உள்ளடக்கத்துக்குச் செல்

இன்செப்சன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்செப்சன்
A man in a suit with is back turned and a gun in his right hand, against a cityscape with water coming up to his knees.
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு
கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைஹான்ஸ் சிம்மர் [1]
நடிப்பு
ஒளிப்பதிவுவாலி பிஸ்டர்
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் பிக்சர்ஸ்
வெளியீடுலண்டன் முதல் காட்சி:
சூலை 13, 2010 (2010-07-13)
அமெரிக்கா:
சூலை 16, 2010 (2010-07-16)
ஓட்டம்148 நிமிடங்கள் [2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$160 மில்லியன்[3]
மொத்த வருவாய்$825,131,943[4]

இன்செப்சன் (Inception) 2010 இல் வெளியான அமெரிக்க அறிவியல் அதிரடித் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன் எழுதி, தயாரித்து, இயக்கினார். லியோனார்டோ டிகாப்ரியோ, கென் வட்டனபே, ஜோசப் கோர்டன்-லேவிட்ட், எலன் பேஜ், சில்லியன் மர்பி, டோம் ஹார்டி, மரியன் கோடிள்ளர்ட், திலீப் ராவ், டோம் பெரெங்கெர், மைகேல் கயின் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிறர் கனவில் சென்று அவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவர இயலாத ரகசியங்களை பிரித்து எடுத்து வரும் டோம் காப் எனும் கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ நடித்துள்ளார்[5]. மனைவியின் மரணத்தின் மர்மங்களால் தன் குடும்பம் மற்றும் நாட்டுரிமையை இழந்து வாடும் டோம் காபிற்கு மறு வாழ்வு வேண்டுமெனில் ஓர் பன்னாட்டு நிறுவன தலைவரின் மகன் மனதில் ஓர் எண்ணத்தை விதைக்க வேண்டும்.[6] காபின் சாதாரண வேலையான ரகசியத்தை பிரித்து எடுப்பதை விட இந்த எண்ணத்தை விதைப்பது என்பது கடினமான வேலை.[6]

படத்தின் படப்பிடிப்பு 2009-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கி, அவ்வருட இறுதியில் கனடாவில் முடிந்தது.[7][8]

இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசைக்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

கதை

[தொகு]

டாம் காப் மற்றும் ஆர்தர் பிறரின் கனவில் சென்று ரகசியங்களை திருடுகின்றனர். திடீர் அதிர்வு (உதை, kick) அல்லது கனவில் இறப்பு ஆகியவை நிகழ்ந்தால் மட்டுமே கனவிலிருந்து வெளிவரமுடியும். கனவினை திருடுபவர்கள் ஒரு பொருள் ஒன்றினை வைத்திருப்பர். அதை வைத்து தற்பொழுது கனவில் இருக்கிறோமா இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்வர். பிறரின் பொருளினை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. காப்-இன் பொருள் பம்பரமாகும். கனவுலகில் இருக்கும் பொழுது பம்பரம் சுழல்வதை நிறுத்தாது. காப் தன் இறந்து போன மனைவி மால்-இன் நினைவுகளால் தடுமாறுகின்றான். இதனாலேயே காப்-இன் கனவுகளில் மால் வந்து அவனது முயற்சிகளை கெடுக்கின்றார்.

