடிப்புக் களம் பல பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தது: தற்போது-திருமணமான நடிகையுடன் ஹோல்டன் மறுபடியும் காதலை அனல் மூட்டியெழுப்ப முயன்றார், ஆனால் வெற்றிபெறவில்லை; அதோடு அவருடைய குடிப்பழக்கம் இணைந்துகொண்டு தயாரிப்புக்குழுவுக்கு சூழ்நிலையை பெருத்த சவாலாக்கியது. ஹெப்பர்னும் ஒத்துழைக்கவில்லை: படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் சிறப்புப்பண்புகள் எதுவும் இல்லாத தினசரிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஒளிப்பதிவாளர் கிளாட் ரெனா நீக்கப்பட வேண்டுமென்று வேண்டினார்.[40] மூடநம்பிக்கையுடன் உடைமாற்றும்-அறை 55 தான் வேண்டுமென்று அடம்பிடித்தார் (ரோமன் ஹாலிடேவிற்கும் பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸிலும் அவருக்கு ஆடை-மாற்றும் அறை 55 கிடைத்திருந்தது). அவருடைய நெடுங்கால வடிவமைப்பாளரான கிவென்சி, படத்தில் தன்னுடைய வாசனை திரவியத்திற்கான பெருமையை ஏற்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.[40]

1964ஆம் ஆண்டில் ஹெப்பர்ன் மை ஃபேர் லேடியில் முன்னணி நடிகையாக இருந்தார். கான் வித் தி விண்டிற்கு பிறகு இதுவே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.[41]

ஜூலி ஆண்ட்ரூஸுக்கு பதிலாக ஹெப்பர்ன் எலிசா டூலிட்டிலாக நடித்தார். பிராட்வேயில் ஜூலி ஆண்ட்ரூஸ் இந்தப் பாத்திரத்தை முதலன் முதலில் தோற்றுவித்திருந்தார், ஆனால் அதுவரை அவருக்கு சினிமாவில் அனுபவம் இருக்கவில்லை. ஹெப்பர்ன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னமே ஆண்ட்ரூஸை எடுக்க வேண்டாமென்று முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஹெப்பர்ன் முதலில் அந்த பாத்திரத்தை மறுத்து, அதை ஆண்ட்ரூஸுக்கு அளிக்க ஜாக் வார்னரிடம் கூறினார். ஆனால் ஒன்று அவர் அல்லது அந்த இடத்திற்கு போட்டியிட்டுக்கொண்டிருந்த எலிசபெத் டெய்லர் அதில் நடிப்பார்களென்று கூறப்பட்டபோது அவர் அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.

பாடாத ஒருவரை ஒரு இசைநாடகத்தில் முன்னணி வேடத்தில் போடுவது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது. பல விமர்சகர்கள் ஒரு காக்னி பூக்காரியாக ஹெப்பர்ன் நம்பப்படமுடியாதென்றும், எலிசா 20 வயதுள்ள பெண்ணாக இருக்கவிருந்ததால், 35 வயது நிரம்பிய ஹெப்பர்ன் அந்த பாத்திரத்திற்கு சற்று வயதானவராக இருந்ததாக கூறினார்கள். எனினும், சவுண்ட்ஸ்டேஜ் என்ற இதழின்படி, “படத்தில் ஜூலி ஆண்ட்ரூஸ் இல்லாவிட்டால், ஆட்ரி ஹெப்பர்ன் தான் மிகச் சிறந்த தேர்வு என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.[41]

ஹெப்பர்ன் குரல் பதிவு செய்தார்; ஆனால் பிற்பாடு அவருடைய குரல் மார்னி நிக்ஸனுடைய குரலினால் மறுபதிவு செய்யப்படுமென்று கூறப்பட்டார். அவர் தயாரிப்புக் களத்தை விட்டு வெளியே சட்டென்று போய்விட்டார், ஆனால் அடுத்த நாள் சீக்கிரமாகவே வந்து தன்னுடைய “மோசமான” நடத்தைக்காக மன்னிப்பு கேட்டார். ஹெப்பர்னுடைய அசல் குரலில் பதிவு செய்யப்பட்ட பல பாடல்கள் இன்னமும் கிடைக்கப்பெற்று விளக்கப்படங்களிலும் படத்தின் DVD வெளியீட்டிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் LPயிலும் CDயிலும் இந்நாள் வரை நிக்ஸனுடைய குரல் தான் வெளியிடப்படுகிறது.

படத்தில் அவருடைய சொந்த குரலில் சில தக்கவைக்கப்பட்டன: “ஜஸ்ட் யு வெய்ட்” என்ற பாட்டின் ஒரு பகுதி மற்றும் “ஐ குட் ஹாவ் டேன்ஸ்ட் ஆல் நைட்” என்ற வரிகளின் ஒரு வரி. இவ்வளவு அழுத்தம் திருத்தமான குரலையுடைய ஒருவருடைய குரலின் மேல் ஒலிச்சேர்க்கை செய்வதைக் குறித்து வினவப்பட்டபோது, “ மிக எளிதாக புலப்பட்டு விடுகிறது, இல்லையா? அதே நேரத்தில் ரெக்ஸ் தன்னுடைய அனைத்து பாடல்களையும் நடித்துக்கொண்டே பதிவு செய்துகொண்டிருந்தார்… அடுத்த முறை - ” என்று ஏதோ சொல்வதை தவிர்த்து தன் உதடுகளைக் கடித்துக் கொண்டார்.[38]

ஒலிச்சேர்க்கையைத் தவிர்த்து ஹெப்பர்னுடைய நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பல விமர்சகர்கள் ஒத்துக்கொண்டனர். “ஆட்ரி ஹெப்பர்ன் அற்புதமாக இருந்தார். அவர் தான் காலாகாலங்களுக்கு எலீசாவாக நினைவுக்கூறப்படுவார்” என்று ஜீன் ரிங்கோல்ட் கூறினார்.[41]

ஹெப்பர்னுடைய பாத்திரத்திற்கான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சர்ச்சை 1964-65 அகாடெமி விருதுகள் நெருங்கும் போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. அதில் சிறந்த நடிகைக்காக ஹெப்பர்ன் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் ஆண்ட்ரூஸ் மேரி பாப்பின்ஸ் என்ற படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். விருதுகள் நிகழ்ச்சி நெருங்க நெருங்க ஊடகங்கள் இரு நடிகைகளுக்குமிடையே ஒரு போட்டி மனப்பான்மையைக் கிளர முயற்சி செய்தார்கள், ஆனால் இரு பெண்களும் அப்படி எந்த காழ்ப்புணர்ச்சிகளும் தங்களுக்கிடையே இல்லையென்றும் இருவரும் நன்றாகவே பழகுவதாகவும் கூறினார்கள். ஆண்ட்ரூஸ் விருதை தட்டி சென்றார்.

டூ ஃபார் த ரோட் ஒரே திசையில் செல்லாத விவாகரத்துப் பற்றிய ஒரு புதுமையான படமாகும். ஹெப்பர்ன் முன் காணாத அளவுக்கு சுதந்தரமாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அந்த மகிழ்ச்சிக்கு ஆல்பர்ட் ஃபின்னி காரணமாக இருந்ததாகவும் இயக்குநர் ஸ்டான்லி டானன் கூறினார்.[42]

1967ஆம் ஆண்டில் வெய்ட் அண்டில் டார்க் ஒரு கடினமாக படமாக இருந்தது. படபடக்கும் கிளர்ச்சிப்படமான இந்த படத்தில் ஹெப்பர்ன் பீதியுறும் ஒரு பார்வையற்ற பெண்மணியின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இது மெல் ஃபெர்ரரால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய விவாகரத்தின் விளிம்பில் படமெடுக்கப்பட்டது. இந்த மன அழுத்தத்தில் ஹெப்பர்ன் பதினைந்து பவுண்டுகள் இழந்ததாக கூறப்படுகிறது. மறுபக்கத்தில் மகிழ்ச்சியூட்டும் விதத்தில் உடன் - நடிக்கும் ரிசர்ட் கிரென்னா மிகவும் நகைச்சுவையுணர்வுடையவராகவும், இயக்குநர் டெரென்ஸ் யங்குடன் வேலை செய்வதில் பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் இருந்ததாக அவர் கூறினார். 23 வருடங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய அபிமான நட்சத்திரத்தின் மேல் குண்டு வீசியதைப் பற்றி நகைச்சுவையுணர்வுடன் பரிமாறிக் கொண்டார்கள். அவர் ஆர்ன்ஹெம் யுத்தத்தில் ஒரு ஆங்கிலேய இராணுவ பீரங்கி படைத்தலைவராக இருந்திருந்தார். ஹெப்பர்னின் நடிப்பு அகாடெமி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது.

அவ்வப்போது ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள்

[தொகு]

சினிமாவில் பதினைந்து வருடங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்துவிட்டு 1967 முதல் ஹெப்பர்ன் அவ்வபோது மட்டுமே நடித்தார். ஃபெர்ரருடன் விவாகரத்தான பின்பு, அவர் இத்தாலிய மனநல மருத்துவரான டாக்டர். ஆண்டிரியா டாட்டியை திருமணம் செய்தார். ஏறக்குறைய முழு படுக்கை-ஓய்வு தேவைப்பட்ட ஒரு கடினமான மகப்பேற்றிற்குப் பின்பு தன்னுடைய இரண்டாவது மகனைப் பெற்றார். டாட்டியிடமிருந்து பிரிந்தபின், ஷான் கானரியுடன் நடித்து பழங்கால கதையை சித்தரிக்கும் ராபின் அண்ட் மேரியன் என்ற படத்தின் வாயிலாக 1976ஆம் ஆண்டில் மறுபடியும் சினிமாவில் வர முயற்சி செய்தார். ஆனால் அது அவ்வளவாக வெற்றிக்காணவில்லை.

