உள்ளடக்கத்துக்குச் செல்

த டெர்மினேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டெர்மினேட்டர்
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜான் டாலி
டெரெக் கிப்சன்
கால் ஆன் ஹேர்ட்
கதைஜேம்ஸ் கேமரூன்
கால் ஆன் ஹேர்ட்
ஹார்லன் எலிசன்
இசைபிராட் பியெடெல்
நடிப்புஅர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்
மைக்கேல் பியென்
லிண்டா ஹாமில்டன்
படத்தொகுப்புமார்க் கோல்ட்பிலாட்
விநியோகம்Orion Pictures (1984-1997)
Metro-Goldwyn-Mayer (1998-இன்றுவரை)
வெளியீடுஅக்டோபர் 26, 1984
ஓட்டம்108 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6,400,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
பின்னர்டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே

த டெர்மினேட்டர்(The Terminator)1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்,மைக்கேல் பியென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

திரைப்படத்தின் படி ஆர்னோல் ஸ்வாஸ்நேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள்.

கதைச் சுருக்கம்[தொகு]

2029 ல் உலகை இயந்திரங்கள் ஆழுகின்றன. இந்த எதிர்காலத்தில் இருந்து 1984, மே 12 க்கு ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. இதற்கான காரணம் 2029ல் இயந்திரத்திற்கு எதிராகப் போராடும் மனித குலத்தின் தலைவரான ஜோன் கானரின் தாயாரான சாரா கோணரை அழிப்பதன் மூலம் இவரின் பிறப்பைத் தடுப்பதற்காகவாகும்.

இதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்பவரை சாராவைக் காப்பாற்ற அனுப்புகின்றனர். இயந்திர மனிதனிடம் இருந்து சாராவைக் காப்பாற்றுவதுடன், தன் இன்னுயிரையும் மனித குலத்தின் விடிவுக்காகத் துறக்கின்றார்.

இக்காலப் பகுதியில் இவருக்கும், சாரா கோணருக்கும் உறவு விருத்தியடைவதன் மூலம், இவரே எதிர்காலத்தில் பிறக்கப்போகும் மனிதர்களின் தலைவரான ஜோன் கானரின் தந்தையும் ஆகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டெர்மினேட்டர்&oldid=3949132" இலிருந்து மீள்விக்கப்பட்டது