காப் குழுவினர் சைடோ என்ற தொழிலதிபரின் கனவிற்குள் செல்கின்றனர். அவரது ரகசியங்களை திருடும் முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் சைடோ காப் குழுவினரை கண்டுபிடித்து. இன்செப்சன் என்ற செயலினை செய்ய வேண்டுகிறார். இன்செப்சன் என்பது ஒருவரின் மனதில் அவர் அறியாமலேயே ஒரு எண்ணத்தினை விதைப்பது ஆகும். சைடோ தன் போட்டி தொழிலதிபரான மவுரீஸ் பிஷ்சரின் மகன் ராபர்ட் பிஷ்சர் மனதில் அத்தொழிலினை விட்டு வேறு ஒரு தொழிலினை அணுகும் படியான எண்ணத்தினை விதைக்க வேண்டினார். இச்செயலினை காப் குழுவினர் முடித்தால் காப் மீது சுமத்தப்பட்ட மனைவியின் கொலை குற்றத்தினை நீக்கி குழந்தைகளுடன் இணைக்க உதவுவதாக சைடோ கூறுகிறார். ஆர்தர் இந்த வேலை வேண்டாம் என்று கூறியதையும் மீறி காப் இன்செப்சன் செய்து விடுவதாக ஒத்துக்கொள்கிறார். காப் தனது குழுவினை ஒன்று சேர்க்கிறார். ஈம்ஸ் வடிவமைப்பாளர்; யூசப் வேதியியல் நிபுணர்; ஆரியாட்னே கனவுலகினை வடிவமைப்பவர். சைடோ தான் பார்வையிட வருவதாக கேட்டுக்கொண்டதால் அவரையும் குழுவில் இணைத்தனர். ஆரியாட்னே காப் தன் மனைவியின் தற்கொலையினை பற்றி வருத்தப்படுவதினையும் குழந்தைகளை பிரிந்து வாழும் துயரத்தையும் அறிகிறார்,

தன் தந்தை இறந்ததால் ராபர்ட் பிஷ்சர் சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்செலஸ் நகரத்திற்கு விமானத்தில் செல்கிறார். பயணத்தின் பொழுது காப் பிஷ்சருக்கு மயக்க மருந்து கொடுக்கின்றார். காப் குழுவினரும் பிஷ்சரும் பகிர்ந்த கனவிற்குல் செல்கின்றனர். ஒவ்வொரு கனவு அடுக்கிலும் கனவினை உருவாக்குபவர் பின்தங்குகிறார்கள். இவர்கள் அடுத்த அடுக்கு கனவில் செல்பவர்களை எழுப்புவதற்கு பின்தங்குகிறார்கள். பிறர் அடுத்த அடுக்கு கனவிற்கு செல்கிறார்கள். வேன் ஆற்றில் விழுவது (முதலாம் அடுக்கு கனவு), ஹோட்டல் லிப்ட் விழுவது (இரண்டாம் அடுக்கு கனவு), உடையும் கட்டடம் (மூன்றாம் அடுக்கு கனவு) போன்ற நிகழ்வுகளை பயன்படுத்தி ஒவ்வொரு அடுக்கிளிருந்தும் மீண்டுவருகிறார்கள். முதல் கனவு அடுக்கில் யூசப் கனவிற்குள் செல்கிறார்கள். பிஷ்சரை கடத்துகிறார்கள், ஆனால் அவனது இராணுவப்படுத்தப்பட்ட மனதினால் எதிர்ப்பு கிளம்பியது. பலர் காப்-இன் குழுவினரை சுட்டுத்தள்ள வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டினால் சைடோவிற்கு காயம் ஏற்படுகிறது. யூசுப்பின் வேதியியல் பொருளினால் கனவில் இறப்பவர் நிஜவுலகில் விழிக்காமல் லிம்போ (Limbo) எனும் கட்டற்ற கனவுலகிற்கு செல்வர்.

ஈம்ஸ் தற்காலிகமாக பிஷ்சரின் மாற்றுத் தந்தையான பீட்டர் பிரவுனிங்கின் உருவத்திற்கு மாறுகிறார். யூசுப் ஒரு வேனில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு செல்கிறார். வேனில் யூசுப்பை தவிர பிறர் இரண்டாம் அடுக்கு கனவிற்குள் செல்கின்றனர். இரண்டாம் அடுக்கு கனவு ஒரு ஹோட்டலில் நடக்கின்றது. காப் மற்றும் ஈம்ஸ் பிஷ்சரை மனமாற்றம் செய்கின்றனர். அடுத்து ஈம்ஸ்சின் கனவிற்குள் செல்கின்றனர். மூன்றாம் அடுக்கு கனவில் ஒரு பனிமலையின் மேல் உள்ள கோட்டையின் அருகில் இருக்கின்றனர். அக்கோட்டை இராணுவ வீரர்களால் சூழப்பட்ருக்கிறது. குழு இராணுவ வீரர்களுடன் போராடிக்கொண்டே கோட்டையினுள் செல்கின்றனர்.