ஹெப்பர்ன் இறுதியாக 1979ஆம் ஆண்டில் சினிமாவிற்கு மறுபடியும் திரும்பினார். இந்த முறை அவர் பிலட்லைனின் சர்வதேச தயாரிப்பில் எலிசபெத் ராஃபே என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவும் டெரென்ஸ் யங்கால் இயக்கப்பட்டது. முன்னணி நடிகர்களான பென் கசாரா, ஜேம்ஸ் மேஸன் மற்றும் ரோமி ஷ்னைடர் உடன் நடித்தார்கள். கதாசிரியரான சிட்னி ஷெல்டன் படத்துடன் இணைந்து செல்லும்படியாக தன்னுடைய புதினத்தை திருத்தியமைத்தார். ஹெப்பர்னுடைய கதாபாத்திரத்தை அவருடைய வயதுக்கு ஒத்துப் போகும்படி இன்னும் வயது முதிர்ந்தவராக்கினார். பரவலாக பயணம் செய்யும் பணம்பெருத்தவர்கள் மத்தியிலான காதல் கதையான இந்த படம், விமர்சகர்கள் மத்தியிலும் வசூலிலும் பெருத்த தோல்வியடைந்தது.

ஹெப்பர்ன் ஒரு சினிமா படத்தில் முன்னணி நடிகையாக தே ஆல் லாஃப்ட் என்ற நகைச்சுவைப்படத்தில் கடைசி முறையாக நடித்தார். இதில் பென் கசாரா உடன் நடிகராக இருந்தார். பீட்டர் பொக்டானொவிச் இயக்கியிருந்தார். இந்த படத்தின் நட்சத்திரங்களில் ஒருவராயிருந்து, பொக்டானொவிச்சின் பெண் நண்பராயிருந்த டாரதி ஸ்டிராட்டனின் கொலையினால் இந்த படம் சற்றே முக்கியத்துவம் மழுங்கிவிட்டது. படம் ஸ்டிராட்டனின் இறப்பிற்குப் பின் வெளியிடப்பட்டது ஆனால் குறைந்த காலங்கள் மட்டுமே ஓடியது. 1987ஆம் ஆண்டில் ராப்ர்ட் வாக்னர் முன்னணி நடிகராக உடன் நடித்து தொலைக்காட்சிக்காக செய்யப்பட்ட ஒரு கேளிக்கை, நகைச்சுவை படமான லவ் அமங்க் தீவ்ஸில் நடித்தார். இதில் ஹெப்பர்னின் பல படங்களிலிருந்து சில அம்சங்கள் பெறப்பட்டன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஷேரேட் மற்றும் ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன் ஆகும்.

கடைசி கதாபாத்திரம், 1988ஆம் ஆண்டில் படமெடுக்கப்பட்ட ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் ஆல்வேஸ் என்ற படத்தில் ஒரு குறுகிய நேரமே தோன்றும், தேவதையின் வேடமாகும். இந்த படம் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. அவருடைய வாழ்க்கையின் இறுதி மாதங்களில் ஹெப்பர்ன் இரு கேளிக்கை-சம்பந்தமான திட்டப்பணிகளைப் பூர்த்தி செய்தார்: ஒன்று, கார்டன்ஸ் ஆஃப் தி வர்ல்ட் வித் ஆட்ரி ஹெப்பர்ன் என்று தலைப்பிடப்பட்ட ஒரு தொலைக்காட்சி விளக்கப்பட தொடரை நடத்தியிருந்தார். இது அவர் இறந்த அடுத்த நாள் PBSல் முதல் முறையாக வெளியானது. இரண்டாவது, குழந்தைகளின் பாரம்பரிய கதைத் தொகுப்பை படித்து பதிவு செய்த ஆல்பம் ஆட்ரி ஹெப்பர்ன்ஸ் என்சாண்டட் டேல்ஸ் ஆகும். இது அவர் இறந்த பின் அவருக்கு குழந்தைகளுக்கான சிறந்த படிக்கப்பட்ட ஆல்பம் என்ற பிரிவில் ஒரு கிராமி விருதை சம்பாதித்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]
1955ம் ஆண்டில் வார் அண்ட் பீஸ் படப்பிடிப்புக் களத்தில் ஆட்ரி ஹெப்பர்னும் மெல் ஃபெர்ரரும்.

1952ஆம் ஆண்டில் அவர் இளைஞரான ஜேம்ஸ் ஹான்சனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தார்.[43] அவர் அதை “கண்டதும் காதல்” என்று கூறியிருந்தார். எனினும் திருமண உடை தைத்து பொருத்திய பின், தேதிக் குறிக்கப்பட்டபின், அவர்கள் இருவருடைய பணிகளினால் ஒருவரோடு ஒருவர் அருகே நேரம் செலவழிக்க நேரம் அளிக்கமுடியாததால், அந்த திருமணம் சரியாக அமையாது என்று ஹெப்பர்ன் முடிவு செய்தார்.[44] ஹெப்பர்ன் இருமுறை திருமணம் செய்தார். ஒருமுறை அமெரிக்க நடிகரான மெல் ஃபெர்ரர், அதற்கு பிறகு, இத்தாலிய மருத்துவரான ஆண்டிரியா டாட்டி. இருவருடனும் ஒவ்வொரு மகனைப் பெற்றார். 1960ஆம் ஆண்டில் ஃபெர்ரருடன் ஷானையும், டாட்டியுடன் 1970ஆண்டில் லூகாவையும் பெற்றார் – . மூத்த மகனுக்கு புதின ஆசிரியர் ஏ.ஜெ. கிரானின் ஞானத்தந்தையாயிருந்தார். இவர் ஹெப்பர்னுக்கு அருகே லூசர்னில் வசித்து வந்தார்.

கிரகெரி பெக் வைத்திருந்த ஒரு விருந்தில் ஹெப்பர்ன் மெல் ஃபர்ரரை சந்தித்தார். அவரை லிலி என்ற படத்தில் பார்த்து அவருடைய நடிப்பில் வசீகரிக்கப்பட்டிருந்தார்.[45] ஃபெர்ரர் பிறகு ஆண்டின் என்ற நாடகத்திற்கான வசனங்களை அனுப்பினார். ஹெப்பர்ன் அந்த கதாப்பாத்திரத்தை நடிக்க ஒத்துக்கொண்டார். ஒத்திகைகள் ஜனவரி 1954ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. செப்டம்பர் 24ம் தேதி ஹெப்பர்னும் ஃபெர்ரரும் திருமணம் செய்துகொண்டார்கள்.[46] கிசுகிசுப்பு இதழ்கள் இந்த திருமணம் நீடிக்காதென்று வலியுறுத்தின. ஆனால் ஹெப்பர்ன் தாங்கள் பிரிக்கமுடியாத ஜோடியென்றும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஃபெர்ரருக்கு மோசமான கோப சுபாவம் உண்டென்று ஒத்துக் கொள்ளத்தான் செய்தார்.[47] ஃபெர்ரர் ஹெப்பர்னை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாக வதந்திகள் பரவி அவர் ஸ்வெங்காலி (ஆதிக்கவாதி) என்று அழைக்கப்பட்டார்.[48] “மெல் அவரில் பாதிப்பு ஏற்படுத்துகிறார் என்று யோசித்துக்கொள்ளும்படி ஆட்ரி வைத்துக்கொள்கிறார்” என்று வில்லியம் ஹோல்டன் கூறியிருந்ததாக சொல்லப்பட்டது.

தங்களுடைய முதல் குழந்தையைப் பெறுவதற்கு முன், ஹெப்பர்ன் இரண்டு கருச்சிதைவுகளை அனுபவித்தார். முதலாவது மார்ச் 1955ம் ஆண்டு நடந்தது. 1959ம் ஆண்டில், தி அன்ஃபர்கிவன் என்ற படத்திற்காக படமெடுத்துக்கொண்டிருக்கும்போது அவர் ஒரு குதிரையிலிருந்து ஒரு பாறையின் மீது விழுந்து முதுகை உடைத்துக்கொண்டார். பல வாரங்கள் மருத்துவமனையில் கழித்தார். இதன் பின் ஒரு கருச்சிதைவு ஏற்பட்டது. அவருடைய உடல் மற்றும் மன அழுத்தத்தினால் அப்படி நடந்ததென்று கூறப்பட்டது. அவர் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, செல்லப்பிராணியாக வைத்துக்கொள்வதற்காக கிரீன் மான்ஷன்ஸ் என்ற படத்திலிருந்த மான்குட்டியை மெல் ஃபெர்ரர் அவருக்காகக் கொண்டுவந்தார். அவர் அவனை பிப்பின் என்பதற்கு சுருக்கமாக இப் என்று அழைத்தார்.

ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடிக்கு “ஹாப்பி பர்த் டே மிஸ்டர். பிரஸிடென்ட்” என்ற பாடலை மர்லின் மன்றோ பாடிய ஒரு வருடத்திற்கு பிறகு ஜனாதிபதியுடைய அபிமான நடிகையான ஹெப்பர்ன், அவருக்கு “ஹாப்பி பர்த் டே, டியர் ஜாக்” என்று பாடினார். அது அவருடைய இறுதி பிறந்தநாளாகிவிட்டது (1963ம் ஆண்டு மே 29ம் தேதி).[49]

ஹெப்பர்ன் பல செல்லப்பிராணிகளை வைத்திருந்தார். அதில் மிஸ்டர் ஃபேமஸ் என்று அழைக்கப்பட்ட யார்க்ஷயர் டெரியர் என்ற ஒரு நாயும் ஒன்று. அது ஒரு காரால் அடிப்பட்டு செத்துப்போனது. அவரை சந்தோஷப்படுத்துவதற்காக, மெல் ஃபெர்ரர் அவருக்கு அசாமிலிருந்து அசாம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு யார்க்ஷயரை வாங்கிவந்தார். இப் என்ற செல்லப்பிராணியும் வைத்திருந்தார்; ஒரு குளியல் தொட்டியை வைத்து அவனுக்கு ஒரு படுக்கையை செய்தார்கள். ஷான் ஃபெர்ரர் காக்கி என்று பெயரிடப்பட்ட ஒரு காக்கர் ஸ்பானியல் (நீண்ட காதுகளுடன் பட்டுபோன்ற மேனியுள்ள ஒருவகை நாய்) வைத்திருந்தார். ஹெப்பர்ன் சற்று வயது முதிர்ந்தவரானபோது, இரண்டு ஜாக் ரஸ்ஸல் டெரியர்கள் வைத்திருந்தார். ஃபெர்ரருடனான திருமணம் 1968ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை, 14 ஆண்டுகள் நீடித்தது; ஹெப்பர்ன் அந்த திருமணத்தில் மிக அதிகமான நேரம் இருந்துவிட்டதாக அவர்களுடைய மகன் சொன்னதாக கூறப்பட்டது. அவர்களுடைய திருமணத்தின் பிந்தைய பகுதியில் ஃபெர்ரர், பக்கத்தில் ஒரு பெண் தோழி வைத்திருந்ததாகவும், மறுபுறம் ஹெப்பர்ன், டூ ஃபார் த ரோடில் உடன் - நட்சத்திரமான ஆல்பர் ஃபின்னியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் வதந்திகள் பரவின. ஹெப்பர்ன் அந்த வதந்திகளை மறுத்தார். ஆனால் இயக்குநர் ஸ்டான்லி டோனென், “ ஆல்பர்ட் ஃபின்னியுடன் அவர் ஒரு புதிய பெண்ணைப் போலிருந்தார். அவருக்கும் ஆல்பிக்கும் இடையே ஏதோ அற்புதமான ஒன்று இணைக்கிறது; அவர்கள் குழந்தைகளைப் பெற்ற ஒரு ஜோடியைப் போல் காட்சியளிக்கிறார்கள். மெல் படப்பிடிப்புக்களத்தில் இல்லாதபோது இருவரும் ஜொலித்தார்கள். மெல் படப்பிடிப்புக்களத்தில் இருக்கும்போது வேடிக்கையாக இருக்கும். ஆட்ரியும் ஆல்பியும் சற்று கண்டிப்பாக நடந்துகொள்வார்கள். பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கும்” என்று கூறினார்."[50] மெல் - ஹெப்பர்ன் ஜோடி விவாகரத்துக்கு முன் பிரிந்தார்கள்.

ஒரு சொகுசுக் கப்பலில் ஏதோ ஒரு கிரேக்க பாழிடங்களைப் பார்வையிட சுற்றுலாவில் செல்லும் போது இத்தாலிய மன நல மருத்துவரான ஆண்டிரியா டாட்டியைக் கண்டு அவர் மீது காதல் கொண்டார். மேலும் குழந்தைகள் பெற்று சாத்தியமானால் வேலை செய்வதை நிறுத்திவிடலாமென்று அவர் நம்பினார். 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி அவரை மணந்துகொண்டார். டாட்டி ஹெப்பர்னை நேசித்து, ஷானும் அவரை நன்றாக விரும்பி, அவரை “இன்பமானவர்” என்று அழைத்தார். ஆனால் அவர் ஹெப்பர்னைவிட இளைய பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். தே ஆல் லாஃப்ட் என்ற படத்திற்கான DVD சிறப்பம்சங்களில் வெஸ் ஆண்டர்சன் நடத்திய ஒரு பேட்டியில் இயக்குநர் பீட்டர் பொக்டானவிச் ஹெப்பர்னும் பென் கசாராவும் காதலித்து, பிளட்லைன் (1979) படப்பிடிப்பின் போது ஒரு தொடர்பு வைத்திருந்ததாகவும் சாதிக்கிறார். அந்த தொடர்பு சிறிது நாட்களே நீடித்தாலும், தே ஆல் லாஃப்டில் (1981) அவர்கள் இருவரும் நடிக்கவிருந்த கதாபாத்திரங்களுக்கு அது பெருத்த உத்வேகமாக இருந்தது. டாட்டி உடனான திருமணம் பதிமூன்று வருடங்கள் நீடித்து, 1982ம் ஆண்டு முடிந்தது. அதற்குள் லூகாவும் சானும் ஒரு தனியாக வாழும் தாயுடன் வாழும் அளவுக்கு முதிர்ச்சிப் பெற்றுவிட்டதாக ஹெப்பர்ன் கருதினார். ஃபெர்ரருடன் ஹெப்பர்ன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டாலும் (அவருடைய வாழ்க்கையின் மீதமுள்ள பகுதியில் இரண்டு முறை மட்டுமே பேசினார்), லூகாவுக்காக டாட்டியுடன் தொடர்பிலிருந்தார். 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பெருங்கூடல் அகநோக்கல் செயல்முறையின் சிக்கல்களின் விளைவால் ஆண்டிரியா டாட்டி இறந்தார். தொண்ணூறு வயதில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மெல் ஃபெர்ரர் இறந்தார்.

1969ம் ஆண்டு லூகாவுடன் கர்ப்பமாக இருக்கும்போது ஹெப்பர்ன் இன்னும் அதிக கவனமாயிருந்தார்; பல மாதங்கள் ஓய்வெடுத்து, லூகாவை அறுவைசிகிச்சை மூலமாக பிரசவிக்கும் முன் ஓவியம் தீட்டி நேரத்தை செலவிட்டார். 1974ம் ஆண்டு அவருடைய இறுதி கருச்சிதைவு ஏற்பட்டது.[51] ஹெப்பர்ன் “டைம் டெஸ்டட் பியூட்டி டிப்ஸ்” (அதன் ஆசிரியர் நகைச்சுவை கலைஞர் சாம் லெவன்சன்னாக இருந்த போதும்) என்ற கவிதையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறார்.[52] இதை அவர் தன் மகன்களுக்கு ஒப்புவிப்பார். “ஃபார் எ ப்யூட்டிஃபுல் ஹேர், லெட் எ சைல்ட் ரன் ஹிஸ் ஆர் ஹெர் ஃபிங்கர்ஸ் த்ரூ இட் ஒன்ஸ் எ டே (அழகான முடி பெறவேண்டுமானால் ஒரு குழந்தை தன் விரல்களை ஒரு நாளுக்கு ஒரு முறை தன்னுடைய முடியினூடாக அவைகளை செலுத்த வேண்டும்) ” மற்றும் “ஃபார் எ ஸ்லிம் ஃபிகர் ஷேர் யுவர் ஃபுட் வித் த ஹங்கிரி (உடல் நலனுடன் இருக்க உங்கள் உணவை பசியுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்)” போன்ற வரிகள் அந்த கவிதையில் இடம்பெற்றன.

1980ம் ஆண்டு முதல் அவருடைய மரணம் வரை, அவர் நடிகர் ராபர்ட் வால்டர்ஸுடன் வாழ்ந்தார். 63 வயதில் குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) புற்றுநோயால் அவர் தன்னுடைய வீட்டில் இறந்தார்.[53][54][55]

UNICEFக்கான பணி

[தொகு]

ஹெப்பர்னுடைய இறுதி சினிமா நடிப்பிற்குப் பின், அவர் யுனைடட் நேஷன்ஸ் சில்ட்ரன்ஸ் ஃபண்டின் (UNICEF) நல்லிணக்க தூதுவராக நியமிக்கப்பட்டார். ஒரு குழந்தையாக ஜெர்மன் ஆதிக்கத்தின் இடர்களை அனுபவித்த அவர் கிடைத்த அந்த நல்ல அதிர்ஷ்டத்திற்காக நன்றியுள்ளவராயிருந்து, தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை மிக ஏழ்மையான நாடுகளிலுள்ள வறுமையால் வாடும் குழந்தைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டார். அவர் பல மொழிகளைப் பேசியதால் அவருடைய பயணங்கள் எளிதானது: அவர் ஃப்ரென்சு, இத்தாலியன், ஆங்கிலம், டச்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைப் பேசினார்.[சான்று தேவை]

