ஜேம்ஸ் கேமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் கேமரன்
James Francis Cameron
James Cameron 2010.jpg
கேமரன் 2010ல் ஒரு நிகழ்ச்சியில்
இயற் பெயர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன்
பிறப்பு ஆகத்து 16, 1954 (1954-08-16) (அகவை 63)
ஒன்டாரியோ, கனடா
தொழில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்
நடிப்புக் காலம் 1978–இன்று
துணைவர் ஷரோன் வில்லியம்ஸ்(1978–1984)
கெய்ல் அன் கர்ட் (1985–1989)
கேத்ரின் பிஜேலோ (1989–1991)
லிண்டா ஹமில்டன் (1997–1999)
சுசி அமிஸ் (2000–இன்று)

ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரன் (James Francis Cameron) கனடாவைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் த டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, ஏலியன்ஸ், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில திரைப்படங்களை படைத்தவர்.

நாசா விஞ்ஞானி சார்லஸ் போல்டன் உடன் கேமரூன்.

மார்ச்சு 26, 2012 அன்று உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்[1].

முக்கிய படங்கள்[தொகு]

டெர்மினேட்டர் (1984)[தொகு]

த டெர்மினேட்டர் (The Terminator)1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்,மைக்கேல் பியென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் படி ஆர்னோல் ஸ்வாஸ்நேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள்.

டெர்மினேட்டர், ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது.

ராம்போ II[தொகு]

ராம்போ II (en:Rambo: First Blood Part II) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன், ரிச்சர்ட் செரண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படம் 1985ல் வெளியான மிகப் பெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றாக உள்ளது.

டைட்டானிக்[தொகு]

டைட்டானிக் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, டைட்டானிக் (திரைப்படம்)

டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.

அவதார்[தொகு]

'அவதார் திரைப்படம் பற்றிய கட்டுரையைப் பார்க்க, அவதார் (2009 திரைப்படம்)

அவதார் 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.

இந்தப் படத்தின் மூலம் ‘அவதார்’ என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாக மாறியது. இதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமெடுக்க வைத்துள்ளனர் ஜேம்ஸ் கேமரூன் குழுவினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rebecca Morelle (மார்ச்சு 26, 2012). "James Cameron back on surface after deepest ocean dive". பிபிசி செய்தித் தளம். பார்த்த நாள் மார்ச்சு 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கேமரன்&oldid=2217075" இருந்து மீள்விக்கப்பட்டது