காப் மனைவி மால் பிஷ்சரை கொன்று விடுகிறார். சைடோவும் தனது காயங்களால் இறக்கிறார்.[9] சைடோ மற்றும் பிஷ்சரினை மீட்க காப் மற்றும் அரியாட்னே லிம்போ என்ற கட்டற்ற கனவுலகிற்கு செல்கின்றனர். அங்கு மாலினை சந்திக்கின்றனர். மால் தன்னுடனேயே இருக்குமாறு காப்-இனை அழைக்கிறார். அங்கே இருக்க மறுத்த காப் தன்னால் தான் மால் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறுகிறார். முன்னர் காப் மற்றும் மால் லிம்போவிலிருந்த பொழுது காப் இன்செப்சன் பயன்படுத்தி நாம் இருப்பது கனவு உலகு என்ற எண்ணத்தினை விதைத்தார். அவர்கள் கனவிலிருந்து நிஜவுலகிற்கு வந்திருந்தாலும் மால் ஆல் தான் இருப்பது நிஜ உலகு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவள் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனால் கோபமடைந்த மால் கத்தியால் காப்-இனை குத்துகின்றார், அரியாட்னே அவளைச் சுடுகின்றார். பிஷ்சருடன் மூன்றாம் அடுக்கு கனவிற்கு செல்வதற்காக குதிக்கிறார்கள். அரியாட்னே. சைடோவினை மீட்டு வருவதற்காக காப் லிம்போவிலேயே இருக்கிறார். பிஷ்சரினை மூன்றாம் அடுக்கு கனவில் உயிர்ப்பிக்கின்றனர். பிஷ்சர் பாதுகாப்பு அறையினுள் செல்கிறார். அங்கு தன் தந்தையில் நிறுவனத்தினை பிரிக்கும்படியான எண்ணத்தினை அறிந்து ஏற்றுக்கொள்கிறார்.

காப்-இனை விட்டுவிட்டு மற்றவர்கள் நிஜவுலகிற்கு வருகிறார்கள். லிம்போவில் மாட்டி மிகவும் வயதான சைடோவினை காப் கண்டுபிடிக்கின்றார். காப் சைடோவினை நிஜவுலகிற்கு வருமாறு அழைக்கிறார். பின்னர் குழுவில் உள்ள அனைவரும் விமானத்தில் விழிக்கின்றனர். காப் கஸ்டம்ஸ் வழியாக விமான நிலையத்தினை கடக்கின்றார். காப் தன் குழந்தைகளுடன் மீண்டும் இணைய வீட்டிற்கு செல்கின்றார். காப் தான் நிஜவுலகில் தான் இருக்கிறேன் என்பதினை அறிய பம்பரத்தை சுழல விடுகின்றார். அதற்குள் தன் குழந்தைகள் வர அவர்களை போய் அரவணைக்கின்றான். பம்பரம் இன்னும் சுழலுகின்றது.