1954ம் ஆண்டில் வானொலி நிகழ்ச்சிகள் துவக்கி, 1950களில் UNICEFக்காக அவர் பணிபுரிந்திருந்தாலும் இது மிக உயர்மட்ட அர்ப்பணிப்பாக இருந்தது. அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள், அவருடைய மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் இறக்கின்ற உதவியற்ற குழந்தைகளைப் பற்றி நினைத்தாலே அவருடைய உள்ளம் பற்றி எரிந்ததாக கூறினர். 1988ம் ஆண்டு முதல் முறையாக தளப்பணிக்கு எத்தியோப்பியாவுக்கு சென்றார். மெக்’எலேவில் 500 பசியில் வாடுகின்ற குழந்தைகளைக் கொண்ட ஒரு அனாதை ஆசிரமத்திற்கு அவர் சென்றார். அந்த ஆசிரமத்திற்கு UNICEF உணவு அனுப்பிக்கொண்டிருந்தது. அந்த பயணத்தைக் குறித்துக் கூறும்போது, “ என்னுடைய உள்ளம் உடைந்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு மில்லியன் மக்கள் பசியால் சாகக்கிடக்கிறார்களென்பதை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. அதில் பலர் குழந்தைகள். [மேலும்] [அவர் கூறியவாறே] உணவு இல்லையென்றில்லை, டன் கணக்கில் உணவு ஷோவா என்ற வட துறைமுகத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறது. விநியோகம் செய்யமுடியவில்லை. கடந்த இளவேனிற்காலத்தில், செஞ்சிலுவை சங்கம் மற்றும் UNICEF பணியாளர்கள், ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருந்த இரண்டு போர்களால், வட மாகாணங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையிடப்பட்டார்கள்… நான் கலகமூட்டும் நாட்டிற்குள் சென்றேன். அங்கு பத்து நாட்கள் ஏன், மூன்று வாரங்களுக்குக் கூட உணவை தேடி தாய்மார்களும் அவர்களுடைய குழந்தைகளும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் வனாந்தரத்தின் தரையில் அப்படியே தற்காலிக கூடாரங்களில் இருந்துவிடுகிறார்கள். அங்கு அவர்கள் இறந்துக்கூட போகலாம். கொடுமை. அந்த காட்சியை என்னால் தாங்கவே முடியவில்லை. ‘மூன்றாவது உலகம்’ என்ற பதம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனென்றால், நாமெல்லாரும் ஒரே உலகத்தார் தான். மனிதகுலத்தின் பெரும்பாலானோர் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறார்களென்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.” என்று கூறினார்.[56]

ஆகஸ்ட் மாதம் 1988ம் வருடம், ஹெப்பர்ன் துருக்கிக்கு ஒரு நோய்த்தடுப்பு பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார். UNICEF என்னவெல்லாம் செய்யமுடியுமென்பதற்கு துருக்கி ஒரு “அற்புதமான எடுத்துக்காட்டு” என்று கூறினார். அந்தப் பயணத்தைக் குறித்து, “இராணுவம் எங்களுக்கு டிரக்குகளை அளித்தார்கள், மீன் விற்பவர்கள் தங்களுடைய வாகனங்களை தடுப்புமருந்துகளுக்காக வழங்கினார்கள். தேதிகள் குறிக்கப்பட்டபின், முழு நாட்டிற்கும் நோய்த்தடுப்பு மருந்து வழங்க பத்து நாட்களே ஆனது. பரவாயில்லை, இல்லையா!” என்றார்.

அக்டோபரில், ஹெப்பர்ன் தென் அமெரிக்காவுக்கு சென்றார் வெனிஸுவாலா மற்றும் ஈக்வடாரில் ஹெப்பர்ன் காங்கிரஸிடம், “ சின்னஞ்சிறிய மலைவாழ்க் குடிகள், சேரிகள், மற்றும் குடிசைவாழ் மக்கள் முதல் முறையாக ஒரு அற்புதத்தின் மூலமாக தண்ணீர் அமைப்புகளைப் பெறுவதைப் பார்த்தேன். – அந்த அற்புதத்தின் பெயர் UNICEF. UNICEF வழங்கிய செங்கற்கள் மற்றும் சிமெண்டை கொண்டு ஆண்பிள்ளைகள் தங்களுடைய பள்ளிக்கூடத்தை தாங்களே கட்டுவதைப் பார்த்தேன்” என்று கூறினார்.

ஹெப்பர்ன் 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமெரிக்காவில் பிரயாணம் செய்து, ஹாண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் கௌடமேலாவின் தலைவர்களை சந்தித்தார். “ஆபரேஷன் லைஃப்லைன்” என்ற ஒரு திட்டத்தின் மூலம் வால்டர்ஸுடன் ஏப்ரலில் சூடானுக்கு சென்றார். உள்நாட்டுப் போரால், உதவி நிறுவனங்கள் வழங்கும் உணவு, மக்களை போய் சென்றடைய முடியவில்லை. தென் சூடானுக்கு உணவைக் கொண்டு செல்வது தான் தற்போதையப் பணி. ஹெப்பர்ன், “ஆனால் நான் ஒரு மறுக்கமுடியாத உண்மையைக் கண்டேன்: இவை இயற்கை சீற்றங்கள் அல்ல. மனிதர்களால் உண்டான துயரங்கள். இதற்கு மனிதர்களால் உண்டான தீர்வு மட்டும் தான் இருக்கமுடியும்: – சமாதானம்.”

அக்டோபரில் ஹெப்பர்னும் வால்டர்ஸும் வங்கதேசத்திற்கு சென்றார்கள். ஜான் ஐசக் என்ற ஐநா புகைப்படக்கலைஞர், “அடிக்கடி குழந்தைகள் மீது முழுவதும் ஈக்களாக இருக்கும், ஆனால் இவர் அப்படியே போய் அவர்களை அணைத்துக்கொள்வார். நான் அதைப் பார்த்ததே கிடையாது. மற்றவர்கள் சற்று தயங்கினார்கள், ஆனால் அவர் அப்படியே சென்று பற்றிக்கொள்வார். குழந்தைகள் அவருடைய கையைப் பிடிக்க, அவரைத் தொட – அவரிடம் வருவார்கள். அவர் பைட் பைப்பரைப் போல் இருந்தார்” என்று கூறினார்.

1990ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹெப்பர்ன் தேசிய UNICEF-ஆதரித்த நோய்த்தடுப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் திட்டங்களுக்காக அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வியட்னாமுக்கு சென்றார்.

1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவர் இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் சோமாலியாவுக்கு சென்றார். ஹெப்பர்ன் அதை “பேரழிவுப் போல்” இருந்ததாக கூறினார். “ஒரு பயங்கரமான கனவுக்குள்ளே நடந்தேன். நான் எத்தியோப்பியாவிலும் வங்கதேசத்திலும் பஞ்சங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப் போல் எதுவுமே கிடையாது. – நான் எண்ணிப்பார்க்கக்கூடியதைவிட மோசமாக இருக்கிறது. இதற்கு நான் தயாராகவே இல்லை”. “பூமியெங்கும் சிவப்பாக இருக்கிறது. – ஒரு நம்பமுடியாத காட்சி. – அந்த ஆழமான டெர்ரக்கோட்டா செந்நிறம். அந்த கிராமங்கள், மறுபெயர்ப்பு முகாம்கள் மற்றும் மதிற்சுவர்களைப் பார்க்கும்போது, பூமி உங்களைச் சுற்றி ஒரு கடல் படுக்கையைப் போல சிற்றலைகளாக அமைந்ததைக் காண்பீர்கள். அது தான் அவர்களுடைய கல்லறைகள். எங்குப்பார்த்தாலும் கல்லறைகள். சாலையோரங்களில், நீங்கள் செல்லும் பாதைகளில், ஆற்றோரங்களில், ஒவ்வொரு முகாமுக்கு அருகாமையில், எங்கு பார்த்தாலும் கல்லறைகள் ” என்று கூறினார்.

தான் கண்டவைகளின் தழும்பு அவரை விட்டு நீங்காதிருந்தாலும், ஹெப்பர்ன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. “குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. "காலம் செல்லச்செல்ல மனித நேய உதவிப்பணிகளை அரசியலாக்குவதைவிட்டு விட்டு அரசியலை மனித நேயமாக்குதல் நடைபெறுமென்று எண்ணுகிறேன்”. “அற்புதங்களை நம்பாதவர்கள் நிஜஸ்தர் அல்ல. தண்ணீர் என்ற அற்புதம் UNICEF மூலமாக நிஜமானதை நான் பார்த்திருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக இளவயது பெண்களும் மகளிரும் பல மைல்கள் தண்ணீருக்காக நடக்கவேண்டிய இடத்தில், இப்பொழுது தங்கள் வீடுகளுக்கருகே சுத்தமான தண்ணீரை பெறுகிறார்கள். தண்ணீரே ஜீவன். சுத்தமான நீர் இப்பொழுது கிடைக்கப்பெறுவதால் இந்த கிராமக் குழந்தைகள் இனி ஆரோக்கியத்தை அடைகிறார்கள்” “இவ்விடங்களிலிருப்பவர்களுக்கு ஆட்ரி ஹெப்பர்னை தெரியாது, ஆனால் UNICEF என்ற பெயர் தெரியும். UNICEF என்ற பெயரை பார்க்கும்போது அவர்களுடைய முகம் பிரகாசிக்கின்றது. ஏனென்றால் ஏதோ நடக்கிறதென்று அவர்களுக்குத் தெரியும். உதாரணத்திற்கு சூடானில் ஒரு தண்ணீர்க் குழாய்க்கு UNICEF என்று பெயரிட்டிருக்கிறார்கள்.”

1992ம் ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபுள்யு. புஷ் UNICEF உடனான அவருடைய பணிக்காக அவருக்கு பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் அளித்தார். மனுகுலத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக அகாடமி ஆஃப் மோஷன் பிக்ட்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸஸ் அவருக்கு தி ஜீன் ஹெர்சால்ட் ஹ்யுமானிட்டேரியன் விருதை வழங்கியது. இந்த விருது அவர் இறந்த பின் அளிக்கப்பட்டதால், அவருடைய மகன் அதை ஏற்றுக் கொண்டார்.

