த பிரஸ்டீஜ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த பிரஸ்டீஜ்
The Prestige
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு
மூலக்கதைகிறிஸ்டோபர் பிரீஸ்ட் எழுதிய புதினம்
திரைக்கதை
இசைடேவிட ஜூலியன்
நடிப்பு
ஒளிப்பதிவுவால்லி பிஸ்தர்
படத்தொகுப்புலீ சிமித்
கலையகம்
விநியோகம்வடச்சுடோன் பிக்சர்சு(அமெரிக்கா)
வார்னர் சகோதரர்கள் (உலகம் முழுவதும்)
வெளியீடுஅக்டோபர் 20, 2006 (2006-10-20)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
இங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$40 மில்லியன் (286.06 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$109.67 மில்லியன் (784.32 கோடி)

த பிரஸ்டீஜ் (The Prestige) 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.கிறிஸ்டோபர் நோலன், ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டேவிட் போவி, பிபர் பெராபோ, ஆண்டி செர்கிஸ், ரெபெக்கா ஹால் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் திரைக்கதை கிறிஸ்டோபர் பிரீஸ்ட்யின் அதே பெயரிலான புதினத்தை தழுவி எழுதப்பட்டது. திரைக்கதை கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜோனதன் நோலன் ஆகியோரால் எழுதப்பட்டது. இத்திரைப்படம் அக்டோபர் 20, 2006 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

 • ஹக் ஜேக்மேன் - ராபர்ட் ஆஞ்ஜியர், த கிரேட் டான்டன்.
 • கிரிஸ்டியன் பேல் - ஆல்பிரெட் பொர்டன், த பிரொபஸ்சர்.
 • மைக்கேல் கேயின் - ஜான் கட்டர், ஆஞ்ஜியர் மற்றும் பொர்டனுடன் வேலை செய்பவர்.
 • பைபர் பெராபோ - ஜூலியா மெக்கல்லாக், ஆஞ்ஜியரின் மனைவி.
 • ரிபெக்கா ஹால் - சாரா பொர்டன், பொர்டெனின் மனைவி.
 • ஸ்கார்லெட் ஜொஹான்சன் - ஒலிவியா வென்ஸ்கோம்ப், ஆஞ்ஜியரின் பணியாளர் மற்றும் காதலர்.
 • டேவிட் போவீ - நிகோலா டெஸ்லா, கண்டுபிடிப்பாளர். ஆன்ஞ்ஜியருக்கான இடபெயர்ப்பு இயந்திரத்தை உருவாக்கியவர்.
 • ஆன்டி செர்கிஸ் - மிஸ்டர் அல்லி, டெஸ்லாவின் பணியாளர்.
 • ரிக்கி ஜே - மில்டன் தெ மஜிசியன், பொர்டன் மற்றும் ஆஞ்ஜியர் படத்தின் ஆரம்பத்தில் இவரிடம் பணி புரிகிறார்கள்.

தயாரிப்பு[தொகு]

படமாக்கல்[தொகு]

திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்டோபர் பிரீஸ்டினை அனுகி அவரது த பிரஸ்டீஜ் புதினத்தை படமாக்க கேட்டனர். பிரீஸ்ட் நோலனின் பால்லோவிங் மற்றும் மெமன்டோ படங்களைப் பார்த்து மயங்கிப்போனார்.[2] மேலும் வேலரீ டீன் இப்புதினத்தை நோலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.[3] அக்டோபர் 2000, நோலன் இங்கிலாந்திற்கு சென்று தன் மெமன்டோ படத்தினை வெளியிட சென்றார். அங்கு நோலன் பிரீஸ்டின் புதினத்தைப் படித்து தன் சகோதரருடன் பகிர்ந்தார். த பிரஸ்டீஜ்யின் தயாரிப்பு துவங்கியது.[4]

2001 இல், நோலன் தனது இன்சாம்னியா திரைப்பட தயாரிப்பில் மூழ்கினார் ஆதலால் திரைக்கதை எழுதுவதை தன் சகோதரரிடன் ஒப்படைத்தார் .[4] நோலன் சகோதரர்கள் திரைக்கதை எழுத ஐந்து வருடங்களாயிற்று.[3][5] பிரீஸ்ட் திரைக்கதையினை பார்வையிட்டு பாராட்டினார்.[3]

புகழ்பெற்ற டவர் நாடக அரங்கு படமெடுக்க பயன்படுத்தப்பட்டது[6]

நோலன் 2003இல் பேட்மேன் பிகின்ஸ் படமெடுத்தலில் மூழ்கினார்.[7][8] பேட்மேன் பிகின்ஸ் பெளியிடப்பட்டப் பின்னர் இத்திரைப்படத்தில் களமிறங்கினார். அக்டோபர் 2005இல் படத்தில் நடிக்க ஹூக் ஜாக்மன் மற்றும் கிரிஸ்டியன் பேல் ஆகியோரிடம் பேசினார்.[9] படமாக்கல் ஏப்ரல் 9 2006 அன்று முடிவடைந்தது.[10]