குழு

[தொகு]
இடமிருந்து வலம் - சில்லியன் மர்பி, மரியன் கோடிள்ளர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், எலன் பேஜ், கென் வட்டனபே, மைகேல் கயின் மற்றும் லியோனார்டோ டிகாப்ரியோ.
  • லியோனார்டோ டிகாப்ரியோ -- டோம் காப். பிரிப்பாளர், மற்றவர் கனவுகளில் சென்று அவர்களது ரகசியங்களை பிரித்து எடுக்கும் திருடன். ஃபிஷெர் கனவில் சென்று அவனின் எண்ணங்களை மாற்ற ஆர்தர், அரியாட்னே, ஈம்ஸ் ,சயீடோ, யூசுஃப் ஆகியோர் கூட்டணியின் தலைவனே இந்த காப். .[10]
  • ஜோசப் கார்டன்-லெவிட் -- ஆர்தர். குறி மனிதன், காப்-இன் தொழில்துணை மற்றும் அணிக்கு கொடுக்கப்பட்ட வேலைக்காக ஆராய்ச்சி செய்கிறார்.[11][12]
  • கென் வட்டனபே -- செய்டோ, பயணி, காபின் அணியை வேலை வாங்கும் தொழிலதிபர். எனினும் அந்த அணியில் தனக்கும் இடம் வேண்டும் என்று அணியில் சேர்ந்தார்.[13]
  • எலன் பேஜ் -- அரியாட்னே, கட்டமைப்பாளர், கனவுகள் நடக்கும் உலகை உருவாக்க வேலைக்கு எடுக்கப்பட்ட ஓர் கல்லூரி மாணவி.[14]
  • டோம் ஹார்டி -- ஈம்ஸ், வடிவமைப்பாளர், காபின் அணியில் ஒருவர். தன் உருவ மாற்றத்தின் மூலம் ஃபிஷெரின் கனவில் ஃபிஷெரை ஏமாற்றுகிறார் .
  • திலீப் ராவ் -- யூசுஃப். வேதியியல் வல்லுநர் , அணியின் உறுப்பினர்கள் கனவுலகில் நிலைத்திருக்க உதவும் மருந்துகளை தயார் செய்பவர்.
  • மரியன் கோடிள்ளர்ட் -- மால் காப் ,டோம் கோப்பின் கனவுகளில் அடிக்கடி தோன்றும் அவரின் இறந்த மனைவி.[10] இத்திரைப்படத்தின் முக்கிய வில்லியாக இவர் வருகிறார்.
  • கில்லியன் மேர்பி -- ராபர்ட் மைகேல், ஃபிஷெர் தொழில் நிறுவனத்தின் வாரிசு மற்றும் காப் அணியின் குறி.[15]
  • டோம் பெரெங்கெர் -- பீட்டர் பிரௌனிங், ஃபிஷெரின் அறிவுத் தந்தை மற்றும் ஃபிஷெர் நிறுவனத்தின் செயலாளர்.[1]
  • பீட் போஸ்ட்லேத்வெயிட் -- மாரீஸ் ஃபிஷெர், ராபர்டின் தந்தை.[16]
  • லூகாஸ் ஹாஸ் -- நாஷ், அரியாட்னேக்கு முன் காபிற்கு உதவிய கனவு-கட்டமைப்பாளர்.[17]
  • மைக்கேல் கெய்ன் -- மைல்ஸ், காப்பின் குரு மற்றும் மாமனார்.[16] அவனது அணிக்கு அரியாட்னேவை சிபாரிசு செய்யும் கல்லூரி பேராசிரியர்.[12]

தயாரிப்பு

[தொகு]

வளர்ச்சி

[தொகு]
இன்செப்சன் திரைப்படம் தொடர்பான கேள்விகளுக்கு எம்மா தாமஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் பதிலளிக்கிறார்கள்.

முதலில் நோலன் கனவுத் திருடர்கள் பற்றிய என்பது பக்க திரைக்கதையினை எழுதினார்.[7] நோலன் இப்படத்தினை ஒரு திகில் திரைப்படமாக இயக்க திட்டமிட்டார்,[7] ஆனால் ஓர் திருட்டுக் கதையாக இயக்கினார்.[18] இப்படத்திற்கான திரைவசனத்திற்காக ஒன்பது-பத்து வருடங்கள் உழைத்தார்.[19]

2001-ஆம் ஆண்டில் வார்னெர் புரோசிடம் இந்த யோசனையை சமர்ப்பிக்கும்போழுது, இந்த மாப்பெரும் படத்தை உருவாக தனக்கு மேலும் அனுபவம் தேவைப்படும் என்பதை உணர்ந்தார்.[20] ஆதலால், பேட்மேன் பிகின்ஸ், த பிரஸ்டீஜ் மற்றும் தி டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களை இயக்க முடிவெடுத்தார்.[20][21]

