ஜோன் கிராபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் கிராபர்ட்
1947 இல் கிராபர்ட்
பிறப்புலூசில் ஃபே லெஸ்யூர்
மார்ச் 23, 190? (uncertain)
சான் அந்தோனியோ, டெக்சாஸ், அமெரிக்கா.
இறப்புமே 10, 1977
மன்ஹாட்டன்,நியூயார்க், அமெரிக்கா.
கல்லறைபெர்ன்கிளிஃப் சிமெட்ரி, அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1925–1972
பிள்ளைகள்கிறிஸ்டியானா கிராபர்ட் உட்பட 4 குழந்தைகள் (தத்து எடுப்பு)
உறவினர்கள்சகோதரி டெய்சி லெஸ்யூர் மற்றும் சகோதரர் ஹால் லெஸ்யூர்
கையொப்பம்

ஜோன் கிராபர்ட் (பிறப்பு லூசில் ஃபே லெஸ்யூர் (Joan Crawford (பிறப்பு: Lucille Fay LeSueur மார்ச் 23,190[சான்று தேவை] - மே 10, 1977) ஓர் அமெரிக்கத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் பிராடுவே அரங்கில் பின்னணிக் குரல் கலைஞராக அறிமுகமாகும் முன் நாடக நிறுவனங்களில் நடனக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1925 இல் மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவர் ஆறு தசாப்தங்களாக பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல சர்ச்சைகளிலும் இவர் இடம்பெற்றார்.

அனுதாபம், அனுதாபமற்ற, திகில் திரைப்படம் மற்றும் வரலாற்று கதைகள் நகைச்சுவைக் கதாப்பாத்திரம் ஆகிய பலதரப்பட்ட கதாப்பத்திரங்களில் நடித்துள்ளார்.மேலும் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட பழங்கால ஹாலிவுட் சினிமாவின் மிகச்சிறந்த பெண் நட்சத்திரங்களின் பட்டியலில் இவருக்கு பத்தாவது இடம் கிடைத்தது.

1930 ஆம் ஆண்டுகளில் கிராபர்ட் எம்ஜிஎம் நிறுவனத்தின் சகாக்களான நார்மா ஷீரர் மற்றும் கிரெட்டா கார்போ ஆகியோருடன் இணைந்து அறியப்பட்டார்.1930 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் துன்பத்தில் இருக்கும் சீமாட்டிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். டேன்ஸ்,ஃபூல்ஸ்,டேன்ஸ், திஸ் மாடர்ன் ஏஜ், லெட்டி லிண்டன், நோ மோர் லேடீஸ், ஐ லிவ் மை லைஃப், சூசன் அண்ட் ஆகியன இதில் குறிப்பிடத்தக்கன.மேலும் சில படங்களில் உழைக்கும் வர்க்க்கத்தினைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பார். அவர் டான்சிங் டாட்டர்ஸ், பயிட் லாஃபிங் சின்னர்ஸ், டேன்சிங் லேடி, சாடி மெக்கீ, தி லாஸ்ட் ஆஃப் மிசஸ் செய்னி, தி ஷைனிங் ஹவர், தி ப்ரைட் ரெட், மேனெக்வின் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அவை பெண்களிடையே பிரபலமாக இருந்தன. கிராபர்ட் ஹாலிவுட்டின் மிக முக்கியமான திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகவும், அமெரிக்காவின் அதிக சம்பளம் வாங்கும் பெண்களில் ஒருவராகவும் ஆனார்.

1945 ஆம் ஆண்டில், மில்ட்ரெட் பியர்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை வென்றார். மேலும் 1947 ஆம் ஆண்டில் வெளியான பொசெஸ்ட் திரைப்படம் மற்றும் 1952 ஆம் ஆண்டில் வெளியான சடன் ஃபியர் ஆகிய திரைப்படங்களுக்காக இவர் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டுகளில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்ந்து நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வெளியான வாட்டெவர் ஹேப்பன் பேபி ஜேன்? எனும் திகில் திரைப்படம் பெரிய வெற்றியினைப் பெற்றது. அதே ஆண்டில் அவர் தனது நீண்டகால சக போட்டியாளரான பெட் டேவிஸுடன் இணைந்து நடித்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவரது இயற்பெயர் லூசில் ஃபே லெஸ்யூர் ஆகும், இவர் ஆங்கிலம், பிரெஞ்சு ஹுஜினோட், சுவீடிய மற்றும் ஐரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் .இவரின் தந்தை தாமஸ் ஈ. லெஸ்யூரின் (சனவரி 2, 1868 - ஜனவரி 1, 1938) கட்டுமானத் தொழிலாளி ஆவார். இவரி தாய் டெக்சாஸில் பிறந்த அனா பெல் ஜான்சன் (பின்னர் திருமதி. அனா காசின் என அறியப்பட்டார்). இவரின் பிறந்த நாள் நவம்பர் 29, 1884 என அறியப்படுகிறது. இவர் ஆகஸ்ட் 15, 1958 இல் இறந்தார்.[2] கிராஃபோர்டின் மூத்த உடன்பிறப்புகளான சகோதரி டெய்சி லெஸ்யூர் மற்றும் சகோதரர் ஹால் லெஸ்யூர் ஆகியோர் இவரின் பிறப்பிற்கு முன்பாகவே இறந்தனர் .[3]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கிராபர்ட்&oldid=3718136" இலிருந்து மீள்விக்கப்பட்டது