இறப்பு

[தொகு]
டொலொசெனாஸ், ஸ்விட்சர்லாந்தில் ஆட்ரி ஹெப்பர்னின் கல்லறை

1992ம் ஆண்டில், சோமாலியாவிற்கு விஜயம் செய்துவிட்டு ஸ்விட்சர்லாந்து திரும்பியபோது, அவர் அடிவயிற்றில் வலிகள் உணர ஆரம்பித்தார். அவர் சிறப்பு நிபுணர்களிடம் சென்று உறுதியற்ற முடிவுகளையே பெற்றார். இதனால் அக்டோபரில் லாஸ் ஏஞ்சலிஸ் செல்லும் ஒரு பயணத்தில் அதை பரிசோதிக்க முடிவு செய்தார்.

நவம்பர் மாதம் 1ம் தேதி மருத்துவர்கள் ஒரு லாப்பராஸ்கோபியை (உதரத்துட் காணல்) செய்து அவருடைய குடல்வாலிலிருந்து பரவிய அடிவயிற்று புற்றுநோயை கண்டுபிடித்தார்கள்.[57] அது மெதுவாக பல வருடங்களுக்கு வளர்ந்து, ஒரு கட்டியாக மாற்றிடமேறவில்லை. ஆனால் அவருடைய சிறுங்குடலை மூடிய ஒரு மெல்லிய மேற்பூச்சாக படர்ந்திருந்தது. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து ஹெப்பர்னுக்கு 5-ஃப்ளுரோஆரசில் லூகொவரின் வேதிசிகிச்சையை அளித்தார்கள்.[58] சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு தடுப்பு ஏற்பட்டது. வலியைக் குறைக்க மருந்துகள் போதுமானதாக இருக்கவில்லை, ஆகவே டிசம்பர் முதல் தேதி இரண்டாவது அறுவைசிகிச்சையைப் பெற்றார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அறுவை சிகிச்சைமருத்துவர் புற்று மிக அதிகமாக பரவிவிட்டதாகவும், நீக்கப்பட முடியாதென்றும் முடிவு செய்தார்.

ஹெப்பர்ன்னால் ஒரு வர்த்தக வானூர்தியில் பறக்கமுடியாததால், கிவன்சி, ரேச்சல் லாம்பர்ட் “பன்னி” மெலனை தன்னுடைய தனிப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட்டை மலர்களால் நிரப்பி, அவரை கலிஃபோர்னியாவிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்குக் கொண்டுவர அனுப்பினார்.[59] ஹெப்பர்ன் புற்றுநோயால் ( 1993-01-20)20 சனவரி 1993, அன்று டொலொசெனாஸ், வௌட், ஸ்விட்சர்லாந்தில் இறந்து அங்கு அடக்கம் செய்யப்பட்டார்.

அவருடைய மரணத்தின் போது, அவர் சினிமா நட்சத்திரம் மெர்ல் ஆபரன் என்ற பெயர்கொண்ட மனைவியை இழந்தவரான ராபர்ட் வால்டர்ஸ் என்ற டச்சு நடிகருடன் ஈடுபட்டிருந்தார். டாட்டியுடனான அவருடைய திருமணத்தின் இறுதிப்பகுதியில் அவர் ஒரு நண்பர் மூலமாக வால்டர்ஸை சந்தித்திருந்தார். ஹெப்பர்னுடைய விவாகரத்து முடிவடைந்தபின், அவரும் வால்டர்ஸும் தங்கள் வாழ்க்கைகளை ஒன்றாக செலவழித்தார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1989ஆம் ஆண்டில் அவரோடு ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, அதை தன் வாழ்நாளின் மிக மகிழ்ச்சியான நாட்களென்று கூறினார். பார்பரா வால்டர்ஸுடனான ஒரு பேட்டியில், “வெகு நேரம் ஆனது” என்று சொன்னார். பிறகு ஏன் அவர்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை என்று வால்டர்ஸ் கேட்டார். அவர்கள் திருமணத்தில் தான் இருந்தார்கள், முறையாக செய்யப்படவில்லை, அவ்வளவு தான் என்று ஹெப்பர்ன் பதிலளித்தார்.[சான்று தேவை]

நீடிக்கும் செல்வாக்கு

[தொகு]

ஹெப்பர்ன் அவ்வபோது வரலாற்றிலேயே மிகவும் அழகான பெண்ணென்று அழைக்கப்பட்டிருக்கிறார்.[60][61] பெண்கள் மத்தியில் அவருடைய ஃபேஷன் தோரணைகள் இன்னமும் விரும்பப்படுகின்றன.[62] அண்மையில் அவர் மீதான அபிப்ராயத்துக்கு மாறாக, அவர் ஃபேஷன் மீது பற்றுள்ளவராகத் தான் இருந்தார். ஆனால் அதில் அதிக முக்கியத்துவம் செலுத்தவில்லை அவ்வளவுதான் பகடற்ற, சௌகரியமான உடைகளை அவர் விரும்பினார்.[63] மேலும் அவர் தன்னை மிகவும் வசீகரிப்புள்ளவராக எண்ணிக்கொண்டதே கிடையாது. 1959ஆம் ஆண்டில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “சில நேரங்களில் நான் என்னையே வெறுத்தேன் என்றுக்கூட கூறலாம். நான் மிகவும் பருமனாக இருந்தேன் அல்லது மிகவும் உயரமாக இருந்தேன் அல்லது மிகவும் அசிங்கமாகவே இருந்தேன்… என்னுடைய வரையறுக்கும் குணம் உள்ளிருக்கும் பாதுகாப்பற்ற மற்றும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வந்ததென்று கூட நீங்கள் சொல்லலாம். முடிவற்ற நிலையில் செயல்பட்டு என்னால் இந்த உணர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. ஒரு அழுத்தமான, நேர்முகப்படுத்திய முனைப்பை மேற்கொள்வதால் மட்டுமே என்னால் அவைகளை மேற்கொள்ளமுடிந்தது."[64]

2000ம் ஆண்டின் தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட படமான தி ஆட்ரி ஹெப்பர்ன் ஸ்டோரியில் , ஜெனிஃபர் லவ் ஹ்யுவிட் முன்னணி கதாபாத்திரத்தில் இருந்தார். ஹ்யுவிட் அந்த படத்திற்கு துணை-தயாரிப்பாளராவும் இருந்தார்.[65] UNICEFக்கான தூதுப்பணியில், ஆட்ரி ஹெப்பர்ன், இறுதியாக ஈடுபடும் காட்சிகளோடு அந்த படம் முடிந்தது. அந்த படத்தின் பல வடிவங்கள் நிலவுகின்றன; அது சில நாடுகளில் ஒரு குறுந்தொடராக ஒளிப்பரப்பப்பட்டது. அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி கூட்டமைப்பில் இது சுருக்கமான வடிவத்தில் ஒளிப்பரப்பப்பட்டது. இந்த வடிவமே வட அமெரிக்காவில் DVD வடிவத்தில் வெளியிடப்பட்டது. எம்மி ராஸம், தன்னுடைய முதல் சினிமா கதாபாத்திரங்களொன்றில், இளவயது ஹெப்பர்னாக நடித்தார்.

2006ம் ஆண்டில், ஸஸ்டெய்னபுல் ஸ்டைல் ஃபௌண்டேஷன் உலகம் முழுவதும் வாழ்கின்ற குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பணிபுரியும் உயர் மதிப்பு நபர்களை அங்கீகரித்து ஆட்ரி ஹெப்பர்னை கௌரவிக்கும் வண்ணம் ஸ்டைல் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் விருதை நிறுவினார்கள். முதல் விருது ஹெப்பர்ன் இறந்தபின் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது ஆட்ரி ஹெப்பர்ன் சில்ட்ரன்ஸ் ஃபண்ட், என்ற ஒரு தொண்டு நிறுவனம் பெற்றுக்கொண்டது. இது 1994ம் ஆண்டு நியு யார்க்கில் துவங்கப்பட்டது. அதன்பின் 1998ம் ஆண்டு அதன் தற்போதைய இடமாகிய லாஸ் ஏஞ்சலிஸுக்கு மாற்றப்பட்டது.

ஹெப்பர்னுடைய உருவப்படம் உலகம் முழுவதும் பல விளம்பர பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில், கிரின் கருப்பு தேனீரை விளம்பரப்படுத்துவதற்காக ரோமன் ஹாலிடேவில் ஹெப்பர்னின் நிறமாக்கப்பட்ட எண்முறையில் பெரிதாக்கப்பட்ட நிகழ்படங்கள் ஒரு விளம்பரத் தொடரில் பயன்படுத்தப்பட்டது. USல் ஹெப்பர்ன் 2006ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் 2006ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓடிய ஒரு கேப் விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அந்த விளம்பரத்தில், ஹெப்பர்ன் AC/DC உடைய “பேக் இன் பிளேக்” என்ற பாட்டிற்கு ஃபன்னி ஃபேஸிலுள்ள நடனத்தை ஆடுவதாக காண்பிக்கப்பட்டிருந்தது. இதனோடு “இட்ஸ் பேக் - த ஸ்கின்னி பிளாக் பேண்ட் (மறுபடியும் வந்துவிட்டது - ஒல்லியான கருப்பு பேண்ட்) என்ற விளம்பர வாக்கியமும் கூட சென்றது. “கீப் இட் சிம்பில் (எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள்)” என்ற அதன் பிரச்சாரத்தைக் கொண்டாடும் வகையில், கேப் ஆட்ரி ஹெப்பர்ன் சில்ட்ரன்ஸ் ஃபண்டிற்கு ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக அளித்தது. அந்த விளம்பரம் பிரசித்தமடைந்தது. சுமார் 200,000 பயன்படுத்துபவர்கள் YouTubeல் அதைக் கண்டார்கள்.