பின்னர் 2009 இல் நோலன் திரைப்படத்தினை இயக்க முடிவு செய்தார். முதலாக லியோனார்டோ டிகாப்ரியோ நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[19] நோலன் லியோனார்டோ டிகாப்ரியோவை பலமுறை சந்தித்து தனது திரைப்படங்களில் நடிக்க அழைத்திருந்தார், ஆனால் அவற்றிற்கு ஒப்புக்கொள்ளாத டிகாப்ரியோ இன்செப்சன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். டிகாப்ரியோவின் குடும்பம் இந்த கனவு-திருடல் கதையில் மூழ்கிப்போயினர்.[20][22] டிகாப்ரியோவும் நோலனும் திரைக்கதையினை பற்றி பல மாதங்களாக ஆலோசித்தனர். பின்னர் நோலன் திரைக்கதையில் மாற்றங்கள் செய்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார்.[19]பெப்ரவரி 11, 2009 அன்று வார்னர் சகோதரர்கள் திரைப்பட நிறுவனம் கிறிஸ்டோபர் நோலன் எழுதிய இன்செப்சன் திரைக்கதையினை வாங்கியதாக அறிவித்தது.[21]

படமாக்கப்பட்ட இடங்கள்

[தொகு]
  • டோக்கியோவில் சூன் 19 2009 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது[7][23]
  • கார்டிங்டன், இங்கிலாந்து மற்றும் வட இலண்டன்[24][25]
  • பிரான்ஸ்[26]
  • லாஸ் ஏஞ்செலஸ் [27][28]
  • அல்பர்டா, கனடா [29] நவம்பர் 2009 இல் படப்பிடிப்பு முடிந்தது.

ஒளிப்பதிவு

[தொகு]

சாதாரண காட்சிகள் 35 மி.மீ திரையிலும் முக்கியமான காட்சிகள் 70 மி.மீ திரையிலும் பதிவு செய்யப்பட்டன. நோலன் தனது த டார்க் நைட் திரைப்படத்தில் பயன்படுத்திய ஐமாக்ஸ் திரையினை இன்செப்சனில் பயன்படுத்தவில்லை.[19] நோலன் முக்கோண திரையினையும் பயன்படுத்தவில்லை. இத்திரைப்படம் நம்பகத்தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்[19] மேலும் முக்கோண திரையில் காட்சிகள் சற்று மங்கலாக தெரிகின்றன எனவும் இவற்றை தவிர்ப்பதற்கே சாதாரண 35 / 70 மி.மீ. திரையினை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.[30]

வால்லி பிஸ்தர் ஒவ்வொரு இடத்திற்கும் கனவிற்கும் ஒரு வேறுபாடான பார்வையினை தந்தார்.[31] இவ்வாறு செய்தமையால் பார்வையாளர்களால் ஒவ்வொரு கனவையும் பிரித்து அறிய முடிந்தது.[32]

இசை

[தொகு]

இன்செப்சன் திரைப்படத்திற்கான இசையினை ஹான்ஸ் சிம்மர் இயக்கினார்.[1][33][34] படம் முழுவதும் காபின் நிலைக்கு பொருந்துமாறு இசையமைத்தார்.[35] படம் எடுக்கப்படும் பொழுதே இசை இயக்கமும் நடந்தது.[34][35] இன்செப்சன் இசைத் தொகுப்பு சூலை 11, 2010 அன்று வெளியிடப்பட்டது.[36] ஹான்ஸ் சிம்மர் சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் சோசியல் நெட்வர்க் திரைப்பட இசையமைப்பாளரிடம் தோற்றார்.[37]

வரவேற்பு

[தொகு]

வருவாய்

[தொகு]
திரைப்படம் வெளியீட்டுத் தேதி திரைப்பட வருவாய் பட்டியல் பட்ஜெட் மேற்கோள்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா சர்வதேச உலகம் முழுவதும் ஐக்கிய அமெரிக்கா உலகம் முழுவதும்
இன்செப்சன் சூலை 2010 $292,576,195 $532,956,569 $825,532,764 #43 #29 $160,000,000 [38]

