கிறிஸ்டோபர் நோலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டோபர் நோலன்
Christopher Nolan
Christopher nolan.jpg
சான்டா பார்பரா திரைப்பட கண்காட்சியில்
கிறிஸ்டோபர் நோலன்
பிறப்புகிறிஸ்டோபர் ஜோனதன் ஜேம்ஸ் நோலன்
சூலை 30, 1970 (1970-07-30) (அகவை 52)
இலண்டன் ஐக்கிய இராச்சியம்
இருப்பிடம்லாஸ் ஏங்ஜெலேஸ், கலிபோர்னியா
அமெரிக்கா
மற்ற பெயர்கள்கிறிஸ் நோலன்
குடியுரிமைஇங்கிலாந்து
அமெரிக்கா
கல்விஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
பணிதிரைப்பட இயக்குனர், திரை எழுத்தாளர்,
திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985 – இன்றுவரை
சொந்த ஊர்இலண்டன், இங்கிலாந்து,
சிகாகோ, இல்லியனாயிஸ்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
சின்காபி திரைப்படங்கள்
வாழ்க்கைத்
துணை
எம்மா தாமஸ்
(1997–இன்றுவரை)
உறவினர்கள்ஜோனதன் நோலன் (சகோதரன்)
மாத்தியு பிரான்சிஸ் நோலன் (சகோதரன்)[1]

கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார்.[2][3][4] இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.[5][6] அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர்.[7] நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.[8][9] தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.[7]

ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான்.[10] திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார்.[11]

அவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும்.[12] 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் "லார்சனி".[13] நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.[14]

திரைப்படங்கள்[தொகு]

முழு நீளத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் Credited as ஸ்டூடியோ வருவாய்
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் மற்றவை
1998 பால்லோவிங் ஆம் ஆம்   ஒளிப்பதிவாளர்
திரை இயக்குநர்
மோமன்டம் பிக்சர்கள் $48,482
2000 மெமன்டோ ஆம் ஆம் $39,723,096
2002 இன்சாம்னியா ஆம் வார்னர் சகோதரர்கள் $113,714,830
2005 பேட்மேன் பிகின்ஸ் ஆம் ஆம் $372,710,015
2006 த பிரஸ்டீஜ் ஆம் ஆம் ஆம் டச்ஸ்டோன் பிக்சர்கள்
வார்னர் சகோதரர்கள்
$109,676,311
2008 த டார்க் நைட் ஆம் ஆம் ஆம் வார்னர் சகோதரர்கள் $1,001,921,600
2010 இன்சப்சன் ஆம் ஆம் ஆம் $825,532,764
2012 த டார்க் நைட் ரைசஸ் ஆம் ஆம் ஆம்
2013 டிரான்சன்டன்ஸ் ஆம்
2013 மேன் ஆப் ஸ்டீல் ஆம் ஆம்
2014 இன்டர்‌ஸ்டெலர் ஆம் ஆம் ஆம்
2017 டன்கிர்க் ஆம் ஆம்
2020 டெனெட்டு ஆம் ஆம் ஆம் வார்னர் சகோதரர்கள்

குறுந்திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் Credited as
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்
1989 டரான்டெல்லா ஆம் ஆம் ஆம்
1996 லார்ஸ்னி ஆம் ஆம் ஆம்
1997 டூடில்பக் ஆம் ஆம் ஆம்

தயாரிக்கும் திரைப்படங்கள்[தொகு]

வரவேற்பு[தொகு]

அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.[15]

விமர்சகர்கள்[தொகு]

திரைப்படம் ராட்டன் டோமேடோஸ் மெடாகிரிடிக்
மொத்தமாக சிறந்த விமர்சகர்கள்
பால்லோவிங் 76%[16] N/A[17] N/A
மெமன்டோ 92%[18] 89%[19] 80[20]
இன்சாம்னியா 92%[21] 94%[22] 78[23]
பேட்மேன் பிகின்ஸ் 85%[24] 61%[25] 70[26]
த பிரஸ்டீஜ் 76%[27] 71%[28] 66[29]
த டார்க் நைட் 94%[30] 91%[31] 82[32]
இன்சப்சன் 86%[33] 80%[34] 74[35]
Average 86% 80.8% 75

விருதுகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் அகாதமி விருது பரிந்துரைகள் அகாதமி விருது வெற்றிகள் கோல்டன் குளோப் பரிந்துரைகள் கோல்டன் குளோப் வெற்றிகள் பாஃப்டா பரிந்துரைகள் பாஃப்டா வெற்றிகள் மொத்த விருது பரிந்துரைகள் மொத்த விருது வெற்றிகள்
1998 பால்லோவிங்
2000 மெமன்டோ 2 1
2002 இன்சாம்னியா
2005 பேட்மேன் பிகின்ஸ் 1 3
2006 த பிரஸ்டீஜ் 2
2008 த டார்க் நைட் 8 2 1 1 9 1
2010 இன்சப்சன் 8 4 4 9 3
2012 த டார்க் நைட் ரைசஸ் - - - - - -
2013 மேன் ஆஃப் ஸ்டீல் - - - - - -
2014 டிரான்சிடன்ஸ் - - - - - -
2014 இன்டர்‌ஸ்டெலர் - - - - - -
மொத்தம் 21 6 6 1 21 4 48 11

மேற்கோள்கள்[தொகு]

 1. Grossberg, Josh. "Dark Knight Director's Brother Arrested for Murder". ஈ! ஆன்லைன். ஏப்ரல் 10, 2011 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
 2. "Batman, robbin' and murder". The Sunday Times. 27 சூன் 2010. 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 சூன் 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Can't get him out of our heads" The Age; பார்த்த நாள் 10 ஏப்ரல் 2011.
 4. ஃபெயின்பர்க், ஸ்காட் (3 சனவரி 2015). "Christopher Nolan on 'Interstellar' Critics, Making Original Films and Shunning Cell Phones and Email (Q&A)". த ஹாலிவுட் ரிப்போர்டர். 3 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
 5. Boucher, Geoff (11 ஏப்ரல் 2010). "Christopher Nolan's 'Inception' — Hollywood's first existential heist film". Los Angeles Times. http://herocomplex.latimes.com/2010/04/11/christopher-nolans-inception-hollywoods-first-existential-heist-film. பார்த்த நாள்: 28 சனவரி 2011. 
 6. Itzkoff, Dave (30 சூன் 2010). "The Man Behind the Dreamscape". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/07/04/movies/04inception.html?_r=1. பார்த்த நாள்: 1 சூலை 2010. 
 7. 7.0 7.1 Lawrence, Will (19 சூலை 2012). "Christopher Nolan interview for Inception". The Telegraph (London). http://www.telegraph.co.uk/culture/film/filmmakersonfilm/7894376/Christopher-Nolan-interview-for-Inception.html. பார்த்த நாள்: 3 சனவரி 2014. 
 8. Timberg, Scott (15 மார்ச்சு 2001). "Indie Angst". New Times Los Angeles. 4 சூன் 2013 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Nolan's move from Highgate to Hollywood" பரணிடப்பட்டது 2013-01-14 at Archive.today. Evening Standard (London). பார்த்த நாள் 10 ஏப்ரல் 2011.
 10. Tempest, M. I was there at the Inception of Christopher Nolan's film career The Guardian film blog, 24 பிப்ரவரி 2011; பார்த்த நாள் 21 செப்டம்பர் 2011.
 11. "Wally Pfister ASC on Christopher Nolan's Inception". thecinematographer.info. 2010. 11 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
 12. "The Filmmakers". Next Wave Films. 21 நவம்பர் 1999. 23 அக்டோபர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Christopher Nolan: The Movies. The Memories". Empire. 12 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
 14. "UCLU Film Society, London". Ucl.ac.uk. 12 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
 15. பாக்ஸ் ஆபிஸ் மோஜோ: கிறிஸ்டோபர் நோலன் பார்த்த நாள் 13 அக்டோபர் 2011.
 16. "T-Meter Rating of 'Following'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 17. "Top Critics Rating of 'Following'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 18. "T-Meter Rating of 'Memento'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 19. "Top Critics Rating of 'Memento'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 20. "Memento Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 21. "T-Meter Rating of 'Insomnia'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 22. "Top Critics Rating of 'Insomnia'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 23. "Insomnia Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 24. "T-Meter Rating of 'Batman Begins'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 25. "Top Critics Rating of 'Batman Begins'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 26. "Batman Begins Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 27. "T-Meter Rating of 'The Prestige'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 28. "Top Critics Rating of 'The Prestige'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 29. "The Prestige Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 30. "T-Meter Rating of 'The Dark Knight'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 31. "Top Critics Rating of 'The Dark Knight'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 32. "The Dark Knight Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 33. "T-Meter Rating of 'Inception'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 34. "Top Critics Rating of 'Inception'". அழுகியத் தக்காளிகள். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.
 35. "Inception Reviews, Ratings, Credits". மெடாகிரிட்டிக். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டோபர்_நோலன்&oldid=3612214" இருந்து மீள்விக்கப்பட்டது