கிவென்சியினால் வடிவமைக்கப்பட்ட பிரெக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸிலிருந்த “ ஒரு சிறிய கருப்பு உடை” 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஒரு கிறிஸ்டீஸ் ஏலத்தில் £467,200க்கு (சுமார் $920,000) விற்கப்பட்டது. இது விற்பனைக்கு முன் அனுமானிக்கப்பட்ட £70,000ஐ விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது. ஒரு திரைப்படத்திலிருந்தான ஆடைக்கு இதுவே மிக அதிகமாக அளிக்கப்பட்ட விலையாகும்.[சான்று தேவை] இந்தியாவில் சமுதாயத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு உதவும் சிட்டி ஆஃப் ஜாய் என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு விற்பனையில் ஈட்டப்பட்ட தொகை சென்றது. அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர், “ என் கண்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கின்றன. இப்படி ஒரு அற்புதமான நடிகையின் ஒரு ஆடை, உலகத்தின் அனாதரவான குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்கு செல்ல அவர்களுக்குப் பள்ளியைக் கட்டியமைக்க எனக்கு செங்கல், சிமெண்ட வாங்க பயன்படுத்தமுடியுமென்று யோசிக்கும்போது என்னால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை” என்றார்.[66] கிறிஸ்டீஸ் ஏலமிட்ட ஆடையை ஹெப்பர்ன் திரைப்படத்தில் அணியவில்லை.[67] ஹெப்பர்ன் அணிந்த இரண்டு ஆடைகளில் ஒன்று கிவன்சி கிடங்கிலும், மற்றொன்று மட்ரியிலுள்ள ம்யூசியம் ஆஃப் காஸ்டியூமிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.[66]

பட பட்டியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1948 நெதர்லாண்ட்ஸ் இன் 7 லெசன் விமான பணிப்பெண் விளக்கப்படம் (ஆங்கிலம்: டச்சு இன் செவன் லெஸன்ஸ் )
1951 ஒன் வைல்ட் ஓட் ஹோட்டல் வரவேற்பாளர்
லாஃப்டர் இன் பாரடைஸ் சிகரெட் பெண்மணி
மாண்டொ கார்லோ பேபி லிண்டா ஃபேரல் ஃப்ரென்சு புதின ஆசிரியர் கொலெ மூலமாக படப்பிடிப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டு பிராட்வே நாடகத்தின் ஜிஜியாக சித்தரிக்கப்பட்டார்.
யங்க் வைவ்ஸ் டேல் ஈவ் லெஸ்டர்
த லேவண்டர் ஹில் மாப் சிகீட்டா
1952 த சீக்ரட் பீப்பல் நோரா ப்ரெண்டானோ
Nous irons à Monte Carlo மெலிஸா வால்ட்டர் மாண்டொ கார்லோ பேபியின் ஃப்ரென்சு வடிவம் (ஆங்கிலம்: வீ வில் கோ டு மாண்டொ கார்லோ )
1953 ரோமன் ஹாலிடே இளவரசி ஆன் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது
முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது.
திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது
1954 சப்ரீனா சப்ரினா ஃபேர்ச்சைல்ட் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1956 வார் அண்ட் பீஸ் நடாஷா ராஸ்டொவா முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1957 ஃபன்னி பேஸ் ஜோ ஸ்டாக்டன்
லவ் இன் தி ஆஃப்டர்னூன் ஏரியன் சாவேஸ்/மெலிந்த பெண்மணி திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1959 கிரீன் மேன்ஷன்ஸ் ரீமா மெல் ஃபெர்ரரால் இயக்கப்பட்டது
தி நன்ஸ் ஸ்டோரி ஸிஸ்டர் லூக் (கேப்ரியல் வேன் டெர் மல்) முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது.
சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1960 த அன்ஃபர்கிவன் ரேச்சல் சக்கரி
1961 பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸ் ஹாலி கொலைட்லி சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
த சில்ட்ரன்ஸ் ஹவர் கேரன் ரைட்
1963 ஷேரேட் ரெஜினா “ரெஜ்ஜி” லேம்பர்ட் முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது.
திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1964 பேரிஸ் வென் இட் சிஸல்ஸ் கேப்ரியல் சிம்ப்சன்
மை ஃபேர் லேடி எலிசா டூலிட்டில் திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1966 ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன் நிக்கோல் பென்னட்
1967 டூ ஃபார் த ரோட் ஜோஆன வாலெஸ் திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
வெய்ட் அண்டில் டார்க் சூசி ஹெண்டிரிக்ஸ் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
1976 ரோபின் அண்ட் மேரியன் லேடி மேரியன்
1979 பிளட்லைன் எலிசபத் ராஃப் அவருடைய ஒரே பார்வையாளர்-எச்சரிக்கைப் படம்
1981 தே ஆல் லாஃப்ட் ஆஞ்செலா நியொடஸ்
1989 ஆல்வேஸ் ஹாப்

தொலைக்காட்சியும் நாடகமும்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1949 ஹை பட்டன் ஷூஸ் பல்லவி பாடும் பெண் இசை நாடகம்
ஸாஸ் டார்டர் பல்லவி பாடும் பெண் இசை நாடகம்
1950 ஸாஸ் பிக்கண்ட் சிறப்பிக்கப்பட்ட நடிகர் இசை நாடகம்
1951 ஜிஜி ஜிஜி 1951ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிராட்வேயிலுள்ள ஃபுல்ட்டன் தியேட்டரில் தொடங்கியது.
தியேட்டர் வர்ல்ட் விருது
1952 CBS தொலைக்காட்சி கருத்துப்பட்டறை “ரெய்னி டே அட் பாரடைஸ் ஜங்க்ஷன்” என்று தலைப்பிடப்பட்ட கிளைக்கதை
1954 ஆண்டின் தண்ணீர் தேவதை மெல் ஃபெர்ரருடன் முன்னணியில் 18 பிப்ரவரியிலிருந்து - 26 ஜூன் வரை ஓடி பிராட்வேயில் தொடங்கியது.
ஒரு நாடகத்தில் முன்னணி நடிகையாக சிறந்த நடிப்பிற்காக டோனி விருது
1957 மேயர்லிங்க் மரியா வெட்ஸேரா பிரொடியூஸர்ஸ் ஷோகேஸ் நேரடி தயாரிப்பு. இளவரசர் ருடால்ஃபாக மெல் ஃபெர்ரர் நடித்திருக்கிறார். ஐரோப்பாவில் நாடகமாக வெளியிடப்பட்டது.
1987 லவ் அமங்க் தீவ்ஸ் பெரோனஸ் கேரொலின் டியுலாக் தொலைக்காட்சி திரைப்படம்
1993 கார்டன்ஸ் ஆஃப் த வர்ல்ட் வித் ஆட்ரி ஹெப்பர்ன் தானாக PBS குறுந்தொடர்;
சிறப்பு தனிநபர் சாதனைக்காக எம்மி விருது - தகவல் நிகழ்ச்சியமைப்பு

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]
வால்ட் டிஸ்னி வர்ல்டுடைய டிஸ்னீஸ் ஹாலிவுட் ஸ்டூடியோஸ் தீம் பார்க்கில் த கிரேட் மூவி ரைடுக்கு முன்பாக ஆட்ரி ஹெப்பர்னின் கைய்யச்சுகள்.

1953ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை அவர் ரோமன் ஹாலிடேவுக்காக பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதிற்காக இன்னும் நான்கு முறைகள் பரிந்துரைக்கப்பட்டார். சப்ரீனா , த நன்ஸ் ஸ்டோரி , பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸ் மற்றும் வெய்ட் அண்டில் டார்க் ஆகிய படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டார். அவர் மிகவும் பாராட்டப்பெற்ற எலிசா டூலிட்டில் என்ற கதாபாத்திரத்தின் நடிப்பிற்கான திரைப்படமாகிய மை ஃபேர் லேடிக்காக அவர் பரிந்துரைக்கப்படவில்லை. அவருடைய 1967 பரிந்துரைப்புக்கு அகாடமி, அவருடைய நடிப்பிற்காக விமர்சகர்கள் மூலமாக பாராட்டப்பெற்ற படமாகிய டூ ஃபார் த ரோடிற்காக பரிந்துரைக்கப்படமால், வெய்ட் அண்டில் டார்க்கிற்காக பரிந்துரைக்கப்பட்டார். காதரீன் ஹெப்பர்னிடம் (கெஸ் ஹூஸ் கம்மிங்க் - என்ற படத்திற்காக) அவர் தோல்வியுற்றார். ஒரு எம்மி, ஒரு கிராமி, ஒரு ஆஸ்கார் மற்றும் ஒரு டோனி விருதைப் பெற்ற மிக சில நபர்களில் ஆட்ரி ஹெப்பர்ன் ஒருவராவார்.