இன்செப்சன் ஐமாக்ஸ்(IMAX) மற்றும் சாதாரணத் திரையரங்குகளில் சூலை 16 2010 அன்று வெளியிடப்பட்டது.[39][40] முதல் காட்சி இலண்டனில் சூலை 8 2010 அன்று திரையிடப்பட்டது.[41] அமெரிக்கா மற்றும் கனடாவில் 3,792 சாதாரண திரையரங்குகளிலும் 195 ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.[39] வெளியீட்டு நாளான சூலை 16 அன்று மட்டும் $21.8 மில்லியன் வருவாய் ஈட்டியது.[42] இத்திரைப்படம் முதல் வாரத்தில் $62.7 மில்லியன் வருவாயினை ஈட்டியது.[43] இன்செப்சனின் முதல் வார வருவாய் அதனை அதிகபட்ச வார வருவாய்களை பெற்ற அறிவுபுனைத் திரைப்படங்களில் இரண்டாம் இடத்தினை பெற்றது.[43]

இன்செப்சன் திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் $292 மில்லியன் வருவாயினை ஈட்டியது. பிற நாடுகளில் மொத்தமாக $532 மில்லியன் வருவாயினை ஈட்டியது. மொத்தமாக உலகம் முழுவதும் $823 மில்லியன் வருவாயினை ஈட்டியது.[44]

அமெரிக்கா மற்றும் கனடாவினைத் தவிர அதிக வருவாய் ஈட்டித் தந்த பிற நாடுகள்: சீனா ($68 மில்லியன்), இங்கிலாந்து, ஐயர்லாந்து மற்றும் மால்டா ($56 மில்லியன்), பிரான்சு மற்றும் மகரெப் பகுதி($43 மில்லியன்), சப்பான் ($40 மில்லியன்) மற்றும் தென் கொரியா ($38 மில்லியன்).[45]

விமர்சகர்கள் வரவேற்பு

[தொகு]
திரைப்படம் ராட்டன் டோமேட்டோஸ் மெடாகிரிடிக்
அனைத்து விமர்சகர்கள் சிறந்த விமர்சகர்கள்
இன்செப்சன் 86% (281 விமர்சனங்கள்)[46] 86% (29 விமர்சனங்கள்)[46] 74/100 (42 விமர்சனங்கள்)[47]

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • அகாதமி விருதுகள்
    • சிறந்த ஒளிப்பதிவு
    • சிறந்த இசை இயக்கம்
    • சிறந்த இசை
    • சிறந்த திரைவண்ணம்
  • பாஃப்டா விருது
    • சிறந்த திரைவண்ணம்
    • சிறந்த தயாரிப்பு
    • சிறந்த இசை
  • ஹாலிவுட் திரைப்பட திருவிழா
    • வருடத்தின் சிறந்த திரைப்படம்
    • வருடத்தின் சிறந்த ஒளிப்பதிவு
    • வருடத்தின் சிறந்த இசையமைப்பு
  • ஐ.ஜி.என். (IGN) திரைப்பட விருதுகள்
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த இயக்குநர்
  • எம்.டி.வி (MTV) திரைப்பட விருதுகள்
    • சிறந்த பயமுறுத்தும் நடிப்பு

