ஜோஸ் வேடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோஸ் வேடன்
Joss Whedon by Gage Skidmore 7.jpg
பிறப்புஜோசப் ஹில் வேடன்
சூன் 23, 1964 (1964-06-23) (அகவை 57)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்வெஸ்லியன் பல்கலைக்கழகம்
பணி
 • இயக்குனர்
 • தயாரிப்பாளர்
 • எழுத்தாளர்
 • இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
பாணி
பெற்றோர்டாம் வேடன்
ஆன் லீ ஸ்டேர்ன்ஸ்
வாழ்க்கைத்
துணை
கை கோல்
(தி. 1995; ம.மு. 2016)
பிள்ளைகள்2
உறவினர்கள்ஜான் வேடன் (தாத்தா)
சாமுவேல் வேடன் (சகோதரர்)
மத்தேயு தாமஸ் வேடன் (சகோதரர்)
ஜெட் வேடன் (சகோதரர்)
சாக் வேடன் (சகோதரர்)

ஜோஸ் வேடன் (Joss Whedon) என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் மியூட்டண்ட் எனிமி புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பெல்வெதர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைந்து நிறுவினார் ஆவார். மேலும் பஃபி தி வாம்பயர் ஸ்லேயர் (1997-2003),[2] ஏஞ்சல் (1999-2004),[3] பையர்பிலே (2002),[4] டால்ஹவுஸ் (2009-2010), ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியுள்ளார். இவர் பல படங்களைத் தயாரித்து, இயக்கி மற்றும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிக்சார் நிறுவனத்தின் இயங்குபடமான டாய் ஸ்டோரி (1995) என்ற படத்தை இணைந்து எழுதினார் இதற்காக அவர் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5][6][7] மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் திரைப்படங்களான தி அவேஞ்சர்ஸ் (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) ஆகியவற்றை எழுதி இயக்கியுள்ளார், மேலும் டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்ச மீநாயகன் படமான ஜஸ்டிஸ் லீக்[8] (2017) படத்திற்கான வசனத்தை இணைந்து எழுதினார். சாக் சினைடருக்கு பதிலாக ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தின் மறு படப்பிடிப்புகளில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Joss Whedon". Front Row.
 2. Earl, Chris (December 14, 2011). "Buffy the Vampire Slayer". starburstmagazine.com. மூல முகவரியிலிருந்து January 19, 2015 அன்று பரணிடப்பட்டது.
 3. Millman, Joyce (October 4, 1999). "City of Angel". Salon. மூல முகவரியிலிருந்து January 14, 2012 அன்று பரணிடப்பட்டது.
 4. Pierce, Scott D. (September 19, 2002). "Scott Pierce: Fox's 'Firefly' takes flight". Deseret News. மூல முகவரியிலிருந்து November 4, 2013 அன்று பரணிடப்பட்டது.
 5. Woerner, Meredith (January 4, 2013). "Why Titan A.E. is an Underappreciated Masterpiece". io9.com. மூல முகவரியிலிருந்து January 7, 2013 அன்று பரணிடப்பட்டது.
 6. Winning, Joshua (February 19, 2015). "In Defence Of... Alien: Resurrection, the franchise's ugly duckling". Digital Spy. மூல முகவரியிலிருந்து November 2, 2015 அன்று பரணிடப்பட்டது.
 7. Stock, Francine (June 17, 2013). "Joss Whedon: A Life in Pictures". bafta.org. மூல முகவரியிலிருந்து July 12, 2013 அன்று பரணிடப்பட்டது.
 8. Kit, Borys (May 22, 2017). "Zack Snyder Steps Down From 'Justice League' to Deal With Family Tragedy". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து May 22, 2017 அன்று பரணிடப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_வேடன்&oldid=3288056" இருந்து மீள்விக்கப்பட்டது