  • அகாடமி விருது: ரோமன் ஹாலிடேவிற்கான (1954) சிறந்த நடிகை மற்றும் ஜீன் ஹெர்சால்ட் மனித நேய விருது (1993), அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.
  • கோல்டன் குளோம் விருது: ரோமன் ஹாலிடேவிற்கான (1954) சிறந்த திரைப்பட நடிகை.
  • டோனி விருது: ஆன்டீனுக்காக (1954) சிறந்த நடிகை மற்றும் சிறப்பு சாதனை விருது (1968).
  • கிராமி விருது: ஆட்ரி ஹெப்பர்ன்ஸ் என்சாண்டட் டேல்ஸ்க்காக (இறந்தபின் வழங்கப்பட்டது) குழந்தைகளுக்கான சிறந்த படிக்கப்பட்ட ஆல்பம் (1993)
  • எம்மி விருது: கார்டன்ஸ் ஆஃப் த வர்ல்ட் (இறந்த பின் வழங்கப்பட்டது) என்ற அவருடைய விளக்கப்படத் தொடரில் “ஃபிளவர் கார்டன்ஸ்” என்ற கிளைத் தலைப்பிற்காக, தலைசிறந்த தனிநபர் சாதனை - தகவலளிக்கும் நிகழ்ச்சியமைப்பு (1993)

ஹெப்பர்ன் 1955ம் ஆண்டு உலகின் அபிமான நடிகையென்று அறிவிக்கப்பட்டு ஹென்ரெய்ட்டா விருதை பெற்றார். 1990ம் ஆண்டு ஸிஸில் பி. டெமில் விருதையும் 1992ம் ஆண்டு ஸ்கிரீன் ஆக்டர்க்ஸ் கில்ட் லைஃப் அசீவ்மெண்ட் (வாழ்க்கை சாதன) விருதையும் பெற்றார். ஜீன் ஹெர்சால்ட் மனித நேய விருதை அவர் இறந்த பின் 1993ஆம் ஆண்டில் வழங்கப்பெற்றார்.[68]

டிசம்பர் 1992ல் அவர் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் அவருடைய ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பணிக்காக பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் பெற்றார்.[69] ஐக்கிய அமெரிக்காவில் ஒரு குடிமகன் பெறக்கூடிய மிக உயரிய இரண்டு விருதுகளில் இது ஒன்றாகும்.[70][71] 1652 வைன் தெருவில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் அவர் ஒரு நட்சத்திரத்தைப் பெற்றிருக்கிறார்.

ஒரு ஹாலிவுட் சரித்திர நாயகி மற்றும் ஒரு மனித நேயப்பணியாளர் என்ற முறையில் அவரை கௌரவிப்பதற்காக 2003ஆம் ஆண்டில், மைக்கல் ஜெ. டீஸால்[72] சித்தரிக்கப்பட்ட ஒரு தபால் தலை யுனைடட் ஸ்டேட்ஸ் போஸ்டல் சர்வீஸால் வெளியிடப்பட்டது. சப்ரீனா என்ற படத்திற்கான அவருடைய விளம்பர படத்தின் அடிப்படையில் ஒரு வரைபடத்தை அது கொண்டிருக்கிறது. இப்படி கௌரவிக்கப்பட்ட வெகு சில அமெரிக்கர்-அல்லாதவர்களில் ஹெப்பர்ன் ஒருவராவார். யூசஃப் கர்ஷ் என்பவரின் வேலையின் அடிப்படையில் 2008ம் ஆண்டில், கானடா போஸ்ட்டும் ஒரு தபால் தலை தொடரை வெளியிட்டது. இதில் ஒன்று ஹெப்பர்னுடைய வரைபடமாக இருந்தது.

ஹெப்பர்ன் டிஃப்ஃபனி வைரம் அணிந்த வெறும் இரண்டு பேரில் ஒருவராவார்.[73] 1957ம் ஆண்டு டிஃப்ஃபனி பாலுக்கு அணிந்த திருமதி. ஹெல்டன் வைட்ஹவுஸ் மற்றொரு நபராவார். சர்வதேச சிறந்த ஆடையணிபவர்கள் பட்டியலில் ஹெப்பர்ன் ஒரு அங்கத்தினராக இருந்து, 1961ம் ஆண்டு அதன் ஹால் ஆஃப் ஃபேமுக்கு உயர்த்தப்பட்டார்.

அவருடைய மனித நேயப்பணிக்காக அவர் இறந்த பின் அகாடமி ஆஃப் மோஷன் பிக்ட்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸஸ் மூலமாக ஜீன் ஹெர்சால்ட் மனித நேய விருது வழங்கப்பெற்றார். அவருடைய படிக்கப்பட்ட பதிவான, ஆட்ரி ஹெப்பர்ன்ஸ் என்சாண்ட்ட் டேல்ஸ்க்காக 1994ம் ஆண்டு அவர் இறந்தபின் ஒரு கிராமி விருதைப் பெற்றார். அதே வருடத்தில் கார்டன்ஸ் ஆஃப் த வர்ல்ட் வித் ஆட்ரி ஹெப்பர்ன் -காக மிகவும் சிறந்த நடிப்புக்கான எம்மி விருதையும் பெற்றார். இதனால் ஒரு அகாடமி, எம்மி, கிராமி மற்றும் டோனி விருதைப் பெற்ற வெகு சிலரில் ஒருவராகிறார்.