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]
  • அகாதமி விருதுகள்
  • பாஃப்டா விருது
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த இயக்குநர்
    • சிறந்த அசல் திரைக்கதை
    • சிறந்த ஒளிப்பதிவு
    • சிறந்த திரை இயக்கம்
    • சிறந்த அசல் இசை
  • கோல்டன் குளோப் விருதுகள்
    • சிறந்த நாடகத் திரைப்படம்
    • சிறந்த இயக்குநர்
    • சிறந்த திரைக்கதை
    • சிறந்த அசல் இசை
  • ஐ.ஜி.என். (IGN) திரைப்பட விருதுகள்
    • சிறந்த அறிவுபுனைத் திரைப்படம்
    • சிறந்த நடிகை
    • சிறந்த சுவரொட்டி
    • சிறந்த முன்னோட்டி (Trailer)
  • எம்.டி.வி (MTV) திரைப்பட விருதுகள்
    • சிறந்த திரைப்படம்
    • சிறந்த முத்தம்
    • சிறந்த சண்டை
    • சிறந்த வியக்கவைக்கும் திரைக்காட்சி
    • சிறந்த நடிகர்
    • சிறந்த திரைவசனம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 George (2009-07-23). "Inception Cast and Crew Updates". Cinema Rewind. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Inception". BBFC. பார்க்கப்பட்ட நாள் 2010-08-08.
  3. Fritz, Ben (July 15, 2010). "Movie projector: 'Inception' headed for No. 1, 'Sorcerer's Apprentice' to open in third". Los Angeles Times. http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2010/07/inception-sorcerers-box-office.html. பார்த்த நாள்: July 27, 2010. "It's also one of the most expensive, at $160 million, a cost that was split by Warner and Legendary Pictures." 
  4. http://www.boxofficemojo.com/movies/?id=inception.htm
  5. "Inception Synopsis". Fandango.com. Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2010-07-18.
  6. 6.0 6.1 ஐசன்பர்க், மைக் (2010-05-05). "Updated 'Inception' Synopsis Reveals More". ஸ்க்ரீன் ரான்ட். பார்க்கப்பட்ட நாள் 2010-07-18. One last job could give him his life back but only if he can accomplish the impossible—inception.
  7. 7.0 7.1 7.2 7.3 Hiscock, John (July 1, 2010). "Inception: Christopher Nolan interview". Daily Telegraph (UK). http://www.telegraph.co.uk/culture/film/filmmakersonfilm/7866677/Inception-Christopher-Nolan-interview.html. பார்த்த நாள்: July 7, 2010. 
  8. Production Notes, 2010, p. 22.
  9. Want to understand Inception? Read the screenplay!. Retrieved October 23, 2010.
  10. 10.0 10.1 Borys Kit (2009-04-01). "Three circle Nolan's 'Inception'". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து 2009-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090406021957/http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i7288557915e143d0665fd7eb397d74e8. பார்த்த நாள்: 2009-04-02. 
  11. Borys Kit (2009-04-23). "Joseph Gordon-Levitt joins 'Inception'". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து 2009-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090426175648/http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i360cdd62fc9ca5a8f1a89b3de015ac98. பார்த்த நாள்: 2009-04-24. 
  12. 12.0 12.1 Tapley, Kristopher (2009-04-24). "Caine confirmed in small role in Inception, Gordon-Levitt also joins the cast". InContention. http://incontention.com/?p=5843. பார்த்த நாள்: 2009-04-24. 
  13. Borys Kit (2009-05-04). "Two join Nolan's 'Inception'". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து 2009-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090510101614/http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i9813ed99c5e2b4f3c9796f4087e3ad00. பார்த்த நாள்: 2009-05-05. 
  14. Production Notes 2010, p. 8.
  15. Production Notes 2010, p. 10.
  16. 16.0 16.1 Production Notes 2010, p. 11.
  17. Boursaw, Jane (2009-08-26). "Ellen Page on the set of Inception in Paris". EveryJoe இம் மூலத்தில் இருந்து 2012-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712215937/http://everyjoe.com/entertainment/ellen-page-on-the-set-of-inception-in-paris/. பார்த்த நாள்: 2009-08-26. 
  18. Boucher, Geoff (April 4, 2010). "Inception breaks into dreams". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/news/la-ca-inception4-2010apr04,0,6869939.story. பார்த்த நாள்: April 6, 2010. 
  19. 19.0 19.1 19.2 19.3 19.4 Weintraub, Steve (March 25, 2010). "Christopher Nolan and Emma Thomas Interview". Collider இம் மூலத்தில் இருந்து மார்ச் 27, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100327204348/http://www.collider.com/2010/03/25/director-christopher-nolan-and-producer-emma-thomas-interview-inception-they-talk-3d-what-kind-of-cameras-they-used-pre-viz-wb-and-a-lot-more/. பார்த்த நாள்: April 6, 2010. 