கிரௌலி பத்தொன்பதாம் நூற்றாண்டு இலண்டன் மாதிரியான இடத்தை கண்டுபிடிக்க மொத்தம் எழுபது இடங்களை ஆராய்ந்தார்.[6] ஜோனதன் நோலன் கொலராடோவிற்கு சென்று நிகோலா டெஸ்லா பற்றி ஆராய்ச்சி செய்தார். டெஸ்லா செய்த பரிசோதனைகளை திரைப்படத்திற்கு பயன்படுத்தினார்.[4] டெஸ்லாவின் கண்டுபிடிப்பு காட்சிகளை நேதன் கிரௌலி வடிவமைத்தார்; மவுன்ட் வில்சன் ஆராச்சிக்கூடத்தின் வாகன நிறுத்தகத்தில் இக்காட்சிகள் படமெடுக்கப்பட்டன.[6] கிரௌலி மாய அரங்குகளுக்கு லாஸ் ஏஞ்சலஸ்சின் நாடக மாவட்டதில் நான்கு இடங்களை பயன்படுத்தினார்.[11]

கொலராடோவிலுள்ள ஆஸ்கூட் அரண்மனையில் படமெடுக்கப்பட்டது.[12]

நோலன் இத்திரைப்படத்திற்காக ஒரே ஒரு செட்டினை மட்டுமே பயன்படுத்தினார்.[13][14] மேலும் நோலன் இயற்கை பெளிச்சத்தில் மட்டுமே படமெடுத்தார்.[15]

திருத்தல், இசையமைப்பு ஆகியவை செப்டம்பர் 22, 2006 அன்று முடிவடைந்தது.[10][16]

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

 • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Prestige (2006)". Box Office Mojo. பார்த்த நாள் 2007-03-03.
 2. Toy, Sam (September 29, 2006). "Magic marker". Empire: pp. 137. 
 3. 3.0 3.1 3.2 Shewman, Den. (September/October 2006). Nothing Up Their Sleeves: Christopher & Jonathan Nolan on the Art of Magic, Murder, and 'The Prestige'. Creative Screenwriting. Vol. 13:5.
 4. 4.0 4.1 4.2 வார்ப்புரு:Cite podcast
 5. McGurk, Stuart (March 12, 2007). "How I made... The Prestige: Christopher Nolan". TheLondonPaper.com. http://www.thelondonpaper.com/staying-in/film-dvd-s/christopher-nolan. பார்த்த நாள்: March 13, 2007. [தொடர்பிழந்த இணைப்பு]
 6. 6.0 6.1 6.2 Wada, Karen (2007-02-01). "Tricked Out: How production designer Nathan Crowley transformed modern Los Angeles into Victorian London for The Prestige". Los Angeles Magazine 52 (2): 94–97. 
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Eyes என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. Fleming, Mike (April 16, 2003). "Nolan wants 'Prestige'". Variety. http://www.variety.com/index.asp?layout=story&articleid=VR1117884751&categoryid=13&cs=1. பார்த்த நாள்: March 4, 2007. 
 9. Fleming, Mike; Cohen, David S. (October 2, 2005). "Meet the men of magic". Variety. http://www.variety.com/article/VR1117930078.html?categoryid=1236&cs=1&p=0. பார்த்த நாள்: March 5, 2007. 
 10. 10.0 10.1 Nolan, Christopher (Director).The Prestige[Motion picture].USA:Touchstone Pictures.Event occurs at "Resonances" bonus feature.
 11. Nelson, Steffie (January 9, 2007). "Magic pics pull conjuring tricks". Variety. Archived from the original on January 5, 2013. http://archive.is/L1BLo. பார்த்த நாள்: May 9, 2007. 
 12. "The Historic Redstone Castle". Redstone Castle (2011). பார்த்த நாள் April 1, 2012.
 13. Lawson, Terry (October 17, 2006). "'Batman' stars team in 'Prestige': Actors learned to perform magic for their roles". Detroit Free Press. 
 14. Carle, Chris (September 20, 2006). "The Prestige Edit Bay Visit". IGN. http://uk.movies.ign.com/articles/733/733653p1.html. பார்த்த நாள்: October 5, 2006. 
 15. Nolan, Christopher (Director).The Prestige[Motion picture].USA:Touchstone Pictures.Event occurs at "Conjuring the Past" bonus feature.
 16. Henriksen, Erik (October 19, 2006). "Ye Olde Dueling Magicians". The Portland Mercury. http://www.portlandmercury.com/portland/Content?oid=73234&category=22133. பார்த்த நாள்: October 23, 2006. 

வெளி இணைப்புகள்[தொகு]