மேலும் காண்க

[தொகு]
  • அகாடமி, எம்மி, கிராமி மற்றும் டோனி விருதுகள் பெற்ற நபர்களின் பட்டியல்

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.thatface.org/3473.jpg
  2. 2.0 2.1 2.2 2.3 Spoto, Donald (2006-11-19). "1929-1939". Enchantment: The Life of Audrey Hepburn. New York: Harmony. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-307-23758-3. Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2006-10-28. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  3. ஹெப்பர்ன், ஆட்ரி - வாழ்க்கைவரலாறு 2009-06-04 மீட்கப்பட்டது.
  4. "Famous People Elham Valley". www.elham.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2009-09-04.
  5. "Elham Walk". www.kent.gov.uk. Archived from the original on 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2009-09-03.
  6. 6.0 6.1 6.2 Tichner, Martha (26 November 2006). "Audrey Hepburn". CBS Sunday Morning. 
  7. ஆட்ரி ஹெப்பர்ன் - வாழ்க்கைவரலாறு - மூவிஃபோன்
  8. ஷார்லட் மோஸ்லே, பதிப்பாசிரியர். 'மிட்ஃபோர்ட்ஸ்: லெட்டர்ஸ் பிட்வீன் ஸிக்ஸ் ஸிஸ்டர்ஸ்', லண்டன்: நான்காவது எஸ்டேட், 2007, பக்கங்கள் 63, 65
  9. க்லைன், எட்வர்ட். 'இழப்பதற்கான பயமில்லாமல் உங்களால் அன்பு செலுத்தமுடியாது', பரேட் , 1989 மார்ச் 5
  10. ஆட்ரி ஹெப்பர்ன் at Genealogics1990ன் ஜீனியாலொஜிக்ஸிலிருந்த ஒரு ஆட்ரி ஹெப்பர்ன் குறிப்பு, 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி குறிப்பிடப்பட்டது. (பெரிதுப்படுத்திப் பார்க்க இந்த தொடர்பை சொடுக்கிடவும்) ]
  11. ஆட்ரி ஹெப்பர்ன், கோரோனெட் , 1955 ஜனவரி
  12. 12.0 12.1 James, Caryn (1993). "Audrey Hepburn, Actress, Is Dead at 63". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2006-11-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  13. கார்னர், லெஸ்லி. UNICEFன் கண்கவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெப்பர்ன் தயாராகும்போது லெஸ்லி கார்னர் சரித்திரம் படைத்த நடிகையை சந்திக்கிறார். பரணிடப்பட்டது 2005-01-17 at the வந்தவழி இயந்திரம் தி சண்டே டெலிகிராஃப் , 1991ம் ஆண்டு மே 26
  14. L'Ange des Enfants - ஆட்ரி ஹெப்பர்ன் புகைப்பட களஞ்சியம்
  15. "ஆட்ரி ஹெப்பர்னுடைய மனித நேயப்பணிக்கு ஒரு புகழாரம்| அவருடைய பணி - UNICEF உடனான ஈடுபாடு". Archived from the original on 2013-09-01. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.
  16. சீகில், ஜெசீக்கா. ஆட்ரி ஹெப்பர்னுடனான பேட்டி பரணிடப்பட்டது 2006-05-05 at the வந்தவழி இயந்திரம், தி சிக்காக்கோ டிரைபூன் , 1992 ஆம் ஆண்டு ஜனவரி 20
  17. ஆட்ரி Hepburn.com-க்கு வரவேற்கிறோம்
  18. Walker, Alexander (1994). Audrey, Her Real Story. London: Orion. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85797-352-6.
  19. "Audrey Hepburn's Son Remembers Her Life". Larry King Live. CNN. 2003-12-24. Transcript.
  20. "Princess Apparent". Time. 7 September 1953 இம் மூலத்தில் இருந்து 30 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100530022059/http://www.time.com/time/magazine/article/0,9171,818831,00.html. 
  21. நிக்கோல்ஸ், மார்க் ஆட்ரி ஹெப்பர்ன் மறுபடியும் பாருக்கு திரும்புகிறார், கோரோனெட் , நவம்பர் 1956
  22. Walker, Alexander (1994). Audrey, Her Real Story. London: Orion. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85797-352-6.
  23. 23.0 23.1 இணையதள பிராடுவே தரவுத்தளத்தில் Gigi
  24. "Lighting Up Broadway". Extra Magazine (People). Winter 1993. http://www.audrey1.org/archives/9/audrey-hepburn-archives. 
  25. 25.0 25.1 "Filmography: Roman Holiday". audrey1.com. Archived from the original on 2008-01-21. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  26. டுஷர், பில். கேண்டி பேண்ட்ஸ் பிரின்ஸஸ், மோஷன் பிக்ச்சர்ஸ் , பிப்ரவரி 1954
  27. "Audrey Hepburn: Behind the sparkle of rhinestones, a diamond's glow". டைம். September 7, 1953. Archived from the original on 2009-05-12. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  28. Weiler, A. W. (28 August 1953). "'Roman Holiday' at Music Hall Is Modern Fairy Tale Starring Peck and Audrey Hepburn". The New York Times. http://movies.nytimes.com/movie/review?res=940DE6DA153EE53BBC4051DFBE668388649EDE. பார்த்த நாள்: 2008-01-14. 
  29. கனோலி, மைக். ஹூ நீட்ஸ் பியூட்டி!, ஃபோட்டோப்ளே , ஜனவரி 1954
  30. பேரிஸ், பேரி. ஆட்ரி ஹெப்பர்னின் நீடிக்கும் புதிர், ஆட்ரி ஹெப்பர்ன் , 1996
  31. டர்னர் கிளாசிக் மூவிஸிலிருந்து சப்ரீனா (1954)
  32. ஹெப்பர்னுடைய கோல்டன் குளோப் பரிந்துரைப்புகளும் விருதுகளும்
  33. ஹௌ ஆஃபுல் அபௌட் ஆட்ரி!, மோஷன் பிக்ச்சர்ஸ் , மே 1964
  34. "Two favorite poems of Audrey Hepburn". audrey1.com. Archived from the original on 2007-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  35. ஹெப்பர்ன், ஆட்ரி. மை ஃபேர் லேடி, திரைப்படத் திருவிழா
  36. "Filmography: The Nun's Story". audrey1.com. Archived from the original on 2006-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  37. கேன், கிறிஸ். பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்ஃபனீஸ், திரைக் கதைகள் , டிசம்பர் 1961
  38. 38.0 38.1 ஆர்சர், யுஜீன். கொஞ்சம் அதிர்ஷ்டமும் அதிக திறமையும், தி நியூயார்க் டைம்ஸ் , 1964 நவம்பர் ஒன்று
  39. "Paris When It Sizzles". Variety. January 1, 1964. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
  40. 40.0 40.1 40.2 Eleanor Quin. "Paris When It Sizzles: Overview Article". Turner Classic Movies. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  41. 41.0 41.1 41.2 ரிங்கோல்டு, ஜினி. மை ஃபேர் லேடி - அவை எல்லாவற்றையும்விட சிறந்தது!, சவுண்ட்ஸ்டேஜ் , டிசம்பர் 1964
  42. ஆட் ரி ஹெப்பர்ன் மெல் ஃபெர்ரர் உறவு முறிவுக்குப் பின்னே, ஸ்கிரீன்லாண்டு , டிசம்பர் 1967
  43. அலெக்ஸ் பிரம்மர், ஹான்சன்: அ பையோகிராஃபி , (லண்டன்: நான்காவது எஸ்டேட், 1994) ப. 47-50 & ப.52
  44. ஹைம்ஸ், ஜோ. ஆட்ரி ஹெப்பர்ன் ஏன் திருமணம் செய்ய அஞ்சினார், பிலிம்லேண்டு , ஜனவரி, 1954
  45. Walter, Alexander (1997). Audrey. St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-18046-2.
  46. http://www.audreyhepburnlibrary.com/50s/images/everybodys3-10-56pg1.jpg
  47. ஸ்டோன், டேவிட். 'மை ஹஸ்பண்ட் மெல்', எவ்ரிபடீஸ் , 1956 மார்ச் 10
  48. ஆட்ரி ஹெப்பர்ன் மெல் ஃபெர்ரர் உறவு முறிவுக்குப் பின்னே, ஸ்கிரீன்லாண்டு , டிசம்பர் 1967
  49. பேரிஸ், பேரி ஆட்ரி ஹெப்பர்னின் நீடிக்கும் புதிர், ஆட்ரி ஹெப்பர்ன் , 1996
  50. http://www.audreyhepburnlibrary.com/60s/images/screenland12-67pg5.jpg
  51. "An Audrey Hepburn Biography: 1955–1975". audrey1.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  52. "Audrey Hepburn Beauty Tips". Snopes.com. 2002. பார்க்கப்பட்ட நாள் 2009-03-08.
  53. Givenchy, Hubert (2007). Audrey Hepburn. London: Pavilion. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781862057753.
  54. Ferrer, Sean (2005). Audrey Hepburn, an Elegant Spirit. New York: Atria. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671024796.
  55. Paris, Barry (2001). Audrey Hepburn. City: Berkley Trade. p. 361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780425182123.
  56. "Audrey Hepburn - Ambassador of Children". audrey1.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  57. பேரிஸ் 1996, ப.361
  58. "செலிம் ஜாஸலீன், ""எல்லாரையும் விட அழகானவர்", CR மேகசின் , இலையுதிர்க்காலம் 2009". Archived from the original on 2010-04-19. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.
  59. ஹாரிஸ், வார்ன் ஜீ., (1994). - ஆட்ரி ஹெப்பர்ன்: எ பையோகிராஃபி . - நியூயார்க், நியூயார்க்: சைமன் & ஸ்கூஸ்டர். - ப.289. - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-75800-4
  60. "Audrey Hepburn 'most beautiful woman of all time'". The Sydney Morning Herald. 1 June 2004. http://www.smh.com.au/articles/2004/05/31/1085855500521.html. 
  61. "Audrey Hepburn tops beauty poll". BBC NEWS. 31 May 2004. http://news.bbc.co.uk/2/hi/uk_news/3763887.stm. 
  62. "ஆட்ரி ஹெப்பர்ன்ஸ் பெஸ்ட் டிரஸ்டு பிலிம் ஐகான்". Archived from the original on 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  63. "Hepburn revival feeding false image?". The Age. 2 October 2006. http://www.theage.com.au/news/people/hepburn-revival-feeding-false-image/2006/10/01/1159641215445.html. 
  64. ஹாரிஸ், எல்யனார். ஆட்ரி ஹெப்பர்ன், குட் ஹவுஸ்கீப்பிங் , ஆகஸ்ட் 1959
  65. "ஆட்ரி ஹெப்பர்னின் கதை - TIME". Archived from the original on 2013-08-13. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  66. 66.0 66.1 "Auction Frenzy over Hepburn dress". BBC NEWS. 5 December 2006. http://news.bbc.co.uk/2/hi/entertainment/6209658.stm. 
  67. கிரிஸ்டீஸ் ஆன்லைன் கேட்லாக். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 7ல் மீட்கப்பட்டது.
  68. "Awards for Audrey Hepburn". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  69. "UNICEF People: Audrey Hepburn". United Nations. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  70. ""Presidential Medal of Freedom - The Highest Civilian Award For Distinguished Americans and Humanitarians from every walk of life!"". பார்க்கப்பட்ட நாள் 2006-10-28. The Presidential Medal of Freedom, the nation's highest civilian award...
  71. Caulley, Stephanie (2006-02-15). ""CongressionalGoldMedal.com - Exclusive information on the congressional medal, medal histories, biographies, and more."". Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2006-10-28. The first award is the Congressional Gold Medal of Honor - more commonly known as the Congressional Gold Medal - the nation's highest and most distinguished civilian award.
  72. Deas, Michael J. ""Michael Deas: Illustrations and Portraits"". பார்க்கப்பட்ட நாள் 2006-10-23. Michael has created sixteen commemorative postage stamps for the U.S. Postal Service, including three of the best-selling stamps in U.S. history: James Dean (1996), Marilyn Monroe (1995), and Audrey Hepburn (2003).
  73. "பிஜவல்ட் பை டிஃப்ஃபனீ". Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.

மேலும் படிக்க

[தொகு]
  • பிரிஸல், ஸ்காட். ஆட்ரி ஹெப்பர்ன்: இண்டர்நேஷனல் கவர் கர்ல் . (சான் ஃப்ரான்ஸிஸ்கோ: கிரானிக்கல் புத்தகங்கள், 2009).
  • செசையர், ஈலன். ஆட்ரி ஹெப்பர்ன் (லண்டன்: பாக்கெட் எசென்ஷியல்ஸ், 2003).
  • ஃபெர்ரர், ஷான் ஹெப்பர்ன் ஃபெர்ரர். ஆட்ரி ஹெப்பர்ன், அன் எலிகண்ட் ஸ்பிரிட்: எ சன் ரிமம்பர்ஸ் (நியூயார்க்: ஏட்ரியா, 2003).
  • கியாஃப், பமிலா கிளார்க். ஆட்ரி ஸ்டைல் (லண்டன்: ஆரம் அச்சகம், 2009).
  • மேசிக், டையானா மேச்சிக். ஆட்ரி ஹெப்பர்ன்: ஆன் இண்டிமெண்ட் போர்ட்ரெய்ட் (ஸிடாடல் அச்சகம், 1996).
  • பேரிஸ், பேரி. ஆட்ரி ஹெப்பர்ன் (நியூயார்க்: புட்னம், 1996).
  • ஸ்போடோ, டொனால்ட். என்சாண்ட்மெண்ட்: த லைஃப் ஆஃப் ஆட்ரி ஹெப்பர்ன் (ஹார்மனி அச்சகம், 2006).
  • வாக்கர், அலெக்ஸாண்டர். ஆட்ரி: ஹெர் ரியல் ஸ்டோரி (லண்டன்: வெய்டன்ஃபீல்ட் அண்ட் நிகல்ஸன், 1994).
  • உட்வர்ட், இயன். ஆட்ரி ஹெப்பர்ன் (நியூயார்க்: செண்ட். மார்ட்டின்ஸ் அச்சகம், 1984). பேபர்பேக் எடிஷன் 1986.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்ரி_ஹெப்பர்ன்&oldid=3937371" இலிருந்து மீள்விக்கப்பட்டது