  20. 20.0 20.1 20.2 Itzkoff, Dave (2010-06-30). "A Man and His Dream: கிறிஸ்டோபர் நோலன் மற்றும் இன்செப்சன்". The New York Times. http://artsbeat.blogs.nytimes.com/2010/06/30/a-man-and-his-dream-christopher-nolan-and-inception/. பார்த்த நாள்: 2010-07-01. "This is a film I first pitched to the studio probably nine years ago, and I wasn’t really ready to finish it. I needed more experience in making a big movie." 
  21. 21.0 21.1 Michael Fleming (2009-02-11). "Nolan tackles Inception for WB". Variety. http://www.variety.com/article/VR1117999988. பார்த்த நாள்: 2009-02-25. 
  22. Jolin, Dan (July 2010). "Crime of the Century". Empire (film magazine): pp. 93–94. 
  23. Production Notes, 2010, p. 13.
  24. Production Notes, 2010, p. 14.
  25. Heuring, David (July 2010). "Dream Thieves". American Cinematographer: p. 29 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 22, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100922060626/http://www.theasc.com/ac_magazine/July2010/Inception/page1.php. பார்த்த நாள்: September 22, 2010. 
  26. Production Notes, 2010, p. 17.
  27. Production Notes, 2010, p. 20.
  28. Production Notes, 2010, p. 21.
  29. Jolin, July 2010, pp. 91.
  30. "Christopher Nolan's dim view of a Hollywood craze: 'I'm not a huge fan of 3-D'". Los Angeles Times. June 13, 2010. http://herocomplex.latimes.com/2010/06/13/christopher-nolan-inception-3d-dark-knight-hollywood/. பார்த்த நாள்: January 22, 2011. 
  31. Heuring, July 2010, pp. 35.
  32. Heuring, July 2010, pp. 36.
  33. "Hans Zimmer's 'Inception' Score Will Release On July 13th". ScreenRant.com. June 18, 2010. பார்க்கப்பட்ட நாள் July 1, 2010.
  34. 34.0 34.1 Cassidy, Kevin (July 13, 2010). "Q&A: Composer Hans Zimmer". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/qampa-composer-hans-zimmer-25455. பார்த்த நாள்: July 14, 2010. 
  35. 35.0 35.1 Martens, Todd (July 20, 2010). "Hans Zimmer and Johnny Marr talk about the sad romance of 'Inception'". Los Angeles Times. http://latimesblogs.latimes.com/herocomplex/2010/07/inception-christopher-nolan-the-smiths-johnny-marr-hans-zimmer-and-johnny-marr-on-the-sound-of-inception-its-about-sadness.html. பார்த்த நாள்: July 20, 2010. 
  36. "Inception: Music from the Motion Picture official website". Warner Bros. பார்க்கப்பட்ட நாள் July 3, 2011.
  37. "Nominees for the 83rd Academy Awards". Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் January 28, 2011.
  38. "Inception (2010)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2011-08-18.
  39. 39.0 39.1 Bock, Jeff (February 24, 2009). "Wb name drops big titles". ERC Box Office இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 26, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090226205532/http://www.ercboxoffice.com/index.php?page=news&news_id=114. பார்த்த நாள்: February 25, 2009. 
  40. Vlessing, Etan (October 1, 2009). "Imax books Inception". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/imax-books-inception-89552. பார்த்த நாள்: October 1, 2009. 
  41. Plumb, Alastair (July 9, 2010). "Inception World Premiere Report". Empire (film magazine). http://www.empireonline.com/news/feed.asp?NID=28324. பார்த்த நாள்: July 9, 2010. 
  42. Finke, Nikki (July 17, 2010). "'Inception' Dreams Up $21.4M Friday And Possible $52M Weekend; No Magic For 'Sorcerer's Apprentice' With $5.4M/$16.5M". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் July 18, 2010.
  43. 43.0 43.1 Gray, Brandon (July 19, 2010). "Weekend Report: 'Inception' Incites Intense Interest". Box Office Mojo. Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் July 21, 2010.
  44. "Inception". Box Office Mojo. Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.
  45. "Inception". Box Office Mojo. Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் October 22, 2010.
  46. 46.0 46.1 "Inception". Rotten Tomatoes. Flixster. பார்க்கப்பட்ட நாள் 2011-08-18.
  47. "Inception". Metacritic. CBS. பார்க்கப்பட்ட நாள் 2011-08-18.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்செப்சன்_(திரைப்படம்)&oldid=4058737" இலிருந்து மீள்விக்கப்பட்டது